ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் உரிய காலத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும், எனினும் மாகாண சபைகளை பதவி காலம் முடியும் முன்னர் கலைத்தும், அவை அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாமலும், தனித் தனியாக தேர்தல் நடத்துவதன் மூலம் அரசாங்கம் அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சுமத்தியுள்ளது. மேலும்.. http://www.paristamil.com/tamilnews/?p=25677
-
- 0 replies
- 535 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் பொது மக்களின் காணிகளை படையினர் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. யாழ்ப்பாணம், வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் வேகத்தில் கிழக்கிலும் படையினர் கையப்படுத்திய காணிகளை விடுவிக்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள விவசாய காணிகளை வனவள பரிபாலன திணைக்களம் கையகப்படுத்தி வருவதாக கூறிய அவர், சிங்களப் பகுதியில் ஒரு சட்டமும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் பிறிதொரு சட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரைய…
-
- 1 reply
- 251 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு (4ம் மாடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3077
-
- 0 replies
- 321 views
-
-
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானை பார்வையிட்டதாக சிறைச்சாலை தகவல்களை சுட்டிக்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி, பிள்ளையானுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கைய…
-
- 3 replies
- 370 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 20 ஆம் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொம்மையாகப் போகின்றார். அதிகாரத்தை தக்கவைக்க தொடர்ச்சியாக போராடிய ஒருவர் இறுதியாக பொம்மையாக அமர வேண்டிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக கூறி எம்மை அச்சுறுத்த நினைக்கின்றனர். ஆனால் இவற்றிக்கு நாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் …
-
- 0 replies
- 378 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் யுத்தத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரையும் பரிசுத்த பாப்பரசர் 16 வது பெனடிற் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் அவரால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் அதி தீவிரம் அடைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்திருக்கும் இந்த வேளையில் தாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இரு பகுதியினரையும் வேண்டிக் கொள்வது யாதெனில் மனித முறைமைகளை மதித்து மக்களை சுதந்திரமாக நடமாடவும் காயப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கவும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இம் …
-
- 0 replies
- 650 views
-
-
மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமை…
-
- 7 replies
- 1.6k views
-
-
முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி – பலர் பாதிப்பு கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200…
-
- 0 replies
- 645 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் கடலூர் பழைய நகரம் குழந்தை கொலனியைச் சேர்ந்த சோதி என்று அழைக்கப்படும் தமிழ்வேந்தன் (வயது 33) என்பவர் தீக்குளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 298 views
-
-
சிவிலியன்கள் படுகொலை தொடர்வது அதிர்ச்சியளிக்கின்றது மேரி ரொபின்சன் : இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் தொடர்ச்சியாக சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார். சிவிலியன் படுகொலைகளை அரசாங்கப் படையினரும் மேற்கொண்டு வருவதாக இன்னர் பிரஸ் ஊடகத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரான ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிச் சிவிலியன்கள் எதிர்நோக்கிவரும் துயரங்கள் குறித்து கேள்வி எழுப்பாவிட்டால் அது மனித உயிர்களை உதாசீனம் செய்வதற்கு நிக…
-
- 3 replies
- 882 views
-
-
20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடை…
-
- 7 replies
- 958 views
-
-
யாழ். மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ், சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்வரன் நேற்று பிறப்பித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 16ம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டதுடன், சிங்கள மாணவர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13425
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார். இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை அல்ல என்பதை பல்கலைக்கழக ஆய்வு அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததாக செயலாளர் நேற்று தெரிவித்தார். இந்த வைரஸ் வீரியத்தைக் கொண்டது. இது தீவிரமாக மற்றவர்களுக்கு பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டது. இதனால்தான் குறுகிய கால்திற்குள் பெரும் எண்ணிக்கையிலானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 237 views
-
-
எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது - ரட்ணசிறி பகலில் விழுந்த குழியில், இரவிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை அதனால் எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சபையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுகையில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கும் நாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதற்காக நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் அரசாங்கத்தை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு…
-
- 1 reply
- 828 views
-
-
www.dinamalar.com
-
- 0 replies
- 2.4k views
-
-
மட்டு. முன்னாள் மேயர் சிவகீதா உட்பட ஐவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு (மட்டு.சோபா) மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தின் ஒரு பகுதியில் பாலியல் தொழில் நடாத்தியமை மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் குறித்த நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார். …
-
- 1 reply
- 320 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.! தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகள…
-
- 2 replies
- 456 views
-
-
மரணவீட்டுக்கு வந்தவர்கள், ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பார்கள். என்றுமில்லா அக்கறையோடு அளவாவுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொள்ளாது போய்விடுவார்கள்.ஏறக்குறைய இதே நிலையில் தான் தமிழகத்தில் அரசியற் கட்சிகளின் ஈழத்து எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் இன்றிருக்கின்றன. கடந்த மாதங்களில் ' இன்று தமிழமெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக...' என்று ஏதாவது ஒரு போராட்டத்தைத் தினமும் ஒரு கட்சி நடத்திக்கொண்டிருந்தது. தினமும் மற்றக்கட்சிகளிடமிருந்து மாறுபட்டுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே புதிய புதிய வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்குரிய வடிவத்தை உட்கார்ந்து யோசிப்பாங்களோ என எண்ணும் வகையில், புதுப் புது வடிவங்களில் போராட்டங்கள் நடந்தன. …
-
- 0 replies
- 880 views
-
-
பாஜக தலைவர் எல்.கே. அத்வானியைச் சந்தித்துப் பேசினார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. புதுதில்லிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 11 மணி அளவில் அத்வானியின் இல்லத்துக்கு வந்திருந்தார். இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. http://dinamani.com/latest_news/article1527373.ece
-
- 3 replies
- 521 views
-
-
தமிழர் அரசியல் நகர்வுகளில் அரசு மௌனம் காப்பது நல்லதல்ல கடுமையாக சாடுகிறது ஹெல உறுமய : வடக்கில் சிங்கள குடியேற்றத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? (ஆர்.யசி) வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு சிங்கள குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் வடக்குக்கான நிதி ஒதுக்கீட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கான பங்கு எவ்வளவு என்றும் அரசாங்கம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கேள்வி எழுப்பியது. தமிழ் அரசியல் தலைமைகளின் நகர்வுகளுக்கு அரசாங்கம் மௌனம் காப்பது நல்லதல்ல எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று க…
-
- 0 replies
- 175 views
-
-
இலங்கையின் நீதித்துறையில் தமிழருக்கு நம்பிக்கையில்லை::சர்வதேச விசாரணை கோர அதுவே காரணம்.! "இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம். இலங்கையின்…
-
- 0 replies
- 639 views
-
-
கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம் [ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2009, 04:32.11 PM GMT +05:30 ] இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது. ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். கார…
-
- 0 replies
- 945 views
-