ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142960 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார். யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவ…
-
- 1 reply
- 694 views
-
-
கிளிநொச்சியில் பயங்கரவாத அழிவுச் சின்னம் என பேணப்பட்ட நீர்த்தாங்கி அகற்றப்படுகிறது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் நகர மத்தியில் யுத்தகாலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கி உடைக்கப்பட்டு வருகிறது. கடந்த அரசின் காலத்தில் குறித்த நீர்த்தாங்கி பயங்கரவாத அழிவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டு வருகிறது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான காணியில் வீழ்த்தப்பட்ட நீh்த்தாங்கி யுத்தகால சின்னமாக அரசினால் பேணப்பட்டு வந்த நிலையில் தறபோது அது அகற்றப்படுகிறது. குறித்த காணி ஜந்து மாதங்களுக்கு முன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில் …
-
- 1 reply
- 327 views
-
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு முயற்சிக்கிறது பொதுபல சேனா - ரிஷாட் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக வாழ முற்படும் போது பொதுபல சேனா இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்கின்றது அரசு. இந்த அமைப்பை கட்டுப்படுத்தாது பாராமுகமாக செயற்படுகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். பொதுபல சேனா இனம் தெரியாத நபர்களை வைத்து அமைச்சர் ராஜித சேனரத்ன, மன்னார் ஆயர் இராயப்பர் ஜோசப் மற்றும் என்னையும் சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த அமைப்பு நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு சாபக்கேடாகும். அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவங்களுக்கு பொதுபல ச…
-
- 1 reply
- 427 views
-
-
ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு! ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக வடக்கு மாகாணசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்த உத்தரவில் குறித்த அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை ஆகியவற்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் ஆனந்த சுதாகரனி…
-
- 0 replies
- 202 views
-
-
அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான்.....:: மகிந்த ராஜபக்ச [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 18:15 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம். ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பாகம் –3 -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்- நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வரும் கட்டாய பணியின் தொடர்ச்சியாக இந்த வாரம் மற்றுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த 16 வயதேயான இளைஞர் ஒருவர் அங்குள்ள தேநீரகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய அம்மா, அப்பா இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து போனார்கள். இவர் மிகவும் வறுமையான நிலையில் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். இவரது வறுமையினை கண்ணுற்ற இவரது உறவினரின் நண்பர் ஒருவர் இவரை உலோக ஓட்டு வேலை பழகுவதற்காக அவரிற்கு சொந்தமான கொழும்பிலுள்ள உலோக ஓட்டு வேலை நிலையம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். இந்த குறிப்பிட்ட இளைஞன் வேலை செய்யும்…
-
- 0 replies
- 359 views
-
-
யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா இராணுவம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கீழ் வருமாறு கூறியுள்ளது. இராணுவ 51வது படைப் பிரிவின் தலைமையகம் யாழ். நகரப்பகுதிக்கு வெளியே உள்ள இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
புலிகளின் குரல்" வானொலியின் ஒலிபரப்பு நிலையம் மீது வான்குண்டுத் தாக்குதல் [Tuesday October 17 2006 10:59:57 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின. புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றா…
-
- 6 replies
- 2.4k views
-
-
சீனப் புதத்தை காட்டித் துள்ளிக் குதிக்கும் இலங்கை ஆட்சிப் பீடத்தை சமாளித்து வழிக்குக் கொண்டுவர வகை தெரியாமல் விழிபிதுங்கி தடுமாறித் திணறுகின்றது இந்திய உபகண்டப் பேரரசு ராஜபக்ஷேவால் தென்னிலங்கையில் வலுவாகக் காலூன்றிய சீனா, இப்போது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. சீனாவின் வல்லாதிக்கம், இப்போது வடக்கு இலங்கையின் வடபகுதி முனைவரையிலும் கூட நெருக்கமாக முன்னேறி இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகியிருப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் சர்ச்சை. இலங்கையின் யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் வங்காள விரிகுடாவை ஒட்டி அனலை தீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, காரைதீவு, மண்டைதீவு, பாலைதீவு, இரணைதீவு என்று பல சிறிய தீவுகள் சிதறிக் கிடக்கின்றன. இவற்றில் காரை தீவு,…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 10 மணிக்கு மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். thx http://www.newjaffna.com/
-
- 0 replies
- 551 views
-
-
காலிமுகத்திடலுக்கு அருகில் 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி கொழும்பு துறைமுக நகரம் ஒன்று1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தினால் உயர் குடிமக்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் பயனடைவர். இனப்பிரச்சினை தீர்வு என்பதை விட இனப்பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சிஅரசியலையும் ஆட்சிஅதிகாரத்தையும் தக்க வைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் மாத்திரமல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் பதவியில் இருந்த அரசாங்கங்களிடம் இந்த பண்பை காணமுடியும். அபிவிருத்தி என்ற பெயர்ப் பலகையுடன் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் குறிப்பாக ஜனாதிபதிகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பாக சிந்தித்ததாக இல்லை.மக்கள் அபிவிருத்தி எ…
-
- 0 replies
- 669 views
-
-
அரசாங்கத்திடம் நிதி இல்லை : வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம் ! By DIGITAL DESK 5 16 DEC, 2022 | 12:50 PM வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு கட்சிகளிலிருந்து அரசில் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சுப் பொறுப்புகளின்றி அரசில் இணைந்தவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் பொறுப்புகளை வழங்கவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறின. ஆயினும், அமைச்சரவையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர்களில் அநேகமானோர் மகிழ்ச்சியுடன் இல்லையெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தேச அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றால் ஏற்கனவே 100 ஐ அண்மித்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடோம்! - சிவாஜிலிங்கம் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் தவறவிடத்தயாராக இல்லை” எனவும் தமிழரசுக் கட்சிசார்பில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான தலைமைவேட்பாளராக தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நவசமாசவாஜி கட்சியுடன் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தாம் போட்டியிடுவதை தாம் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்று பிரதேச சப…
-
- 4 replies
- 735 views
-
-
இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். …
-
- 25 replies
- 3.3k views
-
-
சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழகத்தில் பயிற்சிகள் தமிழகம் இந்தியா சூளுர் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வான்படைத்தளத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இதனைகண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பாரரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது இதேவேளை இவ்வாரம் இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில், கடந்த சிலநாட்களாக சிறிலங்கா விமானப்படையினருக்கு இந்தியாவால் இரகசியமாக விமானப்பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. பதிவு
-
- 16 replies
- 2.9k views
-
-
கூட்டமைப்பினர் நினைவுத்தூபி அமைக்க முயல்வதற்கு கண்டனம் உயிரிழந்த மக்களிற்கு தூபி அமைக்க கூட்டமைப்பினர் முனைவது உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் பாதிக்கும் ஓர் ஈன செயலாககூட்டமைப்பினருக்கு தோன்றவில்லையா? ? அவ்வளவு தூரம் பதவி வெறி இவர்களிற்கு ஏறியுள்ளதா? ஆகவே எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம்என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென மோசடியாக அப்பெயரை உபயோகித்துக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களிற்கும் விடுதலை புலிகளை சாட்சிக்கு அழ…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் தமிழீழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட அறிக்கை விவாதம் என்றும் சிறிலங்காவின் பிரபல நிறுவனமான சிலிங்கோவின் தலைவர் கொத்தலாவல மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது, ஜாதிக ஹெல உறுமயவின் ஓமல்பே சோபித தேரர் கூறியதாவது: கொத்தலாவலவின் கருத்தானது சிறிலங்காவின் அரசியல் யாப்புக்கு எதிரானது. அவர் ஒரு தேசப்பற்றிலா மனிதர். அவர் மீது சபாநாயகர் லொக்கு பண்டார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈழத்தில்தான் அடுத்த வரவு-செலவுத் திட்ட …
-
- 0 replies
- 792 views
-
-
கடந்த 2014.10.04 ஆம் திகதி கோப்பாய் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்குழுவை தெரிவு செய்யும் நிகழ்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி பணிமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர். அவரது முழுமையான உரை… சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கேட்…
-
- 0 replies
- 190 views
-
-
இரணைதீவு மக்களுக்கு வெற்றி – மீள்குடியேற்றத்திற்கு அனுமதி! கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் தொடர் அழுத்தம்! – இரணைதீவில் கொழும்பு உயர்மட்டக் குழு கிளிநொச்சி – இரணைதீவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கொழும்பிலிருந்து சென்ற உயர்மட…
-
- 1 reply
- 565 views
-
-
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என்கிறார் அமைச்சர் ராஜித (ஆர்.யசி) வடக்கு மக்களின் சாதாரண உரிமைகளையும் அவர்களின் மனோ நிலையையும் புறக்கணித்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிணைந்த நாட்டுக்குள் மூவின மக்களும் வாழ வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி அதன்மூலமாக நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வாரம் அமை…
-
- 0 replies
- 407 views
-
-
Friday, February 18th, 2011 | Posted by thaynilam எட்டு படகுகளுடன் வல்வெட்டித்துறை மீனவர்களைக் காணவில்லை. தேடுதல் நடைபெறுகின்றது இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டு, கடற்பரப்பில் அவர்களைக் கொண்டு சென்று பொலிசார் விட்டுவிட்டுத் திரும்பிய அதேவேளை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 8 படகுகள் காணாமல் போயுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினரும், ஊர்வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து 3 படகுகளில் 6 மீனவர்கள் தொழிலுக்காகச் சென்றிருந்தார்கள். இவர்கள் உரிய நேரத்தில் கரைக்குத் திரும்பாததையடுத்து, அவர்களைத் தேடுவதற்காக 7 படகுகள் சென்றன. இவற்றில் இரண்டு படகுகள் தமது தேடுதல் பலனளிக்க…
-
- 9 replies
- 1.5k views
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவிப்பு- ரொய்ட்டர் By Rajeeban 18 Jan, 2023 | 09:01 AM இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கை2.9 மில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்ற பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை நாட்டின் 2…
-
- 0 replies
- 465 views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அம்னஸ்ரி இன்ரநசனல் எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபையின் குளிர் பருவகால அறிக்கை வெளியாகியுள்ளது அந்த அறிக்கையில் உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது ஈரான் மற்றும் கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கையும் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால போரினால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 844 views
-
-
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்காக நடந்த இரங்கல் கூட்டம்..! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் கடந்த திங்கள்கிழமையன்று மாலை 5 மணியளவில் சென்னை தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் இருக்கும் தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சி.மகேந்திரன், ஓவியர் வீர.சந்தானம், தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகன்ஜி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாகுல்ஹமீது, நடிகர் சத்யராஜ், இயக்கு…
-
- 0 replies
- 967 views
-