Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 23 JUN, 2024 | 07:17 PM நமது நிருபர் ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியது. கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட …

  2. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. புலிகளையும் முன்னர் தடை செய்துள்ளது. இவ்விரண்டு நடவடிக்கைகளும் அமெரிக்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை. அதே வேளை இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களையும் அமெரிக்கா சமீபத்தில் வழங்கியது. இந் நடவடிக்கைகள் தமிழருக்கு எதிரானவை அல்ல. தமிழர் துயரங்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்திட வேண்டும் என அரசாங்கத்த்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவாதாக கூறியுள்ள அமெரிக்க தூதுவர், சர்வகட்சி பிரதிநிரதிகள் குழு மூலமாக தீர்வை நீண்ட காலமாக முதன்மைப்படுத்தி வருகின்றார். அமெரிக்கா தூதுவரின் இக்கருத்துக்களும் செயற்பாடுகளும் ஏறக்குறைய, 'அதிசயம் ஒரு நாள் நடக்கும் உங்கள் துன்பங்கள் ஒருநாள் நீங்கும் பொறுமையாய் இருங்கள்'. என்…

  3. யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்தியா (newuthayan.com)

  4. திரு­ம­லையில் சீன முத­லீட்­டுடன் இரும்பு உருக்கு தொழிற்­சாலை? திரு­கோ­ண­மலை கப்­பற்­றுறை பகு­தியில் இரும்பு உருக்கு தொழிற்­சாலை ஒன்­றினை சீன முத­லீட்­டுடன் அமைப்­ப­தற்கு 600 ஏக்கர் காணி­யினை வழங்க வேண்டும் என்று சர்­வ­தேச முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம விடுத்த கோரிக்­கைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி கிடைக்­க­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போது திரு­கோ­ண­மலை கப்­பற்­றுறைப் பகு­தியில் இரும்பு உருக்கு தொழிற்­சா­லையை சீன முத­லீட்­டுடன் அமைப்­ப­தற்கு 600 ஏக்கர் காணி வழங்­கப்­பட வேண்டும் என்ற அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்சர் மலிக் சம­ர­…

    • 17 replies
    • 1.7k views
  5. தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது அல்லது சமூகத்தின் மத்தியில் காணப்படும் தீவிரவாதப் போக்குக் கொண்ட சக்திகளால் ஊறுவிளைவிக்கும் போதும் கூட தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இவ்வாறு சென்னையை தளமாகக்கொண்ட 'The Hindu' ஆங்கில நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சந்திப்பின் போது, தமிழர…

  6. சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?SEP 03, 2015 | 5:15by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. இவ்வாறு thewire ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் சர்மா. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்கா தலைநகரில் உள்ள பிரபலமான, காலி முகத்திடலில் உள்ள இரு பீரங்கிகள் இப்போது இந்திய மாக்கடலைக் கண்காணிக்கவில்லை. சீனாவினால் நிதியிடப்பட்ட- கடலுக்கு மேலாக, வானுயர்…

  7. 23 JUL, 2024 | 09:10 PM (எம்.மனோசித்ரா) வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியில் அனைத்து பிரிவுகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதகமான தாக்கத்துக்கு உள்ளானார்கள். அதன் விளைவாக தங்க நகைகளை அடகு வைத்தல் வேகமாக அதிகரித்துள்ளது. 2019 ஆண்டில் 210 பில்லியன் ரூபா அளவிலிருந்த அடகு முற்பண நிலுவைத் தொகை 2024 ஆண்டு மார்ச் மாதமளவில் 571 பில்லியன் வரை அதிகரித்து 172 வீத அதிகரிப்பை காட்டியுள்ளது. குறித்த நிலையை கருத்திற் கொண்டு உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவா…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான வான்படைத் தாக்குதலைக் கண்டனம் செய்த ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவுக்கு நன்றி கூறி கடிதங்களை அனுப்புமாறு பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 781 views
  9. கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு உதவி கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்க 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு முன் வந்துள்ளதாக அதன் உப செயலாளர் க.பவமொழிபவன் தெரிவித்தார். இந்த நிலையில் கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள 200 கைதிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் நேற்று புதன்கிழமை மாலை உலக நண்பர்களுக்கான தேவை எனும் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெ.கிலேற்றன் மற்றும் உப செயலாளர் க.பவமொழிபவன் ஆகியோர் கையளித்தனர். குறித்த பொரு…

  10. 02 AUG, 2024 | 02:15 PM முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஐங்கன்குளம் பகுதியில் யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவவில்லை. யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானையின் மரணம் தொடர்பான க…

  11. வரவு-செலவுத்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் தாம் அரசை தோற்கடிப்பதில் உறுதியாக இருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எனினும் தமது தரப்பு உறுதியாக உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. மட்டக்களப்பின் எல்லைப்புறக் கிராமங்களான 35,37,39ஆம் கொலனி, கெவுளியாமடு, வைக்கியல்ல, பாலையடிவட்டை உட்பட பல கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன் விஜயம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டார். இதன்போது தமிழர்களின் கால்நடைகள் சுடப்படுவது, காணிகள் சூறையாடப்படுவது, நன்னீர் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உட்கட்டுமான புனரைமப்பு வேலைகள், போக்குவரத்து வசதிகள் ஆலயங்களின் நிர்மாண பணிகள் பற்றியும் அங்குள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். இவற்றிற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவது தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அம்மக்களிடம் தெரிவித்தார். …

  13. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிச் செல்லும் பேருந்து நடத்துனர்களும், சாரதிகளும், அதிக பயணிகளை ஏற்ற வேண்டும் எனும் குறிக்கோளில் அதிவேகமாக பேருந்தை இயக்குவதால் தாம் கடும் பீதியடைவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் மன்னார் போக்குவரத்து சேவை காலை முதல் மாலை வரை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் பயணிகள் தத்தமது வேலைகளுக்காக குறித்த பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பேருந்து சாரதிகள் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு முண்டியடித்து வேகமாக செல்வதால் பயணிகள் பீதியில் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர். இது இவ்வாறிருக்க போட்டி காரணமாக சில பஸ் தரிப்பிடங்களில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்லாத நிலையும் காண…

  14. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன . 1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு வடக்கு உப பிரதேச செயலகமாக 31 கிராம சேவகர்கள் பிரிவை உள்ளடக்கி 1989ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டது முதல் இயங்கி வருகிறது. கரவாகு வடக்கு செயலகமும், நாவிதன் வெளி செயலகமும் இயங்க அன்றைய உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் தேவநாயகம் அம்பாறை அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 1989ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி இடப்பட்ட கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. …

    • 2 replies
    • 1.3k views
  15. நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/

    • 9 replies
    • 1.5k views
  16. தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா. தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தவைலர் இன்பராசா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்த போது தமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம் தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ,வடக்க…

  17. 90ம்ஆண்டு வலி வடக்கில் தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராய் பெண் மீட்டார் 90ம்ஆண்டு வலி வடக்குப் பிரதேசத்தில் உள்ள தனது காணியில் புதைத்து வைத்த தங்க நகைகளை உரும்பிராயைச் சேர்ந்த பெண் மீட்டெடுத்துள்ளார். 1990ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் வறுத்தலைவிளான் பகுதியில் இருந்து குடும்பமாக வெளியேறியவர் தனது தங்க நகையின் பாதுகாப்புக் கருதி வளவினுள் புதைத்து வைத் திருந்த நிலையில் இடம்பெயர்ந்து சென்றுள்ளார். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் உரும்பிராய்ப் பகுதியில் வசித்து வரும் சூழலில் தாயாரும் காலமாகிவிட்டார். குறித்த யுவதியும் திருமணமாகி பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வலிவடக்கில் அண்மையில் விடப்பட்ட ஆயிரம் ஏக்கருக்கு அருகில் உள்ள வேலியோரமே குறித்த காண…

  18. போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் வருமான வழி என்றும், உலகிலுள்ள போதைப் பொருள் வர்த்தகர்களுடன் கொண்டிருந்த தொடர்பினாலும், அதன் வழி வந்த வருமானத்தினாலுமே பிரபாகரன் ஆயுதங்களை வாங்கி போர் நடத்தினார் என்றும் இலங்கை நாட்டினுடைய அரச தலைவர் பகிரங்கமாக கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்துகின்ற, கண்டனத்திற்குரிய கூற்றாகும். சத்தியத்தின் வழியிலும், நேர்மையின் வழியிலும் நின்று தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக இதய சுத்தியோடும், மானசீகமாகவும் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை உலகமே வியந்து பார்க்குமளவுக்கு கொள்கை ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் உயர்ந்த அமைப்பாக கொண்டு நடாத்திய தலைவர் பிரபாகரனுக்கு போதைப்பொருள் விற்று ஆயுதம் வாங்க வே…

    • 3 replies
    • 672 views
  19. மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 4 காவலரண்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிலிருந்த படைக்கலங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  20. இறையாண்மையை பாதிக்காது தீர்மானம் இலங்கை தொடர்பான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத் தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன் றின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியன் மூலம் செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதை இலங்கை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேபோல தமிழ்த் தேசியக் கூட்…

  21. வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல்போய்விட்டனர் - கேப்பாபுலவு மக்கள் விரைவில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் . முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் (10) 863 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்றுவருகின்றது . கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இன்றுவரை தொடர்ந்தது இடம்பெற்றுவருகின்றது . மக்களின் தொடர் போராட்டத்தின் பலனாக ஒருதொகுதி காணிகள் …

  22. தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்! ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோாிக்கை விடுத்துள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம…

  23. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிங்கப்பூரில் உள்ள அவர் இருதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60521 கோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுனவினவ…

    • 1 reply
    • 616 views
  24. 53 இஸ்லாமிய நாடுகள் பேரவை இலங்கையை ஆதரிக்க தீர்மானம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு 53 இஸ்லாமிய நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய மாநாட்டுப் பேரவை (ஓ.ஐ.சி) முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இவ்விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கென விசேட தீர்மானமொன்றை நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போதே இஸ்லாமிய மாநாட்டு பேரவை…

    • 12 replies
    • 1.8k views
  25. சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் : யாழில் நடைபவனி தொழில் திணைக்களத்தின் பெண்கள்,சிறுவர் விவகாரப் பிரிவால் சிறுவர் தொழிலற்ற நாடாக இலங்கையை மாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களால் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவனி பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி காங்கேசன் துறை வீதி வழியாக சென்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நிறைவடைந்தது. 14வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தமாட்டோம்,14 -18 வயதுக்குட்பட்ட இளையோரை அபாயகரமான வேலைகளில் அமர்த்தமாட்டோம் என்பதனை வலியுறுத்தியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுவர்களை தொழில் மூலம் சுரண்டுவதற்கு இடமளிக்கமாட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.