ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இக்காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன். கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அல…
-
- 13 replies
- 1.7k views
-
-
முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு 020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/87406
-
- 7 replies
- 3k views
-
-
வீரகேசரி நாளேடு - சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள் ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர். சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம், இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தே…
-
- 9 replies
- 659 views
-
-
(எம்.மனோசித்ரா) 1977 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவ அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கென அமைச்சரவையொன்று ஒதுக்கப்படாமை கவலையளிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். கொழும்பு - ரமடா ஹோட்டலில் இன்று புதன்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை வரலாற்றில் 43 வருடங்களாகக் காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 478 views
-
-
இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிருணிக்கா தனது தந்தையின் தலையை தாக்கியிருந்த துப்பாக்கிச் சூட்டினை பார்க்கும் போது, அப்படியான தாக்குதலுக்கு இலக்காகும் ஒருவர் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் இல் பதிவு செய்து இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அதேவேளை தான் குறித்த புகைப்படத்தை முதல் தடவையாக வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”இந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு நேரமும், இது ஒரு …
-
- 2 replies
- 659 views
-
-
இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது. சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 2 replies
- 2.6k views
-
-
காணி தகராறு காரணமாக பௌத்த பிக்கு ஒருவர் குத்திக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவ, எகடஉயன பகுதியிலுள்ள விஹாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பிரதேசவாசிகள் குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு தீ மூட்டி கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவரும் பொரல்லஸ்கமுவ பகுதியில் வைத்து இன்றுக்காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58255-2013-02-04-03-30-52.html
-
- 4 replies
- 499 views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், ஜப்பான் மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த இராணுவ வெற்றிகள் மாத்திரம் போதுமானவையல்ல. எனவே, அரசியல் தீர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பது கடினமாகும். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் விதத்தில் பாராளும ன்ற முறைக்குள் அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். வன்னியில் இடம்பெயரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 21 ஆம் திகதி இலங்கை வந்த ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி ஜனாதிபதி…
-
- 2 replies
- 882 views
-
-
4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கையளிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் கையளித்துள்ளனர். காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று காலை குறித்த 4 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர். இந் நடவடிக்கைக்கு இந்திய கடலோர காவல்துறைக்கு சொந்தமான ராஜ்தரங் கப்பலும் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சீ.ஜீ.49 என்ற கப்பலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11819
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசாங்கத்துடன் இணைய முயற்சியா? அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்தத்தின் போது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவதற்கு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களில் 13 பேர் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களை அரசாங்க பக்கத்திற்கு எடுப்பதில்லையென்று அரசாங்க தரப்பினர் உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகின்றது. ஆனால் பழனி திகாம்பரம் , இராதாகிருஷ்ணன் , மனோ கணேசன் ஆகியோர் ஆளும் தரப்புக்கு செல்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல்களை ஆதாரம் காட்டி, சிங்கள ச…
-
- 0 replies
- 374 views
-
-
பொதுநலவாய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறும் என அமைப்பின் பொது செயலாளர் கே.சர்மா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாநாட்டிற்காக ஏற்பாடுகளை பரிசீலனை செய்த பின்னரே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58685-2013-02-11-08-07-09.html
-
- 11 replies
- 1.6k views
-
-
வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்த அறிக்கை வருமாறு:- 30-01-2009 வன்னி மக்கள் மீது இடம்பெறவுள்ள மனிதப் படுகொலையை தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் வன்னியிலுள்ள தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரி 48 மணி நேர அவகாசம் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அங்கிருந்து வெளியேற தயாராக இல்லை. காரணம் கடந்த காலப்பகுதியில் யாழப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நடந்த கொடூரங்கள் மக்களுக்கு நினைவில் உள்ளது. ஐசி…
-
- 0 replies
- 916 views
-
-
பல்கலைக்கழக மாணவரை போன்று அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் - மனோ கணேசன் பிப் 14, 2013 யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது போன்று, மிக நீண்ட காலமாக அல்லலுறும் தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, அரசியல் கைதிகள் தெற்கிலும், வடக்கிலும் ஒரே மனநிலையில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் தெற்கிலே ஒரு விதமாகவும், வடக்கிலே இன்னொரு விதமாகவும் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்ற…
-
- 0 replies
- 318 views
-
-
தலாய்லாமா முன்பு காலம் தோற்றுவிட்டதோ... 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த மாதிரி இன்னமும் அப்படியே இருக்கிறார்! உடலிலும் மனதிலும் சின்ன மாறுதல்கூட இல்லை. உலகத்தின் மிகப் பெரிய நாடான சீனாவின் சிம்ம சொப்பனம். திபெத்தின் 14-வது தலாய்லாமாவாக 58 ஆண்டுகளுக்கு முன் பதவிக்கு வந்தவர். சென்ற வருடம் புளித்துப்போய் 'பதவி விலகப் போகிறேன்' என்றார். அடுத்த தலாய்லாமா பதவிக்கு யாரும் போட்டிக்குக்கூட வரவில்லை. அவ்வளவு செல்வாக்கு உள்ளவர். சென்னைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தார். சில நிமிடச் சந்திப்பு இது... ''நான் ஓர் அகதி. அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்தவன். சீனாவிடமிருந்து நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. எங்களை நாங்களே ஆட்சி செய்துகொள்ளும் சுயாட்சி அதிகாரத்த…
-
- 0 replies
- 728 views
-
-
ஐ.நா. சபையின் சட்ட விதி 99இன் பிரகாரம் இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்துக்கு எதிராக அரசினால் நடத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனுவொன்றைக் கையளித்துள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தலைமையில் மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள ஐ.நா நிறுவன அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை மனுவை மலேசியத் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாகக் கையளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து, தமிழ் அறவாரியத் தலைவர் சி.பசுபதி, டத்தோ ஹாஜி தஸ்லீம் முகமட் இப்ராஹி…
-
- 0 replies
- 582 views
-
-
ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’ சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது. ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. http://w…
-
- 4 replies
- 614 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, தொடர்ச்சியாக இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் வன்னியில் நெருக்கடிகளுக்குள் மத்தியில் இயங்கிய ஒரே மருத்துமனையான புதுக்குடியிருப்பு மருத்துவமனையை முற்றாகச் செயலிழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது சிறிலங்கா அரசு என நிலைமையை நேரில் அவதானித்த "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரான சி.வே விக்னேஸ்வரன் தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகளை தொடர்ந்து நம்பியிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் பிரிவு உருவாக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் கல்முனை மேயரும் செனட்டருமான மசுர் மௌலானவின் அகவை என்பது நிறைவு விழா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் தலைமையுரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான கொள்கை திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெறவேண்டியவற்றை இலகுவாக பெறமுடியும். இ…
-
- 12 replies
- 902 views
-
-
தேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை எழுதப்போகின்றாராம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பாடத்திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார். புத்தகம் ஒன்றை எழுதத் திட்டமிருப்பதாலேயே முன்னாள் பிரதமர் அக்கோரிக்கையை…
-
- 1 reply
- 394 views
-
-
வரும் 14/ 02/ 2009 அண்று புலிகள் பயங்கரவாதிகள் எனும் தொனியிலும், போரை நிறுத்துமாறு இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சர் டேவிட் மில்பானின் கோரிக்கையை கண்டித்துக்கும் சிங்களவர்கள் எல்லாம் இணைந்து இங்கிலாந்து பிரதமரின் வீட்டுக்கு முன் போராட்டம் அறிவிக்க பட்டு உள்ளது... இந்த செய்தியின் நோக்கம், ஆனான பட்ட தமிழ் மக்கள் எல்லாம் அறிவது என்ன எண்றால். பெருந்திரளாக திரண்டு தமிழர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ததை சில சிங்களவர் சேர்ந்து தங்களது பேரினவாத குரலால் அடக்கி விடலாம் எண்று பார்க்கிறார்கள்... ஒருவேளை சிங்களவர்கள் சிலரது போராட்டமானது பிரித்தானிய அமைச்சரவைக்கு திருப்தி அளித்தாலும் அளிக்கலாம்... இந்த சின்ன கோட்டுக்குக் அருக்கில் ஒரு பெரிய கோட்டை போட வேண்டும்.... இல்லையே…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி அவர் தனது பேச்சின் மூலம் இந்தியாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986 ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப்பத்திரிகை …
-
- 2 replies
- 369 views
-
-
லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதேவேளை, முதல்வரை வரவேற்கும்முகமாக லண்டன் வாழ் தமிழர்களால் சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடுதலை புலிகளின் கொடி ஏந்துவதே குறித்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விடுதலைப் புலிகளின் கொடியை ஏ…
-
- 7 replies
- 780 views
- 1 follower
-
-
ஈழப்போர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்த போகும் சமர் -வேல்சிலிருந்து அருஸ்- விடுதலைப் புலிகளை இராணுவம் மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கி விட்டதாகவும், அந்த பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருவதாகவும் படைத்தரப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. எனவே தென்னிலங்கை சிங்கள மக்கள் தொடக்கம் அனைத்துலக சமூகம் வரையிலும் இறுதிப்போரின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இறுதிப்போரை விடுதலைப்புலிகள் எங்கு இருந்து ஆரம்பிப்பார்கள்? பெரும்பாலான படைத்துறை அதிகாரிகள் இறுதி போர் கிளிநொச்சியில் நடக்கலாம் என எதிர்பார்த்தனர், பின்னர் முல்லைத்தீவில் நிகழலாம் என கூறினர். அதன் பின்னர் சாலைப் பகுதியில் என கணிப்பிட்டனர். ஆனால் எதுவும் நிகழவில்லை. முல்லைத்த…
-
- 30 replies
- 4.6k views
- 1 follower
-