ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
"பொலிசாருக்கு அறிவித்த போதிலும் எந்த பயனும் இல்லை" யாழ்.பாடசாலைகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனையாளர்களின் நடமாட்டம் சுதந்திரமாக காணப்படுகின்றது. அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்த போதிலும் எந்த பயனும் இல்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபரிடம் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் பாடசாலை சூழலில் சுதந்திர…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவ…
-
- 0 replies
- 353 views
-
-
சில்லறை விற்பனை சந்தையில் நேற்று (31) ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1900 ரூபா தொடக்கம் 2200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, பச்சை மிளகாய் ஒரு காய் 15 முதல் 20 ரூபா வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களுக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் அளவு வழமையை விட எழுபத்தைந்து வீதத்தால் (75%) குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நாட்களில் பெய்த கனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்து, தொண்ணூறு சதவீதம் (90%) பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று (31ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய நகரங்களின் சில்லறை விற்பனைச் சந்தைகளில் பல வகையான மரக்கறி வகைகள் கிலோ …
-
- 4 replies
- 481 views
- 1 follower
-
-
கிழக்கு உதயம் கொண்டாட்டத்திற்காக யாழில் மக்களின் கால்நடைகளை களவாடிய படையினர் யாழ்ப்பாணம் கிழக்கு உதயம் சம்பந்தமான கொண்டாட்டம் கொழும்பில் கோலகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க சங்கானை பண்டத்தரிப்பு இளவாலைப் சண்டிலிப்பாய் பகுதி மக்கள் தலையில் கைவைத்து ஓப்புச் சொல்லி அழுது புலம்பியுள்ளார்கள் கடந்த வியாழக்கிழமை கிழக்கின் உதயம் நிகழ்வு கொண்டாட்டத்திற்கென மேற் கூறப்பட்ட பகுதிகளில் உள்ள பல வீடுகளிலும் வளர்த்து வரப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடாக்கள் திருடப்பட்டுள்ளன. முதல் நாள் புதன் கிழமை சங்கானை பண்டத்தரிப்புப் பகுதிகளில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் உள்ள கடாக்கள் இரவு திருடப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதி…
-
- 0 replies
- 788 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 02:16 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அநுராதபுரத்தில் பௌத்தபிக்குகள் இடிக்கப்பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டு மையமான தர்காவை புனரமைத்து தருவதாக தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் பாதுகாப்பு வழங்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியுமே தவிர, இடிக்கப்பட்ட தர்கா மீண்டும் கட்டித்தர ஏற்பாடு செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றினால் தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக கடந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை, சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள், இடிக்கப்பட்ட தர…
-
- 0 replies
- 369 views
-
-
இணுவிலைப் பிரிக்க வேண்டாம் -மீண்டும் மக்கள் மனு!! பதிவேற்றிய காலம்: Jan 21, 2019 யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடிப் பகுதியை வேறு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று மனுக் கையளிக்கப்பட்ட்து. “இணுவில் கிராமம் பல சித்தர்கள் வாழ்ந்த பிரதேசமாகும். இந்த கிராமத்தைப் பல துண்டுகளாக பிரித்து இணுவில் என்கின்ற அடையாளத்தையும், வரலாற்றையும் மாற்றுவதற்கு சில சக்திகள் முனைகின்றனர். எனவே இணுவில் மஞ்சத்தடி பிரதேசமானது நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் நல்லூர் பிரதேச செயலகத்தின் ஆளுகையை விட்டு பறிகொடுக்க எப்போதும் அனுமதிக்க மாடடோம் எமது கிராம அலுவலர் பிரிவின் பெயரான கோண்டாவில…
-
- 0 replies
- 444 views
-
-
புங்குடுதீவு மாணவியின் இறுதி ஊர்வலம் இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவி வித்யாவின் கொடூரமான கொலைக்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் இவர்களே காரணம் என கண்டறிந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து …
-
- 5 replies
- 1.9k views
-
-
Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 05:38 PM நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வ…
-
- 1 reply
- 301 views
- 1 follower
-
-
[Monday, 2011-10-03 09:07:37] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளார். போரின்போது விடுதலைப் புலிகளும், அரச படையினரும் போர்க் குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்பு…
-
- 1 reply
- 799 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி [ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 04:06.18 PM GMT ] இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன் அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார். நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் எ…
-
- 26 replies
- 2k views
-
-
கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்காக மாணவன் தாக்கப்படவில்லை – பிரதிக் காவல்துறைமா அதிபர் February 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கிய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அச் சிறுவன் தாக்கப்பட்டத்திற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கு எதுவித தொடர்புமில்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரொஷான் பனான்ர்டோ தெரிவித்துள்ளார். குறித்த சிறுவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் குறித்த சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியதால் ஏற்பட்ட விபத்திலேயே இச் சிறுவன் காயமடைந்ததாகவும் அவர் மேலு…
-
- 3 replies
- 764 views
-
-
Aug 12, 2007 at 12:12 PM யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தையில் வைத்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலை 6.30 மணியளவில் சந்தையில் சனக் கூட்டம் அதிகமாக இருந்த வேளையிலேயே இவர் சுடப்பட்டதாகவும், ஸ்தலத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாவாந்துறையைச் சேர்ந்த பேதுருப்பிள்ளை ஜேசுதாஸன் என்ற 40 வயதான குடும்பஸ்த்தரே கொல்லப்பட்டவராவார். இவர் சந்தைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சென்றவேளையே இவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தமையால் சந்தையில் வழமையைவிட சனக்கூட்டம் அதிகமாக …
-
- 0 replies
- 778 views
-
-
சிம் அட்டைகளை பதிவு செய்யுங்கள் : இல்லையேல் பிரச்சினை ! கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி கையடக்கத் தொலைபேசிகளில் #132# என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும் என ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் தங்களுக்குத் தெரியாமல் வேறு சிம் கார்டுகள் வழங்கப்பட்டிரு…
-
- 0 replies
- 227 views
-
-
பட்டப்பகலில் கடத்தல்கள் வடக்கில் தொடர்கின்றன! பாதுகாப்பு இல்லையென்ற உணர்வுடன் கிழக்கு மக்கள் வடக்கில் தொடர்ந்தும் பட்டப் பகலில் ஆள்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடைத்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் மன்னாரில் கப் பம் பெறுதல், இடையூறு செய்தல் தொடர்பாக 9 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் வாராந்த அறிக்கையில் (ஓகஸ்ட் 6 ஓகஸ்ட் 12) இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை ஆவன கண்காணிப்புக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் படி, வடக்கில் ஆட்கடத்தல்கள் பட்டப் பகல் வேளைகளில் ஒழுங்கு முறையாக நடைபெற்று வரு கின…
-
- 0 replies
- 707 views
-
-
வல்வெட்டித்துறை நகரில் அமைக்கப்படும் புதிய விகாரைக்கான பணிகளை நிறுத்த வத்திக்கானுக்கு வேண்டுகோள்:- 15 அக்டோபர் 2011 வல்வெட்டித்துறை நகரப்பகுதியினில் படைத்தரப்பால் அமைக்கப்பட்டுவரும் புதிய விகாரைக்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்;கம் வத்திக்கானுக்கு அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார். வரலாற்றுப்பெருமை மிக்கதும் மூன்று நூற்றாண்டுகளை கடந்ததுமான வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவாலயத்தின் முன்பதாகவே இவ்விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒரிரு தினங்களாக படையினர் முழுவீச்சினில் இந்நிர்மாணப் பணிகளினில் ஈடுபட்டுவருகின்ற நிலையிலேயே கே.சிவாஜிலிங்க…
-
- 5 replies
- 752 views
-
-
மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை நாரந்தனையில் இடம்பெற்றுள்ளது. இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்ற…
-
- 2 replies
- 502 views
-
-
(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச முதலீடுகள் வரவில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் செய்துகொண்ட சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றதே தவிர இந்த ஆட்சியில் எவரும் முன்வரவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ,இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் முதலீடுகள் குறித்து இன்…
-
- 0 replies
- 180 views
-
-
பயங்கரவாதத்துக்கு புதிய வரைவிலக்கணம் அறிமுகம் [05 - September - 2007] * சபையில் ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு; முன்னர் அறிவிக்கப்பட்டதே என்கிறார் பிரதமர் டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் அவசரகாலச் சட்டத்தில் " பயங்கரவாதம்" என்ற சொற் பதத்திற்கு இதுவரை காலமும் இருந்து வந்த வரைவிலக்கணம் முற்றாக அகற்றப்பட்டு, அதற்கு புதியதொரு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பிரச்சினையை கிளப்பினார். அரசியல் அ…
-
- 2 replies
- 1.7k views
-
-
வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான சில சிவில் சமூகத் தலைவர்களால் திருமதி ஹிலரி கிளின்டனுக்கு தமிழர் பிரச்சனை தொடர்பாக 24.10.2011 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் சில வெளிவந்துள்ளன. 1. அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழர்களுக்கெதிராக இறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரான யுத்தங்கள் பலவற்றின் போதிலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள்; விட்டுக் கொடுக்கப்படக் கூடாது என அமெரிக்காவிடம் சிவில் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்குமாயின் போர்க்குற்ற விசாரணைகளை சர்வதேசம் விட்டுக் கொடுக்கலாம் என்றவாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கக…
-
- 1 reply
- 608 views
-
-
2018இல் நாடாளுமன்றில் வாயை மூடியிருந்த 13 எம்.பிக்கள் – அங்கஜன், ஆறுமுகனும் அடக்கம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையான நாட்களில், 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவாதங்கள் எதிலும் உரையாற்றவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றப் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு, ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முழுவதும் நாடாளுமன்றத்தில் மௌனம் காத்த உறுப்பினர்களில் 12 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். மற்றொருவர் ஐதேகவின் உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஆவார். …
-
- 1 reply
- 373 views
-
-
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம், மேலும் சரிவு கண்டுள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தினைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இலங்கையின் பணவீக்கம், சென்ற ஒக்டோபர் மாதத்தில் ஐந்து புள்ளி ஒரு சதவீதம் என வீக்கம் கண்டுள்ளது. இதுவே முன்னைய மாதத்தில் (செப்தொம்பர்) ஆறு புள்ளி நான்கு சதவீதம் என உயர்வாக வீக்கமடைந்து காணப்பட்டதுடன் இலங்கையின் பணவீக்கம், கடந்த யூன் மாதத்தில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம, மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரிசி மற்றும் மரக்கறிக…
-
- 6 replies
- 1.8k views
-
-
28 MAR, 2024 | 09:36 PM யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையா…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
http://www.yarl.com/videoclips/view_video....0b7d48c591b8f43
-
- 1 reply
- 1.6k views
-
-
மக்கள் எழுச்சி ஏற்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் மற்றும் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரித்தல் சட்டத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுமாயின் மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. ஸிம்பாப்வேயில் எதேச்சதிகார ஆட்சியாளர் ரொபர்ட் முகாபேயும் அந்நாட்டின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தியதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார். 1956 ஆம் ஆண்டு தனியாருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள், பஸ் கம்பனிகள், சுரங்கங்கள் என்பன அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டபோது உள்நாட்டு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் தற்போத…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச் சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சுமார் 5 லட்சம் ஈழத் தமிழர்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக இருக்கின்றனர். சொந்த ஊருக்கே, சொந்த வீட்டுக்கோ திரும்பிச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. அவர்களது விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மேலும், சிங்கள அரசு கைது செய்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி என்ன என்பதே தெரியவ…
-
- 2 replies
- 587 views
-