வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ரஜினி படித்த அதே திரைப்படக் கல்லூரியில்தான் நானும் படித்தேன். சுமாரான முகத் தோற்றம் உள்ள ரஜினியால் சினிமாவில் வெற்றி பெற முடிந்தபோது, ஏன் நம்மால் முடியாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்ட கேள்விதான் என்னையும் சூப்பர் ஸ்டாராக்கியது. அந்த வகையில் நான் ஜெயிக்க ரஜினியும் ஒரு காரணம்!'' -ஒரு பேட்டியின்போது இப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவிதான். திருப்பதியில் பல லட்சம் பேருக்குமேல் திரண்ட கூட்டத்தில் தனது `பிரஜா ராஜ்ஜியம்' கட்சியை பிரமாதமாகத் தொடங்கி, ``சூப்பர் ஸ்டார் ரஜினியும் அரசியலுக்கு வருவாரா? புதிய கட்சித் தொடங்குவாரா?'' என்று பல்லாண்டு காலமாக ரஜினி ரசிகர்களின் மனதில் எரிந்து கொண்டிருந்த ஏக்கத்துக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது அதிர…
-
- 2 replies
- 1.9k views
-
-
ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த கேள்வி பதில்: கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவி…
-
- 0 replies
- 590 views
-
-
“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது எல்லாருக்கும் கோரிக்கை ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அ…
-
- 116 replies
- 11.9k views
-
-
[size=3][size=4]கள்ளத்துப்பாக்கி படத்தில் கொடூரமான காட்சிகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி 35 இடங்களில் கத்தரி வைத்திருக்கிறது தணிக்கைக் குழு.[/size][/size] [size=3][size=4]ஆனாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெறும் காட்சி மட்டும் தப்பித்திருக்கிறது.[/size][/size] [size=3][size=4]தமிழ் ஈழம், விடுதலைப் புலிகள், பிரபாகரன் போன்ற வார்த்தைகள் இடம்பெற்றாலே, அதை வெட்டி எறியச் சொல்வதில் ரொம்ப கறாராக இருப்பார்கள் சென்சார் குழுவினர்.[/size][/size] [size=3][size=4]ஆனால் கள்ளத்துப்பாக்கியில் இலங்கை வரைபடத்தின் பின்னணியில் பிரபாகரன் படம் இடம்பெற்றுள்ளது.[/size][/size] [size=3][size=4]"இது, ஒரு கூலிப்படையின் கதை. வேலை வெட்டி இல்லாத இளைஞர்களின் கையில் துப்பாக்…
-
- 0 replies
- 446 views
-
-
நயன்தார காட்டில் கோடி மழை அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளமை கோலிவூட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நயன்தாரா மார்க்கெட் முன்னிலையில் உள்ளதுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது திரைப்படங்கள் குறையும் என்று சிலர் சொன்னதை நயன் பொய்யாக்கினார். அதிக திரைப்படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.40 மற்றும் 50 இலட்சங்களாக …
-
- 2 replies
- 808 views
-
-
அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளு…
-
- 0 replies
- 525 views
-
-
ஜூலையில் உலகமெங்கும் கோச்சடையான் இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. …
-
- 0 replies
- 428 views
-
-
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ் ஷாருக்கான் வெளியிட்ட 'மாரியப்பன்' படத்தின் பர்ஸ்ட் லுக் மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி 'மாரியப்பன்' என்ற பெயரின் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். மாரியப…
-
- 2 replies
- 388 views
-
-
இரண்டு பேரை காதலித்தேன் – அமலா பால் நடிகை அமலாபால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:– அனகா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானேன். அந்த பெயரை வைத்து அழைக்க கஷ்டமாக உள்ளது என்றனர். அதன் பிறகு அமலாபால் என மாற்றினேன். அது ராசியாக அமைந்தது. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. பள்ளியில் படித்தபோது ஒரு பையனை பிடித்தது. அது காதலா? என்று புரியவில்லை. அவனை அடிக்கடி பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கொஞ்ச நாள்தான் அந்த ஈர்ப்பு இருந்தது. கல்லூரிக்கு போனதும் இன்னொருவன் மேல் காதல் வந்தது. அறிவு முதிர்ச்சி இல்லாததால் அது காதலா? கவர்ச்சியா? என்று உணர முடியவில்லை. இப்போது அந்த காதலும் போய் விட்டது. எனக்கு கணவராக வருபவர் எல்லோருக்கும் உதவுபவராக இருக்க வேண்டும். அடுத்தவர் …
-
- 11 replies
- 1.4k views
-
-
பிரபுதேவா நயன்தாராவுக்காக முதல் மனைவி ரமலத்தை பிரிந்து, விவகாரத்து பெற்று அவரையே திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே பிரபுதேவா குழந்தைகளுக்காக மறுமணம் செய்ய போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு சிலநடிகைகளுடன் கிசுகிசு ஏற்பட்டு திருமணம் செய்து கொளவதாக வதந்தியும் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், இப்போதைக்கு மறுமணம் பற்றிய எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி செய்வதவாக இருந்தால் நானே மீடியாக்களே கூப்பிட்டு சொல்வேன். தற்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. ஆனாலும் பிரபுதேவா தற்போது முன்னணி பாலிவுட் நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பாலிவுட்டில் ப…
-
- 0 replies
- 786 views
-
-
ஒளிரும் நட்சத்திரம்: நாசர் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர் ம.நாசர். கதாபாத்திரத்தின் குண இயல்புகளை ஆழமாக உள்வாங்கி, அதை அளவான, இயல்பான உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்றவர். 05.03.1958-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மகபூப் பாட்ஷா- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 2. கிராமத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசரின் பெற்றோர், அங்கிருந்த புனித மேரிஸ் தொடக்கப்பள்ளி, பின்னர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அவரைப் படி…
-
- 0 replies
- 527 views
-
-
Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…
-
- 3 replies
- 1.8k views
-
-
மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகில…
-
- 6 replies
- 5.6k views
-
-
சென்னை: நடிகை ஹன்சிகாவுடன் எனக்கு எந்த உறவுமில்லை. அவருடனான காதல் முறிந்துவிட்டது. இனி நான் தனி ஆள்... இதற்காக வருத்தப்படவில்லை, என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் நடித்தனர். அம்மா எதிர்ப்பு ஆனால் இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. தன் மகளின் கேரியர் பாதிக்கும் என்று பதறிய அவர், இப்போதைக்கு இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று பேட்டி அளித்து வந்தார். ஆனால் சிம்புவின் தந்தை ராஜேந்தர் மகனின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். பாண்டிராஜ் வடிவில்.. இந்த நேரம் பார்த்து இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப…
-
- 1 reply
- 801 views
-
-
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா- அபிஷேக் திருமணம் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அவர்கள் திருமணம் நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு முன்னணி நடிகர் ஹிருத்திக்ரோஷனுடன் முத்தக்காட்சியில் ஐஸ்வர்யா நெருக்கமாக நடித்ததால் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை நிராகரிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரு குடும்பத்தினர் முன்னிலையில், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மாங்கல்ய தோஷத்துக்கு பரிகார பூஜை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற வேண்டிய திரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 22 ஜனவரி 2023 பட மூலாதாரம்,TWITTER/DISNEYPLUSHSMAL படக்குறிப்பு, ஜெயஜெயஜெயஜெயஹே பட போஸ்டர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓடிடி தளங்களின் வளர்ச்சி பட மூலாதாரம்,G…
-
- 3 replies
- 521 views
- 1 follower
-
-
யாருமே விரும்பியோ விரும்பாமலோ தம் வாழ்வியலில் கடக்கவேண்டிய கடைசி அத்தியாயம் இந்த முதுமை.முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன், முதுமை எவ்வளவு விசித்திரமானது, எட்டாத சொந்தங்களையும், கழிந்து போன பந்தங்களையும் அது தேடி ஓடுகின்றது என்று. அதுதான் "மனசினக்கரே" படத்தின் அடி நாதம், முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html
-
- 0 replies
- 925 views
-
-
இயக்குநர் ஆன் ஹங் ட்ரான். பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்... அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் முடிந்த பிறகு கூட அதையே நினைத்துக்கொண்டு அதையே படமாக எடுத்துக்கொண்டு அதன் இழப்புகளையே எந்நேரமும் அதன் வலியையே ரணங்களையே பேசிக் கொண்டிருந்தவர்களின் போக்கை மெல்ல மெல்ல மாற்ற வழி அமைத்தவர் ஆன் ஹங் ட்ரான். ஆரம்ப காலங்களில், அதாவது 30-களில் பெரும்பாலான வியட்நாம் படங்கள் கேலிக்கூத்து காமெடிகளாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு, அதாவது போருக்குப் பிறகு வந்த படங்கள் போரின் ரணங்களையே பேசிக்கொண்டிருக்கும். சினிமா எ…
-
- 0 replies
- 191 views
-
-
பூட்டப்பட்ட கழுத்துச் சங்கிலியோடு ஒரு பூர்வகுடியின மனிதன் நடத்திச் செல்லப்படும் The Tracker எனும் ஆஸ்திரேலிய நாட்டுத் திரைப்படத்தின் ஆரம்பமே நம்மை அச்சுறுத்துகிறது. இந்த முதல் காட்சி இது ஒரு மாறுபட்ட சினிமா என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது. ஆஸ்திரேலிய பாலைவன பொட்டல்காடுதான் படத்தின் களம். ஏகாதிபத்திய காகசிய (whites) இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூவர் ஆளுக்கொரு குதிரையில் வருகின்றனர். முதல் குதிரையில் வரும் போலீஸ் உயரதிகாரியின் கையில் பூர்வகுடி வழிகாட்டியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியின் மறுமுனை. உயர் போலீஸ் அதிகாரி அடிக்கடி துப்பாக்கியெடுத்து அவனை உருட்டி மிரட்டுகிறார். அவருக்குப் பின்னால் இரண்டு குதிரைகளிலும் இரண்டு இளம் போலீஸ்காரர்கள். வழிகாட்டிச் செல்லும் பூ…
-
- 0 replies
- 220 views
-
-
திரை விமர்சனம்- கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் இந்து தமிழ் திசை தன்னுடன் கல்லூரியில் படிக்கும் இப் ராஹிம் (அசோக்) மீது காதல்கொள் ளும் ஜெயா (பிரியங்கா ரூத்). இஸ் லாத்துக்கு மாறி, ராசியா என்று தனதுப் பெயரை மாற்றி, குடும்பத்தைப் பிரிந்து காதலனைக் கரம் பற்றுகிறாள். மனைவி யின் மீது மிகுந்த அன்புடன் இருக்கும் இப்ராஹிம், ஹெராயின் விற்பனையில் ஈடுபடும் கும்பலின் தலைவர் ராவுத்தரிடம் (வேலு பிரபாகரன்) பணியாற்றுகிறான். அவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை செய்கின்றனர். தன் கணவன் சாவுக்கு காரணமான ராவுத்தரையும் அவனது இரண்டு மகன் களையும் கொல்ல முடிவெடுக்கிறாள் ராசியா. ராவுத்தரின் முன்னாள் கூட்டாளி யான பாக்ஸி (டேனியல் பாலாஜி), ராவுத்தரால் துரத்தியடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 865 views
-
-
நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி. மும்பை: ஒரே மாதத்தில் என்னென்ன செய்ய முடியும்.. நர்கீஸ் பக்ரி 4 கிலோ எடையைக் குறைத்து டிவிட்டரில் அதைப் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்போதெல்லாம் எடைக் குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு கை வந்த கலையாகி விட்டது கலைஞர்களுக்கு. தேவையென்றால் குறைகிறார்கள், தேவையில்லாவிட்டால் கூட்டிக் கொள்கிறார்கள். ஒரே படத்தில் தினுசு தினுசான வெயிட்டிலும் வந்து அசத்துகிறார்கள். இந்த நிலையில் அழகுச் சிலையான நர்கீஸ் பக்ரி தனது எடையை 4 கிலோ குறைத்து அசத்தியுள்ளாராம். வாயைக் கட்டியதே இந்த எடைக் குறைப்புக்கு முக்கியக் காரணம். தேவையில்லாமல் உள்ளே தள்ளி வெயிட்டை ஏற்றும் வேலையை முதல் வேலையாக நிறுத்தினாராம். 10 ஆயிரம் படிகள்... அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
புத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல் 2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்டிற்கு தமிழில் எட்டுப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் “அழகுகுட்டிச்செல்லம்”, சந்தானம் நடிப்பில் “வாலிபராஜா”, செல்வராகவன் எழுத்தில், கீதா செல்வராகவன் இயக்கும் “மாலைநேரத்துமயக்கம்”, சிம்ரன் நடிப்பில் “கரையோரம்”,சமுத்திரக்கனி, சக்தி நடிப்பில் “தற்காப்பு”, “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”, “கோடைமழை”, “பேய்கள் ஜாக்கிரதை” உள்ளிட்ட எட்டுப் படங்கள் ரீலீஸாகவிருக்கின்றன. பொங்கல்வரை ஓடினால் போதும் என்கிற மனநிலைய…
-
- 0 replies
- 460 views
-
-
[size=6]Maatran official Trailer 2 HD[/size] http://youtu.be/M7kQXTHnkMI
-
- 3 replies
- 705 views
-
-
ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து …
-
- 1 reply
- 634 views
-
-
“சாருலதா” படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரியாமணி.ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா…? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா…? அந்தபடத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா,? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியாமணி. …
-
- 0 replies
- 447 views
-