Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிம்புவுடன் நடிக்க மாட்டேன்: நடிகை பாவனா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது ம…

  2. மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, வரைந்த ஒவியம்தான் இந்த தாம் தூம். புள்ளியை சரியாக வைத்தவர், கோலத்தை வரையும் முன்பே அமரர் ஆகிவிட்டதால், கதையில் அங்கங்கே தடுமாற்றங்கள். ஆனாலும், தஞ்சாவூர் ஓவியத்தின் மேல் சென்ட் தெளித்த மாதிரி அங்கங்கே மணம். பிரமிப்பு. இளம் டாக்டரான ஜெயம் ரவி, கான்பிரன்சுக்காக ரஷ்யா செல்கிறார். அங்கே அவர் சந்திக்கும் அழகியும், அவரால் வந்த பிரச்சனையும் ரவியை ஜெயில் வரைக்கும் கொண்டு போக, காப்பாற்ற வருகிறார் வக்கீல் லட்சுமிராய். ஆனாலும், சட்டபூர்வமாக இல்லாமல் தன் இஷ்ட பூர்வமாக தப்பிக்க நினைக்கும் ரவி படுகிற துன்பங்களும் துயரங்களும் நம்மையும் தொற்றிக் கொள்ள, விறுவிறுப்பான இறுதிக்காட்சிக்கு ஏங்குகிறது மனசு. நல்லவேளையாக சுப நிறைவு! எப்படியாவது இந்தியாவுக்கு…

  3. ரோஜாக் கூட்டம் பார்த்திபன் கனவு, உயிர், பம்பரக்கண்ணாலே உள்பட பல தமிழ்படங்களில் கதாநாய கனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனா என்பவருக்கும் வருகிற ஜுன் 18-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சிடும் பணியÛயும் தொடங்கினர். திருமண பட்டாடைகள், நகை கள் போன்றவற்றை தேர்வு செய்யும் பணியும் துவங்கி யிருந்தது. இந்த நிலையில் வந்தனா அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது ரூ18 கோடி கடன் மோசடி புகார் தொடர் பான திடுக்கிடும் தகவல் வெளியானது. மணமகள் வந்தனா உள்ளிட்டோர் மீது கனரா வங்கி சார்பில் புகார் செய் யப்பட்டுள்ளது. இதை சி.பி.ஐ. விசாரித்து வரு…

    • 0 replies
    • 1k views
  4. இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்பட கதாநாயகியான நடிகை ஜெயகெளரி; சினிமா நடிப்புக்கு முழுக்கு போட வைத்த பயங்கர அனுபவம் “ஏன் திடீ­ரென சினிமா உலகை விமர்­சனம் செய்­கி­றீர்கள்? எனக் கேட்டோம். “எனக்கு தமிழ் சினி­மாவில் ஆழ­மாக காலூன்ற வாய்ப்­புக்கள் கிடைத்தன. நான் நடிக்க இணங்­கிய எனது இரண்­டா­வது படம் குத்துவிளக்கு. அப்­போது நான் யாழ். நகரில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னைத் தேடி இரு பிர­ப­லங்கள் எனது வீட்­டுக்கு வருகைத் தந்­துள்­ளனர். குத்து விளக்கு படம் விட­ய­மான விப­ரங்­களை தெரி­விக்க, எனது பெற்­றோரும் இவ்­வி­ருவர் மீதும் நம்­பிக்கை கொண்டு சம்மதம் தெரி­வித்து விட்­டனர். பின்னர்…

  5. சொந்த மண்ணிலேயே படமெடுக்க முடியவில்லை-தங்கர்பச்சான் webdunia.com ஒன்பது ரூபாய் நோட்டு அண்மையில் வெளிவந்து தர முத்திரை கொண்ட படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கான எல்லா இலக்கணங்களையும் வெற்றி சூத்திரங்களாக புனைந்து வைக்கப்பட்டிருந்த அத்தனை கணக்குகளையும் உடைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் அதன் இயக்குநர் தங்கர்பச்சானுடன் ஒரு சந்திப்பு இந்தப் படத்தை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டீர்களா? இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம். கதை சொல்லவும் நடிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் சுமார் இரண்டு ஆண்டுகள் போய்விட்டன. இது பல கதாநாயகர்களிடம் போன கதை. ஆனால் கடைசியில் தான் அண்ணன் சத்யராஜ் கி…

  6. கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம்: நடிகை மஞ்சுளா மருத்துவமனையில் அனுமதி. சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத…

  7. சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும் ஹிந்தி 1)Andhadhun 2) Article 15 மலையாளம் 1)வைரஸ் 2)Under world 3)Uyare 4)Jomonte suvisheshangal 5)Lucifer 6)Vikramadithyan Telugu 1)maharshi English / other 1)Searching 2)The invisible guest 3) 7 days in ENTEBBE Series Game of throne-8 (HBO) Jack Ryan -1(Amazon prime) Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை) உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ

  8. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க கேட்டு ரீஜெயிண்ட் சாய் மீரா எண்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் நடிகர் கமலஹாசன், ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வினோத் கே.சர்மா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் படநிறுவன பங்குதாரர் சந்திரஹாசன் பதில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் தமிழ், இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ரூ.3 1/2 கோடி வங்கி உத்தரவாதம் கொடுத்து உள்ளோம். இப்போது பட நிறுவனத்தின் பெயரை மாற்றி ஒரே பிரச்சினைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது கோ…

  9. இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …

  10. ரஞ்சிதா இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ‘‘இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை. என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது. பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது’’ என்கிறார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார். தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது? “ஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது. அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள் நம்மை நாமே அறிந்து கொள்வ…

  11. சினேகா - பிரசன்னா தம்பதிக்கு ஆண் குழந்தை.நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா தம்பதிக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், நேற்று இரவு சினேகாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிறந்தது. சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனி…

  12. இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக 60 நாடுகளில் 4,500 தியேட்டர்களில் ரிலீஸாகும் டோணி மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி பற்றிய படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாலிவுட் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படம் வரும் 30ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. பட ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் சிஇஓ விஜய் சிங் கூறியிருப்பதாவது, டோணி இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகும் படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. மேலும் தமிழ், தெலுங்கில் …

  13. பொன்னியின் செல்வன் - 1 படத்தின் வசூல் இதுவரை எவ்வளவு? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தாலும், படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 2,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புச் செ…

  14. கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள விஸ்வரூபம் எதிர்கொண்ட விஸ்வரூப பிரச்சனைகள் இப்போது விலகிவிட்டன. இந்த மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் தனது படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா “படத்தைப் பார்த்தால் கமலுக்கு பித்துபிடித்துப் போய்விட்டது என்று நினைக்கிறேன். படத்திற்கு தன்னை அர்ப்பணித்து, கடின உழைப்புடன் ஆராய்ந்து இந்த படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைக்க முடியாது. விஸ்வரூபம் பார்த்த பிறகு கமல் தமிழன் என்பதிலும், என் நல்ல நண்பன் என்…

  15. நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். 'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன்: அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிக…

  16. “குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை”: பிரியங்கா சோப்ரா சொல்கிறார் “நான் எதற்கும் பயப்பட மாட்டேன். குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே எனக்கு ஆண் தேவை” என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் குவித்து வருகின்றன. இதனால் 34 வயதான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறார். தற்போது ஹாலிவுட் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிற…

  17. Started by akootha,

    சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘செங்கடல்‘ என்ற திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னைப் பிராந்திய தணிக்கைக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் எதிராக சிறிலங்காப் படையினர் நிகழ்த்திய கொடூரங்களை விரிவாக சித்திரிக்கும் வகையில் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட தணிக்கைக்குழு அதிகாரிகள் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர். லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனர் ‘செங்கடல்‘ திரைப்படத்தை இயக்கியுள்ளார். தணிக்கைக் குழுவினர் இரட்டைவேடம் போடுவதாகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ம…

    • 0 replies
    • 1k views
  18. நாகரிகம் வளர்ந்த பிறகும் இனவெறி துவேஷம் அடங்கவில்லை. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை நிறவெறி காரணமாக திட்டிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு உலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம், 'சேனல் - 4.' இந்த தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' ஆண், பெண் பிரபலங்களில் சிலரை ஒரே வீட்டில் தங்க வைத்து, அவர்களின் அன்றாட நடவடிக்கையை 'லைவ்' வாக படம் பிடிப்பார்கள். இது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அந்த வீட்டில் தங்குவதற்கு தகுதியான நபர்கள் யார் என்பதை ஓட்டளித்து தீர்மானிப்பார்கள். கடைசி இடத்தை பிடிக்கும் நபர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இப்படி விலக்கப்பட்டு கடைசிய…

  19. எந்திரன் கதை திருட்டு விவகாரம்: கலாநிதி மாறன், ஷங்கருக்கு கோர்ட் சம்மன் எந்திரன் படக்கதை விவகாரம் தொடர்பாக, அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் கோர்ட்டில் ஆஜராக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சன் பிச்சர்ஸ் கலாந்தி மாறன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படம் 2010 அக்டோபர் 1ல் வெளியானது. எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கத…

  20. படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் பெரியார் படம் பற்றி கூறியதாவது:- நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெரியார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவற்றில் சில படங்கள்தான் மனதில் நிற்கும். அந்த படங்களையும் தாண்டி பெரியார் படம் நிற்கும். பெரியார் வேஷத்தை நான் போடும்போது இன்னொரு முறை பிறப்பு எடுத்ததாகத்தான் உணர்ந்தேன். பெரியார் வேடம் என்னோட கனவு என்றும் அந்த படத்தை எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்றும் ஏற்கனவே நான் கூறியிருந்தேன். இப்போது அது நடந்துள்ளது. பெரியாருடன் பழகியவர்களை தேடிப்பிடித்து பெரியாரின் பாடிலேங்க்வேஜ் மேனரிஷம் போன்றவற்றை கேட்டு தெரிந்து …

  21. ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார்: புதிய படம் பூஜையே போட்டாச்சு..! கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வரும் ஹரி நாடார், தமிழ்த் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் இடத்தில் இவருடன் ஜோடி சேரப் போகிறவர் வைரல் ராணி வனிதா விஜயகுமார். கிலோ கணக்கில் அணிந்திருக்கும் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர் ஹரி நாடார். இவர், ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு ஹரி அறிமுகமாகிறார். ஹரி நாடாரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், முத்தமிழ் வர்ம…

  22. திட்டிவாசல் திரைவிமர்சனம் நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில், பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் . திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் பார்க்க முடியுமா? பேசுவோம் தமிழ்நாடு கேரளா எல்லையில் குமுளி பகுதியில் உள்ள மலை கிராமம் முள்ளங்காடு . பழங்குடி மக்கள் வாழும் அந்த ஊரின் தலைவர் மூப்பன் (நாசர் ) முத்து (மகேந்திரன்) — செம்பருத்தி (தனு ஷெட்டி), குமரன்( வினோத் கின்னி) – மானசா (ஐஸ்வர்யா) என்று இரண்டு காதல் ஜோடிகள் . இதில் மானசா மலையாளப் பெண் . அந்தப் பகுதியைச் சேர்ந்த – …

  23. 'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…

  24. விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.