ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகைய…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
மக்கள் பலத்தின் ஊடாகத்தான் நாங்கள் ஒரு பலமான தேசிய விடுதலை இயக்கமாக வளர்த்துள்ளோம். சிங்களப்பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதைமுகம்கொடுத்து வெற்றிகொள்ள மக்கள் எங்களுக்குப் பலமாக இருப்பார்கள். கடந்த போராட்ட காலத்தை பின்நோக்கிப்பார்த்தால் இது தெரியும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய போரெழுச்சிக்குழுவின் பேராளர்களின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் மக்கள் பலமாகஇ கவசமாக இருந்தமையால்தான் எங்களுடைய விடுதலை இயக்கம் உலகம் முழுக்கப் பேசப்படுகின்ற தேசி யவிடுதலை இயக்கமாக வளர்ந்ததிருக்கின்றது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக இறக்கிவிட்டுள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக மணிக்பாம் தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி அங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக துப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்றய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்கு சென்றபோது அந்த மக…
-
- 1 reply
- 512 views
-
-
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இன்று இரவு மாற்றப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையி…
-
- 0 replies
- 419 views
-
-
வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான கே.எஸ்.பிரார் லண்டன் நகரின் பிரதான வணிக வீதியான ஆக்ஸ்போர்ட் சர்க்கஸில் ஞாயிறு இரவு அடையாளந்தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனெரலான குல்திப் சிங் பிரார், 1984ல் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதம் ஓங்கியிருந்தபோது, அந்த அமைப்பிற்கு உத்வேகமளித்த ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலே தங்கியிருந்த அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்ற இந்திய ராணுவ நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியவர் ஆவார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய உயிராபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல என்று இந்திய தூதரக வட்டாரங்கள் கூறின. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. http://thaait…
-
- 0 replies
- 489 views
-
-
பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன் October 3, 2025 உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இலங்கையில் தெற்…
-
- 0 replies
- 117 views
-
-
பதவியா, பாலமோட்டை மற்றும் மல்லாவிப் பகுதிகளில் கடந்த சில தினங்களில் நடந்த சண்டைகளில் வீரச்சாவடைந்த 20 போராளிகளின் உடலங்களை இராணுவம் இன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் புலிகளிடம் கையளித்துள்ளது. அதேவேளை 19 இராணுவத்தின் உடலங்களும் புலிகளால் செஞ்சிலுவைச் சங்கத்தினூடு இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் வன்னி மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு உதவி செய்ய ஐநா முன் வந்துள்ளது. வன்னியிலேயே மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைக்க அரசு சம்மதிக்க மறுத்துவிட்டது. இதே ஐநா சபை 2000 ஓயாத அலைகள் நடவடிக்கையின் போது யாழ்ப்பாண மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர இராணுவம் அனுமதிக்காத போது.. …
-
- 13 replies
- 5.3k views
-
-
[size=3][size=4]இலங்கையின் பாரம்பரிய தொழில்கள் துறை மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் இருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.[/size] [size=4]இது தொடர்பான விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவரை கைது செய்ய சென்னை செசன்ஸ் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இலங்கைக்கு சென்றுவிட்டதால் அவரை கைது செய்ய முடியவில்லை. இதையடுத்து 1996-ல் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவையடுத்து டக்ளஸ் தேவானந்தா சார்பில் செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும், கொலை வழக்கு தொடர்பாக வீடியோ கான்பர…
-
- 0 replies
- 692 views
-
-
பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான் கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர் (க.கமலநாதன்) வடக்கு ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவில்லை. அதனால் தளர்ந்துபோகவுமில்லை என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ரெஜினோல்ட் குரேயை மீளப்பெறவேண்டும் என்று கோரி தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவிக்கையில், என்னை விலக்குமாறு கோருவதா…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் …
-
-
- 5 replies
- 432 views
-
-
ஆலையடிவேம்பு,பனங்காடு பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீடொன்றினுள் நுழைந்த இனியபாரதியின் குழுவைச்சேர்ந்த ஆயுதபாணிகள் சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பனங்காடு சாகம வீதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நுழைந்த ஆயுதபாணிகளே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். முகத்தை கறுப்புத் துணியால் மூடிக் கட்டியவாறு ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த இந்தக் கோஷ்டி வீட்டுத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்ததுடன்,அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்தெடுத்தது. இதன் பின் வீட்டிலிருந்தவர்களை துப்பாக்கிமுனையில்அறையொன்ற
-
- 0 replies
- 658 views
-
-
[size=4][/size] [size=4]கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப்…
-
- 0 replies
- 553 views
-
-
வடமாகாண சபையை விமர்சிக்கவில்லை -சொர்ணகுமார் சொரூபன் வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை தான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரிடம் நேரில் கூறிய வடமாகண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவையும் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்துயோகபூர்வமாக திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஆளுநர், ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை(சீடி) முதலமைச்சரிடம் கொடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வடமாகாண சபை தொடர்பான க…
-
- 1 reply
- 328 views
-
-
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும் adminOctober 25, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துண…
-
-
- 1 reply
- 262 views
-
-
அமெரிக்காவின் கொடியாக் கரையோரப் பகுதியில் கப்பலொன்றில் காயங்களுடன் காணப்பட்ட இலங்கையர் ஒருவரை, அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். கொடியாக்கின் தென்கிழக்கு கரையோரத்தில் கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர் காயங்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து விரைந்த அமெரிக்க கரையோரப் பாதுகாப்பப் படையினர் குறித்த இலங்கையரை மீட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், குறித்த இலங்கையர் யார் என்பது பற்றியோ அல்லது உடல் நிலைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 1 reply
- 1.4k views
-
-
அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர் இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை தடுக்கும் வகையிலான முன்னெடுப்புகளுக்காக அவுஸ்திரேலியாவின் இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். அவர்கள் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் தமது நாட்டுக்கு வருவதை தடுக்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கையின் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளனர் என்று அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் மற்றும் வெளியுறவு பேச்சாளர் ஜூலி பிஸப் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை, இந்தோனிசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோவை சந்தித்தபோது தாம் இருவரும் இலங்கைக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டனர் ஒரு மாதக்காலப்பகுதிக்குள் தமது …
-
- 0 replies
- 417 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க சிறிலங்கா நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். எம்பிலிபிட்டிய, கொலன்ன தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். http://onlineuthayan.com/news/13253
-
- 1 reply
- 381 views
-
-
வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சரக்கு ஊர்திகளில் சீ4 வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரக்கு ஊர்தியிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.6k views
-
-
''நம்ம மேடமா இப்படியரு அறிக்கை விட்டிருக்காங்க..! சூப்பர்! இலங்கைத் தமிழர் பிரச்னையில் சரியான நிலைப்பாடு எடுக்க முடியாம ஆளுங்கட்சியான தி.மு.க. திணறுவதை கரெக்டா புரிஞ்சுகிட்டு உறுதியா ஒரு 'லைன்' எடுத்திருக்காங்க, மேடம்!'' என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் உற்சாகக் குரல்கள்! அதேபோல், இவர்களின் கூட்டணியான ம.தி.மு.க-வில் ஆளாளுக்கு 'ஸ்வீட்' பரிமாறிக் கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர் மீது அங்குள்ள அரசு நடத்தும் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து... தமிழக முதல் வரையும் இந்தியப் பிரதமரையும் சாடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் கடுமையான அறிக்கைதான் இதற்குக் காரணம்! பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்னையை விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு கோத்துப் பார்த்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதி மொழிகளை ஏற்க முடியாது – ஏ.ஐ. 02 நவம்பர் 2012 மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப…
-
- 1 reply
- 615 views
-
-
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு- தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்! மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்…
-
- 0 replies
- 126 views
-
-
பிரித்தானியா கொவன்றி மாநகரத்தின் மாநகராட்சி முன்றலில் சிறீலங்கா அரசுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை கொவன்றி வாழ் தமிழ் மக்களால் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்காண மக்கள் அணிதிரண்டு சிறீலங்கா இனவாத அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இன்றைய போராட்டம் மாலை 4:00 மணிக்கு ஆரம்பித்து 6:00 மணிக்கு நிறைவடைந்தது. அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் தமது உறவுகளுக்கு ஆதரவாக தொடர்ந்து துணை நிற்போம் என உறுதி எடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்தனர். படங்கள்......... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 1 reply
- 940 views
-
-
உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க SLMC - CWC என்பன தீர்மானித்துள்ளன: அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ள உள்ளுராட்சி திருத்த சட்டமூலத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன தீர்மானித்துள்ளன.உள்ளுராட்ச
-
- 0 replies
- 685 views
-