ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களை பார்வையிட்டதுடன் மரமொன்றில் ஏறி பேரீச்சம் பழங்களையும் பறித்துள்ளார். இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கிலும் இது போன்ற பேரீச்சம் பழங்களை தனது அமைச்சினால் நடுவதற்கு ஆலோசனைகளை வழங்குமாறு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கேட்டுக்கொண்டார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே பேரீச்ச மரங்கள் கடந்த மூன்ற…
-
- 8 replies
- 751 views
-
-
கிளிநொச்சியில் கர்ப்பவதிகளே அவதானம்!வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவதுறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 வரையான காலப்பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதி ப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 227 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. புத்தகாயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்த ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளதாகவும் காயமடைந்த பிக்குமாரை பார்வையிடுவார் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்திப்பார் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்கு சென்று திரும்பிய பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதுடில்லிக்கு பயணம் செய்யவார் என்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93819/language/ta-IN/article.asp…
-
- 3 replies
- 742 views
-
-
புதிய எச்சரிக்கை பெயர் பலகை -சண்முகம் தவசீலன் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும் வீதியின் மறுமுனையில் பிரதான வீதியில் மறித்து அமைக்கப்பட்டுள்ள காவலரண் முன்பாகவும் புதிய எச்சரிக்கை பெயர் பலகை ஒன்று இடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 284 views
-
-
இந்தியாவிடம் நாட்டை ஒப்படைக்க சில ஒப்பந்தக்காரர்கள் முயற்சித்து வருவதாகவும் இதற்கு தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22374
-
- 0 replies
- 432 views
-
-
கடந்த சில வாரங்களாக சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் சில பத்திரிகைகளும் பல ஊடகவியலாளர்களுக்கும் புலிகளுக்குமான தொடர்பு பற்றி சாடை மாடையாக தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஊடகவியலாளர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் செயற்பட்டார்கள் என்றும் கூற இந்த ஊடகங்கள் தயங்கவில்லை. அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கெதிராக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களே இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டனர். தொலைக்காட்சி நிறுவனங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைக்கும் போது ஊடகவியலாளர்களின் கண்டனக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ நாடாக்களையே ஓளிபரப்பின. அதன் போது ஒளிபரப்பப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்களால் அந்த ஊடக…
-
- 0 replies
- 669 views
-
-
கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளார் – மங்கள சமரவீர மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கமல் குணரட்னவின் நந்திக்கடல் வழியாக என்னும் நூலின் ஊடாக படையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கடும்போக்காளர்கள் படையினர் பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விடயங்களே இந்த நூலில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமே இந்த நூலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். படையினர் குற்றம் இழைக்கவில்லை என நாம் உலகம் முழுவதி…
-
- 1 reply
- 455 views
-
-
ஜனாதிபதியின்... முக்கிய கோரிக்கையினை, நிராகரித்தார் சட்டமா அதிபர்! கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு, ஜனாதிபதி முன்வைத்த யோசனையை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்ததாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துளார். அத்துடன், ஜனாதிபதியின் யோசனைக்கு சட்டமா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1214257
-
- 10 replies
- 1.1k views
-
-
தடுப்புமுகாம்களில் அவுஸ்திரெலியாத் தமிழர்கள் Search goes on for Aussies in Sri Lanka Australia is continuing the search for three NSW residents thought to be in refugee camps in northern Sri Lanka, where Tamils are being kept following the end of the civil war. Human rights groups have labelled the camps a disgrace, urging Sri Lanka to free the 300,000 displaced people being held there. Foreign Minister Stephen Smith put Sri Lanka on notice that it would be judged according to how it dealt with those in the camps. "We think the Sri Lankan government and the Sri Lankan authorities will now be judged on two things - how they manage and deal with th…
-
- 2 replies
- 931 views
-
-
ஹம்பாந்தோட்டை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது – ஜே.வி.பி. 22 ஜூலை 2013 "கப்பல்கள் இல்லாத துறைமுகம், கிரிக்கட் விளையாடாத சர்வதேச மைதானம், விமானங்கள் தரையிறங்காத விமான நிலையங்கள்" பிழையான காரணங்களுக்காக ஹம்பாந்தோட்டை வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். கப்பல்கள் இல்லாத துறைமுகம், கிரிக்கட் விளையாடாத சர்வதேச மைதானம், விமானங்கள் தரையிறங்காத விமான நிலையங்கள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை ஹம்பாந்தோட்டை படைத்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுமக்கள் பணத்தைக் கொண்டு இந்த விடயங்கள் செய்யப்படாமிலிருந்தால் அதனைப் பற்றி கருத்திற்கொள்ள வேண்டியதில்லை என்ற போதிலும் இவை அனைத்துமே மக்களின் பணத்தினால் உருவாக்;கப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் உயர்ஸ்தானிகராலயம் அமைக்க நியூஸிலாந்து முடிவு Tweet இலங்கைக்கான நியூஸிலாந்துக்கான உயர்ஸ்தானிகராலயத்தை கொழும்பில் திறக்கவுள்ளதாகவும், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் நியூஸிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் முரே மெக்கலி கூறினார். “உள்நாட்டுப் போரால் ஒரு தலைமுறை இடைவெளியின் பின் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிக்கு அரசியல் ரீதியாகவும் விரிவாக்கப்பட்ட பொருளாதார ரீதியாகவும் உதவ நியூஸிலாந்து விரும்புகிறது. பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பாற்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இ…
-
- 0 replies
- 199 views
-
-
மக்களை கொரோனாவில் இருந்து காப்பதற்கு இரவு பகலாக உழைக்கும் வவுனியா இளைஞர்கள் 67 Views கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வவுனியா மாவட்டத்திலும் கொரோனா வைத்தியசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களை இளைஞர்கள் முன்வந்து வடிவமைத்து வருகின்றனர். வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதனுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், இரவு பகலாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்து…
-
- 0 replies
- 328 views
-
-
ஹெயிட்டிக்கு மற்றொரு தொகுதி சிறீலங்கா படையினர் பயணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் நேட்டோ படைகளுடன் இணைந்து அங்கு கடமையிலுள்ள கஜபா படைப் பிரிவுக்குப் பதிலாகவே இந்த அணியினர் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 52 அதிகாரிகளும், 697 ஏனைய தரத்திலுள்ள படையினரும் ஹெயிட்டிக்குச் செல்ல இருப்பதாக அறிவிக்கபட்டுள்ளது. ஹெயிட்டியில் பணியாற்றிய சிறீலங்கா படையினரில் 130 பேர் வரையில் அங்குள்ள சிறுமிகள், மற்றும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஐ.நாவின் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி பதிவு .
-
- 7 replies
- 971 views
-
-
n6யாழ்ப்பாணம் பருத்திதுறையையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையென்று கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டேசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன்பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர். இந்நிலையில் இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் காலத்தில் பருத்திதுறைப் பகுதியில் இவ்வாறான சுரங்கப்பாதையென்று உள்ளதென்று பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள…
-
- 0 replies
- 481 views
-
-
கொரோனா தடுப்பு மருந்து – தமிழர் தாயகப் பகுதிகள் அரசாங்கத்தால் புறக்கணிப்பு 7 Views இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் தடுப்பு மருந்துகள் வழங்கல் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,242 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,133ஆக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான எந்த…
-
- 0 replies
- 421 views
-
-
வன்னியில் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்காக படையினருக்கு மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது என அறிவித்திருக்கும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, இதற்கு தேவையான படையினரைச் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் அடுத்த பணியாக இருக்கும். இதன் முதற்கட்டமாக பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவி…
-
- 0 replies
- 410 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுமாறும், இதுவரை மீள்குடியேறாத மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புணானை பகுதியில் ஸ்தாபிக்கப்படும் இராணுவ முகாமை தடுத்து அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற உதவுமாறும் கேட்டுக் கொண்டேன். கிரான் பிரதேசத்தின் புணானை…
-
- 0 replies
- 452 views
-
-
நான் அமைச்சரல்ல; போராளி காரைதீவில் பட்டதாரிகளிடம் அமைச்சர் மனோ கணேசன் (காரைதீவு நிருபர்) நான் வெறுமனே வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போகவரவில்லை. சுற்றுலாவந்துபோகவும் வரவில்லை. நான்மனோகணேசன்நான்அமைச்சரல்ல. ஒருபோராளி. அமைச்சரவையிலும்சரிபாராளுமன்றத்திலும்சரிபோராடித்தான்காரியம்சாதிப்பேன். எனவே உங்களதுபிரச்சினைகளையும் உரியநேரத்தில் உரியவர்களுடன்பேசிதொழில்பெற்றுத்தருவேன் என்று தேசியசகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்வாறுகாரைதீவில் 36வதுநா…
-
- 14 replies
- 1k views
-
-
பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து அரோகரா கோஷம் எழுப்ப நயினை நாகபூஷணி அம்பாள் தேர் ஏறி வீதிவலம் வந்து அடியார் களுக்கு அருள் காட்சி வழங்கினார். நேற்றுமுன்தினம் மாலைமுதல் நேற்றுக் காலை வரை அலை அலை யாகச் சென்றடைந்த பக்தர்கள் பக்திபூர்வமாக தேர் உற்சவத்தில் பங்குபற் றினர். காவடிகள் எடுத்தும் பிரதிட்டை செய்தும் அடிஅழித்தும் தமது நேர்த்திகளை அவர்கள் பூர்த்தி செய்தனர். நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற பூøசகளை அடுத்து 8.30 மணிக்கு வசந்த மண்டப பூøச நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.30 மணியளவில் அம்பாள் விநாயகர், முருகன் சகிதம் தனித்தனியான தேர்களில் வீதிவலம் வந்து காட்சி கொடுத்தனர். நேற்றைய தேர்த்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்…
-
- 24 replies
- 2.8k views
-
-
இன்னுமொரு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆயத்தப்ப பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மலையக மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணமும் தேர்தல் திருவிழாவை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந் நிலையிலேயே மாகாண சபைகளின் கடந்தகால செயற்பாடுகள் பற்றிய அவதானத்தை செலுத்த வேண்டியுள்ளது. அடிப்படையில் மாகாண சபைகளின் உருவாக்கமானது இனங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை. மாறாக பிரதேச அடிப்படையிலேயே அமைக்கப்படடது. ஆங்கிலேயர் உருவாக்கிய மாகாணங்களில் எல்லைகளே மாகாண சபைகளின் நில எல்லைகளாக கொள்ளப்பட்டது. இதனால் எந்த மாகாணத்திலும் மலையக மக்கள் செறிவாக இல்லை. அவர்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சிதறி வாழ்கின்றனர். அரசியல் யாப்பின்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான இருப்பு கிடையாது. மத்திய அரச…
-
- 0 replies
- 635 views
-
-
வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு பேரணி! [Friday 2017-04-14 17:00] புதுவருட தினமான இன்று வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, ஹொரவபொத்தானை வீதி வழியாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்துள்ளது. உறவுகளின் போராட்டத்திற்கு பதில் என்ன? சம்பந்தன் ஐயாவே பதில் சொல்லு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=180406&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 256 views
-
-
இலங்கையானது பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள நிலையில் தேர்தலுக்கு தற்போதே தயாராகும் பணியில் எதிர்க்கட்சிகள் குதித்துள்ளன. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த தேர்தல்களில் தோல்வி மேல் தோல்வியை தழுவிய நிலையில் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடிய போதே எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுகளை முன் னெடுப்பதற்கு கட்சியின் 5 எம்.பி. க்களை கொண்ட சிறப்புக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இனநெருக்கடி, பொ…
-
- 0 replies
- 490 views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவலுக்கு http://tamilworldtoday.com/?p=27345
-
- 1 reply
- 476 views
-
-
(எம்.மனோசித்ரா) கொழும்பு, மாதிவெல பிரதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மாதிரியொன்று அசாதாரணமான தன்மையுடையதாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மாதிரி மரபணு பரிசோதனைக்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அசாதாரண தன்மையுடையதாக இனங்காணப்பட்டுள்ள இந்த மாதிரியில் டெல்டா வைரஸ் இனங்காணப்படலாம். அல்லது வேறொரு நிலைமாறிய வைரஸ் இனங்காணப்படலாம். எதிர்பாராத விதமாக புதியதொரு வைரஸாக இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மாதிரிகள் இனங்காணப்படும் பகுதிகள் தொடர்பில் மி…
-
- 0 replies
- 234 views
-
-
சரத் பொன்சேகாவினால் சிறைவைக்கப்பட்ட ராணுவச் சிப்பாய்கள் ராஜபக்சேவால் விடுவிப்பு விடுதலைப் புலிகளுக்கெதிரான ,இறுதிக் கட்ட போரின் போது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் சிறைவைக்கப்பட்ட சிப்பாய்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், ராணுவத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான சிப்பாய்கள் தப்பிச் செல்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இவ்வாறு ராணுவத்திலிருந்து தப்பிச் செல்வோரின் எண்ணிக்கையைத் தடுப்பதற்கு அந்நாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுக்கமான ராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தார். அதற்கமைய ,ராணுவத்திலிருந்த…
-
- 0 replies
- 698 views
-