ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வன்னியில் வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையின் 26.02.09 அன்றைய பதிப்பு http://www.yarl.com/download/26-02-2009EELANAATHAM_PAPER.pdf
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
அண்மைக் காலமாக மது அருந்துவிட்டு வாகனங்கள் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனால், மது அருந்துவிட்டு வாகனங்களைச் செலுத்தும் பெண் வாகனச் சாரதிகளைச் சோதிப்பதற்கென வீதிக் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஆண் பொலிஸாருடன் பெண் பொலிஸாரையும் கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார். பெண் சாரதிகள் மது அருந்துவிட்டு வாகனம் செலுத்துவது தொடர்பாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெண் பொலிஸார் கடமையில் இல்லாததால் சுவாசப் பரிசோதனை செய்யவதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்வதாகத் தெரிவித்தார். மது அருந்துவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்துக…
-
- 7 replies
- 1.9k views
-
-
போரை நிறுத்த முடியாது என்பதா?- தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: மகிந்தவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 09:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசிய பிறகு "போர் நிறுத்தம் செய்ய முடியாது" என சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. இனவெறியும் போர் வெறியும் பிடித்து ஆட்டும் சூழ்நிலையில் அவர் இன்னொரு ஹிட்லராக உருவாகிக்கொண…
-
- 7 replies
- 1.9k views
-
-
வடக்கே வெடிக்கப் போகும் யுத்தம்! -விதுரன் - விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை. அவர்களைத் தோற்கடித்த பின்பே பேச்சுகள் சாத்தியமென அரசு கூறுவதன் மூலம் வடக்கே பாரிய படை நடவடிக்கை மூலம் பலமானதொரு நிலையிலேயே பேச்சுக்குச் செல்ல அரசு முனைகிறது. இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சமாதானமென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக புலிகள் எச்சரித்திருப்பதன் மூலம் இனியெப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேச்சுகளுக்குச் செல்லப் போவதில்லையென்பதை புலிகளும் உணர்த்தியுள்ளனர். வடக்கில் நடைபெறப்போவதாக எதிர்பார்க்கப்படும் போர் இனிமேல் வடக்குடன் மட்டும் நின்றுவிடமாட்டாது…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்த…
-
- 5 replies
- 1.9k views
-
-
எதிர்வரும் 9ம் திகதி முக்கிய கிரக மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், இதனால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து தென் இலங்கை அரசியல் வாதிகள் பாரியளவில் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இந்தக் கூட்டம் மிகவும் தீர்க்கமானதும், முக்கிய நிகழ்வாகவும் இருக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதிட கணிப்புக்களின் படி பாரிய சோதனைகளுக்கு உட்படுத்தும் சனி பகவான் எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை 12.01க்கு சிம்ம இராசியிலிருந்து கன்னி இராசிக்கு இடம்பெயர்கின்றார். இதனால் கிரகப் பெயர்ச்சி குறித்து நம்பிக்கைக் கொண்டுள்ள பலர் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகிறது. ஏனைய துறையில் இந்த …
-
- 0 replies
- 1.9k views
-
-
Posted on : Sat May 26 8:34:51 EEST 2007 பலாலி ராணுவத் தளம் மீது பாரிய தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம் பிரிகேடியர் முனசிங்கவின் கணிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் பலாலி இராணுவத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பலாலி தளத்தைத் தாக்குவது விடுதலைப் புலிகளின் இராணுவ வியூகத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கும். பொல்காவளை ஐ.தே.க.அமைப்பாளரும் முன்னாள் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் சரத் முனசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு பெரும் எடுப்பில் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு வருகிறார்கள். நெடுந்தீவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இந்த வகையில் முதல் கட்டமென்றே கொள…
-
- 3 replies
- 1.9k views
-
-
தேர்தல் அமளியில் நாடு – மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி மரணம் : குளோபல் தமிழ் செய்தியாளர் நாடு தேர்தல் அமளியில் காணப்படுகின்ற நிலையில் வன்னியில் விசுவமடுவில் முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வனின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், போராட்டத்தின்போது தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளிலும் கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று 8ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டுக்காக போராட்டத்தில் இண…
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
திங்கட்கிழமை, 2, மே 2011 (16:15 IST) தமிழர்களை கட்டாயப்படுத்தி போராட்டம்: ராஜபட்சேவுக்கு நெடுமாறன் கண்டனம் ஐநா அறிக்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ராஜபட்சேவின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும…
-
- 2 replies
- 1.9k views
-
-
தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் தென் ஆசியாவின் பெரும் சமர்க்களமாக இலங்கை மாறியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான இராணுவத்தின் பேரழிவு ஒன்று குறுகிய காலத்தில் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிகழப்போகின்றதோ என அனைத்துலகம் அங்கலாய்த்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் ஓய்வுக்கு வந்தது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தவும் படை நடவடிக்கைகளை நிறுத்தவும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சம்மதித்தது. போரும் சமாதானமும் ஒருங்கே பயணிக்க முடியாது என்ற தத்துவமும், போரின் மூலம் சமாதானத்தை எட்டுதல் என்ற ஏமாற்றுத் தனங்களினதும் உண்மைத்தன்மையும் புரிய ஆரம்பித்தது. படைவலுச்…
-
- 1 reply
- 1.9k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f66c225f7883bdc
-
- 0 replies
- 1.9k views
-
-
செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள் அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
-
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐநா சிறுவர் மையத்தின் தெற்காசிய பணிப்பாளராக சந்திரிகா நியமனம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் மையத்தின் தெற்காசியப் பணிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தமது முதல் கட்ட உத்தியோகபூர்வ விஜயத்தை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானில் அவர் அவசர முகாமைத்துவம் தொடர்பில் சொற்பொழிவை நடத்தவுள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பவுள்ளார். pathivu.com/
-
- 7 replies
- 1.9k views
-
-
கடிக்கும் நாயும் குரைக்கும் நாயும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-27 11:37:56| யாழ்ப்பாணம்] உலகிலேயே மிகவும் இழிந்த பிறப்பாக நாய் கருதப்படுகிறது. நன்றியும் மோப்ப சக்தியும் காவல் கடமையும் கொண்ட நாயை கடைப்பிறப்பென்று கூறப்படுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றால் ஆம்! இதற்கு மூன்று காரணம் உண்டென்று கூறலாம். ஒன்று நாயானது எலும்பைக் கடிக்கும்போது நாயின் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும். தனது இரத்தத்தை எலும்பிலிருந்து வருகின்ற இரத்தம் எனக் கருதும் நாய் அந்த எலும்பை விடாமல் கடித்துக்கொண்டே இருக்கும். இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் நாயின் போகநிலை. உலகில் எந்த ஜீவராசிக்கும் இல்லாத துன்பத்தையும் வேதனையையும் போக சுகத்தின் பின் நாய்கள் அனுபவிக்கின்றன. அடுத்தது,…
-
- 0 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் இரசிய மறைவிடம் ஒன்றின் மீது விமானக் குண்டு வீச்சு வீரகேசரி இணையம் 4/2/2008 11:09:42 AM - கிளிநொச்சியின் விசுவமடுக்குளத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடும் இரகசிய மறைவிடம் ஒன்றின் மீது இலங்கை விமானப்படை போர் விமானங்கள் இன்று காலை குண்டுகளை வீசியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கன ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
-
- 0 replies
- 1.9k views
-
-
இச்செய்தியை யாராவது மொழிமயற்றம் செய்யமுடியுமா? இது தமிழ்நெற் ஆங்கிலத்தளத்தில் வந்துள்ளது World obliged to act when genocide occurs- Obama [TamilNet, Saturday, 06 June 2009, 00:42 GMT] "The international community has an obligation, even when it's inconvenient, to act when genocide is occurring," US President Barack Obama said Friday during a visit to Germany. He was responding to reporters asking how the Holocaust mantra of "never again" might apply to current crises in the Darfur region of Sudan or in Sri Lanka. He also said that it is up to other nations to take action to stop genocide when it occurs. Meanwhile, the UN's top human rights official, forme…
-
- 1 reply
- 1.9k views
-
-
கடந்த இரு வாரமாக பிபிசி தெற்காசியாவில் சிறீலங்கா பற்றிய செய்தியை படிக்கும் ஒருவருக்கு தெரிவது என்னவென்றால் தமிழ் புலிகள் தம்மிடம் பிடிபட்ட 26 சிறீலங்கா இராணுவத்தை சித்திரவதை சுட்டுக்கொன்று எரித்து புதைத்த புதைகுழி பற்றிய செய்திகள் தான். வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரசு ஒரு விசாரணையை அமைத்துக் கொண்டு அதற்கு பிபிசி போன்ற ஊடகங்களை அனுமதிக்க மறுத்து வருகின்ற அதேவேளை.. சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் பிபிசி தொடர்ச்சியாக இந்த இராணுவ வீரர்கள் பற்றிய செய்தியை வெளியிட்டு வருகிறது. பிபிசி உட்பட பல ஊடகங்கள் நன்கு அறியும். போரின் போது கொல்லப்பட்டு கையளிக்கப்படாத எதிரி இராணுவவீரர்களின் உடலங்கள் புலிகள் இராணுவ மரியாதையோடு எரிப்பதும் புதைப்…
-
- 2 replies
- 1.9k views
-
-
இரணைமடு குளத்தின் இன்றைய நிலை Written by editor | August 15, 2014 | Comments Off இரணைமடு குளத்தின் இன்றைய நிலை http://www.e-jaffna.com/archives/29839
-
- 9 replies
- 1.9k views
-
-
கேதீஸ் லோகநாதன் படுகொலையில் மகிந்த ராஜபக்ச? சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் படுகொலையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புடழடியட நுடநஉவசழ-நேறளநெவ என்ற ஊடகத்தில் இச்செய்தி வெளியானதாக தமிழ்கனேடியன் இணையதளம் பிரசுரித்துள்ளது. அச்செய்தி விவரம்: கேதீஸ்வரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக மகிந்தவின் உள்வட்டாரங்களான பசில் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மூதூரில் 17 அரச சார்பற்ற பணியாளர்களை சிறிலங்கா இஆணுவத்தினர் படுகொலை செய்தமை குறித்த தனது விசனத்தை இந்த உரையாடலில் கேதீஸ் லோகநாதன் வெளிப்படுத்தினார். அமைதி முயற்சிகளில்…
-
- 3 replies
- 1.9k views
-
-
இலங்கைக் கட்டமைப்புக்குள் தமிழர்களினது சட்டபூர்வமான அபிலாசைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.9k views
-
-
கொழும்பில் துப்பாக்கிச்சூடு - இரு படையினர் காயம் [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 05, 2007 - 03:51 PM - GMT ] சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தைப் பகுதியில் பொது உடையில் நின்றிருந்த சிறிலங்கா படையினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். மாளிகாவத்தைப் பகுதியில் உள்ள தருசலாம் வித்தியாலயத்திற்கு அருகே பொது உடையில் பொது உடையில் கடமையில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் அணியினர் பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதன்போது காயமடைந்த படையினர் இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசு மேலும் தெரி…
-
- 2 replies
- 1.9k views
-
-
நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு! சித்தார்த்தனிற்கான பிரச்சார விடயத்தினில் திட்டமிட்ட வகையினில் பலியாடாக்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஏற்கனவே விடுத்த ஊடக அறிக்கையினில் தான் அறிவித்ததை அனந்தி நினைவு கூர்ந்துள்ளார்.குறித்த நிகழ்விற்கு தான் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அது தேர்தல் பரப்புரை கூட்டமாக இருக்குமென தனக்கு தெரியாதென தெரிவித்த அனந்தி தான் பேசாதவற்றினை பேசியதாக சித்தார்த்தன் தரப்பே ஊடகங்களிற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றார்.யாழினில் கடந்த காலங்களினில் டக்ளஸ் எத்தகைய கொலைகளை அரங்கேற்றினாரோ அதற்கு ஈடாக சித்தார்த்தன…
-
- 40 replies
- 1.9k views
-
-
UNSG’s Chief of Staff to Sri Lanka, and Ships off the Beach? UN Secretary General Ban Ki-moon is quietly sending his chief of staff Vijay Nambiar, a former Indian Diplomat, as a special envoy to Sri Lanka. Mr Nambiar is expected to be there by tomorrow. It is learned that the Sri Lankan Government has first objected his visit but then relented due to UN pressure. Sri Lanka rejects to accept British Special Envoy Des Browne till now. UN humanitarian chief John Holmes in his yesterday's special briefing mentioned about using 'quiet diplomacy' with Sri Lanka, Is this move also a quiet diplomacy? More NEWS Courtesy:TamilNational.Com
-
- 1 reply
- 1.9k views
-
-
கொழும்பை 3 வலயங்களாக பிரித்து புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல் [05 - June - 2007] கே.பி.மோகன் கொழும்பு நகரில் நேற்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீதிகளிலும் அருகருகே கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினரும் சந்திகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள புலிகள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதாக கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே கடும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக படை அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிரஜைகள், பாதுகாப்புக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகளின் விழிப்புக் குழுக்கள், …
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரபாகரனால் முடியாததை உங்களால் செய்ய முடியுமா?சிங்களத்தின் மிரட்டல் Sunday, July 10, 2011, 18:15கட்டுரைகள் “பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களைத்திரட்டி போராடுவோம் என சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்திற்கு கிடைத்த சிங்கள அரசின் பதிலாகவே இதனைப்பார்க்க முடியும். என்றாலும் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க மஹிந்த ஒரு நாடகத்தினை மேடை ஏற்றியே ஆகவேண்டும். அதில் ஒன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு என சிறிலங்கா அரசினால் தெரி…
-
- 14 replies
- 1.9k views
-