ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143654 topics in this forum
-
சுவிசில் சமாதானப் பேச்சு, உக்கிரேனில் யுத்த தளபாடப் பேச்சு சனிக்கிழமை, 28 ஒக்ரேபர் 2006கிருஷ்ணப்பிள்ளை சுவிசில் சமாதானப் பேச்சுகளில் பங்குபற்ற என்று கூறிக்கொண்டு இலங்கை அரசு குழுவொன்று சென்றுள்ள நேரம், இலங்கை இராணுவ மற்றும் விமானப்படையின் குழுக்கள் உக்கிரேன் நாட்டின் தலைநகரான கீவ் பகுதியில் உள்ள விசேட உல்லாச விடுதி ஒன்றில் தங்கியள்ளதாகவும், சுமார் 15 எம்.ஜ27 தரத்திலான உலங்கு வானூர்திகள் மற்றும் பாரிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்குரிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுவருவதாக அறியமுடிகிறது. சமாதானம் என்ற போலியான நாடகத்தை சுவிசில் ஆடிவரும் இலங்கை அரசு, உக்கிரேன் நாட்டில் தனது யுத்த தளபாடக் கொள்வனவை இதே காலப்பகுதியில் செய்ய முயற்சிப்பது, இலங்கை அரசின் எதிர்கால நோக்கத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை பணயக் கைதியாக வைத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த தம் இயக்கத்தை சேர்ந்தவர்களை விடுவிப்பதை நோக்காகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தியதாக, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த லக்ஷ்ர்-இ-ஜங்வி இயக்க உறுப்பினரான அப்துல் வகாப் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த தாக்குதலுக்கான திட்டம் வொஸ்ரிஸ்டனில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜியோ செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு என மோட்டார் சைக்கிள் சிலவும் கொள்ளவனவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலிற்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு என இந்த…
-
- 0 replies
- 633 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயித் அல் ஹுசேன் - இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லையென இச்சந்திப்பின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. ஆணையாளருக்கு உறுதியாகக் கூறவுள்ளார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. காணமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்த மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவுக்கு அப்பால் விசாரணை நடத்த வெளியார் எவருக்கும் இடமளிக்கப் போவதில…
-
- 0 replies
- 414 views
-
-
சில பக்கங்களை காணோம், ஆதாரங்கள் மறைப்பு, விசாரணையாளர்களுக்கு மிரட்டல்… ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல், தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் காவற்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விசாரணைகளை தொடர்ந்து துரிதமாக முன்னெடுக்கவும், விசாரணை அதிகாரிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடன் தொடர்புள்ள வழக்குகள் பல வருடங்களின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் விசாரணையுடன்…
-
- 0 replies
- 274 views
-
-
சிறையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டும் – சம்பிக்க! தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண…
-
- 2 replies
- 723 views
-
-
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழிப்பது தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு கொழும்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. சுமார் 54 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வாண்மையாளர்கள், புலமையாளர்கள், கலந்துகொள்ளவுள்ள இந்த கருத்தரங்கில் புது டில்லியிலிருந்து சுமார் 30 பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரைய…
-
- 1 reply
- 471 views
-
-
சிறிலங்காவில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்கு மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 27வது மனித உரிமைகள் மாநாட்டில் உரையாற்றிய உதவி மனித உரிமைகள் ஆணையாளர் ஃப்ளேவியா பென்செய்ரீ இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு சாட்சி பதிவுகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தரமான மொழிப் பெயர்ப்பாளர்களை கொண்டிருப்பதில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் சாட்சி வழங்குகின்றவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும், அவர்களுக்கான ஆலோசனைகள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு திருப்திகரமாக செயற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆதேநேரம் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்…
-
- 0 replies
- 282 views
-
-
உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்வு 10 மணிக்கு ஈழநாதம் பத்திர…
-
- 3 replies
- 651 views
-
-
http://www.dailymotion.com/video/xgtr2z_yyyyyy-yyyyyyy-yyyyyyy-yyyyyyyyyyyyyyyy-yyyyy-yyyyyyyy-yyyyy_news#from=embed
-
- 6 replies
- 1.6k views
-
-
அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுங்கள்! ஜனாதிபதியிடம் சிறீரெலோ கட்சி கோரிக்கை சிறைச்சாலைகளில் வாடித் தவிக்கும் அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளளது சிறீரெலோ கட்சி. வடக்கு மாகாணத்துக்கு அடுத்த வர இறுதியில் வரவிருக்கும் ஜனாதிபதியிடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- கடந்த 3 தசாப்தகாலமாக அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது எந்தவித குற்றமும் செய்யாத எம் தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதப் போராட்டத்தி…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு,ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முனவர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்கவுரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பூசல்கள் களையப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போதும் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilm…
-
- 3 replies
- 549 views
-
-
யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!! யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!! யாழ்ப்பாண மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். எதிர்வரும் ஜீன் 5 ஆம் திகதி தேசிய மரம் நடுகை தினத்தை முன்ன…
-
- 3 replies
- 773 views
-
-
திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்…
-
- 13 replies
- 2.6k views
-
-
தமது தலைவர் கோத்தபாய எனக் கூறி இராணுவக் கொமாண்டோ படையினர் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! 17 பேர் வைத்தியசாலையில்!! Friday, February 11, 2011, 16:36 தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று (10) நடைபெற்ற இசை நிகழச்சியின் போது, விசேட அதிரடிப்படையினருக்கும், இராணுவ கொமாண்டோ படையிருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் இவர் களில் 3 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் சிவில் உடையில் இருந்த கொமாண்டோ சிப்பாய்க்கும், சிவில் உடையில் இருந்து அதிரடிப்படை சிப்பாய்க்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வெடித்துள்ளது. இந்த …
-
- 2 replies
- 980 views
-
-
முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் மைத்திரி- மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காட்டம்!! ஐ.நா. தீர்மானத்தில் போர்க்குற்றம் தொடர்பில் எதுவுமே இல்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதானது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்று இருக்கின்றது. அந்தத் தீர்மானத்தை எடுத்து வாசித்துப் பார்த்தால் உண்மை தெரியவரும். இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், ஐ.நா. தீர்மான விவகாரங்களுடன் அதிக ஈடுபடுடைய ஆர்வலர்களும் தெரிவித்தனர். ‘சில ஊடகங்களும் இனவாத அமைப்பு…
-
- 1 reply
- 536 views
-
-
ஜான் ஹான்சன் பவர் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பயணம். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். www.tamilwin.com
-
- 8 replies
- 1.9k views
-
-
இலங்கையில் குண்டு வீசும் விமானங்களை இரகசியமாக தயாரிக்கும் பணியில் சீனா! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:53 கொழும்பில் இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியில் 04 ஏக்கர் சீன நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டு உள்ளது என லங்கநீயூஸ் வெப் இணையத்தளம் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து செய்து பிரசுரித்து உள்ளது. கடின் ஹெம் என்கிற நிறுவனம் இக்காணித் துண்டை ஹோட்டம் நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளது என்று வெளியில் சொல்லி வருகின்றது என்றும் ஆனால் உண்மையில் குண்டு வீசும் விமானங்களை தயாரிக்கின்றமையே இந்நிறுவனத்தாரின் நோக்கம் என்றும் இச்செய்தியில் கூறப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்துக்கு சீனாவில் ஒரேயொரு ஹோட்டல் மாத்திரமே உண்டு என்றும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்…
-
- 4 replies
- 1.9k views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும், மணம் முடிப்பதிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருவதாக உதவிப் பணியாளர்களும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். முன்னாள் பெண் குழந்தைப் போராளிகள் சமூகத்தால் இன்னமும் சரியாக உள்வாங்கப்படாத நிலைமையே காணப்படுகிறது என்று தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறை மாவட்ட சிரேஷ்ட அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் மீள தம்மை சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் சமூக கலாசாரத் தடைகள் எவ்வளவு பெரிய தடைகளாக அவர்கள் முன் உள்ளன என்பதை நாங்கள் அவதானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் போர்ப்பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வநாயகம் செல்வ…
-
- 4 replies
- 960 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டும் என்று பல பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து இல்லாமல் போனதற்கு சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பே காரணமாகும். கட்சித் தாவலை நியாயப்படுத்தி சரத் என் சில்வா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால் இன்று வலுவான ஓர் எதிர்க்கட்சி இருந்திருக்கும். இவ்வாறான ஓர் நபர் 19ம் திருத்தச் சட்டத்தை உருவாக்க எந்தனிப்பது நியாயமானது. அவ்வாறு புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் தார்மீக பொறுப்பும் சரத் என் சில்வாவிற்கு கிடையாது. தூய்மையா…
-
- 0 replies
- 365 views
-
-
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் – சிவாஜிலிங்கத்துக்குப் பகிரங்க மிரட்டல்!! ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பது தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின்னர் வாடி அமைத்திருந்த இடங்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜில…
-
- 3 replies
- 512 views
-
-
அமெரிக்க செனட்சபை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் .. அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சர்வதேச தரத்திற்கு அ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா. விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஸ்ணராஜா (வயது - 57) கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.முன்னதாக வவுனியாவிலுள்ள பயங்கரவாத குற்ற புலனாய்வுப் பிரிவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று கொழும்பு 4ம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே சின்னத்தம்பி கிருஸ்ணராஜாவை உடன் விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புக்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, சிவபுரம், கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஸ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற கு…
-
- 0 replies
- 361 views
-
-
வவுனியாவில் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 05:22 ஈழம்] [ந.ரகுராம்] வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 783 views
-
-
வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு:- தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாகப் பிரித்து வைத்திருக்கும் பேரினவாத இலங்கை அரசு, இப்போது வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டி அவற்றையும் பிளவுபடுத்தும் திரைமறைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சிகளில் ஒன்றாகவே, வடக்கு மாகாணசபை நிதியை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என்றும், முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்றும் எல்லா மாவட்டங்களுக்கிடையிலும் நிதி சமமாகப் பகிரப்படவேண்டும் என்றும் உண்மைக்குப் புறம்பாகத் தீவிரமான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றாட…
-
- 0 replies
- 476 views
-
-
நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாடு முழுவதும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் மரக்கறிகளை அறுவடை செய்தனர். அதன்படி இராணுவப் பண்ணைகளில் இரு…
-
- 9 replies
- 624 views
-