ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
வவுனியா மெனிக்பார்ம் முகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். கொழும்பு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் செயற்பட்டு வந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான லெப்டினட் கேர்ணல், தீபன் என்ற நாகேஷ் சுடர்தீபனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர் இடைத் தரகர்களுக்கு 6 லட்சம் ரூபா பணத்தை கொடுத்து முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகளின் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என கருதப்படும், தீபனின் மனைவியான சோபா என்பவர், புலிகளின் மருத்துவராக சேவையாற்றி வந்துள்ளார். …
-
- 7 replies
- 1.8k views
-
-
குமுதம் ரிப்போட்டர் 11.12.2008ல் திரு.சோலை 'பயங்கரவாத கோரமுகம்' என்ற தலைப்பில் மும்பாயில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை எழுதும் போது இவ்வாறு கேட்டிருக்கிறார். விடுதலைப்புலி களுக்கு வெங்காயம் போகிறதா வெடிகுண்டு போகிறதா என்பதனை இராமேஸ்வரம் கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணித்து வருகிறது. அதேபோல கராச்சியிலிருந்து மும்பை வரையுள்ள கடற்பரப்பை கடலோரக் காவல்படை கண்காணிக்கவில்லையா? விடுதலைப்புலிகளின் மையங்களை இந்திய செயற்கைக்கோள் துல்லியமாகப் படம்பிடித்துத் தருகிறது. அந்தப் படங்கள் சிங்கள ராணுவத்திற்குச் சென்று சேருகின்றன. அதே போல் அரபிக் கடல் அலை அடிக்கும் நமது கடற்கரையை செயற்கைக் கோள்கள் படம் பிடிப்பது இல்லையா? இதே குமுதம் ரிப்போட்டரில் வந்த வம்பான…
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வை முன்னிட்டு 200இல் 2000(இரண்டாயிரம்) மரங்களை நடுவோம் என்னும் செயற்றிட்ட மரநடுகை விழா இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் காலை 9 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், சிறப்பு விருந்தினராக யாழ்.கல்வி வலய தொழில்நுட்ப பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேலினி பாலேந்திரா ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் மத்திய கல்லூரியின் சிநேகிதப் பாடசாலைகளான வேம்படி மகளீர் கல்லூரி யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கல்லூரி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்க…
-
- 19 replies
- 1.8k views
-
-
"விடுதலை மூச்சு" திரைப்பட வெளியீடு இன்று கிளிநொச்சியிலும் புதுக்குடியிருப்பிலும் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.8k views
-
-
இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் ஜவெள்ளிக்கிழமைஇ 13 ஒக்ரொபர் 2006இ 14:29 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிறிலங்கா இராணுவம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையிலேயே இராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகக்கொடுரமானதாக இருந்தததாக தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த முறியடிப்புத்தாக்குதல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கம் போல் புளுகு…
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறி புதன், 03 டிசம்பர் 2008, 18:54 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] மட்டக்களப்பில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறிசிங்கள மக்களைக் குடியேற்றும் இரகசிய நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தவகல்கள் கசிந்துள்ளன. இதற்கென மட்டக்களப்பு - பதுளை வீதியியை அபிவிருத்தி செய்து, அந்தப் பகுதிகளில் மகியங்கனையிலுள்ள சிங்கள மக்களைக் குடியேற்ற இருப்பதாகக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் வாகரை போன்ற கரையோரங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி, அங்குள்ள மீன் வளங்களைச் சுரண்டும் சிறீலங்கா அரசு, இந்தக் குடியேற்றத்தின் மூலம் வேளாண்மை வளத்தையும் சுரண்ட முனைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதிவு
-
- 11 replies
- 1.8k views
-
-
அரசாங்கத்திலிருந்து விலகிய இ.தொ.க தனித்துவமாக செயற்படுவதற்கு முடிவு வீரகேசரி நாளேடு முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தனித்துவமாக இயங்குவதற்கு முடிவுசெய்துள்ளது. கொட்டகலையில் நேற்று கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. விலகியதுடன் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட எம்.பி.க்கள் நேற்று முன்தினம் தமது அமைச்சுப் பதவிகளையும் ராஜினாமா செய்திருந்தனர். இ.தொ.கா.வின் திடீர் முடிவினையடுத்து அரசாங்க தரப்பிலிருந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எதுவும் கைகூ…
-
- 9 replies
- 1.8k views
-
-
செம்மணி புதைகுழி வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாம் செம்மணி புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த அனுமதிக்க வேண்டாமென்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்தினம் புதன்கிழமையும் இராணுவத் தளபதியால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செம்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கு , கிழக்கில் நடத்த வேண்டாமென்றும் கோரி 19 தனித்தனி மனுக்களை தாக்கல் செய்ததுடன் அப்படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை அனுராதபுரத்துக்கு மாற்றுமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார். செம்மணியில் புதைகுழிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக தொடர…
-
- 3 replies
- 1.8k views
-
-
'அமெரிக்காவின் தீர்மானம் அநீதியானது! பரிந்துரைகளை அமுல்படுத்த அவகாசம் தேவை!! - மகிந்த சமரசிங்க' ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளது. 'சிறிலங்கா அரசாங்கமானது அனைத்து விடயங்களையும் நேர்மையுடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலுமே செய்து வருகின்றது. அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையையும் பேணி வருகின்றோம். உண்மைகளைக் க…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிரேஷ்ட அரசியல்வாதியாகவும் ராஜதந்திர அரசியல் வல்லுனராகவும் விளங்கும் இரா. சம்பந்தன் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டதை அர்த்தமற்ற முறையில் விமர்சிப்பதை தமிழ் தலைவர்கள் தவித்துக்கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்பினரும் திருமலை மாவட்ட சமூக அமைப்பினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான கந்தையா நடேசபிள்ளை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் 67வது சுதந்திர தின நி…
-
- 28 replies
- 1.8k views
-
-
கடந்த ஆண்டு டிசம்பரில் சிறீலங்காவில் நடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவின் நிர்வாக அலகின் படி வட மாகாணத்தில்.. (தமிழீழ நிர்வாக அலகின் படி வட தமிழீழம்) .. உள்ள முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் உச்ச பெறுபேற்று விபரங்கள் வருமாறு.. ============================================================================================= கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகின. நேற்று மாலைவரை கிடைத்த முடிவுகளின்படி யாழ்.மாவட்டத்தில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் இருந்தது. 18 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியில் 15 பேர் "9ஏ' பெறுபேற்றைப் பெற்று…
-
- 13 replies
- 1.8k views
-
-
உங்களுடைய மாமியாரும் மறைந்த பிரதமருமான இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாகவும் அவரின் முழுமையான நம்பிக்கை பெற்றவனாகவும் இருந்த ஒரு தமிழன் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒரு தியாகப் பாரம்பரியம் உண்டு. அன்னியரின் அடிமைத் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்கப் போராடி பல தியாகங்களைச் செய்த இயக்கம் காங்கிரஸ் இயக்கமாகும். இமயம் முதல் குமரி வரை வாழும் பல மொழி பேசும் தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இயக்கம் அதுவாகும். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என நான்கு தலைமுறையினர் காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளனர். அவர்கள் இருந்த நாற்காலியை இன்று நீங்கள் அலங்கரித்துக் க…
-
- 1 reply
- 1.8k views
-
-
டி.எஸ்.சேனநாயக்க ஆரம்பித்துவைத்த தமிழ்மண் அபகரிப்பு பணியை இடைவிடாது தொடரும் அரசுகள் -வ.திருநாவுக்கரசு- 57 வருடங்களுக்கு முன் மறைந்தவராகிய இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்க தேசத்தின் தந்தை(Father of the nation) என வர்ணித்து வருடாவருடம் நினைவுகூர்ந்து கட்டுரைகளும் வெளியிடப்படுவதைக் காண்கிறோம். உண்மையில், அவர் தேசத்தின் பிரச்சினைகளின் தந்தை என்பதே மிகப் பொருத்தமானதாகும். இலங்கையில் முதலாவது முதலாளித்துவக் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் ( ஐ.தே.க.) தலைவராய் விளங்கிய டி.எஸ். சேனநாயக்க விவசாயத் துறையில் அலாதியான ஆர்வம் கொண்டிருந்தவரென்று கருதப்படுவதுண்டு. நாடு 1948 இல் சுதந்திரமடைவதற்கு முன்பு அவர் விவசாய அமைச்சராயிருந்த காலப்பகுதியில் வெப…
-
- 0 replies
- 1.8k views
-
-
புலிகள் இயக்கத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனித்து தமிழர்களின் அமைப்பு என்று இன்று கூறிவிட முடியாது. அதில் சிங்களவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். நாட்டில் இன்று கடத்தல் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளன. இதில் பல்வேறு குழுக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களை இனங்கண்டு கைது செய்வோம் என்றும் அவர் சொன்னார். அலரிமாளிகையில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்து நாட்டின் நிலைவரம் குறித்து கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளுக்குப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
உங்கள் நிலங்கள் இப்பகுதிகளில் இருந்தால், உடனே செயற்படவும்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 14:56 GMT ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா: யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சில கிராமங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படுவதாக ஸ்ரீலங்கா ராணுவம் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா ராணுவத்தின் வட மாகாணத்துக்கான அலுவல…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரபாகரன் பிரதரா? வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன 'நாம் தமிழர்' இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 'பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்' என கனடா அரசு குற்றம்சாட்ட... இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம். ''கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?'' ''வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைப் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்: இந்திய மத்திய அரசு உத்தரவாதம் நீண்டகாலமாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னைக்கு சென்று முதலமைச்சர் மு. கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைக…
-
- 16 replies
- 1.8k views
-
-
யாழில் உணவகம் ஒன்றில் சாப்பாட்டிற்குள் புழு – தட்டிக்கேட்டவருக்கு தா்ம அடி யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் மதிய சாப்பாட்டிற்குள் புழு இருந்தமையால் அது தொடர்பில் சாப்பிட சென்றவர் விளக்கம் கேட்டதில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த உணவகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களால் அடித்து உதைத்து வெளியேற்றப்பட்டுள்ளார…
-
- 17 replies
- 1.8k views
-
-
Welcome to Tamils Against Genocide http://www.tamilsagainstgenocide.org/ கோதபயா ராஜபக்ஷே மற்றும் சரத்பொன்சேகா மீது வழக்கு தொடரப்படும்-அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ்டீன் சென்னை:இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக, அந்நாட்டு பாதுகாப்புத்றை செயலாளர் கோதபய ராஜபக்ஷே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் டீன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் உதவி தலைமை வழக்கறிஞராக இருந்து ஓய்வு பெற்ற புரூஸ் டீன், சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில், தமிழர்களைப் படுகொலை செய்தது குறித்தும், அவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, க…
-
- 2 replies
- 1.8k views
-
-
24/05/2009, 13:14 [சுடர்நிலா] “சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின் “அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியாலங்களுக்குள் இறக்கக்கப்போகும் ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார். “நாங்கள் எமது ஆயதங்களைக் கீழே போடுகிறோம்”, செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப்பகுதியில், கடைசியாக புலிகள…
-
- 0 replies
- 1.8k views
-
-
எலோரும் கேட்கவேண்டிய கவிதை. அதில் சில வரிகள்: மானாட மயிலாடுகிறது தமிழகம் தான் வாழ போராடுகிறது தமிழீழம் கவிஞர் புலம்பெயர் தமிழனை குறிப்பிடவில்லையாயினும், புலம்பெயர்ந்த எமக்கும் அது பொருந்தும். இங்கு மானாட மயிலாட மட்டுமா?.. இன்னும் எத்தனை எத்தனை கூத்துக்கள்.... இதோ கவிதை: http://www.tamilnaatham.com/audio/2008/sep...du_20080922.m3u
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சிறிலங்கா விடயம் தொடர்பில் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார். மஹிந்த இராஜபக்ஷவுடனான கள்ளக்காதல் தொடர்பு இப்போது சூடு பிடித்துள்ளது. ஒரு மாஜி செயலரை வைத்து தனது நரித்திட்டங்களை சிறிலங்காவிற்காக செய்துவந்த பல திட்டங்கள் பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றது.. நேற்றுவரை லியாம் பொக்ஸ் சிறிலங்காவிற்கு ஆயுத கொள்வனவு தொடர்பிலான பேரம், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். ஆனால் இந்த விசாரணைக்குழு நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. ஆனால் இன்று மேலும் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு…
-
- 6 replies
- 1.8k views
-
-
3 நவம்பர், 2013 இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது' என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 'சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது ச…
-
- 22 replies
- 1.8k views
-
-
மாவீரர்நாள் 2011 பிரான்ஸ் வரவு செலவு அறிக்கை. மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால், பிரான்சில் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகள், மிகச் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும், தாயகத்தை முன்னிறுத்தும் வண்ணமும் நடைபெற்றன. எமது தேசிய மாவீரர்களை நினைவுகூறும் தமிழீழ தேசிய பண்பாட்டு நிகழ்வுக்கு, மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தந்த ஆதரவு மற்றும் போராளிகள், பொதுமக்கள், மற்றும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடும், ஆற்றிய பணியும் இந்நிகழ்வின் சிறப்பிற்குச் சான்று. இந்தத் தேசிய நிகழ்வை நடாத்துவதற்கு, பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கும், இந்த நிகழ்வை நடாத்த எமக்கு ஏற்பட்ட செலவீனத்திற்கும் பொதுமக்கள் மன்றில் கணக்கைச் சமர்ப்பிக்கவேண்டி…
-
- 7 replies
- 1.8k views
-
-
கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அண்டிய பகுதியில் பதுங்குகுழி. தமிழருக்கு சொந்தமான நீர்கொழும்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் பாதுகாப்பான பதுங்குகுழி ஒன்று இரகசியமாக அமைக்கப்பட்டு வந்ததை நீர்கொழும்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அயலவர்களின் தகவலை அடுத்து, கந்தானைப் பிரிவில் உள்ள டெல்கசன்டியாப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டின் அறை ஒன்றினுள் பதுங்குகுழி அமைக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் எனவும், அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் காவல்துறை…
-
- 4 replies
- 1.8k views
-