ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு…
-
- 3 replies
- 726 views
-
-
சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது ம…
-
- 3 replies
- 840 views
-
-
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த பொலிஸ் உயரதிகாரி இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது. வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார்…
-
- 1 reply
- 1.6k views
-
-
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள், தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன். குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்ச…
-
- 7 replies
- 978 views
-
-
இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம். இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அச்சுவேலி பொலிஸார் என்னை நிற்குமாறு கூறினர். நான், ஏன் எனக் கேட்ட போது எனது முகத்தில் தாக்கிவிட்டு ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை எனக் கேட்டார்கள். அப்போது நான் காய்ச்சல் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்க மீண்டும் என்னை தாக்கினார்கள். நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்…
-
- 0 replies
- 435 views
-
-
சனி 11-08-2007 00:42 மணி தமிழீழம் [மயூரன்] கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்: ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் - லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கிழக்கில் செயல்பட்டு வரும் கருணா குழுவினர் ஆயுதங்களை வைத்திருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமானது என ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்ர் லக்ஸ்மன் யாப்பா அபேயவாத்ன தெரிவித்துள்ளார். இது போன்று முன்னர் வாசுதேவ நாணய்காரவும் ஜே.வி.பியனரும் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ஸ் கருணா குழுவிடம் இர…
-
- 0 replies
- 758 views
-
-
பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவர் அவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். லியாம் பொக்கஸ் இலங்கை சென்ற ஒரு தருணத்தில் வெரிட்டியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவியும் சேரந்து எற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வில் தாம் கலந்து கொண்டதாகவும் அது அர…
-
- 6 replies
- 2.1k views
-
-
கொக்கிளாயில் தமிழரின் காணியில் விகாரை கட்டும் படையினர்! [Thursday 2015-05-28 19:00] முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பொது மக்களின் தகவலையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற நேரில் ஆராய்ந்தேன். முல்லைத்தீவு, கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்படுகின்றது. விகாரை அம…
-
- 1 reply
- 717 views
-
-
சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான். மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்:-ரோபோ. இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும்- ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ளஅவர்- பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து நாடுகளும் ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக …
-
- 7 replies
- 976 views
-
-
விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது! February 13, 2019 வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கினை தக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த…
-
- 0 replies
- 526 views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம். அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்…
-
- 6 replies
- 592 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 1k views
-
-
1 Min Read February 19, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களை இழைத்தமையினாலேயே அவர், ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ஸ நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்ததாகவும் அவரும் அவரது சகோதரர் கோத்தபாயவ ராஜபக்ஸவும் இந்தக் கொலைகளுக்குத் தலைமை தங்கியதாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் …
-
- 0 replies
- 186 views
-
-
உட்பூசல் காரணமாக முன்னாள் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை கடந்த ஞாயிறு மாலை 7.30 மணியளவில் முன்னாள் கருணா குழு உறுப்பினர் கொத்தியாப்புலவு வவுணதீவு காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது ஆயுததாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவரை கூப்பிட்டு விசாரணைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட நபர் வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சித்தபோது கருணாகுழுவினர் அவரைச் சுட்டுக்கொன்றுள்னர். இவர் அண்மையில் திருமணம் செய்திருந்தார். முன்பு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து பின்னர் கருணா குழுவில் இணைந்து செயற்பட்டவர். கருணா குழுவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கருணா குழுவிலிருந்து …
-
- 0 replies
- 1.2k views
-
-
237ஆக ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டமை சிறுபான்மை கட்சிகளின் வெற்றி: மனோ கணேசன்
-
- 0 replies
- 373 views
-
-
கைது செய்வதை தடுக்கக் கோரி அட்மிரல் கரன்னகொட உச்ச நீதிமன்றில் மனு தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட. கொழும்பில் 11 இளைஞர்கள், 2008-09 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைத் தேடி வருகின்றனர். அவரது இரண்டு வசிப்பிடங்களிலும் இருந்து தலைமறைவாகியுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்ப…
-
- 0 replies
- 234 views
-
-
வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை வடமராட்சி நெல்லியடி மற்றும் வதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொள்ளைச் சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரும் 5 வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன. 15 பேரளவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவம் வதிரிச் சந்தி வரை …
-
- 7 replies
- 1.6k views
-
-
முழு மக்களையும் அரவணைக்கும் நோக்கமாக கொண்ட பொதுக் கட்டமைப்பின் கீழ் மாவீரர்நாள் வணக்க நிகழ்வினை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வருடம் போல் இந்த வருடமும் விடுதலை அமைப்பின் பெயரில் இரு அறிக்கைகளாக மாவீரர்நாள் கொள்கை விளக்க அறிக்கை வெளிவராது, ஒரே அறிக்கையாக வெளிவரவேண்டும் என்பதே எமது விருப்பம் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இத்தகைய நோக்கம் கொண்ட முன்னெடுப்புகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளது தெரிவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகுறித்து நா.த.அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலன்பேண…
-
- 1 reply
- 617 views
-
-
அட்மிரல் கரன்னகொட உள்ளிட்ட கடற்படையினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகளுக்கு எதிராக, மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகளை கருத்தில் கொண்டு, குற்றவியல் சட்டத்தின், 450 ஆவது பிரிவின் கீழ், மேல்நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் கருதுகிறது. சட்ட மா அதிபர் திணைக்களம் விரைவில் தமது முடிவை, தலைமை நீதியரசருக்கு அற…
-
- 0 replies
- 468 views
-
-
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று மீண்டும் கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதானது மீண்டும் தேர்தலை மையப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும் என "புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவித்ததாவது கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் ஒன்றை அரசு உருவாக்கவில்லை. மாறாக கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் உப செயலகம் ஒன்றே உருவாக்கப்பட்டது. இந்த உப செயலகத்தை தமிழ் செயலகம் என தமிழ் இனவாத அரசியல்வாதிகள் …
-
- 0 replies
- 189 views
-
-
பொது இடமொன்றில் சிலை திறப்பு விழா நிகழும் போது குறைந்தது ஆயிரம் பேராவது கூடி நிற்பதைக் காணலாம். ஆனால், மக்களால் போற்றப்படும் மனிதனின் சிலையை உடைக்கும் போது, அங்கு எவருமே பிரசன்னமாவதில்லை. இருட்டினில் நடக்கும் திருட்டு வேலை அது. திருமலை சிவன் கோவிலடியில் நிறுவப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை உடைப்பு, கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு மேற் கொண்ட பயணத்திற்கான எதிர்வினையாகப் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழிப்பது மே 2009 இற்குப் பின்னர், அதிகரித்துச் செல்வதைக் காணலாம். பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஏகப்பிரதிநிதியல்ல என்று வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரிப்பது, தனித்துவமான இனமல்ல தமிழ்த்தேசிய இனம்…
-
- 2 replies
- 786 views
-
-
FM Samaraweera said, pointing out that the then Defence Secretary Gotabhaya Rajapaksa too was involved in the post-war South African initiative. Senior South African representatives dealt with both the previous government and the UK headquartered Diaspora grouping Global Tamil Forum (GTF), FM Samaraweera recalled accusing what he called the Abharamaya gang of politicising and undermining the reconciliation process. Minister Samaraweera referred to President of the GTF Rev. Father S.J. Emmanuel as well as its UK based spokesperson Suren Surendiran as Diaspora representatives engaged in the reconciliation efforts http://www.island.lk/index.php?page_cat=article-details&…
-
- 4 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 05 APR, 2024 | 02:07 AM எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக் கடந்து வந்தவன். தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு. …
-
- 0 replies
- 305 views
- 1 follower
-
-
35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார். விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. “வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்ற…
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-