Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் …

  2. விருதை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் மின்னம்பலம்2021-10-24 தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்விருதை இதுவரை லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக விருது வழங்கும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் …

  3. சினிமா செய்திகள்: கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” முதல் தனுஷின் “வட சென்னை” வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விவசாயத்தை மையமாக வைத்து கார்த்தி நடிக்கும் படம் Image captionவிவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்' “தீரன்: அதிகாரம் ஒன்று” திரைப்படத்திற்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் “கடைக்குட்டி சிங்கம்”. இந்தப…

  4. நார்வே திரைப்பட விழாவில் கும்கி படத்திற்கு 3 விருது. சிறந்த படம் வழக்கு எண் 18/9 Posted by: Mayura Akilan Published: Tuesday, April 30, 2013, 8:47 [iST] நார்வே: 2013ம் ஆண்டிற்கான நார்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கும்கி படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த நடிகை ஆகிய வரிசையில் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நார்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. …

  5. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனைப்படைத்திருக்கும் இசைக்குயில் பி.சுசீலா, இத்துடன் நிற்காமல் தனது "பி.சுசீலா டிரஸ்ட்" என்ற ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு மாத பென்ஷன் வழங்கி வருகிறார். தற்போது இந்த டிரஸ்டின் மூலம் பத்து பேருக்கு பென்ஷன் உதவியை கொடுத்துவரும் இவருக்கு இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இருக்கிறார். வறுமையில் இருக்கும் பாடகர்களுக்கு உதவும் பி.சுசீலா, அதே சமயம் இந்த டிரஸ்ட்டின் மூலம் ஆண்டுதோறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தி, சாதித்த பாடகர்களுக்கு "பி.சுசீலா விருது" என்பதையும் கொடுத்து வருகிறார். 2008ஆம் ஆண்டில் எஸ்.ஜானகிக்கு இந்த பி.சுசீலா விருது வழங்கப்பட்டது. அ…

    • 0 replies
    • 608 views
  6. ஒரு வழியாக 3 இடியட்ஸ் திரைப்படத்தை மீளாக்கம் செய்வதை உறுதி செய்துள்ளார் சங்கர். இந்தப் படத்துக்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், கிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து சங்கர் மீளாக்கம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளா…

    • 0 replies
    • 608 views
  7. காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வ…

  8. இங்கிலாந்தில் (no-1)முன்னனியில் நிற்கும் தமிழனின் மெட்டில் அமைந்த பாடல் 1995ல் வெளியான ரஹ்மானின் "ஊர்வசி, ஊர்வசி" பாடல் இப்போது 2014ல், Will.i.am and Cody Wise ன் "இட்ஸ் மை பர்த்டே (its my birthday)" என்ற ஆங்கில பாடலாக உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ரஹ்மான் ஆதரவாளர்கள் "அசல் அங்கே நகல் இங்கே" என்றெல்லாம் கூச்சல் எழுப்பியதும், இல்லையில்லை இந்த பாடலுக்கு நானும் துணை தயாரிப்பாளர் என ரஹ்மான் விளக்கி கூறியுள்ளார். http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/ http://worthytime.com/will-i-am-and-cody-wise-its-my-birthday/

  9. மீண்டும் சினிமாவில் முதல்வர் ஜெயலலிதா? 8 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உடல்உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து மலையாளத்தில் "டிராபிக்" என்ற படம் வெளிவந்தது. பாப்பி-சஞ்சய் இயக்கினர். பெரிய வெற்றியும் பெற்றது. தற்போது டிராபிக்கை ராதிகா சரத்குமார் தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்ற பெயரில் தயாரித்து வருகிறார். பாப்பி-சஞ…

  10. பொலிவூட்டை சூடேற்றும் ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர் புகைப்படங்கள் 2016-10-23 10:20:55 நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிகர் ரன்பீர் கபூரும் இணைந்து போஸ்கொடுத்த போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பொலிவூட்டை சூடேற்றிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு நட்சத்திரங்களும் இணைந்த நடித்த 'ஏ தில ஹாய் முஸ்கில்' படத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் இப்படத்தில் நடித்ததால் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா எனும் கட்சி இப்படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதை தடுப்பது சரியா என்பத…

  11. டுபாக்கூர் விருது டபாய்க்கும் இயக்கம் உள்ளூ‌ரிலேயே ஒண்ணும் கழற்ற முடியலை. இதில் வெளியூர் போய் ரெண்டு விருது வாங்கிட்டோம் என்று டமாரம் அடிப்பதை என்னவென்பது. கடவுளோட குழந்தை படத்துக்கு ஜப்பானில் கிடைத்தது சும்மா டுபாக்கூர் விருது. இதனை பெர்லின், கேன்ஸ் திரைப்பட விழா ரேஞ்சுக்கு உயர்த்தி கிச்சுகிச்சு மூட்டுகிறார் பிரபல காப்பி இயக்குனர். இவரது புதிய படமும் ஹாலிவுட் காப்பிதான். நிலைமை இப்படியிருக்க, என்னோட புதிய படத்தை இப்போதே திரைப்பட விழாக்களில் திரையிடக் கேட்கிறார்கள் என்று எழுபது எம்எம்மில் ‌ரீல் ஓட்டுகிறார். கூரை ஏறி கோழி பிடிங்கப்பா அப்புறம் வானம் கீறி வைகுண்டம் போகலாம். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1203/22/1120322036_1.htm

  12. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்…

  13. தமிழர்களையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும், மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் அந்தப் படத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.திரையரங்க உரிமையாளர்கள் தமிழகத் தில் இப்படத்தைத் திரையிடுவதில்லை என முடிவு செய்துவிட்டனர். இன்னொரு புறம் மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்ப்பது கருத்துவுரிமைக்கு எதிரானது என்கிற கருத்தும் வழக்கம் போல் பரப்பப் பட்டு வருகிறது. அதுவும் வட இந்திய ஊடகங்களும் ஆங்கில ஊட கங்களும் விஸ்வரூபம், தலைவா, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிட எழுகின்ற சிக்கலை மையப் படுத்தி, தமிழ்நாடு கருத்துவுரிமைக்கு எதிரான மாநிலமா? என சூடான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களையும் ஓரே நேர்க்கோட்டில்…

  14. எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! சமஸ் First Published : 05 Oct 2010 12:35:27 AM IST Last Updated : ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்…

  15. எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது. லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம். தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனை…

    • 2 replies
    • 606 views
  16. ரஜினியும், விஜய்யும் மட்டுமே சினிமா உலகத்தை காப்பாற்றுபவர்களும் போலவும், கமல்ஹாசனை சினிமாவுக்கே எதிரி போலவும் சித்தரித்து ,தியேட்டர் உரிமையாளர்கள் வில்லங்கமான அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.விஜய் நடித்த சுறா,வேட்டைக்காரன்,வில்லு, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களின் வசூலை தியேட்டர் அதிபர்கள் மறந்துவிட்டார்களா? என தெரியவில்லை. இதே தியேட்டர் அதிபர்கள்தான் குசேலன் படம் பிளாப் ஆனதும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து பணத்தை திருப்பி தரவேண்டும் என போராட்டம் செய்தார்கள். கமல்ஹாசனின் தசவதாரம்,வேட்டையாடு விளையாடு, போன்ற படங்களின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிய தியேட்டர் அதிபர்கள் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது அவர் ஏதோ சினிமாவுக்கே எதிரி போல சித்தரித்து அறிக்கை வெளியிட்ட…

    • 0 replies
    • 606 views
  17. [size=2]இப்போது காஜல் அகர்வால் காட்டில் தான் அடைமழை பெய்கிறது. தெலுங்கில், "மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் தான், தமிழில், "துப்பாக்கி, மாற்றான் படங்களில் ஒப்பந்தமாகி, கோலிவுட்டுக்கு வந்தார். [/size] [size=2] இங்கு வந்து, "பிசியானவர், தெலுங்கில் நடித்து வந்த இரண்டு படங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. இதனால், காஜலை வைத்து, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்திய அவர்கள், பின், வேறு நடிகைகளை ஒப்பந்தம் செய்து, படத்தை முடித்திருக்கின்றனர். மகேஷ்பாபு, ராம்சரண் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களையே, "டீலில் விட்டதால், காஜல் மீது, தெலுங்கு பட அதிபர்கள் கடுப்பில் உள்ளனர். [/size] [size=2] இதையடுத்து, தற்போது பாலிவுட் சினிமாவில், தன் கவனத்தை திருப்பி இருக்கும் காஜல், தமிழ…

  18. ரோமானிய அழகி லூலியாவை மணக்கவிருக்கிறார் சல்மான்கான். பாலிவுட்டில் 48 வயதை தொட்டாலும் இன்னும் பெண்களின் கனவு நாயகனாகவே வலம் வருகிறார் சல்மான்கான். இந்நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும், சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன். விரைவில் என் வாழ்வில் நல்ல விடயம் ஒன்று ந…

  19. ஸ்வர்ணலதா, நா.முத்துக்குமார், ஷோபா...இன்னும் யாரை எல்லாம் மிஸ் பண்றோம் தெரியுமா? நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித் தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோய், நம்மை மிஸ் யூ சொல்ல வைத்த சில கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது. ஸ்வர்ணலதா : கேட்கும் அனைவரையும் மயக்கும் காந்தக் குரலழகி. எம்.எஸ் விஸ்வநாதனின் ஆர்மோனிய இசையில் அறிமுகமானவர். பின் ராஜாவும் ரஹ்மானும் இவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். 'போவாமா ஊர்கோலம்' என டூயட்டாக இருக்…

  20. பிரான்ஸ் பாரிஸில் இடம்பெறும் Auber International Film Festival இல் Best Original Screenplay பிரிவில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் விருதைப் பெற்றிருக்கின்றது . நீண்டகால கடின உழைப்பு ,தயாரிப்பிற்கான குழு முயற்சி ,தலைப்பு பிரச்சினை ,அதன் பின்னரான சுமூக தீர்வு என பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குறித்த திரைப்படம் எங்கள் கதைகளுக்கான ஒரு அங்கீகாரமாக விருதை பெற்றிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சிகரமான விடயமே . படக்குழுவிற்கும் இயக்குனரிற்கும் எமது வாழ்த்துக்கள் . ஆதி விருதை பெற்றது மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் - My Blog (ceylontamilnews.com)

  21. பத்து சதவீதம் மட்டுமே மூளையை பயன்படுத்தும் மனிதன் நூறு சதவீதம் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்னும் கற்பனையே லூசி. ஜாலியாக பார்ட்டி, பாய் ஃப்ரண்ட் என சுற்றி வந்த லூசியிடம் ஒரு பெட்டியை கொடுத்து ஒருவரிடம் ஒப்படைக்கும் படி வற்புறுத்துகிறார் லூசியின் பாய் ஃப்ரண்ட்.ஹோட்டல் வாசல் வரைக்கும் வந்து விட்ட நீயே அதை செய்யலாமே என கேட்க வற்புறுத்தி பெட்டியை லூசியின் கைகளில் மாட்டி விடுகிறார் நண்பர். பெட்டியை கொடுத்தால் வேலை முடிந்து விடும் என நினைத்த லூசியின் கண் முன்பே பாய் ஃப்ரண்ட் சுட்டு கொல்லப்பட்டு, அதே இடத்தில் லூசியும் அந்த மர்ம கும்பல் கையில் சிக்குகிறாள். லூசியை சக்திவாய்ந்த போதைபொருள் கடத்த பயன் படுத்துகிறது மர்ம கும்பல், வயிற்றில் போதைபொருள் பாக்கெட்டுகளை வைத்…

  22. ஜெயலக்‌ஷ்மியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி? #சைத்தான் விமர்சனம் "பிச்சைக்காரன்" வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி எடுத்திருக்கும் அவதாரம்தான் சைத்தான். முந்தைய வெற்றிகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியிருக்க, எப்படி வந்திருக்கிறான் சைத்தான்? திறமை வாய்ந்த மென்பொறியாளரான விஜய் ஆண்டனிக்கு, திருமணமான ஓரிருநாட்களில் திடீரென சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. கணினியிலிருந்து நீளும் கை தாக்குகிறது. மண்டைக்குள் ஒரு குரல் துரத்துகிறது. அதன் தொடர்ச்சியாக சில விபரீதங்கள் நிகழ, குடும்பமும், அவரது பாஸும் கோயில், சைக்யாட்ரிஸ்ட் என்று விடைதேடிப் பயணிக்கிறார்கள். இதன் நடுவில் துரத்தும் குரலின் வழிகாட்டுதல் படி, விஜய் ஆண்டனியும் ஜெயலட்சுமியைத் தேடுகிறார். யார் …

  23. நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை…

  24. இலவச மருத்துவமனையிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியே வருகிறாள் அழகான இளம்பெண் ஒருத்தி. அவளுக்கு ஆதரவு தர எவருமே இல்லாத நிலையில் குழந்தையை ஒரு மாளிகையின் முன்னால் நிற்கும் காரில் போட்டுவிட்டு சென்று விடுகிறாள். அதேசமயம் இரண்டு திருடர்கள் அந்தக் காரை திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். பிறகு குழந்தை இருப்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், குறுகலான தெரு ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கும் குழந்தையின் தாய்க்கு மனது மாறிவிட அவள் மாளிகைக்கு திரும்பி வருகிறாள். அந்த வீட்டின் கதவை தட்டி குழந்தையை பற்றி விசாரிக்கிறாள். காருடன் சேர்த்து குழந்தையும் காணமால் போனதை அறிந்து மயக்கமாகி விழுகிறாள். வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இன்றி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.