ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர். முன்னர் எண்பதுகளி…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜே.வி.பியின் பரப்புரை செயலாளரர் விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.வி.பியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய விமல் வீரவங்சவிற்கும் அவருடைய சகாக்களுக்கும் ஜே.வி.பியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது இதனை அடுத்தே விமல் வீரவங்ச தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்; இதேவேளை விமல் வீரவங்சவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது pathivu.com
-
- 8 replies
- 1.7k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் சீனத் தந்திரோபாயத்தின் ஓரங்கம் - அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கை இந்து சமுத்திரத்தில் பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அண்மித்ததாக தென்னிலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுகமானது முக்கியமான வர்த்தக மார்க்கங்களை பாதுகாப்பதற்கும் செல்வாக்கை செலுத்துவதற்குமான சீனாவின் முயற்சியின் ஓரங்கமாக இருப்பதாக அமெரிக்க இராணுவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஒப்பந்தக்காரர்களால் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் வர்த்தக கப்பல் களஞ்சியங்களை உள்ளடக்கிய துறைமுகமானது அரசியல் ரீதியான அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லமையை ஈட்டிக்கொள்வதற்குமான சீனாவின் "கோர்த்த முத்துக்கள்' என்று அழைக்கப்படும் தந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அரசின் நீதி மற்றும் சட்டம் மறுசீரமைப்புத் துறை மலையகத் தமிழ் அமைச்சர் புத்திரசிகாமணி சென்னை வந்திருந்தார். அவரிடம் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்துப் பேசினோம். ஈழ தமிழர்களை ஒரு பக்கம் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் சிங்கள அரசில், சகோதரத் தமிழர்களான மலையக மக்களின் பிரதிநிதியாக நீங்கள் அங்கம் வகிப்பது என்பது... ``இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். அதாவது வடக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள். கிழக்கு இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்கிற மூன்று பிரிவுதான் அது. ஈழத்துத் தமிழர்கள் மலையகத் தமிழர்களான எங்களையும், கிழக்குப் பகுதி தமிழர்களையும் இரண்டாம், மூன்றாம் தர…
-
- 7 replies
- 1.7k views
-
-
சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனுப்பியிருப்பது இந்திய அரசின் தமிழன விரோத போக்காகும் என்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்! இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப…
-
- 2 replies
- 1.7k views
-
-
திங்கள் 11-12-2006 17:22 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளளது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட முக்கிய வெளிநாடுகள் அந்த திட்டதை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரளவு அதிகாரங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சிங்கள அடிப்படைவாத கட்சிகள் முற்றாக நிராகரித்துள்ளன . இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளாதாக தெரியவருகின்றது …
-
- 5 replies
- 1.7k views
-
-
இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…
-
- 12 replies
- 1.7k views
-
-
தமிழருக்கு தண்ணீர் காட்டும் இந்திய மத்திய அரசாங்கம் தமிழீழத்தின் பல பகுதிகளில் பலமான புலிகள், அரசு மோதல்கள் நிறைந்துள்ள வேளையில் தமது முப்படையினருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என நினைத்து சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச இந்தியா நாட்டுக்கும், பாகிஸ்தான் நாட்டுக்கும் அவசர தொலைபேசி அழைப்புக்களைச் செய்து, உடனடியாக புலிகளிடம் இருந்து எங்கள் துருப்புக்களைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டதாகவும். அதற்கு பாகிஸ்தான் சரி சொன்னதாகவும், மற்றும் இந்தியா தமிழ் நாட்டுக்குத் தெரியாமல் பாகிஸ்தான் மூலம் தனது உணவு, ஆயுதத்தளபாடங்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிய வருகிறது பயிற்சி பெற சென்ற இலங்கை காவல்துறையினரை திருப்பி அனுப்புவதாக கூறி வேறு மாநிலத்தில் வைத்து பயிற்சி வழங்குவது குற…
-
- 0 replies
- 1.7k views
-
-
மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் எமது இணைய தளத்திலும் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது இணைய முகவரி: www.pulikalinkural.com செய்கோள் அலைவரிசை விபரம்: Name: NTR- Tamil Satellite: Eurobird 9 Frequency: 11919 Polarization: Vertical Symbol Rate : 27500 Fec : 3/4 …
-
- 0 replies
- 1.7k views
-
-
கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள் ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது நேற்றைய தினம் கண்டு பிடிக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா சுகாதார அமைச்சரின் செயற்பாடுகளை சகிக்க முடியாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறுவது என்று அந்நாட்டின் புகழ்பெற்ற 6 மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (23:33 IST) பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். பிரபாகரன் மரணமடைந்ததற்கு யார் காரணம் என்று குறிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள நீங்கள் சொல்லுங்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடிய என் அண்ணன் அவ்வளவ…
-
- 3 replies
- 1.7k views
-
-
"சிறிலங்காவின் இராணுவ மயமாக்கப்பட்ட அரசாங்கமானது" வெளிநாட்டுத் தூதுவர்களுடன் மோதலைக் கடைப்பிடிக்கின்றது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஃஎப்.பி. கடுமையாகச் சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? ரவிக்குமார் எம்.எல்.ஏ. கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
யாழ் குடாநாடடில் இதுவரை காலமும் கடத்தப்பட்வர்கள் எங்கே? தினமும் இடம்பெற்று வரும் கொலைகளுக்கெதிராக படையினர் மேற்கொண்ட நடவடிக்ககைள் என்னவென யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியிடம் கேள்வியெழுப்பயுள்ள யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் அராஜகங்கள் முடிவுக்கு வராவிட்டால் புதிய ஆண்டுத் தொடக்கத்திலிருந்து போரட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 'யாழ் குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும் படையினரும் அவர்களுடன் சோந்தியங்கும் ஆயுதக்குழுக்களுமே காரணம் என்பதை அனைவரும் நன்கற…
-
- 1 reply
- 1.7k views
-
-
யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியாதிருப்பது துரதிர்ஷ்டம் -கேணல் ஹரிகரன் நாடுகளுக்கிடையிலான உறவுகளை அர்த்தபுஷ்டியுடையவையாக உருவாக்குவது மக்களே தவிர உடன்படிக்கைகள் அல்ல. இரு நாட்டு மக்களினதும் வாழ்வில் வித்தியாசங்களை இந்தியா ஏற்படுத்தாதவிடத்து பரந்துபட்ட கேந்திரோபாய பாதுகாப்பு விடயங்களில் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் பரிகாரத்தைத் தேடித்தராது. இரு தசாப்தங்களின் பின்னர் ராஜீவ் ஜயவர்தனா உடன்படிக்கையை நாம் பார்க்கும்போது எடுத்துச் செல்லும் முக்கியமான விடயமாக இதுவே காணப்படுகிறது. இவ்வாறு தெற்காசியா தொடர்பான இராணுவ புலனாய்வு நிபுணரும் 1987 1990 க்கு இடையில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு: சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீ…
-
- 9 replies
- 1.7k views
-
-
பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவு…
-
- 10 replies
- 1.7k views
-
-
அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…
-
- 27 replies
- 1.7k views
-
-
சிறு குழந்தையின் வலதுகால் விரலில் காயம் இடதுகால் விரல் நகத்தை அகற்றிய டாக்டர் கைது Saturday, 30 September 2006 -------------------------------------------------------------------------------- சிறுகுழந்தை ஒன்றின் வலதுகாலில் காயமடைந்த விரல் ஒன்றின் நகத்தை அகற்றுவதற்கு பதிலாக குழந்தையின் இடதுகால் விரலின் நகத்தைக் கழற்றிய தம்புள்ள வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தம்புள்ள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்துள்ளனர். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குழந்தையின் வலது காலில் இரும்பு உபகரணம் ஒன்று விழுந்ததால் விரல் ஒன்று நசுங்கி காயமேற்பட்டது. இதையடுத்து இக்குழந்தையின் தாய் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். இரவு ந…
-
- 1 reply
- 1.7k views
-
-
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. ! ஞானசார தேரர் சூளுரை ! 780adad1beb27f0c54647e4de568fd26
-
- 25 replies
- 1.7k views
-
-
மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைத்த எமது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தி…
-
- 43 replies
- 1.7k views
-
-
போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம் போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள். ``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை – சரவணபவன் தமிழ் மக்களின் செல்வாக்கை கூட்டமைப்பு இழக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் தெரியாத விக்னேஸ்வரனை முதல்வராக்கியமையே கூட்டமைப்பின் முதல் பிழை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் 100 வீதம் எங்கள் முடிவுகளை சரியாகச் செய்துள்ளோம். ஆனால், அரசு வழங்க வேண்டியவற்றை வழங்காமல் காலத்தை இழுத்தடிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மாற்றுக் கட்சிகளை …
-
- 20 replies
- 1.7k views
-
-
அண்மையில் வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியர் எவருமே காயமடையவில்லை என்று இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்திருக்கிறார். பி.பி.ஸி. செய்திச் சேவையில் நேற்று முன்தினம் கேட்டகேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே இராணுவப் பேச்சாளர் இப்படிக் கூறியிருந்தார். உதயநாணக்கார அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு: இந்தத் தாக்குதலில் இந்தியர் எவரும் காயமடையவில்லை என உறுதியாகக் கூறுகின்றேன். அந்த இடத்தில் இந்தியர் யாரும் இல்லை. இந்தியர்கள் காயமடைந்தனர் என்று உங்களுக்கு இந்தியத் தூதரகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டால் நீங்கள் அவர்களிடமே மேலதிக விவரங்க ளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார். uthayan.com
-
- 0 replies
- 1.7k views
-