ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
கிழக்கே போகும் ரயில் http://www.virakesari.lk/VIRA/cartoon/index.asp?index=-1
-
- 1 reply
- 2k views
-
-
இந்தியாவின் தென்மண்டல இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், நான்கு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வருகிறார். இரு நாடுகளினதும் இராணு நடவடிக்கைளைப் பலப்படுத்துவது, இராணு ஒத்துழைப்பு போன்றன குறித்து கலந்துரையாடுவதே இவரது விஜயத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் அமையவுள்ள இந்த விஜயத்தின் போது இலங்கையின் முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது இருதரப்பு இராணுவ ரீதியிலான ஒத்துழைப்புத் தொடர்பில் அவர் கலந்துரையாடவுள்ளார். இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்த அமைதிப்படையினரில் உயிர் நீத்தோருக்காக நிறுவப்…
-
- 0 replies
- 509 views
-
-
ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளன – ஜோன் கெரி ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அமெரிக்காவின் பங்களிப்புடன் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் தலைமையினால் இந்த மாற்றங்கள் தனித்து மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளில் நடைபெற்ற மாற்றங்கள் அமெரிக்காவின் ஒத்துழைப்பு இன்றியே இடம்பெற்றிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.n…
-
- 0 replies
- 352 views
-
-
தனது சொந்த மகளைச் சீரழித்த தந்தை தலைமறைவு ; தேடுதல் வேட்டையில் பொலிஸார் 13 வயதுச் சிறுமியான தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சிறுமி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சிப் பொலிஸாரால் இந்த அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் சிவபுரத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு வழங்கப்பட்டது. சிறுமியும் அவரது தாயாருமே இந்த முறைப்பாட்டை வழங்கினர். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தையே தன்னை மூன்று தடவைகள் வன்புணர்வுக்குட்படுத்தினார் எ…
-
- 0 replies
- 234 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 OCT, 2024 | 10:07 AM யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195731
-
- 7 replies
- 255 views
- 1 follower
-
-
தமிழக மீனவர்களுக்கு மிகவும் கவலை அளிக்கின்ற மிகக் கடுமையான ஒரு பிரச்சனையைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கச்சதீவு, நெடுந்தீவு ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில், கடலுக்குள் கண்ணி வெடிகளை அமைப்பது என்ற இலங்கை அரசின் முடிவால், இந்திய மீனவர்களின் படகுகள் அந்தக் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறக்கூடிய பேராபாயம் உருவாகி இருக்கிறது. இலங்கை அரசின் அத்துமீறிய இந்தச் செயல், பன்னாட்டு கடல் எல்லை குறித்த விதிகளை மீறியதாகவும், அமைந்து இருக்கிறது. எந்தவித்திலும் நியாயபடுத்த முடியாத, மிகத் தவறான ஒருமுடிவாக, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இருப்பினும், அப்போது செய்து கொள்ளபட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சதீவு கடற்பகுதில்…
-
- 2 replies
- 964 views
-
-
தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் காரியவாசம்- மன்னிப்பு கேட்டார்! டெல்லி: தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று இன்னொரு வீடியோ ஆவணப்படத்தை அது வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு எதுவித இராணுவ உதவியையும் வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் எதிர்வரும் புதன்கிழமை (06.02.08) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 529 views
-
-
லெப் கேணல் வானதி /கிருபா அவர்களின் வீர வணக்கநாள் லெப் கேணல் வானதி/கிருபா நித்தியகரன் மாலதி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்-09.04.1974 வீரச்சாவு-21.03.2009 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் ,,மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம் ,,ஆனாலும் மறைமுக கரும்புலிகள் ,,,போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும்,,,தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமத…
-
- 12 replies
- 942 views
-
-
கிழக்கில் கடந்த ஒரு மாதத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் 12 பேர் உட்பட 68 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 840 views
-
-
உள் வட்ட அரசியல் மப்றூக் ஆயுத இயங்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாகுவதற்குக் காரணமானது. கடந்த 10 வருடங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளால், மு.காங்கிரஸ் உடைந்ததோடு அந்தக் கட்சிக்கு எதிராக, அதிலிருந்து பிரிந்து சென்றவர்களாலேயே இரண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டன. …
-
- 0 replies
- 781 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை -எஸ்.நிதர்ஷன் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…
-
- 0 replies
- 547 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்து கூட ஒரு அரசியல் காரணத்திற்காக. குறிப்பிட்ட சிலரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தாமல் இவ்வாறான ஒரு விடயத்தை கூறியதாகவும் தற்போத…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
-
தனது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, விகடகவியாக்கியுள்ளதாக (Joker) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தன் பின்னர், இலங்கை – இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இதற்கு அனுமதிவழங்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா வாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்காது எனவும், அவ்வாற…
-
- 4 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பாய்கிறது என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்புகுளம், கனகாம்பிகைகுளம், கல்மடுகுளம், வன்னேரிகுளம், கரியாலைநாகபடுவான்குளம், பிரமந்தனாறுகுளம் போன்ற பெரியகுளங்கள் உள்ளிட்ட சிறுகுளங்கள் அனைத்தும் வான் பாய்கிறது. இரணைமடுகுளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது. குளத்திற்கு அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கின்றமையினால் முழுமையாக எல்லா வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. இயங்காது பூட்டிய நிலையில் இருந்து ஆறாவது வான் கதவும் இன்று கடற்படையின் பொறியியல் பிரிவின் உதவுயுடன் திறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் சுதாகர…
-
- 0 replies
- 539 views
-
-
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் சிறிலங்கா திரும்பியுள்ளதாகவும், சிறிலங்கா அரசபுலனாய்வுச் சேவையை மேற்கோள்காட்டி சிறிலங்கா ஊடகம் வெளியிட்ட செய்தி இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் கொண்டே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேவேளை, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறா…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் கைவிட்டுவிடவில்லை; தமிழ்த்தேசிய ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்து நின்றதன் விளைவே தேர்தல் முடிவுகள் - சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாதத்துக்கொரு கேள்வி - பதில் பகுதியில் 'தமிழ்த்தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்…
-
- 1 reply
- 357 views
- 1 follower
-
-
பாரிய குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என அரசாங்கம் கூறினாலும், ஏனையோரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டத்தின் நிறைவில், பாரிய குற்றங்களை புரிந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பினார்கள். அவர் மேலும் தெரிவிக்கையில், ’85 அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அனுமதியினை அரசாங்கம் அளித்துள்ளது. அதில் பல சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. 85 பேரில் 3 பேருக்கு உடனடியாக புனர்வாழ்வு அ…
-
- 6 replies
- 813 views
-
-
30 NOV, 2024 | 12:05 PM இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/200067
-
- 3 replies
- 330 views
- 1 follower
-
-
மலர்ந்த இந்த சித்திரைப் புத்தாண்டு மகிந்தருக்கு அபசகுணமாக அமைந்ததாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகிந்தரின் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மகிந்தரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ”விருந்தோம்பல்” நேரத்தில் மகிந்தருக்கு ஊண்டிய பாற்சோற்றில் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த சகுணம் அபசகுணமானது என சிரேஷ்ட ஜோதிடர்கள் சிலர் கூறியுள்ளனர். இந்தத் தருணத்தில் மன ரீதியாக குழப்பமடைந்த மகிந்தர் அவ்விடத்தைவிட்டு வெளியேறி, நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்த ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஒளிபரப்பையும் உடடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டதாக மகிந்தரின் ஊடகப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இதுகுறித்து கேட்டபோ…
-
- 0 replies
- 676 views
-
-
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு! இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது. 1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச…
-
-
- 18 replies
- 971 views
-
-
இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை 3/15/2008 12:02:29 AM வீரகேசரி இணையம் - இலங்கையின் மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் இவ்வாரம் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட் ஓ பிளேக்குடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, அமெரிக்க இராஜங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் நாட்டின் சமகால நிலைமைகளை பிரதிப்பலிப்பதாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர், இது குறித்து தாம் மிகுந்த க…
-
- 6 replies
- 1.3k views
-
-
மனித உரிமை சட்டங்கள் பலப்படுத்தப்படும் ; ஜெனீவாவில் ஸ்ரீலங்கா உறுதி [ Thursday,10 December 2015, 03:52:27 ] சர்வதேச மனித உரிமை சட்டதிட்டங்களுடன் உள்நாட்டு சட்டங்களை இணைக்கும் பொறிமுறையை பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட அரசியல் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜெனீவாவில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். செஞ்சிலுவைச் சங்கத்தின் 32ஆவது சர்வதேச மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைத்துவிதமான பாலியல் மற்றும் பால…
-
- 0 replies
- 500 views
-
-
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வார்த்தைப் பிரயோகம் காரணமாக இராஜதந்திர ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தெரிய வருகையில், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணி விநியோகத்துக்குத் தேவையான துணிகளை சீன அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதனை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. சீனத் தூதுவர் இந்நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் அதனை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்திருந்தார். இதன்போது சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (P…
-
-
- 2 replies
- 295 views
-