ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
இருவர் வெள்ளை வேனில் கடத்தல் வரக்காபொல பகுதியில் நேவிருவன் என அழைக்கப்படும் ருவன் சந்திமால் டெப் என்பவரும் அவருடைய நண்பரான தம்மிக்கவும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நேவி ருவனின் மனைவி முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.alaikal.com/news/?p=89964
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதியின் சகோதரிக்கு இராமேஸ்வரத்தில் கறுப்புக்கொடி காட்டப்படது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரி நிருபமா ராஜபக்சே, அவரது கணவர் குமரேசன் நடராஜனுடன் நேற்று ராமேஸ்வரம் வந்தார். நேற்று இரவு இராமேஸ்வரத்தில் தங்கிய இவர்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் வருகை ரகசியமாக வைக்கப்படிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இது குறித்த தகவலறிந்த செய்தியாளர்கள் , ஆதரவாளர்கள், இராமேஸ்வரத்திற்கு விரைந்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் உள்பட ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்கள் பலர், ராஜபக்சே சகோதரி குடும்பத்தினரின் வருகைக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இராமேஸ்வர மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கடத்திச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்! ''நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது . முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம். என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணியினரின் வீர…
-
- 1 reply
- 1.2k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும்இ நடை முறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும்இ கட்டமைப்பு ரீதியாகவும்இ யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தொடர்பான கொள்கையை மாற்றி தனது வாலை இந்தியா சுருட்டி கொள்ளவேண்டும். - சோமவன்ச கொழும்பு நகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க உரையாற்றும் போது சிறிலங்காவிற்கு எதிரான இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிப்போம் எனவும் சிறிலங்கா தொடர்பிலான கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தியா வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும். 2009 ஆண்டு மே தினத்தை ஜே.வி.பி. மட்டுமே நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இன்றே மேற்கொண்டு நீலம், பச்சை நிறங்களை ஓரம் கட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார். அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: …
-
- 3 replies
- 1.2k views
-
-
எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி! கொழும்பு – வெலிசறை கடற்படை தளத்தின் கடற்படை அதிகாரி ஒருவர் எலிகாய்ச்சல் காரணமாக இன்று (26) அதிகாலை மரணமடைந்துள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது. வெலிசறை கடற்படை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கலென்பிந்துவேவா பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் சுனில் பண்டார (35-) வயது என்பவரே மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் வெலிசறை கடற்படை தளத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா நடைமுறையை பின்பற்றி அவரது இறுதி சடங்கை செய்ய சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/எலிகாய்ச்சலினால்-வெலி/
-
- 8 replies
- 1.2k views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் புனித யாத்திரையாக வியாழனன்று இந்தியாவின் திருப்பதியை சென்றடைந்துள்ளார். திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மாநில துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார். பிரதமரின் 2 நாள் விஜயத்துக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதியில் பிரதமர் மஹிந்த | Virakesari.lk
-
- 17 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! [sunday 2014-09-21 17:00] கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொ…
-
- 15 replies
- 1.2k views
-
-
மாவிலாறு!!!! ... இச்சொல் இன்று எம்மையெல்லாம் முணுமுணுக்க வைக்கும் சொல் ... "தமிழ் மக்கள் மாவிலாற்று அணைகளை மூடி விட்டார்கள்! அதனால் நாம் விமானத் தாக்குதல்களை நடத்துகிறோம்" இது சிங்கள அரசின் ஓலமாகியிருக்கிறது!!! என்ன, ஒரு அணையை மூடியதற்கு விமானத் தாக்குதலா? அணையைத் திறந்து விடலாம்தானே? ...??? இப்படிப் பல கேள்விகள் எம்மத்தியில் எழத்தான் செய்யும்! இலங்கையை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் வெளியேறி, இலங்கையில் ஆட்சியில் அமர்ந்த முதல் சிங்கள அரசே மிக திட்டமிட்டு அன்றிலிருந்தே தமிழர் தாயகத்தை அபகரிக்கத் தொடங்கியது. இதேவேளை வட-தென் தமிழீழ நிலப்பரப்பை துண்டாடுவதற்கு திட்டமிட்டது. ,தன் முதற்படிகளாக எல்லையோரக் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியது. அதில் குறிப்பாக தென் தமிழீ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமாகாண ஆளுணர் சந்திரசிறிக்கு மாரடைப்பு - யாழ் வைத்தியசாலையில் அனுமதி 15 ஜூலை 2012 வடமாகாண ஆளுணரும் முன்ணாள் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியுமான சந்திரசிறி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலைக் கட்டடத் திறப்பு விளாவில் கலந்து கொண்ட இவருக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசிறியை பலாளி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிட…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல் ‐ பத்மினி – மற்றும் சிதம்பரநாதன் மயிரிழையில் தப்பித்தனர்‐ GTN செய்தியாளர்‐ ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிரேஸ்ஸ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் மயிரிழையில் தப்பியுள்ளனர்:‐ இன்று இரவு கந்தர் மடம் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்தில் ஜே.வீ.பியின் முக்கியஸ்த்தர்கள் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஜீரீஎன் …
-
- 11 replies
- 1.2k views
-
-
-------------------------------------------------------------------------------- பகுதி- 03 சமஸ்டி - புராண சுயாட்சி முறையை இப்படி திரித்த பின்னணி.. வழமையாகப் புலிகளின் மாவீரத் தின உரையை. தலைவர் பிரபாகரனின் சிந்தனை ஒட்டத்துக்கு அமைவாக தமக்குரிய சொல்லாட்சி. அரசியல் மதிநுட்ப்பம் . இராஜதந்திர அறிவு உலகின் யதார்த்த போக்கு பற்றிய தீர்க்க தரிசனம் ஆகியவற்றோடு தமிழிலும் அதே சமயம் அதன் ஆங்கல மொழி பெயர்ப்போடும் தயhரித்து வழங்குபவர் புலிகளின் மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான். மhவீரத் தினம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இந்த உரையை - உலகமே ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற புலிகளின் கருத்து நிலப்பாட்டை தெளிவு படுத்தகின்ற இந்த சரித்திரக் கீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு? முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரழிவு நிகழ்த்தப்பட்டு இன்று மூன்று ஆண்டுகள். உலகமே கைகட்டி அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்க குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று உலக மனிதக் கூட்டத்தின் ஒரு பகுதி ஒரு சிறிய மூலைத் துண்டுக்குள் துவம்சம் செய்யப்பட்டது. பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம். செத்துப் போன அன்னையின் மடியில் பசியோடு கதறியழுத பிறந்த குழந்தைகளைக் கண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் மனிதக் கசாப்புகடையாக மாற்றப்பட்டது. மரணித்துப் போன அந்த மனிதர்களின் அவலக் குரல் இன்னும் காற்றலைகளோடு ‘ஓ’ வென்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இரத்தமும் சதையுமாக இந்த நூற்றாண்டின் த…
-
- 1 reply
- 1.2k views
-
-
டொரொன்டோ மொன்றியல் வாழ் தமிழர்களே! இன்றுகாலை10 மணிக்கு ஆரம்பமாகும் மகிந்தாவை கைதுசெய் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கிறோம் இடம்:-அமெரிக்க தூதரக முன்றல் மொன்றியல்:- RUE ALEXANDRIA டொரன்டொ :-360 UNIVERSITY
-
- 2 replies
- 1.2k views
-
-
ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு! இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் (SLRC) தலைவர் இன்னோகா சத்தியாங்கனியை பதிவி விலகுமாறு அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனாவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மங்கள சமரவீர வெகஜன ஊடக அமைச்சராக இருந்தபோது சத்தியங்கனி ரூபவாஹினி தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60990
-
- 2 replies
- 1.2k views
-
-
மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன்- சந்தியா ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார். பொதுபலசேனாவின் ஞானசார தே…
-
- 2 replies
- 1.2k views
-
-
மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார் 1/27/2008 7:34:39 PM வீரகேசரி நாளேடு - கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார். தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாள…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் காரணங்கள் நியாயமானது என்ற போதிலும், மாகாணசபை விடயங்களில் தான்ன் தலையிட விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமது ப…
-
- 18 replies
- 1.2k views
-
-
இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த முயற்சித்தார்: மங்கள குற்றச்சாட்டு. இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நாளேடான இந்துஸ்தான் ரைம்சுக்கு மங்கள சமரவீர அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க- ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்தியா-சிறிலங்கா உறவானது வலுவானதாக இருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர், இந்தியா-சிறிலங்கா உறவானது உயர்நிலையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்போதைய ராஜபக்ச அரசாங்கமானது 4 மாதங்களில் அந்த உறவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சேனல் 4 ஆவணப் படம் மேலும் 3 வாரத்துக்கு நீட்டிப்பு லண்டன், ஜூன் 24,2011 இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான சேனல் 4 வெளியிட்ட ஆவணப் படம், பொதுமக்கள் பார்வைக்காக மேலும் 3 வாரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்திருக்கிறது, 'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம். சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம், உலக மக்களின் பார்வைக்காக கடந்த 15-ம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு வெளியிடப்பட்டது. போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக…
-
- 0 replies
- 1.2k views
-
-
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்: துணைத் தளபதி றமணன் வட, தென் தமிழீழப் பகுதிகளில் ஒரே நேரத்தில் யுத்தம் தொடங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.01.06) நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழாவில் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் ஆற்றிய உரை: உலகத்திலே இருக்கின்ற எந்த சக்தியாலும் வெல்ல முடியாத இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள். எங்களது போராட்டத்தை பொறியிலே சிக்க வை…
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிரிகளால் வன்பறிப்புச் செயய்ப்பட்டுள்ள எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து விடுதலைக் குறிக்கோளை உறுதியாக அடைவோம் என்று கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன் திருச்சி: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கை அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று தமிழக பெருவிழா நடைபெற்றது. மொழிவாரி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் தமிழகம் இழந்ததை நினைவுபடுத்தும் வகையிலும், இனியும் இழக்காமல் இருக்கும் வகையிலும் இந்தப் பெருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படு…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 25-07-2007 14:34 மணி தமிழீழம் [மயூரன்] பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை - சூரியாராட்சி நாளை கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராட்சி தெரிவித்துள்ளார். இதன் ஒரு அம்சமாக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்பினுள் ஊடுருவியிருப்பதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பேரணியில் மக்கள் கலந்து கொள்வதை தடுப்பதற்காகவே அரசாங்கம் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராட்சி மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா புலனாய்வு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய சின்னத்திரைக் நடிகர்இ நடிகைகள்இ ஏனைய கலைஞர்கள்இ தொழிநுட்பக் கலைஞர்கள் ஆகியோரால் இன்று உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் அஜய் ரத்னம்இ ராஜ்காந்த்இ மோகன் ராம்இ கே.நடராஜன்இ வசந்த்இ மனோபாலாஇ தேவ் அஜய்இ சிவன்இ சீனிவாசன்இ ஜெயமணிஇ கமலேஷ்இ ரிஷிஇ நடிகைகள் தேவயானிஇ தீபா வெங்கட்இ மஞ்சரிஇ பிருந்தா தாஸ்இ நித்யாஇ மவுனிகா மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் உள்பட 50…
-
- 4 replies
- 1.2k views
-