வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாரா கூறியுள்ளார். சிம்புநயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ, அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர். சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன் என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாரா என சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர். இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ள நியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான் அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச…
-
- 8 replies
- 3.3k views
-
-
அசாத்திய டைரக்டர்... அசால்ட் நடிகர்! டபுள் சவாரியில் அசத்திய மணிவண்ணன்! இயக்குநர், நடிகர் மணிவண்ணன் தொழில் கற்றுக்கொண்டதை செம்மையாகச் செய்வதின் மூலமே உணர்த்தமுடியும். அப்படி உணர்த்துவதால், இரண்டு விஷயங்கள். ஒன்று... தொழிலை யாரிடம் கற்றுக்கொண்டோமோ அவர்களுக்கு நல்லபெயர் வாங்கித் தருவது. அடுத்தது... இவன் தொழில்காரன் என்று எல்லோரிடமும் பெயரெடுப்பது! அப்படி குருவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தவர்... தொழில்காரன் என்று பேரெடுத்தவர்... இயக்குநர் மணிவண்ணன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றினார். அவரை விட்டு வெளியே வந்ததும் தானே படத்தை இயக்கினார். அவ…
-
- 2 replies
- 2k views
-
-
இந்த முகத்தில் ஒரு வசீகரம் இருக்கு .............ஐ லைக் திஸ்
-
- 6 replies
- 1.1k views
-
-
பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்…
-
- 2 replies
- 637 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
சிவாஜிகணேசன் | 'தாய்மொழியில் பதில் சொல்லவே விரும்புகிறேன்' இன்று சிவாஜிகணேசன் 87-வது பிறந்த நாள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித் துள்ளார். சிவாஜியின் 87-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இவ் வேளையில் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது தித்திக்கும் செய்தி! ஒருநாள் எனக்கு சிவாஜி வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. என்னை அவர் அருகில் உட்கார சொன்னவர், “ என்டிடிவி என்னைப் பேட்டி காணப் போகி றது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, நான் தமிழில் பதில் சொல்லப் போகிறேன்” என்றார். “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே பின் ஏன் தமிழில்?” என்றேன். “அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் சரியான பதில் தர விரும்…
-
- 1 reply
- 295 views
-
-
நேர்கொண்ட பார்வை: புத்தம் புதுமைப் பெண் செப்டம்பர் 2019 - சி.சரவணகார்த்திகேயன் · விமர்சனம் சுதந்திரமென்பது புணர்தலல்ல; புணர மறுத்தல். ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத்தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில…
-
- 1 reply
- 805 views
-
-
54வது தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை! வெள்ளி, 13 ஜூன் 2008( 14:21 IST ) 54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. ''எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிற
-
- 2 replies
- 967 views
-
-
நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன். தமிழில் புயல் மாதிரி அறிமுகமாகி பின்னர் போதை மருந்து காதலர், தாயுடன் தகராறு என பிரச்சினைகளில் சிக்கி சில காலம் காணாமல் போயிருந்த ஷெரீன், மீண்டும் வந்தார். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இப்போது மீண்டும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் இரு படங்களிலும், கன்னடம், தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கதாநாயகியாகவே இனி காலம் தள்ளுவது கஷ்டம் என்பதால் கிடைத்த வேடங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் ஷெரீன், இல்லாததையும் பொல்லாததையும் கூறி தனது …
-
- 0 replies
- 1.1k views
-
-
தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம். பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம். தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இரு…
-
- 0 replies
- 854 views
-
-
டைரக்டர் பாலா தொடர்பாக அடிபடும் கதை ஒன்றால் மிரண்டு போயிருக்கிறது, கோடம்பாக்கம். பொதுவாகவே தனது படங்களில் மிரள வைக்கும் டாபிக்குகளில் கதை சொல்லும் பாலாவே மிரண்டு போன கதை இது. பாலாவையே மிரள வைக்க ஒருவர் பிறந்து வந்திருக்கிறாரா? பிறந்து வரலிங்க.. (தூக்கத்திலிருந்து) எழுந்து வந்திருக்கிறார்! வேறு யாரும் இல்லிங்க.. நம்ம நவரச நாயகன் கார்த்திக்! விவகாரம் என்ன? பாலாவின் அடுத்த படத்தில் ஹீரோ சசிகுமார். அண்ணன் தம்பி கதை அது. அண்ணன் கேரக்டரில் சசி. தம்பிக்கும் பவர்ஃபுல் ரோல். இந்த தம்பி ரோலில் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பதுதான் முதலில் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் போட்டோவையும், சசிகுமார் போட்டோவையும் அருகருகில் வைத்து பார்த்த பாலா, “ஏலே.. இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கா…
-
- 4 replies
- 1.8k views
-
-
மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர…
-
- 3 replies
- 1.1k views
-
-
நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து க…
-
- 1 reply
- 471 views
-
-
Eyecatch Multimedia Inc. தயாரிப்பில் லெனின் எம்.சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் A Gun & A Ring திரைப்படம் ஷாங்ஹாய் திரைப்பட விழாவின் தங்கக் குவளை விருதுக்கான போட்டிப்பிரிவில் ஜூன் 19 பிற்பகல் திரையிடப்பட்டது. உலக அளவில் இத்திரைப்படத்தின் காட்சியுமாகும்(Official World Premiere). காட்சி தொடங்கமுன்னர், அரங்கு நிறைந்த பார்வையாளருக்கு திரைப்படக்குழுவினர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். காட்சி முடிவடைந்த பின்னர் நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் A Gun & A Ring குழுவினர் கலந்துகொண்டனர். திரைப்படத்தில் தமது பாத்திரம் அல்லது பங்களிப்புப் பற்றியும் விளக்கமளித்தனர். கனடிய அரசின் சார்பில் ஷாங்ஹாய் நகரத்து, கனடியத் துணைத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். A Gun & A …
-
- 1 reply
- 370 views
-
-
பொலிவுட் நடிகைக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கானுக்கும் நிச்சயதார்த்தம் பொலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் சகரிகா கட்ஜ், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷஹீர் கான் ஆகியோரிக்கு நேற்றைய தினம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கியை மையமாக வைத்து கடந்த 2007 இல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சகரிகா கட்ஜ். இப்படத்தில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மூலம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்ந…
-
- 0 replies
- 290 views
-
-
சினிமா விமர்சனம்: சதுர அடி 3500 பகிர்க திரைப்படம் சதுர அடி 3500 நடிகர்கள் நிகில் மோகன், இனியா, பிரதாப் போத்தன், ரகுமான், எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா இசை கணேஷ் ராகவேந்திரா இயக்கம் ஸ்டீபன் இதுபோல ஒரு திகில் படத்தைப் பார்த்து வெகுநாட்களாகிறது. முதல் காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரைக்கும் பயங்கரம்தான். தாங்க முடியாத படம்!! சென்னையில் மையப் பகுதியில் கட்டப்பட்டுவரும் ஒரு மி…
-
- 0 replies
- 448 views
-
-
சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! ’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1 ’நமக்கு மன ரீதியாக பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள். அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று…
-
- 8 replies
- 4.2k views
-
-
பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். 'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார். இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம். http://virakesari.lk/articles/2014/05/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
-
- 4 replies
- 3.5k views
-
-
சினிமா விமர்சனம்: நிமிர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER நடிகர்கள் உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு இசை ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத்…
-
- 1 reply
- 465 views
-
-
:P திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர் ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார். நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன. முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர்கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப்பேற்றுள்ளார். இம்மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
சினிமா விமர்சனம்: பரத் எனும் நான் பகிர்க நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் இயக்கம் கொரட்டல சிவா ’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது,…
-
- 0 replies
- 1.3k views
-
-
நடிகையாகிறார் வீரப்பன் மனைவி வீரப்பன் திரைப்படத்தில் முத்துலட்சுமி : ராஜ்குமார் வேடத்தில் நாகேஸ்வரராவ் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் பெங்களூரு: "வீரப்பன்' திரைப்படத்தில் முத்துலட்சுமி, ராஜ்குமார் வேடத்தில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ், போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கின்றனர். "வீரப்பன்' வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ரமேஷ் திரைப்படமாக இயக்க முடிவு செய்தார். இதற்கு தடை விதிக்க கோரி முத்துலட்சுமி நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலிருந்து முத்துலட்சுமி வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த பிரச்னை தற்போது சுமூக நிலையை அடைந்தது. எனவே படப்பிடிப்பை தொடங்க முழு மூச்சில் இறங்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ். ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய சிவராசன…
-
- 2 replies
- 1.9k views
-
-
சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்' தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான். ”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர். திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவ…
-
- 0 replies
- 681 views
-
-
பெயர்தான் கதாநாயகி. ஆனால், திரைப்படங்களில் பெரும்பாலும் ஊறுகாய் கதாபாத்திரம்தான் அவளுக்கு. ஆரம்பக் காலங்களில் வந்த இதிகாசப் படங்களில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சாமியாராக இருந்தாலும் கணவனுக்கு பணிவிடை செய்வது, அரசனாக இருந்தால் பத்தோடு பதினோராவது மனைவியாக இருக்க சபிக்கப்பட்டாள் கதாநாயகி. அடுத்தக்கட்டமாக தமிழ்ச் சினிமா, சமூகப் படங்கள் என்கிற அவதாரமெடுத்தபோது, புறக்கணிப்பு, புகுந்த வீட்டில் கொடுமை என துன்பப்பட்டு அடியும் உதையும் வாங்கினாள் நம் கதாநாயகி. பின் மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையான கணவனால் உதாசீனப்படுத்தப்பட்டாள். அடுத்த தலைமுறை இயக்குனர்கள், அவளை, தன்னை வேறொருவனுடன் சந்தேகிக்கும் கணவனிடம் போராட வைத்தார்கள். இப்போது போராட எல்லாம் வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ…
-
- 0 replies
- 431 views
-