Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கஹாவத்தை பிரதேசத்தில் மர்மக் கொலைகள் இடம்பெறுகின்றன. நாட்டு மக்களின் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிங்களத்தைப் போன்றே ஆங்கில மொழியறிவும் அவசியமானது என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையினால் மூன்றாம் தடவையாக ஏற்பாடு செய்திருந்த புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 12 சிறந்த மாணவ மாணவியருக்கு தலா 24000 ரூபா புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. http://www.seithy.co...&language=tamil

  2. நல்லூர் முதல் நூலகம் வரை - யாழ் மண்ணை அலங்கரிக்கும் உலகக் கிண்ணம் 01 February 2026 ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக, இன்று (1)உலகக் கிண்ணம் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுசெல்லப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இந்த கிண்ண சுற்றுப்பயணத்தில் இலங்கையின் பல இடங்களுக்கும் கிண்ணம் கொண்டு செல்லப்படும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உத்தியோகபூர்வ பயணத் திட்டத்தின்படி, இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து புறப்பட்ட கிண்ணம் தாங்கிய ஊர்தி, மிஹிந்தலை, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய நகரங்களைக் கடந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடையும். இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற…

    • 1 reply
    • 150 views
  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை படையினர் இரவு வேளைகளில் பெயர் பட்டியலுடன் வீடுகளுக்கு சென்று விசாரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இருமருங்கினையும் உள்ளடக்கியதாக கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் படையினர் புதிய இராணுவம் முகாம்களை அமைத்துள்ளனர். இப்படைமுகாம்களிலிருந்து இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்றே முன்னாள் போராளிகளை தேடிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். .... http://www.orunews.com/?p=2514

    • 0 replies
    • 839 views
  4. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் "உதயனு'க் குத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: "நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார். ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். ஆனால் அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர். அவரை…

  5.  இராணுவத்தினர் சுட்டனர்; கிளிவெட்டி படுகொலை வழக்கில் சாட்சியம் பொன் ஆனந்தம் 'தனலெட்சுமி என்பவரும் நானும் கிளிவெட்டிக்கு ரியூசனுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே வீதியால் வந்தார்கள். இதன்போது, அருகில் இருந்த முத்து அண்ணனின் கடைக்குள் சென்று நான் ஒழிந்தேன். என்னோட வந்த தனெலெட்சுமியும்; மேலும் பலரும் சுடப்பட்டு இறந்ததை நான் நான் பின்னரே அறிந்தேன்' என ஜோசப் மோசஸ் அன்ரனி (வயது 30) என்பவர் சாட்சியமளித்தார். திருகோணமலை, கிளிவெட்டிப் பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசார…

    • 2 replies
    • 211 views
  6. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம் Feb 12, 2026 - 06:15 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு…

  7. தமிழ் இளையோர் அமைப்பினரால் சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள உண்மைக்காய் எழுவோம் நிகழ்விற்காக தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்கள் தந்த நேர்காணல்… http://www.tamilseythi.com/tamilar/pathmin...2008-11-13.html

  8. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் நாட்டுக்கு பலகோடி நட்டம்; எரிவாயு விநியோகத்திலும் முறைகேடு - புபுது ஜயகொட குற்றச்சாட்டு 22 Feb, 2026 | 05:23 PM (க.சிவலிங்கமூர்த்தி) ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிலக்கரி மற்றும் எரிவாயு கொள்வனவு விவகாரங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலம் கூறுகையில், நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கும் விலை குறைப்பு என்ற வாதம் மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக…

  9. இலங்கையில் நடப்பது என்ன?: மாணவர் கூட்டமைப்பு தமிழ்நாடு முழுவதும் 14 நாட்கள் சுற்றுப்பயணம் [புதன்கிழமை, 19 நவம்பர் 2008, 10:09 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வேன் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கறுப்புக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் மாணவர்கள் வேன் பிரசாரம் மேற்கொள்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் நா…

  10. இம்முறை இடம்பெறுகின்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 46 முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் தோற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களாவர்.இவர்களுக்காக வவுனியா மத்திய கல்லூரியில் விசேட பரீட்சை மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ஆரம்பமாகிய கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் நாடு பூராகவும் 4048 நிலையங்களில் 542,260 பரீட்சார்த்திகள் பரீட்நைக்குத் தோற்றுகின்றனர். இதில் 387,593 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2062

    • 0 replies
    • 320 views
  11. யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/145535

    • 7 replies
    • 1.2k views
  12. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேர்வுத்தாள்கள் வரவேண்டிய நிலையில் இன்று ஓமந்தை சோதனை நிலையத்தை சிறிலங்கா படையினர் மூடி போக்குவரத்தை தடைசெய்திருந்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 412 views
  13. இன்னும் 5 ஆண்டுகளில் தனது முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பும் என்று விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) �சுப்றீம்செற்-1 யை �இ இலங்கையானது சீனாவுடன் இணைந்து நவம்பர் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோளானது. தனது ஆரம்ப வயதிலேயே இருக்கின்றது. இந்நிலையில் சீனாவுடன் இணைந்து இன்னும் 7 ஆண்டுகளில் முதலாவது விண்வெளி வீரனை இலங்கை அனுப்பிவைக்கும். அத்துடன் இன்னும் இரண்டு செயற்கைகோள்கள் 2015 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்படும். அதில் ஒன்று அடுத்தவருடம…

  14. கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டாதா என்பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பணியக அதிகாரிகள் ஐவரை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். https://newuthayan.com/கைப்பற்றிய-போதை-பொருட்கள/

  15. சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன? நிருபா குணசேகரலிங்கம் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார். இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கி…

    • 1 reply
    • 296 views
  16. கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார். மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.…

  17. ரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM - வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது. வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள்…

    • 0 replies
    • 1.6k views
  18. ராஜபக்ச யுகம் முடிந்து விட்டது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவு நன்மையை பெற்றுக்கொண்டார். நாட்டை ஆட்சி செய்வதற்கு 12 வருடங்கள் மக்கள் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கினர், ராஜபக்ச குடும்பம் தங்களது சுயரூபத்தை காட்டியது. தற்போது அவர்களின் காலம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது வீதிகளில் இறங்குவதால் எதுவும் நடைபெறாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற உதய கம்ம…

  19. மாணவராக உள்ளவர் துணைவேந்தருக்கு புள்ளி போட முடியுமா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் மீண்டும் சர்ச்சையொன்று கிளப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெறவுள்ள துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீடு செய்யும் விசேட கூட்டத்தில் மதிப்பீடு செய்யும் பேரவை உறுப்பினர்கள் தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் கலாநிதி கற்கை நெறிக்கு மாணவராகப் பதிவு செய்துள்ள ஒருவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுப் புள்ளியிடலை மேற்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பே…

  20. திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாக உள்ளது: இன அழிப்பில் சம்பந்தன் ஐயா ?? [Monday, January 7, 2013 4:44 PM] முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் நேரடியாகத் தொடர்புகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனேடிய எதிர்கட்சி தலைவர் திரு.பொப் ரே அவர்கள் 2009ம் ஆண்டு சம்பந்தனிடம் நேரடியாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். புலிகள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்றால் 72 மணி நேரத்தில், தமது நாடும் (கனடா) அமெரிக்காவும் இணைந்து ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார். மிகவும் அதி உயர் பீடத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கனேடிய அரசியல்வாதிகள், இத் திட்டத்தை முன்வைக்க, இரா. சம்பந்தன் என்ன செய்தார் ? இந…

  21. விடுதலைப்புலிகளை மீளுரு வாக்கும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளது. ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் கடவுச்சீட்டும் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டபோது அவருடைய அடையாள அட்டை, வங்கிப்புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைய…

    • 0 replies
    • 208 views
  22. இலங்கையில் டெங்கு நோயால் மூன்று பேர் உயிரிழக்கும் போது, புகையிலை பாவனையால் நாள் ஒன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமன் குமார இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு புகையிலை பாவனையால் இலங்கையில் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உலகில் 95 வீதமானோர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன், இலங்கையில் 22 வீதமான ஆண்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் ச…

    • 2 replies
    • 535 views
  23. கிளிநொச்சியிலும் பரந்தனிலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடும் மோதல்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தென்பகுதியில் உள்ள கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பொலநறுவை மாத்தளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  24. இன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக இடைவிடாது ஒலிபெருக்கியில் அறிவித்தமை பங்குகொண்டவர்களை விசனப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பற்றி சமூகவலை தளத்தில் ஒருவரின் ஆதங்கம் வருமாறு: 65- 75 வயதுடைய முதியவர்களும் பெண்களும் ‘நடைபயணத்தில்’ நடக்க கிளிநொச்சியின் ‘சின்னக்கவுண்டர்’ வாகனத்தில் பவனிவர வெட்கமே இல்லாமல் ‘சிறிதரன் தலைமையில் நடைபயணம் என முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்க’ தொடர்கிறது சிறிதரன் இயக்கி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ வீதி நாடகம். http://thuliyam.com/?p=38625

    • 0 replies
    • 493 views
  25. பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் பலத்திற்காக கண்ணீர் வடித்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்காக மேடையில் கண்ணீர் வடிக்கும் சிலர் நாட்டில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது, பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 72 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனால் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=131589

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.