ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து நாம் அதிர்ச்சியடைந்துள்ளோம். அண்மைக் காலமாக இத்தலைப்பு பொதுத் தலங்களில் பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் வாழக்கூடிய சகல பிரஜைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பிற்கு அமைய, ஒரே நாடு ஒரே மக்கள் என்ற அமைப்பில், பல நூற்றாண்டுகள் அவரவரது மத விழுமியங்களையும் கலாச்சாரங்களையும் பேணி, மதச் சுதந்திரத்தின் அடிப்படையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க…
-
- 4 replies
- 338 views
-
-
நாடு "ஒற்றையாட்சி' அரசாக இருக்கின்றதென்று அரசியல் அமைப்பு பிரகடனப்படுத்துகின்ற போதிலும் "ஒருங்கிணைந்த நாடாக' இருக்க வேண்டுமென்ற கருத்தை சிலர் கொண்டிருக்கின்றனர். மக்களின் இறைமை அதிகாரத்தை 13 ஆவது திருத்தம் பாதிக்கின்றதென சட்டத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். காணி மற்றும் பொலிஸ் போன்ற அதிகாரங்களை பிராந்திய அரசாங்கங்களுக்கு ( மாகாணங்கள் ) பகிர்ந்தளிப்பதன் மூலம் இலங்கையின் முழுமைத் தன்மையை அது இல்லாமல் செய்வதாகவும் அழித்து விடுவதாகவும் சமஷ்டி அரசொன்றுக்கான வழியை திறந்துவிடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "ஒற்றையாட்சி அரசு' மற்றும் "ஒன்று பட்ட அரசு' என்ற கருத்தீடுகள் தொடர்பாக தர்க்கங்களும் விவாதங்களும் இடம்பெற்றுவரும் தருணத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் அரசியல் அம…
-
- 0 replies
- 341 views
-
-
'ஒவ்வொரு இராணுவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள் அமைக்கப்பட உள்ளது: தனியார் காணிகளையும் புடுங்கி எடுப்போம்' 19 ஜூலை 2013 ஒவ்வொரு இராணவப் படையணிக்கும் தனித் தனியான முகாம்கள அமைக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல வகதிகளுடன் கூடிய இராணுவ முகாம்கள் இராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தனித் தனி முகாம்களை அமைப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வருடாந்த அடிப்படையில் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முகாம்களை அமைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் கப்பல்களில…
-
- 4 replies
- 393 views
-
-
ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து தனது மகள் காணாமல் போயுள்ளதாக இலுப்பைக்கடவையினைச் சேர்ந்த பூலபாலசிங்கம் ரஞ்சிதமலர் என்ற தாய் நேற்று (9) சனிக்கிழமை, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில், 'எனது மகளான பூலபாலசிங்கம் நிரஞ்சினிக்கு அப்போது 18 வயதாகும். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த போது கடந்த 19-03௨009 அன்று ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணாமல் போனார். தற்போது எனது மகள் எங்கே இருக்கின்றாள் என்ற விடயம் எனக்க…
-
- 1 reply
- 494 views
-
-
'ஓரினச்சேர்க்கை ஒத்துவராது: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு மனித உரிமைகள் தொடர்பிலான செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகள் பலவற்றுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்; தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களில் பலர் இந்த யோசனைக்கு, தங்களுடைய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது. வெளிவிவகார அமைச்சினாலேயே இந்த யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டி…
-
- 0 replies
- 698 views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீடொன்றிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தை உட்பட தாயும் தந்தையும் சடலமாக பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளனர். நேற்று சடலங்களை கிராண்ட்பாஸ், ஆமர்வீதி பொலிஸாரினால் கண்டறியப்பட்ட போதும் சடலங்கள் மீதான நீதிவானின் விசாரணை நேற்று இடம்பெறாமையால் சடலங்கள் இன்று முற்பகலே மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்கள் இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தந்தையான சிவலிங்கம் ஸ்ரீகாந்தன், மனைவியான 24 வயதுடைய கோகிலவாணி மற…
-
- 0 replies
- 546 views
-
-
'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' பெயர் பலகையில் திடீர் பெயர் மாற்றம் ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 11:09 -மொஹொமட் ஆஸிக் 'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' என்ற பெயரிடப்பட்ட பெயர் பலகையில் இனந்தெரியாத நபர்களினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிஞர், சித்தி லெப்பையின் பெயர் சூட்டப்பட்டிருந்த இப் பெயர் பலகையின் மேல், பச்சை நிறத்திலான வர்ணம் பூசப்பட்டு அதன் மேல் 'வித்தியார்த்த மாவத்தை' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58616-2013-02-10-05-55-12.html
-
- 3 replies
- 611 views
-
-
அணுமின் சக்தி அதிகாரசபை நாடாளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் தரைப்பரப்பில் ஏதாவது கதிர்வீச்சு காணப்படுகின்றதா? என்பது தொடர்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூடங்குளம் அணுசக்தி நிலையத்திலிருந்து கசிவு ஏற்படுமாயின் அதை கண்டுப்பிடிக்க ஏதுவாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது என்று அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார். தகவல்களை அறிந்துக்கொள்ள இது ஒரு முன்னேற்பாடான செயல் ஏனெனில் கூடங்குளம் அணுமின்சக்தி நிலையத்திலிருந்து கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்திகளின் படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/64612-2013-04-21-12-26-41.h…
-
- 0 replies
- 414 views
-
-
'கத்தி'யை பிரச்சினையில் இருந்து மீட்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது உள்ளிட்ட முயற்சிகளில் நடிகர் விஜய் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதேவேளையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வி.ஐ.பி.-க்கள் பலரும் தயக்கம் காட்டி மறுத்துள்ளனர். விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படம் ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்கள். தற்போது, சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் ச…
-
- 0 replies
- 722 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கான எதிர்ப்பு தொடர்பாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: " 'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. லைக்கா நிறுவனத்தை எதிர்க்கிறார்களா அல்லது படத்தை எதிர்க்கிறார்களா? டெரரிஸ்ட், மல்லி, இனம் ஆகிய மூன்று படங்களை எடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். மூன்றையும் நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச் சிறந்த இயக்குநரோடு ஒளிப்பதிவாளராக பணியாற்றி கொண்டே இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த படங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. சந்தோஷ் சிவன் என்ற ஒளிப்பதிவு கலைஞனோடு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவரது…
-
- 3 replies
- 665 views
-
-
'கனவு மெய்ப்பட்ட கொசொவோ!" 'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது." கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் (வுர்யுஊஐ) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:- 'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாற…
-
- 2 replies
- 1.5k views
-
-
வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க…
-
- 1 reply
- 562 views
-
-
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினால் திரட்டி தமது உறவுகளுக்காக அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் பாவனைக்கு உகந்தவையா என்பதை சிறிலங்கா தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒரு மாதத்தின் பின்னர் சோதனையிடவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 551 views
-
-
வன்னியில் துன்பப்படும் தமது உறவுகளுக்காக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் திரட்டி 'கப்டன் அலி' கப்பல் மூலம் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை துறைமுகத்தைவிட்டு வெளியே எடுத்துச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுத்தப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
புலம்பெயர் தமிழர்களால் திரட்டப்பட்டு இலங்கையில் அல்லல்படும் தமது உறவுகளுக்காக "கப்டன் அலி” கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் பல மாதங்களின் பின்னர் ஒருவாறு துறைமுகத்தைவிட்டு நகர்த்தப்பட உள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை அப் பொருட்கள் வெளியே எடுக்கப்படும் என சிறிலங்கா செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. "கப்டன் அலி” பொருட்களை முதலில் ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பியது. இந்தியாவின் தலையீட்டை அடுத்து அப்பொருட்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அப்பொருட்களை துறைமுகத்தைவிட்டு வெளியே எடுப்பதற்கு அதிகாரிகள் தொடர்ச்சியான முட்டுக்கட்டைகளை இட்டு வந்தனர். இதனால் சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொருட்களை எடுத்து விநியோகிக்க முடியவில்லை. பொருட…
-
- 0 replies
- 281 views
-
-
'கமிசன்' கேட்டால் தக்க பாடம் புகட்டுங்கள் - ஆயிரம் ரூபா உறுதி என தொண்டமான் மீண்டும் அறிவிப்பு! "மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் தனி வீட்டுத் திட்டத்துக்கு பயனாளிகள் பணம் வழங்க வேண்டியதில்லை. எனவே, யாராவது தரகு பணம் கேட்டு வந்தால் தக்க பாடம் புகட்டுங்கள்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக பதுளை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நிகழ்வு இன்று (28) சமூக வலுவூட்டல்…
-
- 1 reply
- 319 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு ஒரு இராணுவ அமைப்பாகவே செயற்படுகின்றதே தவிர அரசியல் கட்சியாக அல்ல" என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: "தற்போது எம்மால் அவதானிக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எமது அமைப்புக்களால் போதுமான உதவிகளை செய்ய முடியவில்லை என்பது வருந்தக்தக்கது. ஆனால் மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் இந்த நடவடிக்கைகள் எம்மை பல விடயங்களை செய்ய தூண்டியுள்ளன. தற்போது நாட்டில் இடம்பெயர்ந்…
-
- 0 replies
- 794 views
-
-
'கருணா குழுவின் அராஜகங்களை சிறிலங்கா அரசு விசாரிக்கவோ- நிறுத்தவோ முயற்சிக்கவில்லை': மனித உரிமைகள் காப்பகம் சாடல் [வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 18:05 ஈழம்] [க.திருக்குமார்] "சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரின் சிறார் படைச் சேர்ப்பையும், கடத்தல்களையும் விசாரணைகள் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதும், அரசாங்கத் தரப்பு செயற்திறனுள்ள நடவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என்பதுடன் கருணா குழுவினரின் கடத்தல்களும் தொடர்கின்றன." மேற்கண்டவாறு இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சிறார்களை படையில் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 637 views
-
-
'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருண…
-
- 9 replies
- 2.1k views
-
-
சென்னை: முதல்வர் கருணாநிதி யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்க…
-
- 12 replies
- 1.8k views
-
-
பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதில் 7500 இலட்சம் ரூபாய் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. என்று தேசிய சங்க சபையின் நிதிச்செயலாளர் தின்னியாவல பாலித தேரர் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பால் கறக்காது. ஏனென்றால் அந்த மாடுகள் சினை மாடுகளாகவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதிலும் பல மாடுகள் நோய்வாய்பட்டுள்ளன. நாட்டில் இருந்த மாடுகளை கொன்…
-
- 3 replies
- 712 views
-
-
01 JUL, 2023 | 07:00 PM கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுயநல சந்தர்ப்பவாதிகளின் கூக்குரல் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சனிக்கிழமை (01.07.2023) நடைபெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "வடக்கு மாகாணத்திலே எமது மக்களின் வாழ்வாதாரங்கள் கருதி, ஏ…
-
- 3 replies
- 322 views
- 1 follower
-
-
'கலப்பு நீதிமன்ற' பரிந்துரையை கூட்டமைப்பு வரவேற்கிறது போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கையளித்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 240 views
-
-
Published By: VISHNU 21 MAY, 2024 | 11:55 PM இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard), நினைவேந்தல் த…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான இந்த பரீட்சையில் 37000க்கும் அதிகமானோர் பரீட்சை எழுதியதாகவும், அதில் 410 பேர் தேறியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை புறக்கணித்துவிட்டு, பரீட்சையில் தோற்றாத அரசியல் செல்வாக்குப் பெற்ற 60…
-
- 0 replies
- 412 views
-