ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
வன்னிக்குச் செல்லாத படைச் சிப்பாய்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் துண்டிப்பு புதன், 31 டிசம்பர் 2008, 13:30 மணி தமிழீழம் [செய்தியாளர் சிறீதரன்] யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்காப் படையினருக்கு கடந்த இரு மாதங்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என யாழ்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்காச் சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளனர். மாதா மாதம் தாம் வழங்கிய வங்கிக் கணக்கு ஒன்றிற்கு அனுப்பப்படும் தமது மாதாந்தக் கொடுப்பனவு கடந்த இரண்டு மாதங்களும் வங்கியில் வைப்பிலிடப்படவில்லை எனவும் தனது சம்பளத்தினை நம்பி வாழும் தனது குடும்பத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தட்டாதெருவுக்கு அண்மையாக கடைமையில் இருந்த சிப்பாய ஒருவர் எமது யாழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 1k views
-
-
சங்குவேலியில் சன்னா என்ற பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டியதில், குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும்குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார். உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும்பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராவார். அவரைக் கைது செய்ய பொலிஸார்தேடுதல் …
-
- 0 replies
- 248 views
-
-
பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை பூரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டுமென கனேடிய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் அமான்டா ரெய்ட் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக பெறுமதிகள், அரசியல் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்…
-
- 27 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
பரவிப்பாஞ்சானில் 3.5 ஏக்கர் காணி விடுவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 3 ½ ஏக்கர் காணி, இன்று புதன்கிழமை (31) விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் 4 ஆவது கட்டமாக இது அமைந்துள்ளது. காணிகளை விடுவிக்குமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகள் காரணமாக முதற்கட்டமாக ஒரு தொகுதி காணியும், இரண்டாம் கட்டமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4.5 ஏக்கர் காணி விடு…
-
- 1 reply
- 451 views
-
-
யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார் August 4, 2020 யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார். பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது http://thinakkural.lk/article/59979
-
- 0 replies
- 423 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் முப்படையினரும் கடும் தாக்குதலை தொடங்கியுள்ளர். இதில் இன்று அப்பாவி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
தமிழ் மக்களுக்கு எதிராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கண்டித்து, மீள்குடியமர்ந்த மக்கள் வவுனியா செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்கள். எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை காலை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்வார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் 70 சதவீதமான வீடுகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாகவும் மீளக்குடியமர்ந்த மக்கள் குற்றம் சுமத்தினார்கள். ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் த…
-
- 0 replies
- 480 views
-
-
தாஜுடீனின் கொலை வழக்கு காணொளி தெளிவில்லை-கனேடிய நிபுணர்கள் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு தொடர்பில் ஆய்வுக்காக வழங்கப்பட்டிருந்த காணொளி தெளிவற்ற ஒன்றாக காணப்படுவதாக கனேடிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த காணொளி தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரமுடியாதுள்ளதாக பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள ஆய்வுகூட நிபுணர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். சி.சி.ரி.வி காணொளி தரம் மிகக்குறைவாக காணப்படுவதாகவும் அதிலுள்ள காட்சிகள் தெளிவற்று உள்ளதாகவும் கனேடிய ஆய்வு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சி.சி.ரி.வி காணொளிகள…
-
- 0 replies
- 305 views
-
-
ராதிகா குமாரசுவாமி காசா நிலமை குறித்து அல்ஜசீரா ஆங்கில சேவைக்கு
-
- 38 replies
- 4.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக வரவு-செலவுத்திட்டத்தில் 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பரிந்துரைகள் மிகத்தெளிவாக அமுல்படுத்தப்படும். நாங…
-
- 1 reply
- 464 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளன. இது குறித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை பிரதிநிதி பெர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து சில உறுப்பு நாடுகள் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http:/…
-
- 1 reply
- 528 views
-
-
விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக கூறி சிறிலங்கா அண்மையில் வெளியிட்ட பொய்ப் பிரச்சாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மூன்று போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறி நிழற்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஆனால், அவர்கள் போராளிகள் இல்லையென்றும் தங்கள் பிள்ளைகள் வட்டக்கச்சியில் உள்ள வீடுகளைப் பார்த்து வரச்சென்றபோது படையினரிடம் அகப்பட்டக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை மீட்டுத்தருமாறு அவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடமும் கோரியுள்ளனர். இதேவேளை படையினரிடம் போராளிகள் பிடிபட்டால் முதலில் அவர்களிடம் இருந்து சயனைட் குப்பிகளை படையினர் பறித்தெடுத்து விடுவார்கள், அத்துடன் அவர்களின் ஆயுதக் கூட்டுக்களை கழற்றாமல் (கோள்சர்) வைத்திருக்க மாட்டார்கள், அதேவேளை, ஆண் …
-
- 2 replies
- 3.2k views
-
-
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறித்து கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மாவிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளார். கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் இருந்து இடம்மாற்றுவது தொடர்பான யோசனைகளை கனடா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதையடுத…
-
- 3 replies
- 827 views
-
-
வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த கால அனுபவங்களுடன் பார்க்க…
-
- 8 replies
- 457 views
-
-
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி வைக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய நாடளாவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் அரசாங்க வேலை வாய்ப்பினை பெற்றுக்கு கொடுக்கும் செயற்றிட்டம் வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேச…
-
- 0 replies
- 290 views
-
-
விக்கியின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே- சிறீதரன்(காணொளி) எழுக தமிழ் எல்லோரையும் எழுப்பி விட்டது.
-
- 4 replies
- 689 views
- 2 followers
-
-
விஷ ஊசி தொடர்பில் 146 முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷ ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த 2ஆம் திகதியும், இரண்டாம் வாரம் 9 ஆம் திகதியும், மூன்றாம் வாரம் 15ஆம், 16 ஆம் திகதியும், நான்காம் வாரம் 23 ஆம் திகதியும், ஐந்தாம் வாரம் 30 ஆம் திகதியும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் வடமாகாண வ…
-
- 0 replies
- 236 views
-
-
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் மொரகஹாஹேன பிரதேசத்தில் புதிய பஸ் நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படவிருந்தது. இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க சிலருடன் சென்று ரிபன்னை வெட்டி பஸ் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மொரகஹாஹேன புதிய பஸ் நிலையம் இன்று முற்பகல் 9.30 அளவில் திறக்கப்படவிருந்தது. எனினும் அது 8.15 அளவில் திறந்து வைக்கப்பட்டது. பஸ் நிலையத்தை திறந்து வைத்து விட்டு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய விதுர விக்ரமநாயக்க, ”மொரகஹாஹேன எனது சொந்த ஊர். இங்கு வந்து எவருக்கும் சண்டித்தனம் செய்ய முடியாது. இங்கு நாங்கள் தான் வேலை செய்வோம். அன்றும் நாங்களே வேலை செய்தோம். இன்…
-
- 0 replies
- 411 views
-
-
-
இராணுவப் புரட்சி ஆபத்து உள்ளதா? இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் விளைவாக, தற்போதைய கூட்டரசாங்கம் எந்தளவு காலத்துக்கு நிலைத்து நிற்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஜனாதிபதியின் கருத்து, அவரை ஆட்சி பீடத்தில் ஏற்றிய தரப்புகளைக் கடும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. ராஜபக் ஷ குடும்பத்தினர் உள்ளிட்ட, முன்னைய ஆட்சியில் இருந்தவர்களை பாதுகாக்க முற்படுகிறாரா என்ற சந்தேகத்தை பகிரங்கமாக எழுப்பும் நிலையை ஜனாதிபதியின் கருத்து ஏற்படுத்தியிருக்கிறது. ஊழல், மோ…
-
- 0 replies
- 458 views
-
-
என் மீது இப்போதும் வீண் பழி போடுகின்றனர்
-
- 1 reply
- 587 views
-
-
அரசால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது - சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்! - செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!! 'இலங்கையில் நல்லிணக்கம் இல்லை என்பதையும், தமிழர்களுக்கு சிங்களவர்களால் நீதி கிடைக்காது என்பதையும் சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டமையால்தான் இன்று ஜெனிவா அரங்கில் இலங்கை அரசு அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே, நல்லிணக்கம் பற்றி இனவாதக் கட்சிகள் கத்தினாலும் எவ்வித நன்மையும் இல்லை. தமிழர்களுக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தரும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்…
-
- 0 replies
- 608 views
-
-
President: Dr. Nithyanantha Sharma Secretary: Kopalakrishnan M.A. To Ban Ki‐Moon The Secretary General UN Head Quarters New York, USA Dear Sir, Ref: Your statement of 16/02/2009 Your aforesaid statement is biased and does not reflect the situation on the ground. For instance your statement that ‘‘the designation of the new safe zone has provided some respite for the tens of thousands of civilians.’’ is untrue. These Sri Lankan armed forces are continuing to attack the civilians of this so called safe zone with artillery shells, cluster bombs and aerial bombardments. Lives are lost on a daily basis. Dead bodies can be seen …
-
- 1 reply
- 1.5k views
-
-
ஹிலாரிக்காக தேங்காய் உடைக்கிறார் சிவாஜிலிங்கம் ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவாக வேண்டுமெனப் பிரார்த்திக்கு முகமாக, 1,008 தேங்காய்களை உடைத்துப் பிரார்த்தனை செய்யவுள்ளதாக, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்விடயத்தை வெளிப்படுத்தினார். இதன்படி, இன்று (02) மாலை 5 மணியளவில், நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில், 1008 தேங்காய்களை உடைத்து விசேட வழிபாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், யாழ். மரியன்னை பேராலயத்தில் மெழுகுவர்த்தி…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-