ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் …
-
- 14 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஆரம் பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, திருகோணமலைத் துறைமுகத்தினுள் வெடித்த குண்டு இலங்கைக் கடற்படைக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.23 மணி யளவில் திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற, அ520 என்ற கடற்படையின் விநியோகக் கப் பலுக்கு அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. உடனடியாகக் கப்பலில் பற்றிக் கொண்ட நெருப்பும், கடலுக்கு அடியில் நிகழ்ந்த வெடிப் பினால் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக குபுகுபு வெனப் புகுந்த நீரும் 13 நிமிடங்களிலேயே கப்பலை துறைமுகக் கடல் விழுங்கிக் கொண் டது. ஒரு வாரமாகியும் கடலுக்கு அடியில் நிகழ் ந்த இந்தக் குண்டுத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த் தப்பட்டது…
-
- 0 replies
- 1.6k views
-
-
10 வருடங்களாக தேடப்பட்டு வந்த இலங்கை கடத்தல் மன்னன் கைது வீரகேசரி நாளேடு 15 ஆயிரம் அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்தவர் கடந்த 10 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் ஜெயரத்தினம் என்பவர் மண்டபம் கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் அகதிகளை தோணி மூலம் ஏற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல்காரர்களை பிடிக்க இராமேஸ்வரம் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். பொருட்கள் கடத்தப்படுவதும் தடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையை சேர்ந்த ஜெயரத்தினம் என்ற ஒரு கடத்தல் புள்ளி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். கடந்த 1997ஆம் ஆண…
-
- 0 replies
- 1.6k views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப…
-
- 10 replies
- 1.6k views
-
-
உலகக் கிண்ண காய்ச்சலுக்குப் பின்னால்... கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் ஒருவித காய்ச்சல் தெற்காசியாவைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. இது சூரியன் உச்சத்துக்கு வந்திருப்பதால் வந்த வெப்பக் காய்ச்சல் அல்ல. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இலங்கை- இந்திய அணிகள் தகுதி பெற்றதும் சூடுபிடிக்கத் தொடங்கிய காய்ச்சல் இது. கடந்த 2 ஆம் திகதி இரவு இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் வரை இதன் வெப்பம் குறையவில்லை. இலங்கையும் இந்தியாவும் மோதிய அந்தப் போட்டி தெற்காசியாவில் வாழும் பெரும்பாலான மக்களைத் தன் வசம் கட்டிப் போட்டிருந்தது. இருதரப்பு அணிகளின் வெற்றிக்காக, அவற்றின் ரசிகர்கள் மட்டுமன்றிஇ அரசியல் தலைவர்களே கோவில் கோவிலாக ஏறிப் பிரார்த்தனை செய்தனர். இ…
-
- 3 replies
- 1.6k views
-
-
***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.
-
- 7 replies
- 1.6k views
-
-
சுவிஸ்முரசம் இலங்கை தமிழர்கள் அகதிமுகாம்கள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பில் இன்று உலகின் கவனம் வெகுவாக தமிழர்களின் பக்கம் திரும்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு மனித உரிமைகள் அமைப்புகளும் இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துவருகின்றன. நமது அண்டைநாடான இந்தியாவில் அதன் தலைநகரத்தில் உள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு இலங்கை தமிழர்களின் நிலை சர்வதேச நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் அபிலாசையின் உருவாக்கமாக இயங்கவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. வடக்கு மாகாணசபை தேர்தலுக்காக வவுனியா,யாழ்ப்பாணம் என்று திரிந்தவர்கள் …
-
- 9 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…
-
- 16 replies
- 1.6k views
-
-
யாழ். குடாநாட்டு முகமாலை முன்னரங்க போர்முனைப் பகுதிகளில் இருந்து முன்நகர்வு முயற்சியை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட அகோர உக்கிர மோதலில் 36 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புச் சமர் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாவது:- முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து நேற்று திங்கட்கிழமை ந.பகல் தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை மு.பகல் 10.00 மணிவரையுள்ள காலப்பகுதியில் சுமார் நான்கு தடவைகள் சிறிலங்கா படையினர் பின்தளப் பிரதேசங்களில் பாரிய மோட்டார் பல்குழல் வெடிகணை சூட்டாதரவுடன் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். இம்முன்நகர்வு திங்கட்கிழமை மூன்று தடவைகளும் இன்று செவ்வாய்க்கி…
-
- 1 reply
- 1.6k views
-
-
தற்போது நடக்கும் இந்திய, தமிழக அரசியலில் தமிழ் மக்கள் அறிந்து கொண்டுள்ளது என்ன ?, என்பது இன்று நமக்கு முன்னிருக்கும் நியாயமான முக்கியமான கேள்வி. இக்கேள்வி ஈழமக்களுக்காக அல்லாமல் தமிழக மக்களுக்காகவே அவர்களின் உரிமையை பற்றிய விசயத்தில் மிகவும் முக்கியமானதாகிறது. தமிழகத்தில் இருந்து 40 இடங்களை வென்று மத்திய அரசில் பெரும் அளவில் பங்கு கொண்டாலும், தமிழ் மக்களின் உயிரைக் காப்பற்ற கூட அது உதவாது என்ற உண்மை தான் தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. மிக மிக அடிப்படையான தேவைகள் இருந்தால் கூட அதை மத்திய அரசில் இருந்து பெற முடியாது என்பது தான் இன்றைய அரசியல் நமக்கு தெரிவிக்கும் உண்மை. ஈழத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி முடிவதற்குள் அவர் விடுதலை போரட்டத்தை நசுக்கி இருந்த இடம் தெரியா…
-
- 5 replies
- 1.6k views
-
-
இந்திய இராணுவத்திரால் 1987ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளர்கள் என 68ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 24வருடங்கள். இப் படுகொலையில் வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , திருமதி பா.வடிவேல், செல்வி இ. மங்கயற்கரசி, செல்வி மு. லீலாவதி, திரு கே.செல்வராசா, திரு கே. கிருஸ்ணராஜா, திரு மு. துரைராசா, திரு எம். சண்முகலிங்கம், திரு வி. வரதராசன், திரு கே. வேதாரணியம், திரு யோன்பீற்றர், திரு இசுகுமார், திரு க. சிவயோகநாதன், திரு கே. சிவராசா, திரு கோ. உரித்திரன், திரு க. மார்க்கண்டு, திரு இ. இரத்தினராசா. திரு க. நவரத்தினம் ஆகியோர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிக…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் கோத்தபாய : தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளால் கள்ளவாக்குகள் போடப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பபட்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். நாட்டை பிளவுப்படுத்துவது குறித்து பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த வழியிலேனும் நீக்கப்பட வேண்டும…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவை அனைத்துலக நாடுகள் கை விடக்கூடும்: ரொய்ட்டர்ஸ் [வியாழக்கிழமை, 14 யூன் 2007, 18:44 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவில் உள்ள அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை உள்ளுரிலும், அனைத்துலகத்திலும் தெரிவித்து வருவதனால் நாடு மேலும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வு விபரம்: இலங்கையில் தமிழ்மக்கள் நாடு கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இச்சம்பவங்களுக்கு அரச படையினர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. அங்கு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர், உதவி நிறுவனங்கள் போன்றவை …
-
- 1 reply
- 1.6k views
-
-
மிக்-27 ரக போர்விமானங்கள் புலிகளின் மன்னார் நிலைகள் மீது குண்டுவீச்சு வீரகேசரி இணையம் 6/5/2008 10:14:14 AM - இன்று காலை 8.20 மணியளவில் மன்னார் முன்னரங்குகளில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது விமானப்படையின் மிக்-27 ரக போர்விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.6k views
-
-
ஸிரீ லன்கா கடற்படையினால் கப்பல் ஒன்று தகர்ப்பு.....
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களே தமிழீழ விடுதலைப் புலிகளை போஷித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் புலம்பெயர் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு வாங்கிய ஆயுதங்கள் மூலம் தமது சொந்த சகோதரர்களை விடுதலைப் புலிகள் கொன்று குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இனியும் நிதியுதவிகளை வழங்கக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்தில் அல்லலுறும் அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் குறித்து சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ அதிக அக்கறை காட்டாமை வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 15:35 | சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் உணர்வுபூர்வமாக நடந்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே. http://youtu.be/AIicQFW8Pcc http://youtu.be/Sry8EpKXUKU http…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு! கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார். இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார். இவரது மனைவி இந்தியாவில் உள்ளார். இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15804:2010-12-16-18-02-12&c…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.காங்கேசன்?ுறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாகத் தெரிய வருகின்றது.தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பயணித்த பதினேழு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ் மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா நீதியாளர் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், மற்றும் நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் நேற்று தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 2 replies
- 1.6k views
-
-
மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்! பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருத…
-
- 18 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்... இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்... இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்…
-
- 24 replies
- 1.6k views
-
-
சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சந்திரவட்டகல்லின் பகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அகழ்வு இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது. சந்திரவட்டக்கல்லின் பகுதியொன்று தோன்றியதை அடுத்து அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அகழ்வில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் சந்திரவட்டக்கல் தோன்றியிருப்பதானது புராதன காலத்தில் அது பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் எனவும் பொளத்த துறவி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலாபம் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு உரித்தான …
-
- 9 replies
- 1.6k views
-
-
தற்கொடையாளர் மில்லரின் சிலையுடைப்பு - கோபத்தில் மக்கள் திகதி: 06.07.2010 // தமிழீழம் யாழ் வடமராட்சி நெல்லியடியிலுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடைப் போராளி கப்டன் மில்லரின் நினைவுத் தூபியை சிறீலங்கா படையினர் உடைத்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் அண்டு யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றியிருந்த சிறீலங்கா படையினர் அங்கிருந்த விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை சிறுது சிறிதாக அழித்து வந்திருந்தனர். 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இவை மீளக்கட்டப்பட்டிருந்தன. இவ்வாறு மீளக்கட்டியமைக்கப்பட்ட மில்லரின் நினைவுச் சின்னத்தில் காணப்பட்ட சிலையை சிறீலங்கா படையினர் ஏற்கனவே மீண்டும் உட…
-
- 2 replies
- 1.6k views
-
-
பிரபாகரன் திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அதன் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள ஜெமினி ஆய்வுகூடத்தில் இந்த படத்தின் மூலப்;பிரதி சுருள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதென்று குறிப்பிட்ட துஷார பீரிஸ், எனினும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மூலப் பிரதிகளை பெறும் நோக்கில் நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய பிரதிகள் இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நீதிமன்றம் ஒன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது - இந்தியா : 29 ஆகஸ்ட் 2011 கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிவித்துள்ளார். கச்சதீவு இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும், புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச…
-
- 7 replies
- 1.6k views
-