ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143560 topics in this forum
-
தமிழரின் பாரம்பரிய உடுப்புக்களை அணிந்துகொண்டு வராத எவரும் நல்லூர் திருவிழாவின்போது ஆலயத்துக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆலய நிர்வாகத்தினரும், யாழ்.மாநகர சபை முதல்வரும் விடுத்திருந்த அறிவித்தல்கள் வெறும் நோட்டிஸுகளாக மாத்திரம் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் மாத்திரமே அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் ஜீன்ஸ், சல்வார் போன்ற உடுப்புக்களை அணிந்து வரவே கூடாது என்றும் இவ்வறிவித்தல்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த அறிவித்தல்களை ஒரு பொருட்டாகக் கூடாக மதிக்காமல் ஏராளமான அடியவர்கள் ஜீன்ஸ், சேட், சல்வார், குட்டைப் பாவாடை, சட்டை ஆகியவற்றை அணிந்து கொண்டு ஆலயத்துக்குள் உட்பிரவேசித்து வருகின்றமையையும்,…
-
- 3 replies
- 1.7k views
-
-
சிறீலங்காவின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மட்டுமன்றி ஜெனிவாவுக்கு சிங்கள துணைநடிகைகள், அழகிகள் கொண்ட குழு ஒன்றும் சென்றுள்ளது. ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் இக்குழுவினரை ஜெனிவா விமான நிலையத்திலிருந்து அழைத்து சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தூதுக்குழுக்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் அவர்களை மகிழ்விப்பதற்காகவும், உபசரிப்பதற்காகவும் சிங்கள நடிகைகள், மற்றும் அழகிகள் கொண்ட குழுவை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அழைத்து வந்துள்ளது. தமரா குணநாயகத்தின் வேண்டுகோளின் படி கொழும்பில் உள்ள வெளிநாட்டமைச்சும், அலரிமாளிகையும் இந்த ஏற்பாட்டை செய்துள்ளன. தற்போது ஜெனிவாவில்…
-
- 17 replies
- 1.7k views
-
-
அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக் கருத்து எழுந்தது. இது போன்ற வாசகங்கள் எங்கிருந்தோ பரப்புரை ஆவணங்களில் இருந்து தேடிப் பிடித்தது போலும். இந்தியத் திருநாட்டில் இல்லாத குழு அடையாளங்களா? புலிகளிடம் இருந்த / இருக்கிற சில அடையாளங்களை வைத்து அவர்களை அரக்கர்களாய்த் தோற்றம் காட்ட வருவது ஏன்? Why are we demonising the Tigers? As f…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைம…
-
- 4 replies
- 1.7k views
-
-
பயங்கரவாதம் என்ற பெயரில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி தமிழர்களை வென்று.. சிறீலங்காவை சிங்கள மயப்படுத்தியதற்காக.. மகிந்த ராஜபக்ச... தேவநம்பிய தீஸ என்ற சிங்கள மன்னனுக்கு ஈடாக போற்றப்பட்டு... சிங்களாதீஷ் வரர் பட்டம் வழங்கி.. அதுவும் யாழ்ப்பாணத்தில் அனுராதபுரத்தில் சும்மா முளைச்சு நிற்கும்.. அரச மரக்கிளையைக் கொண்டு வந்து அதன் பெயரால்.. ஒரு அடிக்கல்லும் நட்டு அதில் இதனை பொறித்தும் இருக்கின்றனர்.. சிங்களச் சிறீலங்காவின் மூத்த பெளத்த துறவிகள்.. என்று அழைக்கப்படும் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் மூலமாக விளங்கும் மல்வத்த பீடாதிபதிகள். தமிழர் தேசத்தில்.. சிங்கள பெளத்த விரிவாக்கத்தை வட இந்திய ஹிந்தியக் கூலிகளும் கூலி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். வழமை போல கல்வெட்டில…
-
- 8 replies
- 1.7k views
-
-
விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரங்கள் விபத்தில் சிக்கிப் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான ஒரு பெண் ஆகிய இருவர் இவ் விபத்தில் பலியாகினர். இன்று அவ் விபத்தில் காயமடைந்த சிறுவனும் சிகிச்சை பலனின்றி மரணமானான். கொழும்பு வெள்ளவத்தை பகுதி வீதியில் பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், கார் ஒன்று மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16) உயிரிழந்ததுடன், ஜவீனின் சகோதரியின் மகள் (பாலசூரியன் வாரணி (29) படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழ…
-
- 28 replies
- 1.7k views
-
-
கிழக்கு அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனில் போர் நடைபெறாது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும் என்று வெளிநாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றும் வெகுவிரைவில் படையினர் அதைச் செய்வர் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: தேசிய பாதுகாப்புக்காகப் புலிகளுடன் சண்டையிடும் இந்த அரசை மக்கள் ஆதரிக்கின்றனர். புலிகள் முற்றாக அழிந்துவிடும் நேரம் நெருங்கிவிட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் நடவடிக்கையில் எமது படைய…
-
- 7 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்தார் பீரிஸ் - ஹிலாரியிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லையாம் [ சனிக்கிழமை, 19 மே 2012, 12:31 GMT ] [ தா.அருணாசலம் ] அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறிலங்கா அரசின் செயற்திட்டங்கள் அடங்கிய எந்தவொரு ஆவணத்தையும் தாம் கையளிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நான்கு நாள் அமெரிக்கப் பயணத்தின் முடிவில் நேற்றுமாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் விரிவான நல்லிணக்கத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. போரின் போது சிறிலங்கா அரசபட…
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் கடத்தல்; சாரதி சுட்டுக் கொலை நமது நிருபர் வடமாகாண சபையின் பிரதம செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருமாகிய எஸ்.ரங்கராஜனின் தாயாரது மரணவீட்டிற்குச் சென்ற இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் ஞாயிறன்று கடத்தப்பட்டு, சாரதி அன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வந்த வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரின் தாயார் மரணமடைந்ததையடுத்து, அவரது இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று பண்டாரிகுளத்தில் நடைபெற்றன. இறந்தவரின் உறவினராகிய இந்து கலாசார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன…
-
- 0 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் யுத்தம் இலங்கை பூராவிற்குமானதே!-ஜெயராஜ்- 'எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பேன்" என சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்தில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமையானது, அரசு பெரும் போர் ஒன்றிற்குத் தயாராகிவிட்டதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கதாகும். சிறிலங்கா அரசு பெரும் போருக்கெனத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகை யில் அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் பூரண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பது அண்மைய அதன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தும் ஒன்றாகும். இதன் ஓர் அங்கமாக ஆயுதப்படைக்கென வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய துறைகள் அனைத்தையும் விட அதிகளவிலான நிதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் எரியூட்டு. சிறிலங்கா புலனாய்வுத் துறையிரால் யாழ் கோப்பாய்த் மாவீரர் துயிலுமில்லம் எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் மாவீரர் துயிலுமில்லைத்தை எரியூட்டியிருந்தனர். இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானதும், தவறானதுமான, மொழிபெயர்ப்புகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிங்கள மொழியில் சரியாகவும், தமிழ்மொழியில் அதன் மொழிபெயர்ப்பு தவறாக இடம்பெற்றதுமான விடயங்கள் குறித்து 218 முறைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக, தேசிய மொழிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் பேச்சாளர் மகேந்திர ஹரிச்சந்திர ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார். இவற்றில், 'கர்ப்பிணித் தாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது' என்பதற்குப் பதிலாக, 'கர்ப்பிணித நாய்மாருக்காக ஒதுக்கப்பட்டுன்னநு' என்று, தவறாக பேருந்துகளில் எழுப்பட்டுள்ளதும் அடங்கும். இது தமிழர்களைக் கேவலப்படுத்தும் வகையிலானது என்ற…
-
- 15 replies
- 1.7k views
-
-
காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கால்பதிப்பான் இதயச்சந்திரன் உலகப் பரப்பெங்கும் எழுச்சி பெற்றுள்ளது தமிழீழ மக்களின் போராட்டங்கள். தன்னியல்பான எழுச்சியால் ஒன்று திரளும் மக்கள் கூட்டம் சர்வதேசத்திடம் நீதிகோரி வீதியில் இறங்கிவிட்டது. மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப் பேரெழுச்சி விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறது. தமிழினப் படுகொலையை மூடிமறைத்து, மனிதக் கேடய மாய்மாலங்களைத் தூக்கிப்பிடிக்கும் சர்வதேச வல்லரசாளர்களின் போலி ஜனநாயக முகத்திரைகளை கிழித்தெறிய இளைஞர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள். சிங்களத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த சமாதானக் காவலர் வேடமிட்டு 2001ல் வன்னிக்கு யாத்திரை மேற்கொண்ட மேற்குலகின் தூதுவர் எரிக் சொல…
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 08-11-2007 18:39 மணி தமிழீழம் [தாயகன்] முகமாலையில் இன்றும் மோதல் - அரச தரப்பு யாழ் பின்தள முன்னரங்க நிலையான முகமாலையில் இன்று காலையும் விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள போதிலும் அது பற்றிய மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.7k views
-
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம் என்கிறார் கோதாபய ராஜபக்ஷ `எந்தவிதமான கலாசாரமும் தெரியாதவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பாக கற்க வேண்டிய தேவை தமக்கில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 4, 5 மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் இருந்துவிட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன, அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாதுள்ளதென கூறும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை' என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி சேவையான `தெரண'வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது; "எமது நாட்டில் ஒரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளினால்…
-
- 2 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்திடம் ஆயுத உதவி கோரும் ராஜபக்ஷே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே லண்டனில் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து ஆயுத உதவி கோரியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. விடுதலைப் புலிகளின் அரண்களை உடைத்து அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் நுழைய ராணுவம் தீவிரமாக முயற்சித்தும் கூட அந்த முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. கிழக்கில், திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் என்ற முக்கிய பகுதியை மீட்க இலங்கை ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்ற¬ம் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகள் முன்பை விட இப்போது வலிமையுடன் ராணுவத்துடன் மோதி வருவதால் ஆயுத பலமின்றி இலங்கை ராணுவம் தவிக்கிற…
-
- 3 replies
- 1.7k views
-
-
மணலாறில் (வெலிஓயாவில்) கடந்த இரண்டு நாள்களாக, கொட்டும் மழையின் மத்தியி லும், அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில், இரவு பகலாகக் கடுஞ்சமர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்புக்களும் உத்வேகத்துடன் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாக நேற்று நள்ளிரவுக்கு சற்றுப் பின்னர் கிடைத்த களமுனைத் தகவல்கள் தெரிவித்தன. நான்கு முனைகளில் பாரிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த அரசுப் படைகள், புலிகளின் முக்கிய படைத் தளமான "வன் போர்' மையத்தை முற்றுகையிட்டுள்ளன எனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. முன்னேற முயலும் படையினருக்கு எதிராகக் கடும் தாக்குதலை நடத்தி அரசுத் துருப்புகளுக்குத் தாங்கள் பேரிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் எனப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
உண்மைகள் சுடும் - யதார்த்தமும் கனவுலகும் [ சனிக்கிழமை, 01 சனவரி 2011, 00:04 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம். "போர் அழிவுகளைக் கொண்டுவரும் - போராட்டம் அழிவிலிருந்து மீட்சியைக் கொண்டுவரும்" இவ்வாறு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவர் மேடையில் பேசும் போது, அதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்தவாறு மயிர்கூச்செறிய கேட்ட அனுபத்தை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எங்குமே வெறுமை மட்டும்தான்.. சமீபத்தில் கிளிநொச்சிப் பக்கம் சென்றபோது நான் அவதானித்த சில விடயங்களால் மேற்படி வாசகத்தையே மீண்டும் ஒரு முறை அசை போட்டுக்கொள்ள நேர்ந்தது. போராட்டம் மீட்சியைக் கொண்டுவரும் உண்மைதான் ஆனால் அது வெற…
-
- 10 replies
- 1.7k views
-
-
காளியில் குண்டு புரளி காளி பேரந்து நிலையத்தில் அநாதரவாய் கிடந்த பொதியால் குண்டு பரளி பரவியது அதனால் மக்கள் சிதறி ஓடி அல்லோல பட்டனா். காவல்துறையினருக்கு அறிவித்ததில் குண்ட செயலிழக்கும் படைகள் வந்து அந்த பொதியை பிாித்த போது உள்ளக்குள் மணல் கிடந்தது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1283#1283
-
- 6 replies
- 1.7k views
-
-
அரசும், பிள்ளையான் குழுவும் ஒப்பந்தம் சிறீலங்கா அரசும், பிள்ளையான் ஒட்டுக் குழுவும் மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) மதியம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜயந்தவும், ஒட்டுக்குழு சார்பாக பிள்ளையானும் கையெழுத்திட்டுள்ளனர். கொலை, கடத்தல், கொள்ளை, சிறுவர்களை படையில் இணைத்தல் போன்றவற்றுக்கு அனைத்துலக அரசு, மற்றும் மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் கண்டனத்திற்கு உள்ளாகிவரும் பிள்ளையான் ஒட்டுக் குழுவுடன் சிறீலங்கா அரசு ஒப்பந்தம் செய்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. http://www.pathivu.com/i…
-
- 7 replies
- 1.7k views
-
-
[Tuesday, 2011-08-30 13:23:26] ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்களின் பூர்வீக நிலப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மிக வேகமாக பௌத்த மயப்பட்டு வருகின்றது. இலங்கையில் தீவிர அரசியல் கலப்புக்குள்ளாகிவிட்ட பௌத்த தத்துவமும், அதன் துறவிகளும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தரப்பினரும் இதனை முன்னின்று செய்கின்றனர். வழிநடத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், “இவ்விடங்களிலெல்லாம் முன்பொரு காலத்தில் பௌத்தம் இருந்தது. புத்தர் விஜயம் செய்தார்” என்கிற மாதிரியான வரலாற்றுக் கதைகளை அவிழ்த்துவிடுகின்றனர். இந்தக் கதையவிழ்ப்புக்களின் அடிப்படையில்தான், வடக்கு கிழக்கில் நாளாந்தம் பௌத்த விகாரைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வடக்கு, கிழக்கை பௌத்தமயப்படுத்துவதற்கு பெரும்பான்மையினர் கொடுக்கும் விளக்கம் சரியானதா? …
-
- 11 replies
- 1.7k views
-