ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் எங்களது உறவு இருக்க மாட்டாது செய்திகள் ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி இங்கு களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ள…
-
- 0 replies
- 127 views
-
-
[size=5]வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்![/size] [size=4]வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன. அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உ…
-
- 11 replies
- 856 views
-
-
உயிரை அடகுவைத்து உண்ணா நோன்பிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே! நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கா…
-
- 0 replies
- 434 views
-
-
மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களைக் கோரும் போலிசார் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் நடைமுறையிலிருந்தது போன்ற இந்தப் பதிவு முறை காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை காணப்படுகின்றது. வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸார…
-
- 0 replies
- 274 views
-
-
யாழில் பெருந்தொகை பணம் மோசடி! யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை வித…
-
- 0 replies
- 218 views
-
-
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரி…
-
- 1 reply
- 1k views
-
-
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்படி அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் இது குறித்து இளைஞர்களின் மன்ற பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிப்படுத்தும் வகையில் பலன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். …
-
- 0 replies
- 403 views
-
-
[size=4]தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்பு அமைச்சராக. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் சிங்கை அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய சந்தித்துப் பேசியுள்ளார். வொசிங்டனில் கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. [/size] [size=4] [/size] [size=4]அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுவாக கட்டியெழுப்புவதற்கு உகந்த தருணம் இதுவே என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இந்தச் சந்தி…
-
- 5 replies
- 737 views
-
-
அம்பாறை- பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் குறித்து அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் நிராகரித்துள்ளார். கடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து …
-
- 0 replies
- 235 views
-
-
முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=2][/size] [size=3](ஒலிந்தி ஜயசுந்தர)[/size] [size=2][size=4]750 மில்லியன் ரூபா செலவில் எட்டு உள்ளூர் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அமைக்கவுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கு உள்ளூர் விமான நிலையங்கள் உகந்த போக்குவரத்து கட்டமைப்பாக விளங்கும் எனவும் அவ்வமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விமான நிலையங்கள் பூர்த்தியாக்கப்பட்டவுடன் நாட்டில் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பான திட்ட அறிக்கையொன்றை திறைசேரி கோரியுள்ளதாக அமைச்சு அதிகாரிகள் கூறினர்.…
-
- 3 replies
- 570 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து கதிர்காமம், கெப்பிட்டிக்கொல்லாவ பகுதிகளின் பாதுகாப்பினை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்காரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 766 views
-
-
பேராதனை பண்டார நாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து ஆறு நாள்களேயான சிசுவொன்றின் கை விரல்கள் வைத்தியசாலை தாதி ஒருவரால் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார திணைக்களம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் ஆகியவற்றினால் இருவேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சம்பத் ரணவீர தெரிவித்தார். வெட்டப்பட்ட சிசுவின் விரல் சத்திர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அது வெற்றியளிக்கவில்லை. அதனால் இன்னும் சில தினங்களில் மீண்டும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறித்த சிசுவுக்கு ஊசி மருந்தேற்றும் போது தற்செயலாக விரல் துண்டிக்கப்பட்டு விட்…
-
- 0 replies
- 336 views
-
-
தனக்கு பணம் தேவையில்லை என்றும் தனது முன்னோர்கள் தனக்கான பணத்தினை தேடிக் கொடுத்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். அம்பாறை- கஞ்சிக்குடியாறு தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்றக் கிராமங்களில் மீள்குடியமர்தப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட 100 வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘எனக்கு பணம் தேவையில்லை எனது மூதாதையர் பணம் கொடுத்துள்ளனர், நானும் 45 வருடகாலம் சட்டத்தரணியாக கடமையாற்றியவன். இறைவன் எனக்கு கொடுத்தது போதும் நான் உங்களிடமிருந்து பணத்தை எடுக்கத் தேவையில்லை. அரசியல்வாதிகளிடம் இருந்து பணத்தை எடுக்கவில்லை மிக தெளிவாக இந்த மேடையில் சொல்ல…
-
- 1 reply
- 410 views
-
-
அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பம்! 2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பதிவு செ…
-
- 2 replies
- 568 views
-
-
09 JUL, 2025 | 09:51 AM யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் புதன்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்துள்ளார். இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219537
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
கோத்தாபய ராஜபக்ஸவும் குழுவினரும் சூடானுக்கு சென்றனர்:- 29 ஆகஸ்ட் 2012 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சூடானுக்கு சென்றுள்ளார். சூடான் விமான நிலையத்தை சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளை அந்த நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் மற்றும் சூடான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் தனது இந்த விஜயத்தில், சூடான் அரசாங்கத்தின் பாதுகாப்பு கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பயணம் செய்ய உள்ளார். அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு விவகாரங்கள் குறித்து சூடான் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெ…
-
- 2 replies
- 692 views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள் கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம் உறுதியாகியுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை பகுதியில் இன்று 22.02.2020 நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரிடம், குறித்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது, " பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளதால் நாட்டில்…
-
- 1 reply
- 293 views
-
-
தனக்கு எதிராக எத்தனை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தாலும் தான் பயப்படப் போவதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற உற்சவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றாலும் நான் பயப்படும் பெண் இல்லை. நாங்கள் பணத்திற்கு விலை போகாதவர்கள். நாங்கள் பணத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்திற்காக வேலை செய்பவர்கள் யாரென்று எனக்குத் தெரியும். இது சம்பந்தமாக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பேன். ஏனெனில் எனக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிறையவுள்ளதாகவும் தலதா அத்துகோரள தெரிவித்த…
-
- 1 reply
- 540 views
-
-
இராணுவத்தில் இருந்து தப்பிவந்த 6 பேரை படையினரும் வனபரிபாலன அதிகாரிகளும் கைதுசெய்துள்ளனர். யால பாதுகாக்கப்பட்ட வனப்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டபோதே இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பேரூந்துகள் தாக்குதல்களுக்கு உள்ளானமையை அடுத்து, புத்தல கதிர்காமம் வீதியில் உள்ள இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்க படையினர் தடைவிதித்துள்ளனர் இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட, படையில் இருந்து தப்பி வந்த 6 பேரிடமும் இருந்து கைத்துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். www.tamilwin.com
-
- 0 replies
- 804 views
-
-
அநுராதபுரம் கெக்கிராவ தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29840 ஐக்கிய தேசிய கட்சி 15457 ஜே.வி.பி.751 அநுராதபுரம் கிழக்கு தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31099 ஐக்கிய தேசிய கட்சி 18726 மக்கள் விடுதலை முன்னணி 2759 http://www.virakesari.lk/art…
-
- 72 replies
- 6.7k views
- 1 follower
-
-
கூட்டமைப்பு அரசியல்வாதிகள் அறிக்கைவிடும் மன்னர்களாகவே இருந்துவருகின்றார்கள்! அமீர்அலி மட்டக்களப்பில் சில அரசியல்வாதிகள் மக்களின் கஸ்டங்களைப்பற்றி மக்களின் வாழ்வின் அபிவிருத்தி பற்றி பேசுவதை விடுத்து அறிக்கைவிடும் மன்னர்களாகவே இருந்துவருகின்றார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட பால்பண்ணையாளர்களின் ஒன்றுகூடலும் ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அண்மைக்காலகமாக ஊடகங்களில் ஒருவரைப்பற்றி மறு…
-
- 0 replies
- 251 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:40 PM (நமது நிருபர்) பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதும் அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலொன்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்களுடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தி…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் படையினர் தெரிவித்துள்ளனர் [ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2008, 12:52.27 PM GMT +05:30 ] மன்னாரின் வெள்ளாங்குளம் கிராமத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் மன்னாரில் இருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைக் கைப்பற்றியதை அடுத்து மன்னார் மாவட்டம், முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde
-
- 1 reply
- 1k views
-
-
தற்கொலை அங்கி : இன்ரப்போலின் உதவியை நாடும் இலங்கை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரு…
-
- 0 replies
- 369 views
-