ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
இலங்கை விவகாரம்-ஒபாமா அவசர ஆலோசனை இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாக ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மி…
-
- 2 replies
- 2k views
-
-
புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர் இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். தமிழில் எழுதப்பட…
-
- 2 replies
- 2k views
-
-
முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேறெந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் குடியமர்த்தப்படாத நிலையில், வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றம் தொடர்பில் சிங்கள அரசும் படைகளும் கூடிய கவனம் செலுத்தியமை குறித்து நம்பமுடியாத தகவல்கள் இலங்கைப் படையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவந்துள்ளதாவது:- அப்பகுதிக்கு மீளக்குடியமரச் சென்ற மக்களது ஓலைகளால் ஆன வீடுகள் அனைத்தும் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடுகள…
-
- 14 replies
- 2k views
-
-
புத்தளம் கற்பிட்டி பகுதியில் விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானம் ஒன்று இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டதாக பரவிய தகவலினால், கற்பிட்டிப் பகுதியில் பதற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் கற்பிட்டிப் பகுதியில் தரையிறங்கியதாகவே தகவல்கள் பரவியிருந்தன. இதனையடுத்து கடற்படையினரும் கற்பிட்டிக் காவற்துறையினரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்ட போதிலும் எதனையும் கண்டறியவில்லை. கொழும்பில் அண்மையில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் விமானம் கற்பிட்டிக் குடாவுக்கு மேலாக பறந்து சென்றதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 2k views
-
-
சர்வதேசத்தின் திட்டத்தினை இலகுவாக அடைய தமிழர்கள் உதவப்போகின்றார்களா? பல புத்தி ஜீவிகள், அரசியல் நுண்ணாய்வாளர்கள், வெளி நாட்டில் காகித வடிவில் தீர்வு காண முயற்சிப்போர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்றம் என்ற பசப்பு வார்த்தையினை தமிழ் மக்களிடையே கூறி சரத் பொன்சேகாவை வெல்லப்பண்ண வேண்டும் என்பதில் ஒற்றைக்காலில் நிற்கின்றனர். இவர்களின் இந்த திட்டத்தின் மூலம் அதாவது சரத் பொன்சேகாவை வெற்றி பெற செய்வதன் மூலம் கணிசமான தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்படும் என மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் இது நடக்க போவதில்லை என்பது வரலாறு ஏனெனில் பிரச்சினை சரத்பொன்சேகாவோ அல்லது மஹிந்தவோ அல்ல பிரச்சினை வரலாற்று ரீதியான தேசிய இனங்களுக்கு இடையேயான பிரச்சினை. எந்த சிங்கள தலைவர்கள் …
-
- 35 replies
- 2k views
-
-
சிகிரியா குகை ஓவியங்கள் வண்டுகளினால் பாதிப்பு ஒரு வகை வண்டுகளினால் உலகப் புகழ் பெற்ற சிறிலங்காவின் சிகிரியா குகை ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகிரியா குகை ஓவியங்களை வண்டுகள் நெருங்க முடியாதபடி அவை வலைகளினால் தடுக்கப்பட்டு்ள்ளன. இந்த வண்டுகள் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள சுவர்களில் மண்ணை குடைந்து வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கி்ன்றது. இந்த குகை ஓவியங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவர் ஓவியங்கள் அமைந்துள்ள 5 இடங்களில் இந்த வண்டுகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15603
-
- 1 reply
- 2k views
-
-
வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்ள இணக்கம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாத அமைச்சர்களை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/6879.html
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
.......சிங்களதீவின் தங்கவாள்....... http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...3186#NewsViewBM
-
- 1 reply
- 2k views
-
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த ச கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளத…
-
- 31 replies
- 2k views
- 1 follower
-
-
இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்! February 8, 2019 “புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” இப்படி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பரபான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். ‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துப்ப…
-
- 34 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து வடபகுதியை இவ்வருட இறுதிக்குள் முற்றாக விடுவித்து கைப்பற்றுவோம் என இலங்கையின் அரசியல் தலைவர்ர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், கள யாதார்த்தங்கள் இதற்கேற்றால் போல அமைந்திருக்கவில்லையென தெரிவிக்கும் இராணுவ ஆய்வாளர்கள், இரு தரப்புகளில் ஒன்று வெற்றி பெறுவதற்குப் பதிலாக இந்தப் படைப்பலப் பரீட்சை இறுதியில் இராணுவ முட்டுக்கடைடை நிலையையே எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளது. 'இராணுவ முட்டுக்கட்டையை நோக்கி இலங்கை நகருகின்றதோ...!' என்ற தலைப்பில் இந்தோ - ஆசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாதப் பிரச்சினையை தமக்குப் பின்னர் புதிய இராணுவ தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டார் என இர…
-
- 2 replies
- 2k views
-
-
வன்னி இராணுவ ஆளுகைக்குள் இருகின்றது இராணுவ மயமாக்கப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு செய்திகள் கிடைத்து வருகின்றன. அண்மையில் பூநகரியில் நடந்த மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்று வந்த பூமுகன் அங்கு இராணுவத்தினர் மக்களை நெருங்கி செய்யும் பணிகள் குறித்தும் அந்த சூழலில் உள்ள அதன் பாதிப்பு குறித்தும் பூநகரியில் ஒரு நாள் என உதயன் நாளிதளில் இந்தப் பதிவை எழுதியுள்ளார். இராணுவ மயமாக்கும் எண்ணங்களை அந்த மக்களின் மனங்களிலிருந்து எடுத்துக் காட்டும் இந்த பதிவு. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவத்தினர் ஓய்வு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது அரசுக்கு பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்திருக்கின்றது. தற்போது கள…
-
- 13 replies
- 2k views
-
-
இலங்கையில் போர் மும்முரமாக நடந்து தமிழர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு செய்தி தமிழ்நாட்டில் இருந்து வந்தது: இலங்கையில் போர்நிறுத்தம் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதி நடத்திய திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு உற்சாகமாகப் பேசினார். நேற்றிரவெல்லாம் கண் விழித்து, இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டில்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன். பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் கூறினர். ‘நல்லதே நடக்கும்’ எ…
-
- 4 replies
- 2k views
-
-
Posted on : 2008-06-12 அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா? கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம். இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இர…
-
- 10 replies
- 2k views
-
-
சஙகதியை பாருங்கோ... http://sankathi.org/news/index.php?option=...35&Itemid=1
-
- 8 replies
- 2k views
-
-
தமிழ்த் திரைப்பட உலகில் விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்களின் பணம் கோடிகோடியாகப் புரள்கிறது. ஆனால், அதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்!' இப்படி பொசுக்கென்று பற்றிக்கொள்ளும் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். அவரைச் சந்தித்தோம். ``விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நன்கொடை என்ற பெயரில் சிலரை மிரட்டியும், சிலரிடம் அன்பொழுகப் பேசியும் வசூல் வேட்டை நடத்தறாங்க. இதுவரை அவர்கள் வசூலித்திருக்கும் பணம்... 400 கோடி ரூபாய். 2002ஆம் ஆண்டிற்குப்பிறகு அந்தப் பணத்தை தமிழ்த் திரைப்படங்களை விநியோகிக்கவும், தயாரிக்கவும் அவர்கள் பயன்படுத்தி வருவதுதான் அதிர்ச்…
-
- 0 replies
- 2k views
-
-
அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு முறாவோடை மாணவர்கள் மற்றும் சிங்கள தமிழ் மக்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிங்கள – தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு – முறாவோடை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான மைதானத்தை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாத்தாக கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். மட்டகளப்பு பிள்ளையாரடி …
-
- 21 replies
- 2k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி [ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 04:06.18 PM GMT ] இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன் அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார். நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் எ…
-
- 26 replies
- 2k views
-
-
புலிகளுக்கு உதவுகிறார்களா? வீரப்பன் கூட்டாளிகள் கண்காணிப்பில் 1/27/2008 5:38:10 PM வீரகேசரி நாளேடு - கோவை, விடுதலைப்புலிகளக்கு உதவும் குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளாக செயல்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறை பொலிஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அண்மைக்காலங்களில் தமிழகத்தில் பலரை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.அகதிகள் முகாமிலும் சந்தேகத்திற்குரிய இடங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டள்ளது. இந்நிலையில் விடதலைப்புலிகளை ஆதரித்து வரும் அரசியல் கட்சிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சில அபைப்புக்கள் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கியுள்ளன. சந்…
-
- 0 replies
- 2k views
-
-
மாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் ( ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர். அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர். இதன…
-
- 12 replies
- 2k views
-
-
இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சுய நலன்களுக்…
-
- 15 replies
- 2k views
-
-
சனி 07-04-2007 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம் - கத்தோலிக் குருமார் அச்சம் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர். இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட ந…
-
- 7 replies
- 2k views
-
-
இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் வென்ற ஈழத்தமிழர் - பிரஷாந் செல்லத்துரை அவுஸ்த்திரேலிய வாழ் ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை அவர்கள் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடந்துவரும் 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை நேற்று மாலை வென்றார். இரு தினங்களுக்கு முன்னர் குழுநிலைப் போட்டி ஒன்றில், பிரஷாந்த அவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் அவுஸ்த்திரேலிய ஜிம்னாஸ்ட்டிக் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. அதேபோல தனிநபர் போட்டியொன்றில் பிரஷாந் நேற்றும் மிகவும் சிறப்பாக செயலாற்றி இன்னொரு தங்கப்பதக்கத்தை தனது நாடான அவுஸ்த்திரேலியாவுக்கு பெற்றுக்கொடுத்தார். அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் தலைகாட்டும் சிங்கள நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள வீர…
-
- 20 replies
- 2k views
-
-
கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன் [வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 06:30 மு.ப ஈழம்] [ப.தயாளினி] கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை நிலவரம் குறித்து நேரில் ஆராய இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு செல்கின்றார் என இந்திய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2k views
-