வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
பெரியார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக சத்யராஜ் கூறியுள்ளார். லொள்ளு சபா தலைவரான சத்யராஜ், தான் நடித்த அத்தனை படங்களிலும் லொள்ளுத்தனம் இல்லாமல் நடித்ததே இல்லை. சீரியஸான கேரக்டரைக் கூட தனது குறும்புத்தனத்தால் கலகலக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட அசகாய சூர நடிகரான சத்யராஜ், பெரியார் படத்தில் நடித்த விதத்தைப் பார்த்து சினிமாக்கார்ரகள் அசந்து போயுள்ளனர். பல கமல்ஹாசன்களை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் பெரியார் வேடம் மூலமாக. பெரியார் படத்தில் நடித்ததற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்க இப்போது பெரியார் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கத் தயாராகி வருகிறாராம் சத்யராஜ். பெரியார் படத்தில் நடித்தற்காக …
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னிந்தியாவிலேயே விஜய்யின் சர்கார் தான் நம்பர் 1, ரஜினியின் 2.0 லிஸ்டிலேயே இல்லை- ரசிகர்கள் செம ஷாக் Mahalakshmi தமிழ் சினிமாவை இப்போது ராஜ்ஜியம் செய்து வருகிறது ரஜினியின் 2.0. சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப அவரது படங்கள் தாறுமாறாக எல்லா இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது. இங்கு 5 நாட்களில் ரூ. 450 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது. அங்கும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தென்னிந்தியாவில் டுவிட்டரில் 2018ம் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்குகளில் விவரம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் சர்கார் படம் முதல் இடத்தை பிடித்து…
-
- 0 replies
- 500 views
-
-
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அ…
-
- 0 replies
- 257 views
-
-
ஈழத் தமிழர்களின் இன்னல்களை படம்பிடித்த 'ஆணிவேர்' நெடுங்குருதியின் ஈரம் வற்றாத, பிணவாடைகளின் நாற்றம் நிற்காத, பிஞ்சுகளென்றும் பாராமல் அவைகளின் மேனியை துளைத்தெடுக்கும் கண்களும் கருணையுமற்ற ராணுவ துப்பாக்கிகள், ஓய்வில்லா யுத்தம், ஒங்கி ஒலிக்கும் குண்டுகளின் சத்தம். ஈழத்து மணணில் இன்னும் மாறாத காட்சிகளும் காயங்களும்தான் இவையெல்லாம். இதனை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் படம்தான் 'ஆணிவேர்'. தமிழுக்கு 'உதிரிழக்களை' கொடுத்த இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான்தான் ஆணிவேரின் அஸ்திவாரம். இவருக்காக தோள் கொடுத்த நட்சத்திரங்கள் நந்தா, மதுமிதா.சமீபத்தில் லண்டனில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ள 'ஆணிவேர்' தமிழ் பத்திரிக்கைகளுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. கிளிநொச்சி…
-
- 14 replies
- 2.6k views
-
-
மாஸ்டர்ஸ்’ என்ற மலையாள படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்திருக்கிறார் சசிகுமார். படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் ரிப்போட்டராக நடிக்கிறேன் பிருத்விராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இருவரும் நண்பர்கள். ஒரு பிரச்னைக்காக சேர்ந்து போராடுவது கதை. நான்தான் நடிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக, இயக்குனர் ஜானி ஆண்டனி காத்திருந்தார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். நானே, மலையாளத்தில் டப்பிங் பேசுகிறேன். படத்தில் அனன்யா, பியா, பார்வதி உட்பட 5 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் எனக்கு ஜோடியல்ல. தோழிகள். ‘தொடர்ந்து நண்பர்கள் கதையையே தேர்ந்தெடுக்கிறீர்களே’ என்கிறார்கள். அது தானாக அமைந்ததுதான்…
-
- 3 replies
- 1.5k views
-
-
‘மாயா’ படத்துக்காக மயானத்தில் நள்ளிரவுகளில் படப்பிடிப்பை நடத்தினர். பேய் படத்தில் நடிப்பதற்கு பயமாக இருந்தது என்று நயன்தாரா கூறினார். நயன்தாரா ‘மாயா’ என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கில் ‘மயூரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நயன்தாரா ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ‘மாயா எனக்கு நான்காவது பேய் படம். ஏற்கனவே மலையாளத்தில் பேய் படமொன்றில் நடித்தேன். தமிழில் ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற திகில் படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே பேய் படங்களில் நடிப்பது எனக்கு பழகிவிட்டது. மாயா படத்தில் நடித்தது வித்தியா…
-
- 0 replies
- 311 views
-
-
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப…
-
- 0 replies
- 469 views
-
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்…
-
-
- 8 replies
- 1.1k views
-
-
ரஜினி குசேலன் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கியது தான் கோடம்பாக்கத்தில் தற்போது பரபரப்பு செய்தியாக பேசப்படுகிறது. சிவாஜி படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கியதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றார் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தார் அவர். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=251
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்! இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான். இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இளங்கோவுடன் ஒரு நேர்காணல்... கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி? ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய…
-
- 15 replies
- 1.2k views
-
-
தமிழ்த் திரையுலகில் 2012ம் ஆண்டின் பாட்டு ராசா யார் என்று கேட்டால் நா.முத்துக்குமாரின் பெயர்தான் முதலில் வருகிறது. கடந்த ஆண்டில் முத்துக்குமார் 103 பாடல்களை எழுதி அசத்தியுள்ளார்.தன்னம்பிக்கைப் பாடலாகட்டும், குத்துப் பாட்டாகட்டும், துள்ளல் இசைப் பாடலாகட்டும், எதாக இருந்தாலும் விதம் விதமாக தருவதில் முத்துக்குமாருக்கு நிகர் அவர்தான். 2012ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் அத்தனையிலும் முத்துக்குமாரின் பாட்டு முத்திரை பதிந்துள்ளது விசேஷமானது. http://123tamilcinema.com/2013010223398.html
-
- 0 replies
- 499 views
-
-
கமலின் நம்பிக்கை அஸ்திவாரத்தில் பொக்லைன் வைத்து தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். நேற்றுவரை இருந்த நிலைமையை ஒரே நாளில் மாற்றிவிட்டார்கள் அத்தனை பேரும். இந்த விறுவிறுப்பான 'கேம்' எப்படி முடியும் என்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சுமார் 300 தியேட்டர்காரர்களுக்கு மேல் சந்தித்து தனது நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டி விஸ்வரூபம் படத்தை திரையிட ஒப்புதல் வாங்கியிருந்தார் கமல். ஆனால் அத்தனையும் இன்றைய தேதியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சங்கம் பலமாக இருப்பதால் தனித்து செயல்பட அச்சம் கொள்கிறார்களாம் அத்தனை பேரும். இது ஒருபுறமிருக்க, சென்னையில் புகழ் பெற்ற நான்கு காம்பளக்ஸ் தியேட்டர்களில் படத்தை வெளியிடவ…
-
- 0 replies
- 688 views
-
-
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் டிவி நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் இந்தியாவின் பிரியங்கா சோப்ராவும் இடப்பெற்றுள்ளார். "குவாண்டிகோ" என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்காவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாது இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடப்பெற்றுள்ள முதல் நடிகையும் பிரியங்காதான். 'குவாண்டிகோ" டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்கா பெற்ற வருமானம் 1கோடியே 10 லட்சம் ஆகும். குவாண்டிகோ நாடகத்தில் பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் அமெரிக்க…
-
- 0 replies
- 272 views
-
-
நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஹன்சிகா, அஞ்சலியுடன் உதட்டோடு உதடு வைத்து சூடான முத்தம் சேட்டையில் கொடுத்தாகிவிட்டது. அடுத்து இனி யாருக்கு முத்தம் கொடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்த ஆர்யா, அடுத்ததாக அவரது நினைவுக்கு வந்தவர் தமன்னாதானாம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் ஆர்யா, தனக்கு ஜோடியாக தமன்னாவை போடும்படி வலியுறுத்தினாராம். மேலும் படத்தில் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். அவரது முதல் கோரிக்கை ஏற்கப்பட்டது. முத்தக்கோரிக்கைதான் பெண்டிங்கில் உள்ளது என கே.வி.ஆனந்த் வட்டாரம் தெரிவிக்கின்றது. மாற்றான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார் கே.வி.ஆனந்த். தன்னுடைய புதிய படத்தில் ரஜினியோ அல்லது விஜய்யோ நடிக்கலாம் என்…
-
- 0 replies
- 420 views
-
-
‘மெட்ராஸ் கபே’ படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் தமிழில் ‘யாவரும் நலம்’ பேய் படத்தில் அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளன. தியேட்டர் அதிபர்கள் இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இதனால் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் மெட்ராஸ் கபே ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என கருத்து தெரிவித்து உள்ளார்…
-
- 0 replies
- 395 views
-
-
உரு - சினிமா ஒரு பார்வை படம் ஆரம்பித்து 20 வது நிமிடத்தில் புரிந்து விட்டது. இது என்ன படம் என்ன கதை என்று. ஓர் எழுத்தாளன் சமீப காலமாக அவன் கதை சொதப்பிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட ஒரு கதை வேண்டும். நீண்ட தடுமாற்றத்துக்கு பின்... தவிப்புக்கு பின்... போதைக்கு பின்... ஒரு கரு கிடைக்கிறது. கருவை கதையாக்க மேகமலைக்கு போகிறான் எழுத்தாளன். அங்கு நடக்கும் அமானுஷ்யங்கள் போலொரு நாடகம்.. மெல்ல மெல்ல அரங்கேறி அவனை "உரு" வாக ஆக்குகிறது. ஆங்கில பட பாணியில் காட்டுக்குள்... தனித்த வீடு. இரவும் அது சார்ந்த நிறமும்.. அச்சு அசலாய் ஆட்டிப் படைக்கிறது. ஒரு கட்டத்தில்.... தேடி வரும் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து அடுத்த 5 மணி நேரத்தில் உன்…
-
- 0 replies
- 398 views
-
-
கிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை. இந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால். இந்த சூழ்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12-ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் இணைந்து அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அமலாபால், ‘’பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித…
-
- 34 replies
- 3.7k views
-
-
நடிகரை சாடிய பாடகி - வைரலாகும் ஆடியோ! பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இவர் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். யூ-டியூப் சேனல் நடத்தி வரும் இவர் தனது சேனலின் மூலமாக பல முன்னணி நடிகர்களை குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி வந்துள்ளார். இதனால், கோபமடைந்த பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அதன்படி, தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பிரபல பாடகி சுசித்ராவ…
-
- 0 replies
- 385 views
-
-
இன்று தமிழ் சினிமாவின் பெருமிதமான தந்தை சிவ குமார்.இரண்டு மகன்களும் தமிழ் சினிமாவின் ஹாட் நட்சத்திரங்கள்.மகன்களுக்கு போட்டியாக இன்றும் இளமையுடன் இருக்கும் சிவக்குமாரிடம் சூர்யா, கார்த்தி பற்றி பேசினோம். ஓவியக் கலைஞனாக புகழ்பெற சென்னை வந்தீர்கள்.அக்கலையில் தேர்ச்சி பெற்ற பின் அதைவிட்டு,நடிக்கப் போனீர்கள்.இப்போது அங்கிருந்து மேடைப் பேச்சுக்குத் தாவி விட்டீர்கள். மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா? ‘‘100 வயது தொட்ட மொரார்ஜி தேசாயிடம், இவ்வுலகில் நிலையானது எது என்று கேட்டார்கள்.மாறுதல்கள் என்றார் அவர்.மாறுதல்கள்தான் நிலையானது.நதியிலே ஓடும் வெள்ளத்தில் ஒரு விநாடியில் நீங்கள் பார்த்த நீர், அடுத்த வினாடி அங்கில்லை, முன்னால் போய்விடுகிறது. 40 ஆண்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ - யமுனா ராஜேந்திரன் 04 ஜூலை 2014 குறிப்பிட்ட இரண்டு பாத்திரங்களில் ஏதாவதொரு பாத்திரத்தின் மீது பார்வையாளர்கள் அனுதாபம் செலுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. இந்த இரு பாத்திரங்களையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவே விரும்புகிறேன். இயக்குனர் பிரசன்ன விதானகே The Hindu, 3O june 2O14. I இருபது ஆண்டுகளில் சிங்கள மொழியில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் அனைத்துமே சிங்கள ராணுவம் குறித்த படங்களாகவே இருக்கின்றன. பிரசன்ன விதானகேயின் பவுர்ணமி நாளில் நிகழ்ந்த மரணம் மற்றும் ஆகஸ்ட் சூரியன், இநோகா சதாயாங்கினியின் காற்றுப் பறவை, அசோகா ஹந்தகமாவின் இந்த வழியால் வாருங்கள் அல்லது கம் அலாங்க் திஸ் ரோடு : ஏ நைன் ஹைவே ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது'. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டத…
-
- 1 reply
- 482 views
-
-
150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இதற்கு பெரும் தொகை தேவை. அதாவது 200 கோடிக்கும் மேல். இந்தப் பெரும் தொகை இப்போதைக்கு சன் பிக்சர்ஸிடம் மட்டுமே உள்ளது. மணிரத்னத்தின் படம் என்றால் வடக்கேயும் வெளியிட்டு கல்லாகட்ட முடியும். சுமாரான ராவணனே இரண்டு வாரங்களில் இருபது கோடிக்குமேல் வடக்கே வசூல் செய்தது. இதையெல்லாம் கூட்டிக் கழித்த சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில…
-
- 0 replies
- 1.3k views
-
-
இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். “இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?” என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறா…
-
- 0 replies
- 600 views
-
-
லவ் டுடே: அநாகரீகம், ஆபாசம் ராஜன் குறை கிருஷ்ணன் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம், நம் வாழ்வில் இன்று முக்கியமான அங்கமாகிவிட்ட செல்பேசியின் பயன்பாட்டை அந்தப் படம் விவாதிப்பதுதான். குறிப்பாக இளைய தலைமுறையானது செல்பேசியுடன் முழுமையாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டிருப்பது முடிவற்ற பட்டிமன்ற விவாதப் பொருள் ஆகியுள்ளதை அறிவோம். உள்ளபடி சொன்னால் செல்பேசி கடந்த பத்தாண்டுகளில் சமகால வாழ்வில் மிகப் பெரிய, புரட்சிகர மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸப், ட்விட்டர் உள்ளிட்ட தகவல் பரிமாற்றத் தளங்களின் பயன்பாடு அந்தரங்க வாழ்விலிருந்து, உலக அரசியல் வரை மிகப் பெரிய மாறுதல்களைக் …
-
- 1 reply
- 503 views
-