வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கை அஜித் ரசிகர்கள் சேதப்படுத்தியதால் அந்தப் பகுதி விநியோகஸ்தருக்குக் கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸ். இங்கு படங்கள் திரையிடப்படுவது ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது. 'சர்கார்', 'பேட்ட', 'விஸ்வாசம்' என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்பட்டன. இந்த வாரம் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படம் அங்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் அந்தத் திரை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து திர…
-
- 23 replies
- 2.4k views
- 1 follower
-
-
திரை விமர்சனம் ‘பக்ரீத்’...நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.! 5 பாட்டு, 6 பைட்டு, ஏழெட்டு காதல், காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் பார்முலாவுக்குள் தமிழ் சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’. தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட …
-
- 0 replies
- 504 views
-
-
'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? ➡️பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். ➡️அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக …
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 876 views
-
-
ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'. பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல்…
-
- 0 replies
- 432 views
-
-
கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோ…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் பொலிஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ்,சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம். படம் …
-
- 0 replies
- 471 views
-
-
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த …
-
- 0 replies
- 926 views
-
-
திரை விமர்சனம் - ஜாக்பாட் ஜோதிகா, ரேவதி இருவரும் திருட்டை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ரயில் பயணிகளை ஏமாற்றுவது, சிறுவர்களை வைத்து மற்றவர்களிடம் பணம் பறிப்பது என சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில், அந்த ஏரியா தாதா ஆனந்தராஜின் காரை திருடுகின்றனர். எல்லா இடங்களிலும் சாதுர்யமாக தப்பிவிடும் இருவரும், தியேட்டரில் ஒரு காவல் துறை அதிகாரியிடம் தகராறு செய்வதால் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். அங்கு கைதி சச்சுவின் அறிமுகம் கிடைக்கிறது. புராணங்களில் வருவது போல, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் ஒன்று, தாதா ஆனந்தராஜ் வீட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருக்கும் தகவலை அவர் மூலமாக தெரிந்துகொள்கின்றனர். இவர்களோடு யோகிபாபுவும் சேர்ந்துகொள்கிறார். ஆ…
-
- 0 replies
- 579 views
-
-
சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …
-
- 0 replies
- 321 views
-
-
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம் முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் நேர்கொண்ட பார்வை நடிகர்கள் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன…
-
- 1 reply
- 966 views
- 1 follower
-
-
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.அதில் “நான் அரசியலுக்கு வருவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்ப…
-
- 31 replies
- 14.5k views
- 1 follower
-
-
தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் .. 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால க…
-
- 1 reply
- 1.9k views
-
-
அபத்தமான தேய்வழக்குகளையும் எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது. இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது. தூங்காவனத்தைப் (Nuit Blanche) போ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஒரு போராளியின் பார்வையில் இன்றைய ஈழமே’சினம்கொள்’: ரஞ்சித் ஜோசப் அண்மையில் கனடாவில் சிறப்புத் திரையிடல்கள் மூலம் சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் இதை ஒரு முக்கியமான ஈழத் திரைப்படம் என்று பாராட்டுகின்றார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களையும் தம்மை படம் வெகுவாக பாதித்துள்ளதாக கூறுகின்றனர். இன்னும் வெளியிடப்படாத இந்த திரைப்படத்திற்கு சிறப்பு திரையிடல்கள் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. லண்டனில் எதிர்வரும் 20ஆம் திகதியும் சுவிஸில் 21ஆம் திகதியும் நோர்வேயில் 27ஆம் திகதியும் பிரான்ஸில் 28ஆம் திகதியும் சிறப்பு திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் ஆனந்த விகடன் இதழில் வெளியாகி பெரும் வரவேற்பை ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்! பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெர…
-
- 2 replies
- 2.8k views
-
-
கவுண்டமணி பேசிய அரசியல்..! http://ns.ibnlive.in.com/tamilnews18/2019/05_2019/13-05-2019/goundamani_politics.mp4 பல படங்களின் பகிடிகளை தேடினாலும் கிடைப்பதில்லை .. ஹலோ யார் பேசுறது .. மிஸ்ரர் தேவராஜ் பரிவட்டம் முந்தானை சபதம் ராஜாவின் பார்வை முறை மாப்பிளை என் ஆசை தங்கச்சி. அன்புள்ள தங்கச்சிக்கு ... இன்னும் பல .. கள உறவுகள் எங்கேனும் இணையத்தில் காண கிடைத்தால் அறிய தரவும்.. நன்றி..💐
-
- 3 replies
- 2.5k views
-
-
ஈழத்தமிழ் இனத்திற்கு Bigg Boss அவசியமா?
-
- 4 replies
- 1k views
-
-
எந்த விஷயத்திலும் அதீத ஆர்வமும் தேடலும் கொண்ட இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத விளைவுகளே 'ஜீவி'. ஊரில் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் வெற்றி பெற்றோரின் வற்புறுத்தலால் வேலை தேடி சென்னை வருகிறார். செக்யூரிட்டி வேலை உள்ளிட்ட சில பல வேலைகளைச் செய்த பிறகு ஜூஸ் போட்டுக் கொடுக்கும் வேலையில் தன்னை தக்கவைத்துக் கொள்கிறார். அதே கடையில் டீ போடும் கருணாகரனும் வெற்றியும் நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். எதிர்க்கடையில் வேலை செய்யும் பெண் வெற்றியின் காதலை நிராகரித்துவிட்டு இன்னொரு ஆணுடன் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். இதனால் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறார் வெற்றி. குடும்ப பாரம் அழுத்த, பொருளாதாரப் பிரச்சினையில் தவிக்கும…
-
- 0 replies
- 453 views
-
-
பொதுவாக படம் வெளியாகும் போது, கட்டவுட்டுக்கு பாலூத்தும் காட்சிகளை பார்க்க முடியும். ரசிகர்களான இளைஞர்கள் தான் இந்த வேலையில் மும்மரமாக இருப்பார்கள். ஆனால், தேங்காய் உடைத்து, பால் ஊத்தி, வெடி போட்டு இளைஞர்களுக்கு சமமாக, பெரிசுகள் செய்யும் வேலையை என்ன சொல்வது. வேறு ஒன்றும் இல்லை. சிவாஜியின் வசந்தமாளிகை டிஜிட்டல் காப்பி வெளியானது. திரையரங்குகளில் மீண்டும் சிவாஜி கட்டவுட் வைக்கப்பட்டது. பெருசுகள், பழசுகள் எல்லாம், ஆரவாரத்துடன் கொண்டாடும் காட்சியை நீங்களும் பாருங்கோவன்.
-
- 1 reply
- 719 views
-
-
முதல் பார்வை: தும்பா உதிரன்சென்னை கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'. பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர…
-
- 0 replies
- 664 views
-
-
சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி ..! காமெடியனாக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம். வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடி…
-
- 3 replies
- 974 views
-
-
மரணமில்லா 'மார்க்கபந்து' ‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மனமுண் டானால் மார்க்கபந்து’ இவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்காத வசனங்கள் …. இன்றைய இளைய இணைய தலைமுறைகளின் மீம்ஸுகளில் அதிகம் இடம்பெறுகின்ற வசனமும் கூட…. திரைப்பட ரசிகர்களுக்கும் நகைச்சுவை உணர்வாளர்களுக்கும் எப்போது கேட்டாலும் பார்த்தாலும் இந்த வசனங்கள் சிரிப்பை பற்றவைக்கும்.. ஆனால் தற்போது முதன் முறையாக இந்த வசனங்கள் கண்ணீரை வரவழைத்து சென்றுள்ளன. காரணம் இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் இன்று நம்மோடு இல்லை… மனிதனை மனிதத்துடனும் மகிழ்வுடனும் வாழவைக்கின்ற உணர்வுகளில் நகைச்சுவை என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இந்த நகைச்சுவை சில நேரங்…
-
- 0 replies
- 695 views
-
-
எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு..! சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம். எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர். தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி. ஒரு வருசம் தான் ஓகே: தனது பதிவில் அவர், என் பெற்றோரைத் த…
-
- 33 replies
- 3.6k views
- 1 follower
-