வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தமிழ் சினிமா இதுவரை... <-அயல் நாட்டில் பரிசு பெற்ற முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். 1959-ல் பி, ஆர், பந்துலு தயாரித்து இயக்கிய பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்ட பொம்மன் வண்ணப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்து இங்கிலாந்தில் டெக்னிக் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டது, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய பிரபல நாடகம் இது, 1960-ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க-ஆசிய பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த நடிகராக சிவாஜி கணேசனும், சிறந்த இசைமைப்பாளாராக ஜீ, ராமநாதனும் தேர்ந்தேடுக்கப்பட்டு வெள்ளி பருந்து பரிசு பெற்றார்கள் இப்படத்திற்கு இந்திய அரசாங்கம் பிராந்திய சான்றிதழ் அளித்தது. <-1940 ஆண்டு முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வெளிவந்தது, அந்த படம் உத்தமபுத்தி…
-
- 0 replies
- 6.1k views
-
-
களறி கற்கும் நடிகைகள் நடிகைகள் களறி கற்றுக் கொண்டால் நல்லது. ஆனால் படத்திற்கு தேவைப்பட்டால் ஒழிய யாரும் அதை செய்வதில்லை. ஆணாதிக்க சினிமாவிலிருந்து விடுபட களறி உதவும் என்றாலும், எந்த நடிகையும் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதாகவும் இல்லை. இந்த வியாக்கியானத்தை மறந்துவிட்டு வேறொரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். சந்தோஷ் சிவனின் உருமி படத்திற்காக களறி கற்றுக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா. கதைப்படி இவர் இளவரசியாம். இவருக்கு படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இருக்கிறதாம். ஜெனிலியா இப்படத்தில் நடிக்க கமிட் ஆனவுடன், அவசியம் களறி கற்றுக் கொள்ள வேண்டும் என்றாராம் சந்தோஷ் சிவன். இதற்காகவே நேரம் ஒதுக்கி கற்று தேர்ந்திருக்கிறார் ஜெனிலியா. இவரை போலவே நன்கு …
-
- 16 replies
- 6.1k views
-
-
தமிழ்ப் பையன்களைப் பிடிக்காத லட்சுமி மேனனுக்கு17 வயசு.. சென்னையில் கொண்டாட்டம்! தமிழ்ப் பையன்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும்... ஆனா நான் ஒரு மலையாளியைத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சுப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட லட்சுமி மேனன் நேற்று சென்னையில் தனது 17வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மலையாளத்திலிருந்து... வழக்கம் போல கோலிவுட் மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்த நடிகை லட்சுமி மேனன். கொச்சியைச் சேர்ந்தவர். ஆனால் சின்ன வயதிலிருந்தே சென்னையில் அதிக நாட்கள் வசித்ததால் தமிழை அட்சர சுத்தமாகப் பேசுவது இவருக்கு கூடுதல் தகுதி ஆகிவிட்டது. Read more at: http://tamil.oneindia.in/movies/heroines/2013/05/lakshmi-menon-celebrates-17th-b-day-in-chenna…
-
- 10 replies
- 6.1k views
-
-
டைட்டிலைப் பார்த்ததும் என்னடா இது ஹன்சிகாப் பத்தின ஏடாகூடமான மேட்டர்னு நெனைச்சிற வேணாம். இது அவர் நடிச்சிருக்கிற படத்தைப் பத்தின நியூஸ் தான். பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகா நானா ரெடி” ங்கிற படத்தை தாம் தமிழ்ல ‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ங்கிற பேர்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ணப்போறாங்க. ஹீரோவாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார், ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இவர் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களை த…
-
- 14 replies
- 6.1k views
-
-
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை நயனதாரா, தனது உத்தரவையும் மீறி தன்னை வளைத்து வளைத்துப் படம் பிடித்த கள்ளுக்கடை உரிமையாளரின் கேமராவை வாங்கி கீழே போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டயம் நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு நயனதாரா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக கோட்டயம் வந்த நயனதாரா அங்குள்ள ஹோட்டலில் தங்கினார். பின்னர் காலை உணவுக்காக ஹோட்டல் வளாகத்தில் உள்ள ரெஸ்டாரென்டுக்கு அவர் போனார். அப்போது நயனதாராவைப் பார்த்ததும் ஏராளமான பேர் அங்கு கூடி விட்டனர். அப்போது ஒருவர் (கள்ளுக்கடை நிர்வாகியாகம்) நயனதாராவை அருகில் பார்த்த உற்சாகத்தில், தனது கேமராவால் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த நயனதாரா, போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்…
-
- 17 replies
- 6k views
-
-
வாரணம் ஆயிரம் படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனனும் நாயகன் சூர்யாவும் பொத்திப் பொத்தி பாதுகாக்கும் ரகசியங்களுள் ஒன்று சிம்ரன் அந்தப் படத்தில் நடிக்கும் செய்தி. அதை விட முக்கியமானது அவரது கேரக்டர்தான். அந்த சிதம்பர ரகசியத்தை இப்போது நாம் நைஸாக லவட்டிக் கொண்டு வந்து விட்டோம், வாசகர்களுக்காக. தனது தமிழ் திரையுலக மறுபிரவேசத்தை இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒரு வழியாக வாரணம் ஆயிரம் படத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறார். அதில் ஒன்று அப்பா-மகன் பாத்திரம். இதில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர்தான் சிம்ரன். சிம்ரன் தவிர இன்னும் மூன்று நாயகிகள் படத்தில் உண்டு. பாலிவுட்டை தனது கிளாமர் புயலால…
-
- 17 replies
- 6k views
-
-
கமலின் தசாவதாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார். நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும். நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும…
-
- 19 replies
- 6k views
-
-
தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!! நடிகை தமன்னா காதலித்து ஏமாற்றியிருக்கிறார் பிரபல வாரிசு நடிகர் ஒருவர். முதல் படத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த அந்த காட்டன்வீர நடிகருடன் தமன்னா 2 படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் பட சூட்டிங்கின்போது இருவருக்குள்ளும் காதல் அரும்பி விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. இடையில் அந்த நடிகர் காஜல் அகர்வாலுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இரண்டு கிசுகிசுக்களையும் ஒட்டுமொத்தமாக மறுத்த நடிகர், தமன்னாவை நேசித்ததாகவே தகவல்கள் வெளியாயின. காரணம் வீர நடிகரின் அண்ணனும் ஒரு நடிகையைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் அந்த திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், ஒருவழியாக சம்மதம் பெற்…
-
- 11 replies
- 6k views
-
-
நல்ல ஆங்கில படங்கள். ஆங்கில படங்கள் பார்ப்பதென்றால் எனக்கு அலாதி பிரியம். யாழ்ப்பாணத்தில் ரீகல்,றியோ,மனோகரா,சிறீதர்,லிடோ,ராஜா போன்ற தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் வரும்.ரீகல் மாத்திரம் தான் நிரந்தர ஆங்கில எனக்கு பிடித்த தியேட்டர்.சிறுவயதிலேயே அப்பா போர்ன் பிறீ,தெ இன்கிறடிபில் ஜேர்ணி இந்த இரு படத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்.பின்னர் வளர எத்தனையோ படங்கள் பார்த்தேன்.இப்பவும் எனது நம்பர் வன் படம் வன் புலு ஓவெர் தெ கூகூஸ் நெஸ்ட் அங்குதான் பார்த்தேன். எனது கட்டாய லிஸ்டில் கொஞ்சப் படங்களுள்ளது ஆங்கில பட பிரியர்கள் விரும்பினால் பார்க்கவும். 2.கோட் பாதெர். 3.கிறமர் Vஸ் கிறமர் 4.டக்சி ட்ரிவெர் 5.மிட்னைட் எக்ஸ்பிரஸ் பட்டியல் ரொம்ம்ப நீளம் சந்தர்ப்பம் வரும் போது ஒ…
-
- 6 replies
- 5.9k views
-
-
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார். 1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது. செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது Vikatan Cinema
-
- 16 replies
- 5.9k views
-
-
இம்சை அரசன் 23ம் புலிக்கேசி யாழ் இம்சை அரசன் இயக்குனர் ஷங்கருடன் மோத விரும்பாத காரணத்தால் இப்படத்தை யாழ் உறும்பினர் மட்டும் பார்க்ககூடியதாக இணைத்துள்ளார், விரும்பியவர்கள் கடவுச்சொல்லை தனிமடலில் பெற்றுக்கொள்ளவும்! www.harimusicworld.tk
-
- 32 replies
- 5.9k views
-
-
இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு! இசைஞானி இளையராஜா எல்லா இசையும், மனதை வசப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவரின் இசையில் ஏதோ மயிலிறகு சாதனங்களும் இழைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. கேட்பவரின் உள்ளத்தின் துக்கத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் இவரின் இசைக்கு, மயங்காதவர்களே இல்லை. அந்த இசைக்குச் சொந்தக்காரர்... இசையராஜா. மன்னிக்கவும்... இளையராஜா. ஏன் மன்னிப்பு? இரண்டும் ஒன்றுதான். கி.மு., கி.பி. என்று சொல்வது போல், இ.மு., இ.பி. என்று தமிழ் சினிமாவைப் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்கவேண்டும். இளையராவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என்று கோடு கிழித்துப் பா…
-
- 7 replies
- 5.9k views
-
-
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்துள்ளார் என செய்தி. முகூர்த்தம், மலர்கள் என தற்போதைய தொடர்நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தேவானந் எனும் சின்னத்திரை நடிகர் இவரைக் காதலித்து ஏமாற்றியதாக இவரின் தாயார் புகார் கொடுத்திருப்பதாகவும் செய்தி!
-
- 20 replies
- 5.9k views
-
-
நடிகை தொடையை கடித்த பாம்பு சூட்டிங் ஸ்பாட்டில் ஆடை மாற்றிக் கொண்டிருந்த நடிகையின் தொடையில் பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புதுமுகம் ஆஷா, குரு ஆகியோர் இணையில் உருவாகி வரும் படம் ஆறுபடை. கோவை அருகே திருமூர்த்தி மலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஒரு பாடலைப் படமாக்கினர். பாடல் காட்சியின்போது உடை மாற்றுவதற்காக ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்குச் சென்றார் நடிகை ஆஷா. அவர் டிரஸ் மாற்றிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்த ஒரு பாம்பு கீழே விழுந்தது. அதைப் பார்த்து ஆஷா அலறவே, அவரது தொடையைக் குறி வைத்து கொத்தியது. தொடையில் பாம்பு கடித்ததால் நடுங்…
-
- 29 replies
- 5.9k views
-
-
16 மணி நேரம் படமாக்கப்பட்ட முதலிரவுக் காட்சி! வியாழன், 10 ஜூலை 2008( 20:17 IST ) எதிலுமே ஒரு பர்பக்சனை எதிர்பார்ப்பவர்கள் நம் இயக்குநர்கள். தான் நினைக்குற விஷயம் கிடைக்கிற வரை திருப்தியடைவதில்லை. ஒரு சண்டைக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் டேக் மேல் டேக்காக எடுத்து தனக்கு ஓகே ஆன பிறகுதான் விடுவார்கள். டைரக்டர் ஹரி மட்டும் இதற்கு விதிவிலக்கானவரா என்ன? இவர் இயக்கிவரும் 'சேவல்' படத்துக்காக ஒரு முதலிரவுக் காட்சியை 16 மணி நேரம் எடுத்து படமாக்கியுள்ளார். படத்தில் பரத் - பூனம் பாஜ்வா ஜோடி. இரண்டாவது ஜோடியான சிம்ரனுக்கும் பிரேமுக்கும் எடுக்கப்பட்ட முதலிவுக் காட்சிதான் 16 மணி நேரம் பிடித்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஷ¥ட்டிங் மறுநாள் அ…
-
- 16 replies
- 5.8k views
-
-
மலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ் இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா. கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “ச…
-
- 6 replies
- 5.8k views
-
-
அரவான் படத்தின் நாயகன் ஆதி ஜோடியாக 'ஆடு புலி' என்ற படத்தில் நடித்த 22 வயதே நிரம்பிய மலையாள இளம்பெண் மீராநந்தன். மலையாளியான அவர் கேரள சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவரை தனது மகள் வரலட்சுமியை விட நான்கு வயது இளையவரான மீரா நந்தனை தனக்கு ஜோடியாக்கி அவருடன் டூயட் பாடியிருக்கிறார் சரத்குமார். இதே படத்தில் இன்னொரு இளம் நடிகையான ஓவியாவுடனும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் "சண்டமாருதம்" என்ற மொக்கைப் படத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த் போன்ற தாத்தா நடிகர்கள் தங்கள் மகளை விட வயதில் குறைந்தவர்களோடு நடித்துவரும் கொடுமை தமிழ் சினிமாவில் தொடர்ந்…
-
- 15 replies
- 5.8k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…
-
- 5 replies
- 5.8k views
-
-
chaos theory ஒன்று உள்ளது. butter fly effect இனை விளக்கி எவ்வாறு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.என்பது..படத்
-
- 18 replies
- 5.7k views
-
-
சூர்யாவின் சம்மதத்துடன், ஜோதிகா மீண்டும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பதில்லை என்று திரையுலக வாழ்க்கையை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜோதிகா. இதனைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறாராம். 'ஹரிதாஸ்' சினேகா கதாபாத்திரம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ளாராம். இதற்கு சூர்யாவும் தன்னுடைய சம்மதத்தை தந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபடியும் ஜோதிகாவின் "ரா ரா"!!! http://dinaithal.com/c…
-
- 10 replies
- 5.7k views
-
-
ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர் ஆனந்தராஜ் - சாராய வியாபாரம் சிவகுமார் - ஓவியர் ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர் ஜெய்கணேஷ் - காய்கறி வியாபாரம் நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா பாண்டியன் - வளையல் கடை விஜயகாந்த் - அரிசி கடை ராஜேஷ் - பள்ளி ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி பாக்யராஜ் - ஜவுளிக்கடை அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக் ரகுவரன் - உணவு விடுதி பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர் டெல்லி கணேஷ் - ராணுவ வீரர் மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர் பாலச்சந்தர் - கணக்காளர் விசு -…
-
- 19 replies
- 5.7k views
-
-
மறுபடியும் மாட்டுகிறார் சூர்யா. முன்பு மாட்டியது வாய்க்கொழுப்பினால். இப்போது மாட்டப்போவது தேவையில்லாமல் கொடுத்த கால்ஷீட்டினால். கோடம்பாக்கத்தை குலுங்க வைக்கப் போகும் அந்த தகவல் இதுதான். தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது தமிழகம். சில மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு எதிராக படம் எடுத்து அதை சென்னையில் உள்ள லேப்பில் பிரிண்ட் போட வந்த சிங்கள இயக்குனர் ஒருவருக்கு அடி-உதை விழுந்ததெல்லாம் கூட சூர்யாவின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். சிங்கள இயக்குனர் சுரேஷ் குமார் சிங்கை என்பவர் இயக்கப் போகும் சிங்கள படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். படத்தின் பெயர் தேவதாசி என்றும் சொல்லப்படுகிறது. …
-
- 27 replies
- 5.7k views
-
-
சென்னை சேப்பாக்கத்திலுள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், வழக்கறிஞர் காந்தி ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிளப் விதிகளின்படி வேட்டி அணிபவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை என இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக அளவில் பிரச்சனையாகி சட்டசபையிலும் எதிரொலித்தது. வேட்டின்னா அவ்வளவு கேவலமா என தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையல்லவா? பல மன்னர்கள் வேட்டி அணிந்ததற்கான ஆதாரம் உள்ளது. தமிழகத்தின் சர்ச்சைப் பொருளான வேட்டியை தமிழ் திரையுலகம் இதுவரை எப்படி பயன்படுத்தி வந்திருக்கிறது? அதற்கு கௌரவம் சேர்த்திருக்கிறதா இல்லை இழுக்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறதா? பொதுவாக ஆண்களின் உடை என்ப…
-
- 0 replies
- 5.7k views
-
-
மூக்கு இருக்கும் வரை எப்படி ஜலதோஷம் இருக்குமோ, அதுபோல கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. அட.. அவ்வளவு ஏன்? மசாலா இல்லாமல் சாம்பார் வைக்கமுடியுமா? அதுமாதிரிதான் கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை. எந்த டைப் படமாக இருந்தாலும் அதில் கவர்ச்சி கட்டாயம் இருக்கும். சில படங்களில் இலைமறைகாயாக இருக்கும். சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் இருக்கும். சில படங்களில் அது திணிக்கப்படும்போதுதான் பளிச்சென்று தெரியும். தமிழில் 'ரொப் 10' படங்களில் ஒன்றான 'உதிரிப்பூக்கள்' படத்தில் விஜயன் தன் கொழுத்தியாளை பலாத்காரம் செய்யாமல் அவளை நிர்வாணப்படுத்தி "உங்களை இந்தக் கோலத்தில் பார்த்த முதல் ஆள் நான்தான்" என்று சொல்லும் காட்சியும், கொழுத்தியாள் நிர்வாணமாக கிடக்கும் காட்சியும் கவர்ச்சியில்லாமல் வெறெ…
-
- 4 replies
- 5.7k views
-
-
-
- 22 replies
- 5.7k views
-