வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன். 2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப…
-
- 0 replies
- 461 views
-
-
பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான ‘சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலு கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று (செப். 12) நடிகர் வடிவேலு தன் 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய வடிவேலு இன்று தன் 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யமானது. வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவ…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு தமி…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/309150
-
-
- 10 replies
- 663 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,YUVAN SHANKAR RAJA/INSTAGRAM படக்குறிப்பு, தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் பிடித்திருக்கிறார் யுவன் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்போது வெளியாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் அவர் இசையமைத்துள்ளார். தனது 35 வயதிற்கு உள்ளாகவே 100 படங்களுக்கு மேல் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, திரையுலகில் 27 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பத…
-
- 0 replies
- 657 views
- 1 follower
-
-
சென்னை: தளபதி விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிக பொருட்செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, ஜெயராம், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் பிஜிஎம் பக்காவாக அமைந்துள்ளது. விசில் போடு மற்றும் மட்ட பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில்,…
-
-
- 5 replies
- 811 views
- 1 follower
-
-
Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார். ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது. நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது. ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் எ…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திர…
-
-
- 6 replies
- 902 views
- 1 follower
-
-
ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 23 ஆகஸ்ட் 2024, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் மரியாதை இன்றி, ஒருமையில் அழைக்கும் போக்கு இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது,” என்கிறார் நடிகை அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரள திரையுலகில் பெண்களின் பாதுகா…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் ஹீரோவாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துவரும் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்பதால் கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் இதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. இந்த இரு தரப்பை இப்படம் திருப்திபடுத்தியதா என்பதை பார்க்கலாம். மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்)…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்த…
-
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள ம…
-
- 1 reply
- 441 views
-
-
2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 2024ம் ஆண்டு 70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. 'பொன்னியன் செல்வன்' சிறந்த தமிழ்த் திரைப்படமான தேர்வாகியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன், சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி ( காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் ( திருச்சிற்றம்பலம்) விருதுகளை வென்றுள்ளனர். சிறந்த நடன இயக்கத்திற்கான விருது ஜானி ( திருச்சிற்றம்பலம்), சிறந்த சண்டைப் பயிற்ச்சிகான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோர…
-
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்…
-
- 1 reply
- 558 views
-
-
இயக்குநர் சீனுராமசாமியின் அறிவிப்பு. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச் செல்வனின் "பயங்கரவாதி" நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு. விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்.
-
- 0 replies
- 201 views
-
-
Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத…
-
- 0 replies
- 221 views
-
-
1990, 2000 ஆண்டுகளில் திரையில் கோலோச்சிய நடிகரின் ‘ரீ என்ட்ரி’யை மீண்டும் திரையில் பார்ப்பது உற்சாகம் கூட்டக் கூடிய அனுபவம்தான். அதுவும் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக் எனும்போது ஒருவித நம்பிக்கையையும் கூடவே அழைத்துச் செல்வது இயல்பு. அப்படியான எதிர்பார்ப்புகளால் சூழப்பட்டு ஒருவழியாக திரைக்கு வந்துள்ளது பிரசாந்தின் ‘அந்தகன்’. படம் கொடுத்த அனுபவம் எப்படி என்பதைப் பார்ப்போம். பார்வையற்றவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் க்ரிஷ் (பிரசாந்த்) ஆத்மார்த்தமான ஓர் இசை பிரியர். பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் அவர், அதற்காக லண்டன் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவருக்கும் ஜுலிக்கும் (பிரியா ஆனந்த்) இடையே நட்பு மலர்கிறது. அவரது ரெஸ்ட்ரோ பாரில்…
-
- 1 reply
- 397 views
-
-
தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்ட…
-
- 3 replies
- 435 views
-
-
கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப…
-
- 0 replies
- 357 views
-
-
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன. எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இ…
-
-
- 37 replies
- 3.5k views
-
-
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் …
-
- 0 replies
- 214 views
-
-
நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன். தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தா…
-
-
- 3 replies
- 299 views
-
-
கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை. பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார். அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும…
-
- 0 replies
- 256 views
-