ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் ஒட்டப்பட்டுள்ளன. 'அன்றும் அவளே இன்றும் அவளே' என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ச…
-
- 4 replies
- 881 views
-
-
-
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை த…
-
- 16 replies
- 1.4k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலிற்கான பெண் வேட்பாளரும் விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்து காணாமல் போயுள்ள எழிலனினது மனைவியுமான அனந்தி தாக்குதல் முயற்சி ஒன்றிலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். வழமை போன்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு சுழிபுரத்திலுள்ள தனது வதிவிடத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே யாழ்.நகரின் ஜந்து சந்தியில் வைத்து இன்றிரவு அவர் தாக்கப்பட்டுள்ளார். தமது வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த படையினரது பாதுகாப்பு வாகனமொன்று தங்களது வாகத்தினை தாண்டிச்சென்ற சில நொடிகளில் அதனை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலிருந்தே கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்ப…
-
- 2 replies
- 2.6k views
-
-
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்…
-
- 15 replies
- 1.6k views
-
-
அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்! வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்…
-
- 10 replies
- 1.4k views
-
-
அண்மையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் வடமாகாண சபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் நோர்வே பாராளுமன்ற அங்கத்தவரும், வெளிநாட்டுறவு, பாதுகாப்பு குழு அங்கத்துவருமான கிரிஸ்டியான், நூர்கயும், ஆளும் கட்சி அங்கத்தவர் ஹெல்கே ஊர்டென், வெளிநாட்டுறவுகள் அமைச்சின் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து யுத்த முடிவிலும் அதற்கு முன்னரும் காணாமற் போனோர், சரணடைந்த தன் கணவர் அடங்கலான விடுதலைப் போராளிகள், அரசியல் கைதிகள் நிலைமை, போர் நிமித்தம் விதவைகளான பெண்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவ அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகம் ஆதிய குற்றங்கள்பற்றி எடுத்துரைத்தார். வடமாகாண ஆளுநரான முன்னைநாள் சிறீலங்கா இராணுவ அதிகாரி ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தங்கள் அரசுக்கு முட்டு…
-
- 2 replies
- 840 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினர் தான் ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தமிழரசு கட்சி மக்களது ஆணையையும் மக்களது கருத்துகளையும் உறுப்பினர்களது எண்ணங்களையும் மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் தமிரசு கட்சி தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுவதை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட போவதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/41531/57//d,article_full.aspx
-
- 3 replies
- 567 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - "அனந்தி சசிதரன் உரையாற்றும் போது கூட்டத்தில் நான் இல்லை" - சரவணபவன்- தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடும் தொனியிலான சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். பெருக்கெடுத்த கண்ணீரூடே தனது உரையினை இடைநிறுத்தினார் அனந்தி சசிதரன். இன்று காலை திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு வேளையில் அறிக்கையொன்றினை தயார் செய்து கொண்ட அனந்தி பதிலளிக்கும் வகையில் பேசிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இன்று அதிகாலை 1.00 மணியளவில் தொல்புரம் வளக்கம்பரையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) அவர்களது வீட்டினை சுற்றிவளைத்து உள்நுழைந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடாத்தியுள்ளனர். அத்தாக்குதலில் அனந்தியின் ஆதரவாளர்கள் எண்மர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவத்தை அறிந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ…
-
- 0 replies
- 459 views
-
-
அனந்தி சொன்னது பொய்…. யாழில்.நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண சபையை புறக்கணித்து நடைபெறுவதாக வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சரின் கருத்தை முற்றாக மறுதலித்துள்ளனர் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினர். யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் நிறைவடையும் இத்தருணம் வரை வட மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.என வடமாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன்…
-
- 2 replies
- 381 views
-
-
அனந்தி தலைமையில் புதிய கட்சி உதயம்? வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார். இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக…
-
- 1 reply
- 446 views
-
-
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். ந…
-
- 9 replies
- 1.3k views
-
-
அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை. October 23, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதனை கட்சி ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேள்விக்குட்படுத்தினர். அமைச்சர் என கூறப்படும் திருமதி அனந்தி சசிதரன் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழரசு கட்சியில்…
-
- 0 replies
- 259 views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார். …
-
- 1 reply
- 530 views
-
-
அனந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாராம் டக்ளஸ் தேவானந்தா! [sunday, 2014-04-13 06:16:27] அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வுக்கு நடுவே - அதற்கு சமாந்தரமாகப் பக்கத்தே - நடைபெற்ற ஒன்றுகூடல் நிழ்வுகளின் போது உரையாற்றிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு குறிப்பிட்ட விடயங்கள் குறித்துக் கேள்விப்பட்டதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீற்றம் கொண்டார் என கொழும்பு ஆங்கில் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் 'இனவழிப்பு' இடம்பெற்றிருப்பதாக அனந்தி சசிதரன் தமது உரையில் குறிப்பிட்டார் என்றும் இதுவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சீற்றமுற வைத்தது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது. …
-
- 3 replies
- 639 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வன்முறையின்றி சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீ…
-
- 0 replies
- 775 views
-
-
அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம் வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப் பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப் படும் என்று தெரிகிறது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும் மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகி றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் …
-
- 0 replies
- 433 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக நடக்கவில்லையென எங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இருவரும் ஒன்றுபட்டு தீர்மானம் எடுப்போம்' என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். கட்சியின் தீர்மானத்துக்கமைய செயற்படவில்லையென மகளிர் அணித் தலைவி அனந்தி சசிதரன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் வி.சிவகரன் ஆகியோர், கட்சியின் மத்திய குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து 3 வருடங்களுக்கு சாதாரண உறுப்பினர் வரிசையில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த தீர்மானம், வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுத் தீர்மானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனந்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறி…
-
- 2 replies
- 691 views
-
-
தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும்…
-
- 38 replies
- 3k views
-
-
அனந்திக்கு இரண்டு முறை வீசா வழங்க மறுத்தது சுவிஸ்? – சிங்கள ஊடகம் கூறுகிறது. [saturday, 2014-02-15 08:26:29] வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு இரண்டு தடவைகள் சுவிஸ் வீசா மறுக்கப்பட்டதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து செல்வதற்காக அனந்தி இரண்டு தடவைகள் விண்ணப்பித்த போதிலும் வீசா வழங்கப்படவில்லை. இதற்கு முன்னதாக அனந்தி அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். 2013ம் ஆண்டு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கபதற்கு முயற்சித்திருந்தார்.அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக இவ்வாறு சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்தார். அதேவேளை, இம்முறை ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அனந்தி சசிதரன் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ளார் என்பது …
-
- 1 reply
- 431 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் மூலமே தங்களின் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் எனவும், அதற்கான பதிலை அனந்தி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிநின்றனர். முல்லைத்தீவு கோப்பாபிளவு பகுதியை சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டனர். அனந்தி மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12…
-
- 13 replies
- 910 views
-
-
அனந்திக்கு புனர்வாழ்வளிப்பதெனும் சதி முயற்சி பற்றி எச்சரித்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன்.அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், அனந்தி சசிதரன் தனிநபர் அல்ல, அவர் வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் பலம் மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்,அதற்கு மேல் போரின் இறுதியில் தன்னுடைய கணவரை படையி…
-
- 3 replies
- 459 views
-
-
அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி! வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2018ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் யாழ். மேலதிக செயலாளரின் அலுவலகத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அங்கிருந்த காவலாளி அனந்தியைக் கவனிக்காததுபோல் கதிரையில் அமர்ந்திருந்தார். இதனை அவதானித்த அனந்தி, காவலாளியைப் பார்த்து , ‘ஐயா என்னை உங்களுக்குத் தெரிகிறதா என வினவியுள்ளார்’.…
-
- 9 replies
- 1.1k views
-
-
நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவர் சார்ந்த கட்சி தலைமைக்கு சிவாஜிலிங்கத்திற்கு யாழ்.மாவட்டத்தில் போட்டியிட இடம் வழங்கப்படக்கூடாதென்ற அடிப்படையிலேயே ஒரு இடம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. அந்த இடத்தினில் சிறீகாந்தா தேர்தல் களம் குதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வடமாகாணசபையின் மற்றொரு உறுப்பினரான அனந்திக்கு இடம்கொடுக்க …
-
- 50 replies
- 2.8k views
-