ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு - சி.இதயச்சந்திரன் ""மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.'' அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும். போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது. மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும். அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இ…
-
- 0 replies
- 502 views
-
-
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக பேச்சு நடத்த வருகிறார் அவுஸ்திரேலிய அமைச்சர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு அவுஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான அந்நாட்டு உயர் மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கை வரவுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சர் கிறிஸ் இவன்ஸ் இலங்கை வரும் குழுவுக்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. கடல் மார்க்கமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த குழு இலங்கை வருகிறது. ஏனெனில், சட்ட …
-
- 0 replies
- 447 views
-
-
தொம்பே பகுதியில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு : 15 பேர் கைது கொழும்பில் இருந்து கொண்டுச் செல்லப்படும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட வேண்டாம் என கூறி தொம்பே பிரதேச மக்கள் டயர்களை எரித்து பாதைகளை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகம் அடக்கும் பொலிஸார் 15 பேரை கைது செய்துள்ளனர். இதேவேளை குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் மையம் ஒன்று தென்கொரியாவால் தொம்பே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தற்போது காணப்படும் குப்பைகளின் அளவை விட 50 டொன் குப்பைகளை இங்கு சேகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதேச மக்கள் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவ…
-
- 0 replies
- 348 views
-
-
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன. மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் …
-
- 8 replies
- 773 views
-
-
அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் வந்துள்ளதாக.............. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்குதல் மற்றும் திருமலை துறைமுக அபிவிருத்தி பணிகளில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைசாத்திடப்பட்டது. இயற்கை வாயு உற்பத்தி சூரிய சக்தி நிலையங்கள் உருவாக்கம், திருகோணமலை நகர அபிவிருத்தி, திருகோண மலை துறைமுக அ…
-
- 2 replies
- 445 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/08/2009, 13:42 அரச சமாதானச் செயலகம் நேற்றிரவுடன் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது - ரஜீவ விஜேசிங்க சிறீலங்கா அரசின் சமாதான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சமாதானச் செயலகத்தின் பணிகள் முடிவுக்குள் வந்துள்ளதால் அதனை மூடியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவுடன் சமாதானச் செயலகம் மூடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றதால் இனிவரும் காலத்தில் சமாதான நடவடிக்க…
-
- 0 replies
- 323 views
-
-
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்கெதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூளுரைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகை…
-
- 4 replies
- 570 views
-
-
வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
-
- 10 replies
- 1.5k views
-
-
அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன் : கோத்தாவுக்கும் எனக்கும் எதிராகவே புதிய சட்டம் : பசில் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டத…
-
- 0 replies
- 212 views
-
-
ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டுள்ளது - சித்தார்த்தன் July 17, 2021 ஒற்றுமை முயற்சிகள் தேர்தலை அடிப்படையாக கொண்டிருந்த காரணத்தி னாலேயே அவை பிரிவை நோக்கி செல்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம் பெற்ற வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அனைவரது அர்பணிப்புக்களும், உயிர் தியாகங்களும் வீண் போய் விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. இன்று ஒரு பின்னடைவான நிலமைக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ளனர். இதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய …
-
- 0 replies
- 248 views
-
-
சிறிலங்கா கூட்டுப்படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மற்றும் தரைப்படைத் தலைமையக அதிகாரிகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர்ப் பயணம் மேற்கொண்டனர். பலாலி வானூர்தி நிலையத்தில் வந்து இறங்கிய தளபதிகளை யாழ். மாவட்ட தரைப்படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா வரவேற்றார். கூட்டுப் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இது ஆகும். பலாலி படைத் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் குறித்தும், 'வடக்கின் வசந்தம்' திட்டத்துக்கு படையினர் வழங்கி வரும் ஆதரவு குறித்தும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சில்வா விளக…
-
- 0 replies
- 608 views
-
-
24 வருட சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி தண்டனை குறைப்பு கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு இராணுவத்தின் சுற்றவளைப்பு தேடுதல் ஒன்றின்போது 19 வயதில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த 24 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதியொருவர், தனது சிறைத் தண்டனையைக் குறைத்து சாதாரண பிரஜையாக வாழ வழிசெய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற தமிழ் அரசியல் கைதியே இத்தகைய வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு ஒன்றை…
-
- 0 replies
- 631 views
-
-
இலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது அன்பரசன் எத்திராஜன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MR GAMAGE படக்குறிப்பு, ரத்தினவியல் வல்லுநர் காமினி ஜோய்சா நட்சத்திர நீலக்கல் தொகுப்பை ஆராய்கிறார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 745 கோடி இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் …
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
'படுகொலைகளுக்கு தீர்வு; இலங்கையில் வரலாறு இல்லை' -எஸ்.நிதர்ஷன் “நீதி செத்துவிடவில்லை. நீதிக்கான கோரல் தொடரும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாளான இன்று, நெடுந்தீவில் குமுதினி படகில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வுகள் நெடுந்தீவில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரமே நினைவு கூர்ந்து வருகின்றோம். அனைத்து படுகொலை…
-
- 0 replies
- 730 views
-
-
ஆளும் தரப்பின் முரண்பாடுகளை சுமூகமாக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில்- 08 செப்டம்பர் 2013 வடமாகாண சபை தேர்தல் களத்தில் குதித்துள்ள ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே மூண்டுள்ள மோதல்களை அடுத்து சுமுக நிலையினை தோற்றுவிக்க பஸில் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். நான்கு நாள் விஜயமாக சென்றுள்ள அவர் வேட்பாளர்களை சந்தித்துப்பேசியி உள்ளார். நேற்றைய தினம் ஈபிடிபி சார்பு வேட்பாளர்கள் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தரப்புக்களை சந்தித்துரையாடிய பஸில் பின்னா யாழ்.மாவட்ட சுதந்திரகட்சி அமைப்பாளர் அங்கயனது அலுவலகத்திற்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தினார்.முன்னதாக தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பலாலியில் அவர் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். கிளிநொச்…
-
- 0 replies
- 315 views
-
-
காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உர…
-
- 0 replies
- 181 views
-
-
யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி பற்றி அரசாங்கம் பேசினா லும் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொதுமக்களுடைய காணிகள் அவர்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க, அரச ஆதரவாளர்களுக்கும் அடிவருடிகளுக்கும் காணிகளை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தகுதி வாய்ந்த ஐக்கிய தேசிய கட்சிக்கே வடபகுதி மக்கள் இந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நேற்று வவுனியா மதகுவைத்தகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரி…
-
- 2 replies
- 632 views
-
-
’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’ -ஜே.ஏ.ஜோர்ஜ் "அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது. “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொ…
-
- 0 replies
- 195 views
-
-
அமைச்சர்களின் சம்பளத்தை... கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானம்! அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (திங்கட்கிழமை) மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தையும் நாளை கொரோனா நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது ஒரு மாத சம்ப…
-
- 0 replies
- 183 views
-
-
கோபிநாத், வவுனியா 11/09/2009, 12:01 ஆனையிறவில் பெளத்த மடலாயம்! கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை! தமிழர் தாயகத்தை அபகரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அங்கு சிங்கள மயமாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெளத்த மடலாயங்கள் மற்றும் புத்தர் சிலைகள், புத்த கோயில்கள், அரச மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. ஆனையிறவில் பெளத்த மடலாயம் ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் பெரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. வன்னிப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு பல சிறிய புத்தர் கோயில்களும் நிறுவப்பட்டு வருகின்றன. சந்திகளில் படைய…
-
- 0 replies
- 938 views
-
-
(இந்தப் பதிவை நேற்றே எழுதியிருந்தாலும் தேவை கருதி தாமதித்து இன்று பதிவிடுகிறேன்.) ஜனநாயக வழிமுறையிலான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு உறுதி செய்யப்படுவது அவசியம். ஆனாலும் இலங்கையில் நடைபெறும் எந்தத் தேர்தல்களிலும் குறிப்பாக நானறிந்த வரை 90 களுக்குப் பின் நடந்த தேர்தல்களை இரகசிய வாக்கெடுப்பு என்றே கூற முடியாது. இது தொடர்பில் இலங்கையில் அரச உத்தியோகத்தனாக வேலை செய்த காலங்களில் தேர்தல் கடமைகளுக்குச் சென்று அனுபவ வாயிலாக உணர்ந்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேர்தல்களில் வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தொடர் எண் இருக்கும். இது பிரதான வாக்குச் சீட்டிலும் அந்தப் பிரதான வாக்குச் சீட்டை இணைத்திருக்கும் அடிக் கட்டையிலும் இந்த இலக்கங்கள்…
-
- 0 replies
- 442 views
-
-
பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் சதொச நிறுவனம் விளக்கம் இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என்பதாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான ஒரு செய்தி பரப்பப்பட்டிருந்தது. எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன , உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செ…
-
- 1 reply
- 778 views
-
-
வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்
-
- 8 replies
- 1.4k views
-
-
தலையிடமாட்டோம் : முதலமைச்சர் விக்கினேஸ்வரனே முடிவெடுக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன் (நமது நிருபர்) வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை விவகாரத்தில் நாம் தலையிடப்போவதில்லை. அந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே முடிவு எடுக்கவேண்டும் இதுவே எமது நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலை வரும் எதிர்க் கட்சித்தலை வருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடமாகாணசபை விவகாரத்தில் நாம் தலையீடு செய்வதில்லை. அந்த சபை சுதந்திரமாக இயங்குவதற்கு நாம் அனுமதித்துள்ளோம். எனவே இந்த விசாரணை அறிக்கை விவகாரத்திலும் நாம் தலையிட…
-
- 1 reply
- 347 views
-