வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
Aahmi Doghi - The both us 2018 ஆண்டு வெளிவந்த ஒரு மாரத்திய மொழிப்படம். கெளரி தேஷ்பாண்டேயின் “ பாஸ் அலா மேத்தா” என்ற நாவலை மையமாக கொண்டு உருவாகிய படம். இதன் கதாசிரியர்கள்: Pratima Joshi & Bhagyashree Jadhav , தயாரிப்பு: Puja Chhabria, நெறியாள்கை: Pratima Joshi என இந்தபடத்தின் பெரும்பகுதி பெண்களால் உருவாக்கப்பட்டது. சாவித்திரியின் flashback கதையாகவே இந்தப்படம் ஆரம்பிக்கிறது. படத்தில் மட்டுமே தாயைப் பார்த்து வேலையாட்களின் கவனிப்பில் வளரும் கதாநாயகி சாவித்திரி, “ We aren’t emotional fools, we are practical” எனக்கூறியே மகளை வளர்க்கும் ஊரில் மிகவும் பிரபல்யமான வக்கீல் தந்தை, சாவித்திரியின் பதினைந்தாவதுவயதில், தந்தை மறுமணம் …
-
- 0 replies
- 418 views
-
-
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்படும் இந்திய திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்வர் நாராயணசாமி இயக்குநர் மாரிராஜ் விருது வழங்க உள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525029
-
- 1 reply
- 1k views
-
-
கொண்ரெக்ரர் நேசமணிக்கு இன்று 59 ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்.! சென்னை: இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுவை மீம்ஸ் கிரியேட்டர்களின் அரசன் என்றே சொல்லலாம். வடிவேலுவின் நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது. தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான். ஒருவரை கோபப்பட வைக்கவேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும் என்றால் அது அனைவராலும் முடிந்து விடும் அதுவே ஒருவரை வாய்விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடிந்து விடுமா என்ன. நிச்சயம் முடியவே முடியாது.ஆனால் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்க…
-
- 0 replies
- 1k views
-
-
அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'வைரமுத்துவின் முதல் திரையிசைப் பாடலான, "இது ஒரு பொன் மாலைப் பொழுது" பாடலை மீட்டும்போதெல்லாம் நிழல்கள் நாயகன், ராஜசேகர் மனத்திரையில் வந்துபோவார்.ஒரு மெல்லிய வயலின் இசையைத்தொடர்ந்து வரும், "வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதிபெறும் திருநாள் மலரும் சேதிவரும் கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன்" என்ற பாடல் வரிகளை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட ஞாபகம். வைரமுத்துவையும் ராஜசேகரையும் அறிமுகமாக்கிய இந்த பாடலை ரசிக்காத உள்ளங்களே தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கமுடியாது. இன்று ராஜசேகர் யார் என்று கேட்டால் சரவணன் மீனாட்சி சீரியலின் நடிகர் என சொல்லும் இளம் மட்டத்துக்கு, நிழல்கள் படத்தின்பின் இயக்குநர் ரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
https://www.youtube.com/watch?v=qOzX4RiPUXs மிஷ்டிக் பிலிம்ஸ் சார்பில் யாழ் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை,வசனம் எழுதி எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும் போது கன்னி வெடிகளுக்கிடையே இரண்டு மணி நேரத்தில் நடக்கும் சம்பவவங்களின் மூன்று கதைகளின் கோர்வை தான்; யாழ் படத்தின் கதை. முதலில் அப்பாவி அபலைப்; பெண்ணான நீலிமா ராணி கைக்குழந்தையுடன் இருக்கையில் சிங்கள ராணுவ வீரர் டேனியல்பாலாஜியின் விசாரணைப் பார்வையில் சிக்குகிறார். விடுதலைப் புலி தமிழ்செல்வி என்று நினைத்து நீலிமாவை துரத்த கன்னி வெடியில் காலை வைத்து விடுகிறார் டேனியல் பாலாஜி. இடத்தை விட்ட நகர முடியாமல் தவிக்கும் டேனியல் பாலாஜி நீலிமா ராணியை குழந்தையை காரணம் காட்டி மிர…
-
- 0 replies
- 965 views
-
-
கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுத் தரும் மகா, கிராமத்துக் குழந்தைகளை வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் முனி ஆகிய இருவரின் கதையே 'மகாமுனி'. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மகாதேவன் (ஆர்யா) கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார். உள்ளூர் அரசியல்வாதி முத்துராஜ் (இளவரசு) சொல்லும் சின்னச் சின்ன வேலைகளை பிசிறே இல்லாமல் செய்து முடிக்கிறார். இதனால் குரு நாராயணன் (அருள்தாஸ்), ஆதி நாராயணன் (மதன்குமார்) என்ற இரு சகோதரர்களின் பகைக்கு ஆளாகிறார். பகை பழிவாங்கும் படலமாக உருவெடுக்க, முதுகில் கத்திக்குத்துடன் உயிருக்குப் போராடும் ஆர்யா மருத்துவரை சிகிச்சைகாகச் சந்திக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அம்மா ரோகிணியுடன் …
-
- 0 replies
- 736 views
-
-
பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து, ஈழத்தமிழர்கள் சிலர் எதிர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். முத்தையா முரளிதரன் தமிழராக இருந்த போதிலும், ஒருநாளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக செயற்பட்டதில்லை எனவும், சிங்களவர்களுக்கு சாதகமாகவே அவர் செயற்பட்டுள்ளதாகவும் ஈழத் தமிழர்கள் சிலர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களை கடந…
-
- 1 reply
- 799 views
-
-
பாட்டுப் பாடி, பிச்சை எடுத்த பெண்ணுக்கு... பாலிவுட்டில் குவியும் வாய்ப்பு. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார். அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துபோன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது. அப்போது ரனு மண்டல் பாடியதை கேட்ட அந்நிகழ்ச்சியின் நடுவரும், இசை அமைப்பாளருமான ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் ப…
-
- 1 reply
- 576 views
-
-
'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மலேசியக் கல்வி அமைப்பில் அமல்படுத்தப்பட்டு வரும் புது மாற்றங்கள், கொள்கைகள் இப்படத்தில் அழகாக சித்தரித்திருக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை@DRMASZLEEMALIK/FACEBOOK 'ராட்சசி' படத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களையும் காட்சிகளையும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மலேசிய பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் மலேசியாவில் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் பெரும் விருப்பமாகும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வருகிறது. …
-
- 0 replies
- 634 views
-
-
தமிழகத்தில் இனி ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கற் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி.! சென்னை: தமிழகத்தில் ஒன் லைனில் மட்டுமே சினிமா ரிக்கெற் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்பட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் ரிக்கெற் கட்டணம் அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு மேல் ரிக்கெற் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுகிறது. …
-
- 0 replies
- 458 views
-
-
பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கை அஜித் ரசிகர்கள் சேதப்படுத்தியதால் அந்தப் பகுதி விநியோகஸ்தருக்குக் கிட்டத்தட்ட 5.5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் இருக்கும் பிரபல திரையரங்கம் லீ கிராண்ட் ரெக்ஸ். இங்கு படங்கள் திரையிடப்படுவது ஒரு கவுரவமாகவே பார்க்கப்படுகிறது. 'சர்கார்', 'பேட்ட', 'விஸ்வாசம்' என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் படங்களும் இங்கு திரையிடப்பட்டன. இந்த வாரம் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படம் அங்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சிலர் அஜித் திரையில் தோன்றும் காட்சியில் ஆடிப் பாடி, திரையை கை வைத்து, தொட்டுக் கும்பிட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் அந்தத் திரை சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து திர…
-
- 23 replies
- 2.4k views
- 1 follower
-
-
திரை விமர்சனம் ‘பக்ரீத்’...நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.! 5 பாட்டு, 6 பைட்டு, ஏழெட்டு காதல், காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் பார்முலாவுக்குள் தமிழ் சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’. தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட …
-
- 0 replies
- 511 views
-
-
'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? ➡️பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். ➡️அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக …
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 882 views
-
-
ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'. பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல்…
-
- 0 replies
- 437 views
-
-
கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் பொலிஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ்,சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம். படம் …
-
- 0 replies
- 475 views
-
-
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான கே.ஜி.எஃப் படத்திற்கு சிறந்த சண்டை திரைப்படத்திற்கான தேசிய விருதும், மகாநதி (தெலுங்கு) படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான உரி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் என்பவருக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த …
-
- 0 replies
- 932 views
-
-
திரை விமர்சனம் - ஜாக்பாட் ஜோதிகா, ரேவதி இருவரும் திருட்டை பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ரயில் பயணிகளை ஏமாற்றுவது, சிறுவர்களை வைத்து மற்றவர்களிடம் பணம் பறிப்பது என சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில், அந்த ஏரியா தாதா ஆனந்தராஜின் காரை திருடுகின்றனர். எல்லா இடங்களிலும் சாதுர்யமாக தப்பிவிடும் இருவரும், தியேட்டரில் ஒரு காவல் துறை அதிகாரியிடம் தகராறு செய்வதால் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். அங்கு கைதி சச்சுவின் அறிமுகம் கிடைக்கிறது. புராணங்களில் வருவது போல, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் ஒன்று, தாதா ஆனந்தராஜ் வீட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருக்கும் தகவலை அவர் மூலமாக தெரிந்துகொள்கின்றனர். இவர்களோடு யோகிபாபுவும் சேர்ந்துகொள்கிறார். ஆ…
-
- 0 replies
- 582 views
-
-
சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …
-
- 0 replies
- 326 views
-
-
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம் முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் நேர்கொண்ட பார்வை நடிகர்கள் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன…
-
- 1 reply
- 971 views
- 1 follower
-
-
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.அதில் “நான் அரசியலுக்கு வருவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது மனம் திறந்த இயக்குநர் ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அட்டை பாக்ஸ் போல் இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்ப…
-
- 31 replies
- 14.7k views
- 1 follower
-
-
தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் .. 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால க…
-
- 1 reply
- 1.9k views
-
-
அபத்தமான தேய்வழக்குகளையும் எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது. இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது. தூங்காவனத்தைப் (Nuit Blanche) போ…
-
- 0 replies
- 1.4k views
-