ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
30/08/2009, 20:09 லியாம் பொக்ஸ் - மகிந்தராஜபக்ஸ சந்திப்பு பிரித்தானிய பழமைவாத கட்சியை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லியாம்பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்வு திட்டம் முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்தபிற்பாடு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களையும் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மகிந்த ராஸபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது. பதிவு
-
- 0 replies
- 698 views
-
-
தனது இலங்கை விஜயத்தின் போது என்னை சந்தித்த இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வேறு சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தனது விஜயத்தின் போது ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்துக்கு தான் நன்றியோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையின் நிலைமையையும் சமய சகிப்புத்தன்மை, ஆட்சி முறைமை சட்டத்…
-
- 2 replies
- 555 views
-
-
குழந்தைகளுக்கும் முககவசம் அணியுங்கள் : August 15, 2021 இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லையென குழந்தைகள் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார். யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினுடைய ஏற்பாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், குழந்தைகளையும் கொரோனா தாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய ரீதியில் கொரோனா கூடிக்கொண்டே செல்கின்றது. குறிப்பாக பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் குழந்தைகளை தொற்றும் வீதம் அதிகரித்திருக்கின்றது …
-
- 0 replies
- 417 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறைச்சாலை வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னரே, சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். Tamilmirror Online || ரிஷாட் எம்.பி தனி அறையில் அடைப்பு
-
- 2 replies
- 462 views
-
-
பிரித்தானியாவில் வாழும் அரசியல்வாதியான தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஜி.ரிவி. நேரடி நிகழ்ச்சி ஒன்றைத் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. வியாழன் நள்ளிரவு தொலைக்காட்சியின் 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயா இடைக்காடர் 'சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று கூற முயன்ற அவரது கருத்தை, அதை நெறிப்படுத்திய செய்தியாளர் தினேஷ் அவர்கள் வெகு புத்திசாதுரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார். திரு. தினேஷ் அவர்களின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என்றாலும், திரு தயா இடைக்காடர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெளிவு படுத்தியே ஆகவேண்டும். தயா இடைக்காடர் சொல்ல வந்தது போல்,…
-
- 28 replies
- 2.6k views
-
-
எங்கு பார்த்தாலும் சமூகப் பிறழ்வுகள் தலைவிரித்தாடுகின்றன. களவு, கொலை, வாள்வெட்டு, கலாசார சீரழிவு என்பவற்றின் தாண்டவம் எங்ஙனம் வாழப் போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிறழ்வுகள் ஏன் நடக்கின்றன? என்பது தெரியவில்லை. ஓர் ஆசிரியர் அடித்து விட்டார் என்றவுடன் மாணவன் தற்கொலை செய்வதென்பது எத்துணை பயங்கரமானது. ஆசிரியர் அடித்தது தொடர்பில் மேலிடத்தில் முறையீடு செய்வது; தனக்கு ஏற்பட்ட உளத்தாக்கத்தை சீர்மைப்படுத்த பொறுப்பான ஆசிரியரை அணுகுவது; நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற எந்த நடைமுறைகளும் பின் பற்றப்படாமல், அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் தற்கொலை செய்தல் என்ற முடிவை மாணவன் எடுக்கும் போது, அதனால் அந்தக்…
-
- 0 replies
- 463 views
-
-
எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக காணப்படுகின்ற நிலையில், இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்புக்களை நாம் புறக்கணிக்கவில்லை. ஆனால் எந்தவொரு விடயத்திலும் அநாவசிய இராணுவ தலையீடு இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் நாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் உரிமைகள் ஜனநாயக ரீதியில் செயற்படுத்தப்பட்டன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினரையோ அல்லது பொலிஸாரையோ பயன்படுத்தி அவை கட்டுப்…
-
- 3 replies
- 236 views
-
-
விடுதலைப் புலிகள், இலங்கைக்குள் தோற்கடிக்கப் பட்டிருந்தாலும் சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த அமைப்பினராகவே காணப்படுகின்றனர். சர்வதேச மட்டத்தில் மிகவும் பலமாகச் செயற்பட்டுவரும் புலிகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச சகத்தைத் திசைதிருப்பி வருகின்றனர் என்று சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீஸ் தெவித்தார். அமெக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னணியிலும் விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களது சர்வதேச தியிலான பலமே இதற்குக் காரணமாகும். எனவே, இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை பாரதுரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் அமைந்த…
-
- 0 replies
- 787 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட இயக்கங்களுக்கு அமெரிக்கக் குடிமக்கள் தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடை செய்யும் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து விசாரணை செய்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 441 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வட மாகாணத்திற்கு முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இந்த நியமனக் கடிதத்தை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையிலா, அல்லது ஆளுநர் முன்னிலையிலா சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. எனினும், ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் ஆளுநரினால் வழங்கப்…
-
- 0 replies
- 433 views
-
-
வடமாகாண சபை நிலைமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஐபிசி தமிழுக்கு பிரத்தியேக நேர்காணல்
-
- 6 replies
- 550 views
-
-
இன்று என்ன தேவை! இந்திய, தமிழ் நாட்டு அரசியல் எமக்கு தேவையற்ற ஒன்று. அதனுள் தலையை நுளைப்பது எமது வேலை அல்ல! அதனை தமிழ் நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும்!! நாம் எதிரிகதை; தேடுவதா? அல்லது நண்பர்களைத் தேடுவதா?? எது முக்கியம்??? உதாரணத்துக்கு ஒரு கதை..... நான் சிறு வயதில் படித்தது.... இது வெறும் கதையாகவே இருந்தாலும் இதனுள் உள்ள கருத்தை தயவுடன் நோக்கவேண்டுகிறேன். அக்பர் என்றொரு மாமன்னர் இருந்தார். அவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டுவந்தார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அவருடைய நாட்டைச் சுற்றியிருந்த சிற்றரசர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அவரது நாடு மீது படையெடுக்கத் திட்டமிட்டனர். இந்தச் செய்தி அக்பருக்கு ஒற்றர்கள் மூலமாகத் தெரிய வந்தது. அவர்…
-
- 14 replies
- 1.9k views
-
-
மாகாண சபை முறையை நீக்கி சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என சந்தேகம் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை என மேலும் தெரிவித…
-
- 0 replies
- 197 views
-
-
ஐங்கரநேசன் பதவி இழந்தது தமிழ்மண்ணுக்கே பெரும் பாதிப்பு – தீபச்செல்வன் வேதனை அண்மையில் வடமாகாண அரசில் நடந்த குழப்பங்கள் காரணமாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதவி விலகினார். அதையொட்டி எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள முகநூல் பதிவில், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த ஐங்கரநேசன், முன்னெடுத்த சிறந்த திட்டங்களில் ஒன்று அம்மாச்சி உணவகம் – வடக்கின் பாரம்பரிய உணவகம். ஓராண்டுக்கு முன்னர் முதன் முதலாக முல்லைத்தீவில் அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டபோது எடுத்த படங்கள் இவை. முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றிய நினைவுகள். கார்த்திகைப் பூக்களைச் சூடியபடி கார்த்திகை மாத மரநடுகைத் திட்டத்தையும் முன்னெடுத்த ஐங்கரநேசன், சீரியதொரு சூழலியளானும் தமிழ்த் தேசியவாதியும்…
-
- 0 replies
- 408 views
-
-
ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு கட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21584
-
- 0 replies
- 116 views
-
-
எனக்கு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவே... ஞானசாரரை நியமித்தேன் – ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்கட்டுவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த செயலணிக்கு ஞானசாரதேரரை நியமித்தமை நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என கூறிய…
-
- 12 replies
- 749 views
-
-
இலங்கையின் பெற்றோலியம், நீர்வழங்கல், துறைமுக அதிகார சபை, மின்சார சபை ஊழியர் தொழிற் சங்கங்கள் இன்று சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மீழஆரம்பித்தன. அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 22% சம்பள உயர்வை தாம் நிராகரிப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். தாம் தற்போது சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் அவசர கால நிலைமையினை கருத்தில் கொண்டு ஆயுதப்படைகள் இந்த வேலைகளை செய்ய தயாராக இருப்பதாக இராணுவ பேச்சாளர் உதய நாணய கார தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் தலைவர் நிஹால் லிய…
-
- 1 reply
- 645 views
-
-
கோத்தாபயவை கண்டிப்பாராம் - நாராயணசாமி 27 அக்டோபர் 2013 கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனக் கூறிய இலங்கைத் தூதர் கரியவசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் காரைக்காலில் நேற்று (26.10.13) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் 'இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் விரிவாக பேசப்படும். இலங்கை கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப…
-
- 0 replies
- 331 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல – பிரித்தானியா 03 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தை, முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் பங்கேற்க உள்ளதாகவும் சிரேஸ்ட அமைச்சர் ஹியூகோ செவர் (Hugo Swire) தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகள் தொடர்பிலும் அமர்வில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தங்க வெளிச்சத்தில் குளிப்பாட்டும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போத…
-
- 0 replies
- 407 views
-
-
நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு! தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் ஒருசிலர் உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், பல்வேறு இடங்களிலும் இவ்வாறு மணல் ஏற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இது ஒரு பாரிய த…
-
- 0 replies
- 119 views
-
-
மாவீரர் நாள்: அகதிகள் முகாமில் போலீசார் குவிப்பு மாவீரன் தினத்தை முன்னிட்டு மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளுக்கு மறுநாள், மாவீரன் தினத்தில் உரையாற்றுவார். இந்த ஆண்டு மாவீரன் தினத்தில் (இன்று) இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மாவீரர் தினத்தை கொண்டாடுகின்றனரா என்பதை கண்காணிக்க, கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை யில் சிறப்பு குழு, மண்டபம் கேம்ப் பகுதிக்கு வந்துள்ளது. மேலும் அகதிகளுக்கென இயங்கும் எஸ்.எல்.ஆர். போலீச…
-
- 1 reply
- 741 views
-
-
இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் இலங்கையின் வட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் மேலும் 91 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டுமானங்கள் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளிலும் தற்போதைய நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கைக்கு அனைத்து வகையிலும் ஜப்பான் ஒத்துழைப்புக்களை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்தார். இலங்கையில் செயற்படும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான கண்ணிவெடி ஆலோசணை குழுவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவ…
-
- 0 replies
- 203 views
-
-
கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது . குறித்த நிகழ்வு மாலை 3 மணியளவில் அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்த்திடபத்தில் இடம்பெற்றது. குறிதத் நிகழ்வில் பிரதம விருதந்தினராக வடமாகாண முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான சி வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களிற்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. வடம…
-
- 0 replies
- 317 views
-
-
புலிகளை நினைவு கூருவது தண்டனைக்குரிய குற்றம் – மிரட்டுகிறது சிறிலங்கா அரசாங்கம் Posted by tamil24 on November 26th, 2013 06:53 AM | ஊடக சுதந்திரம் என்ற பெயரில், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதோ நினைவு கூருவதோ, அவர்களின் பெருமைகளைப் புகழ்பாடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, ஊக்குவிப்பதோ, நினைவு கொள்வதோ, சட்டவிராதமானது. இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மாவீரர் நாள் நினைவுகூரப்படவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த எச்சரிக்க…
-
- 0 replies
- 370 views
-
-
குத்தகைக்கு மத்தளை விமான நிலையம் மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசு என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் …
-
- 1 reply
- 241 views
-