Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நில…

    • 12 replies
    • 1.7k views
  2. யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல், தமிழீழ விடுதலைப்புலிகளின் பூநகரியை ஊடறுக்கும் யாழ்ப்பாண ஏரியை நோக்கி ஆட்டிலறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக நோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பாரிய சத்தங்களினால் அதிர்ச்சியுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் காக்கைத்தீவு போன்ற இடங்களில் இருந்து நேற்று சனிக்கிழமை முதல் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக யாழ்ப்பாண கரையோர பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர் www.tamilwin.com

  3. சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? ரவிக்குமார் எம்.எல்.ஏ. கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவர…

    • 2 replies
    • 1.7k views
  4. சுகாதார திணைக்களத்திற்குச் சொந்தமான லொறி வெடிப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளது 1/29/2008 10:57:27 AM வீரகேசரி இணையம் - வெடிப்பொருட்களை ஏற்றி சென்ற லொறியொன்றை வவுனியாவில் வைத்து பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் நேற்று மாலை 5 மணியளவில் C4 ரக வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லொறியொன்றை பாதுகாப்பு படையினர் கைப்பயுள்ளனர். இன்று காலை லொறியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது மேலும் பல வெடிமருந்துகளும் மூன்று டெட்டனைற்றர்களும் மீட்க்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்ச்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட லொறி சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமானதும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கான சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் ல…

  5. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர் 3/6/2008 9:56:27 AM வீரகேசரி இணையம் - கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பெருத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

    • 2 replies
    • 1.7k views
  6. பிள்ளையானை பெருமாள் கண்டார்… September 9, 2019 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் இன்று திங்கட்கிழமை (9.9.19) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச் சந்திப்பில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2019/130247/

  7. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா ஆதரவுடன் நிறைவேறிய தகவல் பரவியதும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலங்கையின் திமிரை ஓரளவு அடக்குவதற்கான இந்த தீர்மானம் வெற்றியடைந்ததால் ஈழத்திலும் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. குறிப்பாக கிளிநொச்சி, அக்கராயன் பகுதிகளிலுள்ள தமிழ் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து இந்த வெற்றியை குதூகலமாக கொண்டாடினார்கள். கிளிநொச்சி நகரில் வெடிச்சத்தம் 10 நிமிடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக நீடித்தது. ராணுவ நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடியதால், சிங்கள ராணுவ வீரர்கள் கடும் ஆத்திரம் அடை…

    • 2 replies
    • 1.7k views
  8. வவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதல் ஒன்றின் போது சிறீலங்காப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மதியம் வவுனியா பிரதேசம் ஒன்றில் இனம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே எதிர்பாராத இம்மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இராணுவத்தினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/news/4032/54//d,view.aspx

  9. துணைப்படைக் குழுவை இயக்கிவரும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானை கொழும்புக்கு அழைத்த சிறீலங்கா அரச தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக துணைப்படைக் குழுக்களை இயக்கிவரும் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து சமரச முயற்சியாக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட பிள்ளையான் கண்டிக்கப்பட்டுள்ளார். இதே நேரம், கழுணாவை துணைப்படைக் குழு உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக, பிள்ளையானும் ஏனைய ஒட்டுக்குழு உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர். துணைப்படைக் குழுவின் பெயரை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றி, அதன் சின்னத்தையும் மாற்ற முற்பட்டதே முறுகலுக்கு காரணம் என அறியக்கிடைக்கின்றது. …

    • 1 reply
    • 1.7k views
  10. Oct 24, 2010 / பகுதி: செய்தி / மீண்டும் சிங்கள கடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் நூலகம் ஏ9 சாலை திறக்கப்பட்டதில் இருந்து தென்பகுதி உல்லாசப் பயணிகள் யாழ்க் குடாநாடு வருவது அதிகரித்துள்ளது. இதனால் பல போக்குவரத்து நெரிசல், கலாச்சாரச் சீரழிகள் ஏற்படும் நிலையில் நேற்று அவர்கள் அடாவடியிலும் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலையில் யாழ். நூலகத்தை முற்றுகையிட்ட தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தாம் உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது. இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்ப…

  11. யாழ் சிறைச்சாலையில் பெண்ணொருவர் செய்த செயலால் வசமாக மாட்டுப்பட்டார்! சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவரே சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள தனது கணவரைப் பார்க்கச் சென்றபோது சிறைச்சாலை அதிகாரிகளின் பரிசோதனைக்கு முகம்கொடுத்துள்ளார். இதன் போது அவர் கொண்டுவந்த சவர்க்காரத்தினுள் கஞ்சா இருப்பது சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த பெண், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதுச…

  12. கைதடியில் தொடரும் புதை குழிகள் மேலும் இரண்டு சடலங்கள் மீட்பு. யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வெளியில் அமைந்துள்ள வெளியில் மனித புதைகுழிகள் தோண்டும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாகவும் இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது இன்றைய தினம் குறிப்பிட்ட இடத்திற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அரியரெத்தினம் உட்பட மற்றும் யாழ்ப்பாணம் வையித்திய சாலை சட்ட வையித்திய அதிகாரி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழு பொறுப்பதிகாரி உட்பட மற்றும் பலர் சென்றுள்ளர்கள் ஏற்க்கனவே இந்தப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன இதனைத் தொடர்ந்து இன்று இடம் பெறும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது நேற்றைய தினம் கண்டு பிடிக்கப…

  13. வீரகேசரி இணையம் - அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் அரலகங்வில நுவரகலவிலுள்ள கடையொன்ரில் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அரலகங்வில , நுவரகல ஜே.விபி ஏற்பாட்டாளர் கீத்ரி தயாவிற்கு சொந்தமான கடையொன்றினுள் நேற்று இரவு 9.30 மணியளவில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் நுழைந்துள்ளனர்.இவர்களுள் அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் துப்பாக்கியை வெளியில் எடுத்துள்ளதாக அரலகங்வில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் யாரிற்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனினும் , விற்பனை நிலையத்திற்கு ரூபா.75,000/= வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்ப…

  14. பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…

    • 2 replies
    • 1.7k views
  15. இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளார் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை குறித்த முகவர் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூர்த்தி என்ற பெயரை உடைய பெண் ஒருவரே இவ்வாறு ஊடுருவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப…

    • 2 replies
    • 1.7k views
  16. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஜனாதிபதி மகிந்த கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இக்காட்டு மிராண்டித் தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன். கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அல…

  17. விமானப்படை வீரர் பலாலியில் தற்கொலை [27 - February - 2008] பலாலி விமானப்படை முகாமைச் சேர்ந்த டில்சான் பிரதீப் குணசேகர என்ற (வயது 26) விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தையடுத்து மல்லாகம் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவனின் உத்தரவின்படி இவரது சடலம் விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி எட்வேர் அகங்கம செவ்வாய்க்கிழமை மரண விசாரணையை நடத்தினார். உயர் அதிகாரி ஒருவரின் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரியின் பெயரை இவர் கூறியது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பாக எழுத்து மூலம் தருமாறு உயர் அதிகாரி ஒருவரால் பண…

  18. வாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடு…

    • 16 replies
    • 1.7k views
  19. சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-

    • 8 replies
    • 1.7k views
  20. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த கொழும்பு அரசின் நிலைப்பாட்டுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி உள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு உண்மை நிலையை விளக்கும் வகையில் அவற்றுடன் பேசத்தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஒரு ராஜதந்திர அணுகுமுறையாக இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றது என்று அதன் இணைச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். அந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும்…

    • 1 reply
    • 1.7k views
  21. கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam ar…

  22. யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிவ்ரி தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதன்போது விடுதிகளில் நடைபெறும் கலாச்சார சீரழிவு தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சாரம் நடைபெறுவது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே விடுதிகள் முற்றுகையிடப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். …

  23. கோவை (ஏஜென்சி) புலிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதிகளில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் கூறினார். கோவையில் ரூ.2.90 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறையினர் குடியிருப்புகளை தமிழக டிஜிபி ராஜேந்திரன் திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் நக்சல் அமைப்பினரின் ஊடுருவல் இல்லை. எனினும், ஊடுருவல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக கடற்கரை பகுதிகளில் கூடுதலாக 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நக்சல் மிரட்டல்கள் உள்ள மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 1.7k views
  24. இதுதான் இன்றைய நிலை நாமெல்லாம் துடிக்க இவர்கள் குடிக்கின்றார்கள். ரசித்து ருசித்து

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.