ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளைச் சேர்நத பகுதிகளில் பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 163பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குடிபோதையில் கலகம் விளைவித்த 2 பேரும், அடித்துக்காயப்படுத்தியமை தொடர்பில் 40 பேரும், பணமோசடி தொடர்பில் ஒருவரும் , சந்தேகத்தின் பேரில் 24 பேரும் , காசோலை மோசடி தொடர்பில் ஒருவரும், வீதி விபத்தில் ஒருவரும், பொது இடங்…
-
- 0 replies
- 349 views
-
-
அனைத்துலக மகளிர் நாளினை முன்னிட்டு அவுஸ்திரேலியா மகளிர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஆதரவோடு, சோசலிச முன்னணி நெறிப்படுத்திய கவனயீர்ப்பு அணிவகுப்பு 'போருக்கு எதிரான பெண்கள்' என்ற தலைப்பில் மெல்பேர்ணில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் எந்தவொரு பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ஜானகி விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் ஒன்றியத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் இனப்பிரச்சனை தீர்க்கப்படாததா…
-
- 4 replies
- 422 views
-
-
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…
-
- 5 replies
- 800 views
-
-
ஜனாதிபதியால் லீ குவான் யூ ஆக முடியாது: சாணக்கியன் சபையில் தெரிவிப்பு
-
- 2 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் மகிந்த அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் புதிய, புதிய கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுவதாகவும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 385 views
-
-
‘விட்டுக்கொடுப்புகள் பலவீனமல்ல’ அழகன் கனகராஜ் “ஆட்சிமுறைமை தொடர்பில், மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். பிளவு படுத்தப்பட முடியாத ஒரேநாடு என்ற ஏற்பாடு அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என்பதுடன், ஒரே நாட்டுக்குள் நிர்வாக அதிகாரங்களைப் பகிரமுடியும் என்று சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விட்டுக்கொடுப்புகளை பலவீனமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. புதிய அரசியலமைப் பொன்றை இயற்றுவதற்கான எமது ஆதரவை, அதன் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கும் யுத்தத்தின் விளைவான ஏனைய விடயங்களை தட்டிக்கழித்து விடுவதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியது. நாடாளும…
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). என்ற காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் அடைந்தார். மாரிமுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளிப்பது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5489
-
- 6 replies
- 1.1k views
-
-
கடந்தகால யுத்தத்தில் எமது தமிழினம் இழப்பதற்கு எதுவுமில்லை, எமது பாரம்பரிய கலை கலாச்சாரங்களும் அதில் உள்ளடங்கும். ஆகவே எமது பாரம்பரிய கலாச்சாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் அமைந்துள்ள அரசையடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஸ்தாபன விழாவில் இன்று(04) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வானது ஆலய தலைவர் கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது. அங்கு கலையரசன் மேலும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்திற்கு முகவெற்றிலையாக காரைதீவு மண் திகழ்கிறது. வீரம் கல்வி பொருந்திய மண். விபுலானந்த அடிகளாரது பெயரில் உள்ள விபுலானந்த சது…
-
- 0 replies
- 369 views
-
-
வசாவிளான்,பலாலியில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அங்கஜன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மாகாணத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 33,861 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், வசாவிளான்,பலாலி பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், …
-
- 0 replies
- 330 views
-
-
தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளும், கூட்டணி முடிவுகளும் ஓரளவுக்குத் தீர்மாகிவிட்டது. வாக்காளர்கள் நியமனங்களும், பிரச்சாரங்களும் இன்னமும் தொடங்கப்பட்டாத நிலையிலேயே, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கான எதிர்பிரச்சாரம் வலுத்து வருவதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவினதும், காங்கிரசினதும், ஆதரவாளர்களாக இருந்தவர்களே இத்தகைய எதிர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது இந்தக் கூட்டணியின் தேர்தல் வெற்றிப்பிரச்சாரத்துக்குச் சற்றுச் சவாலாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆடிய நாடகமே இந்த அதிருப்பதி நிலை தோன்றக் காரணமெனச் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர் போராட்டதை ஆதரித்துப் பேசிய, தமிழுணர்வாளர், இயக்குனர் சீமானை, கொளத்தூர் மணி, ஆக…
-
- 0 replies
- 796 views
-
-
மஹிந்தவுக்கு மன்மோகன் அழைப்பு- 13ஆவது திருத்தத்தை அமூல்படுத்தவும் வலியுறுத்தல் 11 ஏப்ரல் 2013 கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வ…
-
- 7 replies
- 829 views
-
-
யாழில் கடந்த 10மாதத்தில் 69 இலட்சம் லீற்றர் கள்ளு விற்பனை யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ள தாக மதுவரித்திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன் தெரிவித்தார். இது பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் , யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெப்பரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 6919663.035 லீற்றர் கள்ளு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் கள்ளு இறக்கப்படுவதில்லை இதேபோல் அக்டோபர் மாதத்திற்கு பிற்பட்ட காலங்களிலும் பெரியளவில் கள்ளு இறக்கப்படவில்லை இதனடிப்படையில் பெப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகளவான கள்ளு நுகரப்பட்டு…
-
- 0 replies
- 289 views
-
-
About one thousand Tamil Tiger supporters block Elizabeth Street at peak hour, protesting against violence in Sri Lanka. http://media.smh.com.au/national/breaking-...est-467558.html
-
- 1 reply
- 1.1k views
-
-
பொருத்தமான வீட்டுத்திட்டம் அவசியம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளையும், வீடுகளையும், சொத்துக்களையும் இழந்த மக்களின் தேவைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அந்த மக்களின் தேவைகள் பிற்போடப்படக்கூடியவையோ, அல்லது காலம் தாழ்த்தப்படக்கூடியவையோ அல்ல. அந்த மக்களின் தேவைகள் விரைவாக நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகும். அதிலும் விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினை என்பது பாரிய பூதாகரமான விடயமாக மாறியுள்ளது. குறிப்பாக யுத்தம் காரணமாக தமது வீடுகளை இழந்த மக்கள் இதுவரை வீடுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள…
-
- 0 replies
- 219 views
-
-
அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் நோக்கத்துடன் சுவிற்சர்லாந்தின் பேர்ண் மற்றும் சூரிச் நகரங்களில் தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்று சனிக்கிழமையும் பேர்ண் மாநகரில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில் வீதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடை செய்திருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
தமிழீழ, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உள்ள தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் அவர்களோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தை விதைத்தவர். அவருடைய பாசத்திற்குரிய பிள்ளையான சிவந்தி ஆதித்தனுடைய மறைவு ஈடு செய்ய முடியாததாகும். ஐயா சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய நிறுவனங்களை தொடர்ந்து வளர்த்து காத்து வந்தவர். தென் தமிழ்நாட்டில் கல்விநிலையில் பின் தங்கிய பிற்பட்ட மக்களுக்கு உறுதுணையாக ஐயா ஆதித்தனார் தொடங்கிய கல்லூரிகளை மேலும் விரிவுபடுத்தி பொறியியல் கல்லூரி போன்றவற்றை நிறுவி அறிவியல் வளர்த்தவர். ஐயா தொடங்கிய தினந்தந்தி இதழ் தொடக்கம், அத்துடன் இணைந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் சிறப்புடன் நடத்தியவர். தமிழ்நாட…
-
- 9 replies
- 652 views
-
-
மூன்று மாதங்களில் மீளக்குடியமர அனுமதிக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் டக்ளஸ் எட்டு மாதங்கள் கடந்தும் அது தொடர்பில் பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறார். எங்கள் காணிகள் பறிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் எங்களை எங்கே கொண்டு சென்று மீள்குடியமர்த்தப் போகிறார் என்று வலி.வடக்கு மக்கள் நேற்றுக் கேள்வியெழுப்பினர். தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விடுவிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது பிரதேசங்கள் நிரந்தரமாக இராணு வத்தினரால் பறிக்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் கேட்டன…
-
- 2 replies
- 794 views
-
-
யுத்த நிறுத்தம் என்ற சொல் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது - ரம்புக்வெல யுத்த நிறுத்தம் என்ற ஒரு வார்த்தை சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட வார்த்தை என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்திற்குப் பயந்து யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது. மகிந்த ராஜபக்ச தனது உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். படைத்துறை ரீதியாக பிரபாகரனை வெல்ல முடியாது என்ற அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டை அவர் தவிடுபொடியாக்கியுள்ளார். இலங்கை இனப் பிரச்சினை குறித்த தெளிவில்லாது வெளிநாட்டு அமைச்சர்கள் யுத்த நிறுத்தம் பற்றிப் பேசுவது ஆச்சரியமாக இருப்…
-
- 2 replies
- 723 views
-
-
இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுக்கள் ஸ்தம்பிதமடைந்திருப்பதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைபே ஏற்றுக் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் செவ்வியொன்றை வழங்கிக் கருத்து வெளியிட்ட ஜானாதிபதி, பேச்சுகளுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும், ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் வீணாக அரசை குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது என்றும் குறிப்பிட்டார். முன்னதாக கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தீர்வுப்பேச்சுக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப்பொறுப்பையும் இலங்கை அரசே ஏற்…
-
- 1 reply
- 401 views
-
-
தமிழ் மக்கள் சார்பாக ஒரு தரப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/143271/gd.jpg குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 15 ஜனவரி 2021 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு: மாண்புமிகு தூதர்களே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல், இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத…
-
- 0 replies
- 474 views
-
-
தற்போது இலங்கைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் மூன்று பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்த்திடம் கேட்டுக்கொண்டதையடுத்து இப்பொருட்கள் மீதான தீர்வைகள் தளர்த்தப்பட்டது'என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தெரிவித்தார். தேங்காய் எண்ணெய், வெற்றிலை, மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான சுங்க வரிகளையே பாக்கிஸ்தான் நீக்கியுள்ளது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் 'இலங்கை, பாக்கிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் எதிர்வரும் 11 ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரி…
-
- 0 replies
- 733 views
-
-
ரெண்டு இந்திய அதிகாரிகளின் வருகையின்பின் உக்கிரமமாகப்போகும் வன்னிப் பலிக்களம் Another carnage imminent as the two Indian mandarins return [TamilNet, Saturday, 25 April 2009, 03:27 GMT] In lines of precedence with Colombo, which escalates war immediately following consultations with India, another carnage is anticipated with the return of the two Indian mandarins, Menon and Narayanan, from Sri Lanka on Friday, Tamil circles in Colombo said. Earlier, on Thursday, the Indian Foreign Minister Pranab Mukherjee accused the LTTE of "barbaric" attempts. Meanwhile, US State Department Friday asked the LTTE to consider surrendering to a 'third party'. Diplomatic and milit…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை நீதி அமைச்சருக்கே இலங்கையின் நீதி மீது அவநம்பிக்கை! வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் வவுனியா, மன்னார், முல்;லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வன்னி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அசாத் சாலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். றோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறுக் ,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றும் போது கைது செய்யப்பட்டுள்ள ஆசாத்சாலி பற்றி அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது : இன்று எனது மனச்சாட…
-
- 2 replies
- 573 views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் கருணாநிதி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்திருந்தார். அவரது உடல் நலம் முழுவதுமாகத் தேறாத நிலையில், அரசை அலுவல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். இந்நிலையில் கட்சிப் பணிகளையும், தேர்தற் பணிகளையும் கருத்திற்கொண்டு, தேர்தற் பிரச்சாரத்திலும் இறங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்…
-
- 27 replies
- 2.5k views
-