வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
ஒளிப்பதிவாளர் ஜீவாவோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும் மனசும், உடம்பும் லேசானது மாதிரி இருக்கிறது. அந்தளவுக்கு நாட்டு நடப்புகளையும் இளசுகளின் மனதையும் அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்த மாதிரி விரல் நுனியில் வைத்திருக்கிறார் ஜீவா. ஒளிப்பதிவாளாராக தமிழ், இந்தி என்று பறந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது இயக்குனர் ஜீவாவுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். '12 பி' யை தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' என்று இளைஞர்களின் உலகத்துக்குள் நடக்கும் சுவாரஸங்களையும், சோகங்களையும் சொன்னவர் இந்தமுறை அடுத்த கட்டத்துக்கு போயிருக்கிறார். யெஸ்... 'உன்னாலே உன்னாலே' படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரியான படம். "பொதுவா எல்லா காதலுமே முதலில் நட்பில்தான் தொடங்குகிறது…
-
- 0 replies
- 1.1k views
-
-
'பெற்றோரை வறுமை வறுத்தெடுத்து கொன்று விட்டது. அது பற்றி நாம் பேச வேண்டாம்' உரையாடியவர்- மணி ஸ்ரீகாந்தன் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய குள்ளமான நடிகர் அப்புக்குட்டி, குள்ளநரிக்கூட்டம், சுந்தரப்பாண்டியன், அழகர்சாமியன் குதிரை, மன்னாரு உள்ளிட்டு படங்களில் நடித்து தேசிய விருதுப் பெற்று எம்மை ஆச்சர்யப்பட வைத்த அந்த வெள்ளை சிரிப்பு, வெள்ளந்தி மனிதரை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம். வீட்டுக்குள் நுழைந்த போது அப்புக்குட்டி உடற்பயிற்சி மெஷினில் நின்றபடி தமது உடம்பை முறுக்கேற்றி கொண்டிருந்தார். "என்ன சார் சிக்ஸ் பேக்கா?" என்றோம். "அட சும்மா இருங்க. சிக்ஸ் பேக் காட்டி படம் பண்ண நா…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் திடீரென முளைக்கிறது காதல் அத்தியாயம். தியேட்டரின் எதிரே இருக்கும் டீக்கடைக்காரிரன் மகளுக்கும் (பிரியங்கா) பசுபதிக்குமிடையே காதல் வெள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத் அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்: "நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டது - 26.10.2007 By JBR ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டதாக அதி்ல் நடிக்கயிருந்த நடிகர் ஷாருக்கான் தெரிவி்த்தார். 'ஜீன்ஸ்' படம் முடிந்ததும் ஷங்கர் எழுத்தாளர் சுஜாதா துணையுடன் உருவாக்கிய கதை 'ரோபோ.' இந்தியாவில் ரோபோக்களின் ஆதிக்கம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை பின்னணியாகக் கொண்ட சயின்ஸ்பிக்ஷன் இது. 'ரோபோ'வில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் பட்ஜெட் மற்றும் கதையில் ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக அப்போது 'ரோபோ' கைவிடப்பட்டது. 'சிவாஜி'க்குப் பிறகு 'ரோபோ'வின் ஒருவரி கதையை ஷங்கர் ஷாருக்கானிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்துவிட, தானே தயாரிப்பதாக கூறினார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக முடிவானது. ஷங்கர் திரைக்கதை அமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது: இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதி…
-
- 6 replies
- 1.1k views
-
-
சினிமாவை மக்களுக்கான ஊடகமா மாத்தணும்: சீமான் நேர்காணல்: மினர்வா & நந்தன் மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது. அனல் கக்கும் மேடைப் பேச்சினால் பெரியாரிய கொள்கைகளை நாடெங்கும் பரப்பி வருகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கீற்றுவின் நேர்காணல் பகுதிக்காக சந்தித்தோம். கேள்விகளை முடிக்குமுன்னே பதில்கள் அவரிடமிருந்து சீறி வந்தன. சாதி, மதம், மொழி குறித்துப் பேசும்போதெல்லாம் அவரது குரல் கோபத்தின் உச்சத்தில் ஒலித்தது. இனி பேட்டியிலிருந்து... …
-
- 0 replies
- 1.1k views
-
-
கஜினிகாந்த் திரை விமர்சனம் கஜினிகாந்த் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் அடல்ட் கதை மூலம் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் சந்தோஷ். எனக்கும் பேமிலி படம் எடுக்கவரும் என்று ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி சந்தோஷ் எடுத்திருக்கும் படம் தான் கஜினிகாந்த். சந்தோஷ் தன்னை நிரூபிக்கும் இடத்தில் இருக்க, ஆர்யாவோ ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார், இருவரின் குறிக்கோளும் வெற்றிப்பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் தர்மத்தின் தலைவன் படம் பார்க்கும் போது ஆர்யா பிறக்கின்றார். அதன் காரணமாக என்னவோ ஆர்யாவிற்கு மறதி கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
நடிகர் , இயக்குனர் என்ற பல திறமைகளைக் கொண்டவர்தான் பார்த்திபன். இப்பொழுது பார்த்திபன் தனது புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம். எண்பதுகளின் இறுதியில் பார்த்திபன் முதலில் இயக்கிய திரைப்படம் புதியபாதை. அந்தக் காலத்தில் புதிய கதைக்களம், புதிய ஹீரோயிஸம் என்று உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற திரைப்படம் என்பதோடு, சிறந்ந திரைப்படத்திற்கான தேசியவிருதையும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மனோரம்மாவிற்கும் பெற்றுக்கொடுத்தது இந்த புதிய பாதை. அதேவேளை இதில் பார்த்திபன் , சீதா ஜோடிப் பொருத்தம் , மற்றும் சந்திரபோஸின் இசை என்பன பேசப்பட்டன. இதனோடு பார்திபன், சீதா நிஜ ஜோடியாகியதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இருபது வருடங்களுக்குப் பின்னதாக அதனை ரீமேக் செய்யவுள்ளாராம் பார்த்திபன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமலாபால் - விஜய் விவாகரத்து காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவைச் நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்ளிட்ட பல தமிழ் தரைப்படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'கிரீடம்' திரைப்படத்தின் ம…
-
- 9 replies
- 1.1k views
-
-
-- என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. -- அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார். ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் - மாணவர் ரஜினி நேர்காணல் நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்: "ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என்ற கருவை மையமாக வைத்துதான் ‘கால் கொலுசு’ படம் உருவாகிறது. தேனியில் 1980களில் நடந்த ஒரு காதல் ஜோடியின் உண்மை கதை. இப்போதும் அந்த ஜோடி வாழ்ந்து கொண்டிருக்கிறது. கம்பம், சுருளிப்பட்டி இடையே நடக்கும் முக்கிய காட்சிகளை படமாக்க அப்பகுதியில் செல்லும் பஸ்ஸை வாடகைக்கு பேசி ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்தினோம். இதில் ஜாபர் என்ற 14 வயது சிறுவன் நடிக்கிறான். தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை நடித்தாலும் ஒரு வசனம் கூட பேச மாட்டான். மனசாட்சி பேசுவது போல் சில படங்களில் காட்சி வரும். அதே போல் தலை எழுத்து கதாபாத்திரமாக இதில் அந்த சிறுவன் நடித்திருக்கிறான். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் சிரிப்பது மட்டுமே …
-
- 0 replies
- 1.1k views
-
-
'பசித்தாலும் புலி புல்லை திண்ணாது...' பழமொழிக்கு லேட்டஸ்ட் சொந்தக்காரராகியிருக்கிறார் சிம்ரன். மும்பையில் குடும்பமும் குட்டியுமாக செட்டிலான பிறகு சிம்ரனை பற்றிய கதைகள் கோலிவுட்டில் கால் முளைக்கத் தொடங்கிவ இரண்டாவது நாயகியாக நடிக்கிறார், வடிவேலுக்கு ஜோடி சேர்கிறார், ராஜசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் கசிந்தது. இதற்கு சிம்ரனின் பதிலென்ன? என்று யோதித்தபோது கும்பிடப்போன தெய்வமாய் குறுக்கே வந்து நின்றார் சிம்ரன். "இப்போ நான் சென்னைக்கு விளம்பர படத்திற்காக வந்திருக்கிறேன். நான் இல்லாத நேரத்தில் ஏதேதோ செய்திகள் வந்துள்ளது. அதிலெல்லாம் உண்மையில்லை. தெலுங்கில் 'ஒக்க மகாடு' படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாலியல் வன்கொடுமை (678 - Egypt Film) ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. …
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகை சமந்தாவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டம் மகேஷ்பாபு நடித்த நீனோக்கடின் என்ற தெலுங்கு படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் நாயகியாக கிருத்தி சனான் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டரை சமீபத்தில் ஐதராபாத் நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர். கடற்கரையோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் அவர் காலடியை தொடர்ந்து நடிகை ஊர்ந்து செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இந்த போஸ்டருக்கு மகளிர் அமைப்பினர் பெண் அடிமைத்தனத்தை சித்தரிப்தாக உள்ளது என விமர்சித்தனர். பெண்மையை கேவலப்படுத்துவது போல் இது உள்ளது என்றும் குறை கூறினர். நடிகை சமந்தாவும் டுவிட்டரில் இந்த போஸ்டரை கண்டித்து மறைமுகமாக கருத்து வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தெலுங்கு பட…
-
- 8 replies
- 1.1k views
-
-
NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN
-
- 0 replies
- 1.1k views
-
-
இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்? ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து. இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் --பிரபுதேவா http://videos.oneindia.in/watch/4020/micha...rabhu-deva.html
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் ஷூட்டிங்-ஆசின் மீது நடவடிக்கை-ராதாரவி தகவல் தடையை மீறி இலங்கை]யில் படப்பிடிப்பு [^]க்காக சென்றுள்ள நடிகை ஆசின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க செயலாளர் ராதாரவி கூறியுள்ளார். இனப்படுகொலையை அரங்கேற்றிய இலங்கைக்கு நடிகர், நடிகைள் யாரும் செல்லக் கூடாது, படப்பிடிப்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது, படப்பிடிப்புகளுக்குப் போகக் கூடாது என்ற முடிவை நடிகர் சங்கம், திரைபப்ட வர்த்தக சங்கம், ஊழியர் சங்கமான ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து திரையுலக அமைப்புகளும் சேர்ந்த கூட்டமைப்பு எடுத்துள்ளது. கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு தென்னிந்தியத் திரையுலகினர் குறிப்பாக நடிக…
-
- 6 replies
- 1.1k views
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை! மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள். முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குகிறார் என்றவுடன் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது. லோகேஷ் கனகராஜ் பாணியில் அழுத்தமான திரைக்கதையுடன் கூடிய படமாக இருக்குமா அல்லது விஜய் பாணியில் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமா என்ற கேள்வியும் இருந்தது. படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான். தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஏனோ நல்ல பிரதி பிந்தியே வந்தது. ஒரு செய்தியுடன் கூடிய நல்ல படம் .தற்போதைய சினிமாக்கள் போல் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் செங்கல் செய்யும் ஒரு சூழலில் குழந்தை தொழிலாளிகளையும்,அடிப்படை கல்வி இல்லாமையையும் தொட்டு செல்கின்றது .விமல்-இனியா காதலும் இனிமையாக இருக்கின்றது .இசையும் பாட்டுகளும் மிக வித்தியாசமாக இருந்தது மவுனகுருவிற்கு பின் பார்த்த நல்ல படம் .
-
- 2 replies
- 1.1k views
-
-
இனிய நண்பர்களே. திரைப்படங்கள் எல்லாமே எம் மனதில் பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. ஆனாலும் சில திரைப்படங்கள், மனதை ஊடுருவி தத்தம் தனித்துவத்தை நிலைநாட்டி சென்றுவிடுகின்றன. அந்த வகையில், என் மனதைக் கவர்ந்த ஒரு திரைப்படம் “சங்கராபரணம்”. இது 1979ல் தெலுங்கில் வெளிவந்தது. கர்நாடக இசை மீது பிரியம் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பட்ஷணம். இதில் “சங்கராபரணம் சங்கர சாஸ்த்திரிகளாக” வரும் சோமையஜுலு நடிக்கவே இல்லை; வாழ்ந்தே இருக்கிறார். இவரின் பேச்சும், மௌன மொழிகளும் அற்புதம். இசை, காதல் என்பன மிக அற்புதமாக நெய்யப்பட்ட ஒரு காவியம் இது. இசை மேதை தனக்கு தகுந்த சீடனை தேர்வு செய்வதிலும், சீடனின் குருபக்த்தியும் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் அற்புதம். “மானஸ சஞ்சரரே” எனு…
-
- 2 replies
- 1.1k views
-