ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அமைச்சுப் பதவி பெறுகின்ற எண்ணம் கூட்டமைப்புக்கு அறவே இல்லை என்கிறார் சம்பந்தன்.! "புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, 'அரசியல் தீர்வ…
-
- 8 replies
- 729 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக பிளவுபடாமல் ஒன்றுமையாக செயல்பட்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் வெற்றியைக் குழப்புவதற்கும், சிதறடிப்பதற்கும் சில தரப்பினர் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் இதற்கு இடமளிக்கப்படக்கூடாது எனவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். அத்துடன், என்ன இலட்சியத்திற்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டோ அதனை வெற்றிகரமாக செய்துமுடிக்க வேண்டும் எனவும் மன்னார் ஆயர் கோரியுள்ளார். இதுகுறித்து மன்னார் ஆயர் எமது செய்திப் பிரிவிற்கு வழங்கிய செவ்வியில், http://tamilworldtoday.com/home
-
- 16 replies
- 881 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரை வார்த்துள்ளார் – சுமந்திரன் அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரைவார்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாசுதேவ நாணயக்கார தனது சிறு பிராய ஹீரோக்களில் ஒருவர் எனவும், வாசுதேவவை பாராளுமன்றில் சந்தித்தமை பெருமையளிப்பதாக வீட்டு உறவினர்களிடம் கூறி பெருமிதம் அடைந்ததுண்டு என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அந்த நடவடிக்கைகளுக்காக வெட்கமடைவதாக சுமந்திரன் …
-
- 1 reply
- 505 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக.... பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் போட்டி? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகளுக்காக கடும் போட்டி நிலவி வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், வேறு தரப்பினர் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகித்து இப்பதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவை 25 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், 23 அமைச்சரவை அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சுமார் 10 அமைச்…
-
- 0 replies
- 177 views
-
-
அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் தாம் கட்சிக்குள் முன்னெடுத்த கொள்கைப் பேராட்டத்தை கேவலப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும்............................. ... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1398.html
-
- 0 replies
- 605 views
-
-
அமைச்சுப் பதவிகள், கிடைக்காதமையினால்... கவலையில், ஆளும்கட்சியினர் ! அமைச்சுப் பதவிகள் கிடைக்காதமையினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை பதவிகளுக்கான 12 உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பட்டிருந்தது. பல வாரங்களுக்கு முன்னர் இந்த பெயர் பட்டியல் அனுப்பப்பட்டிருந்த போதிலும், அவர்களில் பலர் இதுவரையில் அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை. அமைச்சரவையில் உள்ள முப்பது அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பன்னிரண்டு பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக பொதுஜன பெரமுன 12 பேரின…
-
- 0 replies
- 349 views
-
-
அமைச்சுப் பதவிக்காக... பிரதமரின் வாசஸ்த்தலம் முன்பாக, பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் இராஜாங்க அமைச்சு பதவி தங்களுக்கு வழங்க கூறி மட்டக்களப்பு இரண்டு அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்த்தலம் முன்பாக பாய் போட்டு படுத்து கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரில் நேற்று (புதன்கிழமை) எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துடன் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது. மட்டக்களப்பு நகரில் கடந்த ஏழு தினங்களுக்கு மேலாக எரிவாயுவினை எதிர்பார்த்துக்காத்திருக…
-
- 0 replies
- 264 views
-
-
அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வசமுள்ள நிதி அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளார் என்றும் ஆனால் அதை பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிராகரித்தனர் என்றும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜயந்த கெட்டகொட நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 8ஆம் திகதி அதாவது நாளைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ப…
-
- 0 replies
- 257 views
-
-
அமைச்சுப் பதவியினை.. ஏற்பதற்கு தயார் – தம்மிக்க பெரேரா. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையினை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமானால் மீண்டும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்றுக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1296697
-
- 0 replies
- 175 views
-
-
அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம் கட்சியின் கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் குறித்த அமைச்சருடைய கட்சியான தமிழீழ விடுதலை இயக் கத்தினால் (ரெலோ) நேற்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் நேற்றையதினம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போதே மேற் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 519 views
-
-
அமைச்சுப் பதவியை ஏற்க ஜி.ரி.லிங்கநாதன் விருப்பம் தனது முடிவை முதல்வருக்கு அறிவித்தார் வடக்கு மாகாண சபை யின் வவுனியா மாவட்ட ஆளும் கட்சி உறுப்பி ன ரான ஜி.ரி.லிங்கநாதன்இ அமைச்சுப் பதவி வழங் கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயா ராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் அவரை அமைச்சராக நியமிப் பதற்கு அவ ரது கட்சியான புளொட்டினுள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் மாற்றியமைக்கப்படும்போதுஇ அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜி.ரி.லிங்கநாதனிடம்இ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார…
-
- 0 replies
- 351 views
-
-
அமைச்சுப் பதவியை நிராகரித்தார் சிவாஜி - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சுப் பதவியை பொறுப்பேற்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். மேற்படி விடயம் குறித்து, யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், “கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்னை அழைத்து அமைச்சு பொறு ப்புக்களை ஏற்க முடியுமா? என கேட்டிருந்தார். அதன் பின்னரும் கேட்டார். ஆனால் அந்த கோ…
-
- 1 reply
- 332 views
-
-
அமைச்சுப் பதவிகளைத் தமது கட்சி பெற்றுக்கொண்டால் தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தமிழர்களின் பிரச்சினைகளை அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவை அனைத்திற்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் பொன். செல்வராசா குறிப்பிட்டார். அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கு இணங்கியுள்ளதாகக் கூறினார். தமது இலக்கு அமைச்சுப் பதவிகள் அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவிகளைப்…
-
- 1 reply
- 613 views
-
-
அமைச்சுப் பதவியைத் துறந்தாலும்ரவியின் சலுகைகளில் பங்கமில்லை ரவி கருணாநாயக்க பதவி துறந்து இரு வாரங்கள் கடந்துவிட்டபோதிலும் அவருக்கு அமைச்சரவை தகுதியுடைய அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பும் ஏனைய சிறப்புரிமை களும் தொடர்ந்தும் எந்தவிதக் குறையுமில்லாமல் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஒருவர் பதவி விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அவருக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பும் ஏனைய சிறப்புரிமைகளும் உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்பதே வழமை. எனினும், அதற்கான எழுத்துமூல உத்தரவு இதுவரை அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரி…
-
- 0 replies
- 156 views
-
-
அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சியில் அமர முடியாது! -ஐதேக கிடுக்கிப் பிடி[Monday 2015-08-24 07:00] அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளாமல் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சிரமமானதாக அமையும். அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளது. மறுபுறத்தில் எதிர்க்கட்சிகளின் கடமைகளையும் மேற்கொள்ள சுதந்திரக் கட்சி முயற்சித்து வருகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை …
-
- 0 replies
- 669 views
-
-
[size=5]அமைச்சுப் பதவியையும் உதறிவிட்டு வாருங்கள் ஹக்கீமிடம் கோருகிறார் முஸம்மில்[/size] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மீண்டும், முஸ்லிம் மக்களை ஏமாற்றாது, அரசின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி, அனைத்துச் சிறப்புரிமைகளையும் கைவிட்டுத் தேர்தலில் களம் இறங்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் தனித்துப் போட்டியிடுவது என எடுத்த தீர்மானம் காரணமாக, அரசுக்கு எதிராக வாக்களித்தத் தீர்மானத்திருந்த மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளைப் பெற்று, மீண்டும் அரசுடன் இணையும் திட்டமிட்ட சூழ்ச்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அவ…
-
- 0 replies
- 349 views
-
-
முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அமைச்சுப் பொறுப்பு இல்லமாலேயே அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் கே.ஏ.பாய்ஸ் இது குறித்து கூறியதாவது: முஸ்லிம் மக்களின் அபிலாசைகளில் குறிப்பாக அமைதி முயற்சிகள் தொடர்பிலானவற்றை அரசாங்கம் நிறைவேற்றுமானால் அரசாங்கத்தில் இணைவோம். அமைச்சுப் பொறுப்புகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது தொடர்பாக ரவூப் ஹக்கீமும் மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்சவும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள இனவாத சக்திகள்தான் அமைதி முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. பேச்சுக்கள் மூலம் அமைதி உருவாக்கப்பட வேண்டும் என…
-
- 1 reply
- 985 views
-
-
வடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பதவிகளை புறக்கணிப்பதென கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக்கட்சிகள் அனைத்தும் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழரசுக்கட்சி ஏற்கனவே முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தன்வசம் கையகப்படுத்தி வைத்துள்ளது. ஏனைய இரு அமைச்சுக்களையும் பங்காளிக்கட்சிகள் மூன்றும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை முன்வைக்கப்பட்டு வந்திருந்த போதும் அதனை அவை நிராகரித்திருந்ததுடன் கட்சிக்கு ஒன்று எனும் வகையினில் அமைச்சை பங்கிட கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை தமிழரசுக்கட்சி நிராகரித்துவிட்டது. இதனையடுத்தே அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்காதிருக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜ…
-
- 1 reply
- 490 views
-
-
கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவி நியமனங்கள் தொடர்பில் தற்போது இந்தக் கட்சிக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ளதாகவும் இதன் காரணமாகக் கட்சி பிளவுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கிடைக்கவுள்ள அமைச்சுகளை இந்தக் கட்சியின் தலைவரான ரவுப் ஹக்கீம் தனக்கு விசுவாசமானவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதன் காரணமாகவே இந்த நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளனர் என்றும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை, கட்சியின் உயர்பீடத்தின் அனுமதியைப் பெறாமலேயே முஸ்ல…
-
- 0 replies
- 453 views
-
-
அமைச்சை தந்து பாருங்கள் 6 மாதத்தினுள் பலன் தெரியும் அமைச்சை தந்து பாருங்கள் 6 மாதத்தினுள் பலன் தெரியும் சட்டம் ஒழுங்கு அமைச்சை என்னிடம் ஒப்படைத்தால் 6 மாதத்துக்குள் குற்ற வாளிகளைத் தண்டித்து உரிய பெறுபேற்றை நாட்டிற்கு காண்பிப்பேன் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத் தின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் …
-
- 1 reply
- 332 views
-
-
அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸின் மணிலாவில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை ஒன்றை ஆற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். அமைதிக்கான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான சர்வத…
-
- 3 replies
- 457 views
-
-
அமைதி என்ற வார்த்தைக்கு மயான அமைதி என்பது பொருளல்ல: சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் மீது சிங்கள இனவாத அரசு தொடர்ந்து நடத்திவரும் இன அழித்தலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துக் கொள்ளவும், நியூசிலாந்து நாட்டை நோக்கி கப்பலில் பயணம் செய்த 87 ஈழத் தமிழ் அகதிகளை இந்தோனேசிய அரசு நடுக் கடலில் சிறை பிடித்துள்ளது வன்மையாக கண்டனத்திற்குரியதாகும். ஈழத் தமிழ் அகதிகள் பயணம் செய்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பழுதாகி நின்றபோது இந்தோனேசிய கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சிறைப் படுத்தப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 754 views
-
-
அமைதி காக்கும் படைக்காகச் செல்லும் விமானப்படையின் ஹெலிகொப்டர் Editorial / 2019 ஓகஸ்ட் 05 திங்கட்கிழமை, பி.ப. 05:01 Comments - 0 ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக, மத்திய ஆபிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ள, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் தலைமையில், இன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைக்காக, இலங்கையிலிருந்து 2014ஆம் ஆண்டு முதலாவது ஹெலிகொப்டர் மத்திய ஆபிரிக்கா நோக்கிச் சென்றுள்ளதுடன் இன்று 5ஆவது ஹெலிகொப்டர் புறப்படவுள்ளது. குறித்த ஹெலிகொப்டரில் 18 அதிகாரிகள் உள்ளிட்ட 92 பேரும் கட்டளையிடும் அதிகாரியாக விங்க கமான்டர் கே.எம…
-
- 1 reply
- 486 views
-
-
காங்கேசன்துரை: விடுதலைப் புலிகளின் முற்றுகையால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவித்து வரும் இலங்கை வீரர்கள், எப்போது குடும்பத்தினரைப் பார்ப்போம், ஊர் திரும்புவோம் என்ற ஏக்கத்திலும், விரக்தியிலும் தவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படைகளுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு தவிடுபொடியானது. இரு தரப்பும் கடுமையாக மோதி வந்தது. சில நாட்களாக இந்த சண்டை சற்று மட்டுப்பட்டது. தற்போது மீண்டும் இரு தரப்பினரும் தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடரும் இந்த சண்டையால் அதிக விரக்தி அடைந்துள்ளனராம் இலங்கை வீரர்கள். யாழ் தீபகற்பத்தில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீண்ட காலமாக இங்கே தங…
-
- 1 reply
- 1.4k views
-
-
அமைதி தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: நோர்வே [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 07:55 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கை தொடர்பான கொள்கைகளை நோர்வே மாற்றவில்லை, அங்கு அமைதியை ஊக்குவிப்பதற்காக நோர்வே எப்போதும் பாடுபடும் என்று நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றெய்மென்ட் ஜோகன்சென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எப்போதும் நோர்வே பாடுபடும். அங்குள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காணும் முகமாக நோர்வேயின் செயற்பாடுகள் அமையும். எல்லாச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை காணும் முயற்சிகளுக்கு நோர்வே அனுசரனைகளை வழங்கும் என்…
-
- 0 replies
- 811 views
-