ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று நடந்த மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இதில் தொகுத்துள்ளோம். யாப்பு கட்சி செயலாளரின் சதி நடவடிக்கையை விலாவாரியாக விபரித்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி வாசித்ததும், எம்.எ.சுமந்திரன் குறுக்கிட்டு, கட்சி யாப்பின்படி செயலாளரை மாற்றுவது பொதுச்சபையில், இங்கு மாற்றினால் நீதிமன்றம் செல்லலாம் என்றார். நீதிமன்றம் செல்லலாம் என அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். நம்பிக்கையில்லா பிரேரணை, கூட்ட அட்டணையில் இல்லையென்றும் கூறினார். இருதரப்பிற்குமிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றது. இதன்போது, மாவை சேனாதிரா…
-
- 30 replies
- 1.9k views
-
-
கொள்கை இலக்குடன் பயணிக்கின்ற கூட்டமைப்பு சரணாகதி அரசியலுக்கு ஒரு போதும் தயாரில்லை; ஸ்ரீநேசன் August 30, 2020 பா. மோகனதாஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்றது என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார். கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட சக்தியை அழித்தது போன்று தமிழ்தேசியத்தை சிதைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு பேரினவாத ஆசீர்வாத பண முதலீடுகளுடன் மிகவும் அசிங்கமான அரசியலை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை பொறுமையாக ஜனநாயக அஹிம்சை ரீதியில…
-
- 4 replies
- 573 views
-
-
கிழக்கின் பலம் நாம் மட்டுமே – வியாழேந்திரன் இறுமாப்பு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் துறைநீலாவணையில் இன்று (29) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார். அங்கு மேலும், “2015ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால் தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் நாடாளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள். கடந்த காலங்கள…
-
- 1 reply
- 561 views
-
-
சிறுபான்மையினக் கட்சிகள் எதிர்த்தாலும் தேர்தல் முறையை மாற்றுவோம்; எஸ்.பி.திசாநாயக்க. சிறுபான்மைக் கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். சிறுபான்மைக் கட்சிகளைச் சார்ந்தவர்களே மாகாண சபைத் தேர்தல் முறையை பிரச்னையாக்கினர் எனவும் சிறுபான்மைக் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் எஸ்.பி.திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். கொத்மலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் …
-
- 0 replies
- 351 views
-
-
சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழு இரவில் நிதானமிழந்திருப்பவர்கள். அவர்கள் கண்டபடி கட்சிக்கு எதிராக நிதானமிழந்து எழுதியதும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணங்களில் ஒன்று என இன்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போது, கட்சிக்குள் உருவாகியுள்ள இரண்டு அணியினரும் மாறிமாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள். இன்றைய கூட்டத்தில் கட்சியின் பல உறுப்பினர்களை நீக்க வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தார். கட்சியின் வேட்பாளர்கள் யாரைப்பற்றியும் தான் பகிரங்கமாக விமர்சித்ததில்லை, ஆனால் என்னை பலர் விமர்சித்தார்கள் என கூறி, உதயன் பத்திரிகையையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த ஈ.சரவணபவன், சுமந்திரன் நேரடியாக என்…
-
- 8 replies
- 928 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (29) வவுனியாவில் நடந்தது. சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சசி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் …
-
- 17 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.https://newuthayan.com/அனலைதீவில்-பெருமளவு-தங்க/
-
- 0 replies
- 437 views
-
-
“தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரை ஓட ஓட விரட்டி அடிப்போம்” இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும், “இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம். தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் ஊளையிடலாம். ஆனால் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் பயணம் அவர்களுக்கு கிடைக்காது. முதலமைச்சராக பதவி …
-
- 231 replies
- 18.9k views
- 1 follower
-
-
நன்றி என்ற ஒரு வார்த்தை ஊடாக என் மக்களுக்கு நன்றியை தெரிவிக்க முடியாது தமிழ் மக்கள் எனக்கு மிகப்பெரிய ஆணை ஒன்றை தந்துள்ளனர். அந்த ஆணையை எதிர்வரும் ஐந்து வருடங்கள் தமிழ் மக்களுக்கு செய்யவிருக்கும் பாரிய சேவை ஊடாக தான் நன்றி சொல்ல முடியும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்றைய தினம் (28) ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஆற்றிய தமது உரையில் தெரிவித்தார். அவரின் முழு உரை வருமாறு, ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் மக்களின் பிரதிநிதியாக வருவதற்கு வாய்ப்பு தந்த யாழ் கிளிநொச்சி உறவுகளுக்கு இந் நேரம் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நன்றி என்ற ஒரு வார்த்தை ஊடாக என் மக்களுக்…
-
- 1 reply
- 672 views
-
-
முல்லைத்தீவு - உண்ணாப்பிலவுப் பகுதியில், வீதியின் அருகே இருந்த மரம், மழை காரணமாக சரிந்து வீழ்ந்ததால், வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மரணித்துள்ளனர். முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜயேந்திரன் வயது (33) என்ற, கொக்குத் தொடுவாய்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொருவரான, அரியராசா எமில்டன் வயது (21) என்ற நீராவிப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் படுகாயமடைந்ததையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளமை க…
-
- 0 replies
- 459 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் ஏனைய பகுதிகள் போன்று வடக்கு கிழக்கும் சமத்துவமாக கையாளப்படும் என நினைத்தோம். ஆனால் முற்று முழுதாக நாம் நிராகரிக்கப்பட்டுள்ளோம். அதேபோல் காணமால்போனோர் விடயத்திலும் எமக்கு தீர்வு கிடைக்கவுல்லை, இதுவே சர்வதேச தரப்பை நாம் நம்பி செல்லவும் காரணமாகிவிட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் தெரிவித்ததானது. சரத் பொன்சேகா எம்.பி சபையில் எனக்கு அறிவுரை வழங்கினார். கவனமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டு…
-
- 1 reply
- 585 views
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியது இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.இதேவேளை தேசியப்பட்டியல் நியமனத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் தலைவருக்கு அறிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தமை தொடர்பாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், சுமந்திரன், …
-
- 12 replies
- 991 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்த, 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போயினர்… August 29, 2020 “10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வருகையை எதிர்பார்த்து, 72 க்கும் அதிகமான அவர்களின் உறவுகள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை” என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில் சனிக்கிழமை(29.08.20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், “உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக…
-
- 0 replies
- 451 views
-
-
தொண்டமானாறு பலத்தினுடான போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு அனுமதி August 29, 2020 வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்திற்கு நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள் ஒத்துழைத்து செயற்படவேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பாலத்தினூடாக மக்களை போக்குவரத்திற்கு அனுமதிக்கும் வழிபாடுகளுடன் கூடிய சம்பிரதாய நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பால நுழைவாயிலில் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைப்பகுதியில் உள்ள நீரியல் வளத்திணைக்களத்திற்…
-
- 0 replies
- 309 views
-
-
அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர். 2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராள…
-
- 1 reply
- 480 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் பெரும் களேபரத்தின் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் மாவை சேனாதிராசாவின் ஆதரவாளர்களிற்கும், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் அணியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, பதற்றமான நிலைமை ஏற்பட்டது. காங்கேசன்துறையிலுள்ள கட்சி அலுவலகத்தில், காங்கேசன்துறை தொகுதி கிளை கூட்டம் நேற்று (27) மாலை இடம்பெற்றது. இதில் உரையாற்றிய மாவை சேனாதிராசா பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார். கட்சிக்குள்ளேயே தனக்கு எதிராக உறுப்பினர்கள் சதி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். அத்துடன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் குழுவினர் தொடர்பாக காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். சுமந்திரன், சிறிதரன் மீது பல்வே…
-
- 14 replies
- 1k views
-
-
தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச…
-
- 4 replies
- 591 views
-
-
உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்கி சவால் Posted on August 28, 2020 by தென்னவள் 15 0 பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இனவாத ரீதியாக எதிர்ப்புத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காரசாரமான பதில் அளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தனது கருது தொடர்பில் வீணாக குழப்பம் அடையாமல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைத்து உண்மையை கண்டறியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். பாரா…
-
- 7 replies
- 1.3k views
-
-
இனவாதிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆலோசனை வழங்குவது விசித்திரமானது; பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் பதிலடி August 28, 2020 “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன். எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித…
-
- 6 replies
- 741 views
-
-
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை நாடாளுமன்றஉறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த காலத்தில் சிங்களவர்களை குறைத்துமதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை விக்னேஸ்வரன் மனதில் கொள்ளவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாட்டை பிளவுபடுத்தி தனிநாட்டை உருவாக்க முயன்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் அந்த கதியேற்பட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.விக்னேஸ்வரன் ஒருபோதும் பிரபாகரன் ஆகமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் விக்னேஸ்வரனுக்கு அதற்கான வயதும…
-
- 29 replies
- 2.6k views
-
-
வட்டி மாபியாக்களினால் பறிபோன வர்த்தகரின் உயிர் மட்டக்களப்பு செங்கலடி நகரில் உள்ள பிரபல வர்த்தகரான ராஜன் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கலடி சக்தி ஸ்டோர்ஸ் முதலாலியான இவர் கடந்த 1990 ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல சிறிய சில்லறை கடை வர்த்தகர்களை உருவாக்கி உதவி செய்தவரின் தற்கொலை செங்கலடி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த கடன் காரணமாக தன்னிடம் இருந்த மூன்று கடைகள் மற்றும் வீடு என்பவற்றை விற்பனை செய்த அவர் தான் விற்பனை செய்த வீட்டில் இருந்து இரவு முழுவதும் பொருட்களை ஏற்றியவர் இரவு வீடு செல்லாது இருந்துள்ளார். இன்நிலையில் காலை வீட்டின் பி…
-
- 8 replies
- 1.1k views
-
-
காணி சுவீகரிப்பு விவகாரம் - மக்களின் எதிர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர். இதனை அடுத்து இன்றைய நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டதீவு தெற்கு கடற்கரை வீதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையின் முகாமின் விஸ்தரிப்புப்காக நில அளவை திணைக்களத்தினர் இன்று வந்திருந்தனர். வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டதீவு கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் அமைந்துள்ள தெற்கு கடற்கரை சுடலை வீதி…
-
- 1 reply
- 421 views
-
-
ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்! ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி, ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் 0.697 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மண்ணகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக சிலாபம் நீதவான…
-
- 0 replies
- 393 views
-
-
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நி…
-
- 31 replies
- 2.6k views
-
-
கூட்டமைப்புக்குள் பிளவா? – சீ.வீ.கே. பதிலளிப்பு கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாதவண்ணம் பங்காளிக் கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு தமிழரசுக் கட்சி பயணிக்கும் என கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பல ஊடகங்களில் நாளைய கூட்டத்தில் பிரளயங்கள், குளறுபடிகள் இடம்பெறும், முரண்பாடுகள் ஏற்படும் எனச் ச…
-
- 3 replies
- 594 views
-