Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசின் செயற்பாடுகளால் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதிருப்தியில் -சர்வதேச மன்னிப்புச் சபை சாடல் பொறுப்புக்கூறல் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெளிப்படையற்ற தன்மைகள் காரணமாக பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் மிகவு…

  2. ’15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தை பயன்படுத்த முடியவில்லை’ -மு.தமிழ்ச்செல்வன் 2016ஆம் ஆண்டில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில், சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலசலக் கூடங்கள், இன்று வரை மாணவர்கள் பயன்படுத்த முடியாதுள்ளது என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியில், பொதுமக்கள் அடாத்தாக பிடித்து குடியிருந்த நிலையில், அவர்களுக்கு நக…

  3. இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்படவிருக்கிறது. கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நீலன் திருச்செல்வம் நிதியம், சர்வதேச முரன்பாடுகள் கற்கைநெறிகளுக்கான நிலையம் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. கொழும்பில் நடைபெறவுள்ள காட்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி காலி “Hall De Galle” இல் பிற்பகல் 5 மணிக்கு புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் இன்னுமொரு தெருக்கூத்து ந…

  4. ஏறாவூரில் பதற்றம்!! (காணொளி இணைப்பு) ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கைது செய்யத நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முற்றுகையிட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11443

    • 3 replies
    • 519 views
  5. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views
  6. 2 கோடி ரூபாவிற்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பாதிரியார் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியே குறித்த பாதிரியார். அப்பாவி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவுக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றிவந்த நிலையிலேயே பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இருபாலை,நல்லூர் மற்றும் கோப்பாய் போன்ற பகுதிகளிளைச்சேர்ந்தவர்களையே இவ்வாறு ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பாதிரியார் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தா பொலிஸார். அவர் தொடர…

  7. பிரபாகரனின் உடமைகள் இராணுவ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட உள்ளன தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடமைகள் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலி அடையாள அட்டை உள்ளிட்ட உடமைகள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட உள்ளன. அடையாள அட்டை தம்மிடம் இருப்பதாகவும் இதனை புதிய இராணுவ அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன அண்மையில் தெரிவித்திருந்தார். வரலாற்று பாடங்களை படிப்பவர்களுக்காக புலிகளின் தலைவரது உடமைகள் அழிக்கப்படாது பாதுகாக்கப்படுவதாக இர…

  8. கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணி வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் மைத்துனர்களாகும். எனவே இவர்கள் இருவரும் இரவில் கொழும்பில் வைத்து கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இதன்பிரகாரம் தெற்கில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவும் வடக்கி…

    • 5 replies
    • 677 views
  9. பிப்ரவரி 12-இல் ஈழத் தோழமைச் சுடர் ஏந்தல்; மார்ச் 4-இல் சிங்கள அரசை எதிர்த்து அறப்போர்! வைகோ அறிக்கை சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர். நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக, உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில், பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு ச…

  10. பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நீர்வழங்கல் தொகுதியொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை பகுதியானது மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதோடு பொது போக்குவரத்துகளை காணாத பகுதியாகவும் இருந்துவருகின்றது. இப்பகுதியில் வறட்சி காலங்களில் மக்களும் பாடசாலை மாணவர்களும் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். …

  11. சர்வதேச வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் விழிக்கவைக்க இணைவோம் பிரான்ஸ் இல் ஒவ்வொரு நாளும் காலையில் 8 மணி தொடக்கம் 10 மணிவரை ஆர் நம் சி (RMC RADIO) ரேடியோவில் என்ன விரும்பினாலும் எந்தப்பிரச்சினையானாலும் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் அநியாயங்களானாலும் கதைக்கமுடியும் என்று ஒரு நேரடி அஞ்சல் போகிறது அதேபோல் ஆர் எவ் இ (RFI RADIO)என்ற சர்வதேச பிரான்ஸ் ரேடியோவில் ஒவ்வொரு நாளும் காலையில் 9.10 மணி தொடக்கம் 10 மணிவரை என்ன விரும்பினாலும் எந்தப்பிரச்சினையானாலும் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் அநியாயங்களானாலும் கதைக்கமுடியும் என்று ஒரு நேரடி அஞ்சல் போகிறது இது உலகம் பூராகவும் பல மொழிகளில் போவது எனவே இதில் இணைவதன் மூலம் அவர்களு…

  12. முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையிலானவை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45வது அமர்வில் நிகழ்ச்சி நிரல் இரண்டின் கீழான பொது விவாதத்தின்போது ஜெனீவாவில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் அளித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என உயர்ஸ்தானிகர் மைக்கேல் பச்லெட்டின் கடந்த திங்களன்று தெரிவித்திருந்தார். நாட…

  13. கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் கண்டெடுப்பு! கிளிநொச்சி – முகமாலை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் பேராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நேற்றும் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணி 5 மணியளவில் நிறைவடைந்தது. இதன்போது, தகடு 01, மண்டையோடு -02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பெற்றி, மகசின் 02 என்பன கண்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட நீதவான் அறிவித்தார். …

  14. தனது காதலனை, கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பிய பெண்ணொருவர், அந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்துவதற்காக, சுமார் ஏழு பேருடன் உறவு வைத்துக்கொண்ட சம்பவமொன்று, காலி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண், தனது வாடிக்கையாளர்களுடன் இருந்த போது, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 27 வயதுடைய குறித்த பெண், தனது காதலனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக, வட்டிக்கு பல்வேறு இடங்களில் பணம் வாங்கியுள்ளார். காதலன் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர், அந்தக் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பியுமுள்ளார். எனினும், சிறிது காலத்தின் பின்னர், பணம் அனுப்புவதை காதலன் நிறுத்தியதால், கடனைச் செலுத்த முடி…

  15. இந்து சமுத்திரம்... திறந்த மற்றும், சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தென்கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய நான்கு தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றினை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக புதிய தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்…

  16. பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக வரும் புதன் கிழமை ( 11..02.2009) அன்று பிரான்சுத்தமிழ் மகளிர் அமைப்பினர் சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. சரியாக பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவிருக்கிறது. மிகவும் குறுகிய கால இடைவெளியில் பிரெஞ்சுக்காவல்துறையினரால் இவ்வார்ப்பாட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால் அனைத்துத்தமிழ்உறவுகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஈழத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் மிகமோசமான முறையில் இன்று வரை தொடர்கின்றது. தொடரும் இனவழிப்பினால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் உலகத்தமிழர்கள் உலகின் மனச்சாட்சியைத்தட்டிஎழுப்பு

    • 0 replies
    • 750 views
  17. சிறிலங்கா படையில் மேலும் ஒரு புதிய டிவிசன் ஒன்றை உருவாக்குவதற்கு தரைப்படைத் தளபதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 607 views
  18. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக்கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது. ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர். மருத்துவர் என்.எஸ் மூர்த்தி என அனைவராலும் அறியப்படும் மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் நாட்டு நலனையே முன்னிறுத்தி வாழ்ந்தவர். பார்வைக்கும் பழக்கத்திற்கும் இனிமையானவர். அன்பான பேச்சும் அழகான சிரிப்பும் அவரின் ஆளுமையாக மெருகேறி மிளிர்ந்தன. வீண் பகட்டற்ற எளிமையும் அவருக்கேயுரிய உயர்தனிப் பண்புகளும் அவரை நோக்கி எல்லோரையும் ஈர்த்தன. அவர் தனது இளமைக்காலத்திலேயே தமிழரசு…

  19. யாழில் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­கான வீடுகளை கையளிக்கவுள்ள ஜனாதிபதி (ரி.விரூஷன்) எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்­பாணம் வலி­வ­டக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்­காக இரா­ணு­வத்­தினால் அமைக்­கப்­பட்ட வீடுகளை மக்­க­ளிடம் கைய­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் அன்­றைய தினம் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்ட 460 ஏக்கர் காணி விடு­விப்பு தொடர்­பா­கவும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவிக்கவுள்ளார். கடந்த 26 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வலி­வ­டக்கு பகு­தியில் இருந்து குடா­நாட்டில் அப்­போது காணப்­பட்ட அசா­தா­ரண நிலை மை­யினால் மக்கள் இடம்­பெ­யர்ந்து தற்­கா­லிக நலன்­புரி முகாம்­க­ளிலும் உற­வினர் வீடு­க­ளிலும் த…

  20. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும்படியும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படும்படியும் இலங்கை அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 2012ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்ததாகவே இப்புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. கடந்த ஆண்டு தீர்மானத்தில…

  21. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று Bharati October 21, 2020விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று2020-10-21T04:55:40+05:30 FacebookTwitterMore விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வெளிவருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருக்கின்றது. இந்த வழக்கானது திறந்த சாட்சியங்…

  22. தான் செய்த தவறை தானே உணர்ந்து இலங்கை பிராயச்சித்தம் தேட வேண்டும்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளமை தொடர்பில் பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தான் செய்த தவறை இலங்கையே உணர்ந்து பிராயச்சித்தம் தேட வேண்டும். என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற இலங்கை பிரச்சனை குறித்த சிறப்பு விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகையிலேயே குர்ஷித் இவ்வாறு கூ…

  23.  'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்' பிரதான விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சேவையாற்றுகின்ற பெண்ணை, ஒருசில மணிநேரத்துக்குள் பல தடவைகள் வன்புணர்ந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. இராணுவ சேவையை கைவிட்டுவிட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த விமானப் பணிப்பெண், தனியாகவே வசித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அந்தப்…

  24. வன்னியில் ஒரு கிலோ செத்தல் மிளகாய் மூவாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மீன் கிலோ ஆயிரம் ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படும் அதேவேளை எந்த ஒரு மரக்கறியும் கிலோ ஆயிரத்து ஐநூறு ரூபாவுக்கு அதிகமாகவே விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எந்த ரகத்தைச் சேர்ந்த அரிசியும் கிலோ முந்நூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தீப்பெட்டி, பனடோல். கொத்தமல்லி, கடுகு, சீரகம், மிளகு போன்றவற்றிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய்யை பார்ப்பதே அரிதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  25. இந்திய மத்திய அரசுக்கு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அந்த நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கவியலாது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீதும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வியும் கூறியிருப்பது தொடர்பிலேயே அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்விருவரின் கருத்துக்களும் தமிழ் மக்களிடையே மிகப்பெரியவருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடமுடியாது என்று மத்திய அரசா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.