Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை சாயமே இந்த உயிரிழப்புக்களுக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளதாகவும் குறித்த சாயம் பயன்படுத்தப்படுவதனை உடனடியாக நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்ச…

  2. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை, ஏறாவூரில் 23பேரும் களுவாஞ்சிக்குடியில் 3பேரும் குறித்த செயற்பாடுகளுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த ம…

    • 2 replies
    • 518 views
  3. 13 இலி­ருந்து வெகுதூரம் சென்று புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கிறோம் நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைத்தால் உதா­சீ­னப்­ப­டுத்தமாட்டோம் என்­கிறார் சம்­பந்தன் (க.கம­ல­நாதன்,ந.ஜெகதீஸ்) அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­தச்­சட்டம் தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அர­சியல் தீர்­வாக அமை­யாது. எனவே அதி­லி­ருந்து வெகு­தூரம் சென்று நாங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கி­ன்றோம். அதற்­க­மைய நியா­ய­மா­னதும் நீதி­யா­ன­து­மான தீர்வு கிடைத்தால் அதனை உதா­சீ­னப்­ப­டுத்த மாட்டோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். அதே­நேரம் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சி…

  4. தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க முயன்றதாக 2014ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட கோபி எனும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி பகுதியில் உள்ள வீட்டில் இன்று (03) பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கோபியின் தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டு, அது தொடர்பில் தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கோபியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கோபியின் தாயும், மற்றுமொரு வயோதிப பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இதன்படி தயானுஜன் அம்பிகா (35-வயது),…

    • 5 replies
    • 1.9k views
  5. வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை மேலும் மோசமடைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகமும் அவசர நிவாரணங்களுக்கான இணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ், மிகவும் சிறிய பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களுடைய பாதுகாப்புதான் தமது கவனத்துக்குரிய விவகாரமாகியிருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  6. போரில் இறந்த போராளிகளுக்கு அரச நிகழ்வில் அஞ்சலி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இன்றைய தினம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். குருநகர் பகுதியில் மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். இன்நிகழ்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனைவரும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டது. இதன்போது அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர முதல்வர் என பலரும் எழுந்து நின்று மெளன அஞ…

    • 2 replies
    • 808 views
  7. பழிவாங்கல் கைதில் இருந்துவிடுதலை பெற்றேன்’-தவிசாளர் நிரோஷ் 48 Views அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ் இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். தன்னை பொலிஸார் கைது செய்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியில் ப…

  8. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், ஈழத்தமிழர்பிரச்சனையில் தீவிரமாகச் செயற்பட்டவர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை மிகுதியாக நேசிப்பவர். ஆயினும் இப்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். இது ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் தொல். திருமாவளவனின் இந்தப் பேட்டி அவரது சுயநிலையை ஒரளவுக்கு விளக்குவதாக இருக்கிறது.ஒடுக்கபட்ட ஒரு சமூகத்தின் தலைமைப்பொறுப்பிலிருப்பவரி

  9. “உலக தமிழ் மக்களின் தீராத தாகமான தமிழீழத்தாகத்தை தீர்த்து வைப்பதற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து எமது போராட்டத்தை வழிநடத்த உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்… “பறவைகளின் தாகம் தமிழீழ தாயகம்” தமிழகத்தின் பணம் படைத்த ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பணம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் தமிழ்லீடர் ஆசிரியர் பீடத்திற்கு கிடைத்திருக்கின்றன. அறுபது ஆண்டுகால இனவிடுதலைக்கான போராட்ட நீட்சி 2009 மே 18 உடன் முடிவுக்கு வந்ததாக தோற்றங்காட்டினாலும் அது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கின்றது என்பதே உண்மையாகும். எமது இனத்திற்கான விடுதலையின் தேவையை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் வகையில் இனவாத அரசு நடந்த…

  10. நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர் 03 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கொரோனா அபாயம் காரணமாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை பொறுப்பேற்பதில் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜுட்சனின் வாசஸ்தலத்தில் திணைக்கள அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் குறித்த மனு கையளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ந…

    • 7 replies
    • 889 views
  11. வடகொரியாவில் அணு குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளும் பட்சத்தில் தென்கொரியாவிலுள்ள 40 ஆயிரம் இலங்கையர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தென்கொரியா மீது வடகொரியா அணுகுண்டை ஏவுமா? ஏவுமாயின் எப்போது ஏவும் என்பவபற்றி எதுவும் நிச்சயமாக தெரியாது. எனினும், தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாது விடின் அவர்கள் அபாயத்தில் மாட்டிக்கொள்ளும் சாத்தியம் அதிகமாகவுள்ளது. வடகொரிய தலைவர் க…

  12. பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/02/jaffna-international-airport.jpg பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை வாழ் அனைத்து இன மக்களின் நன்மதிப்பைப்பெற்று ‘ஈழத்து காந்தி’ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் தந்தை செல்வா. 1947ஆம் ஆண்டு …

  13. புலம் பெயர்மக்கள் உடனடியாக செய்யவேண்டிய ஒன்று.... உடனடியாக முடியுமான வெளி நாட்டு மக்களை உங்கள் போரட்டங்களுக்கு அழைத்து செல்லுங்கள்... இது போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை.. மிக மிக தேவையானது...காலத்தின் அவசியம்... பல நிருவனங்கள்(வெளி நாட்டு) இந்த விடையமாக போராடுபவர்களை கேட்டு உள்ளனர்.. இந்த தேவையை உடன் தீருங்கள்... நீங்கள் அனியப்படுத்தபடாமல் உலகிற்கு காட்ட இது முக்கிய தேவை.... முக்கியமாக இலண்டனில்.. மற்றும் நாடுகளில் உடன் செயல்படுத்துங்கள்.... எவ்வளவோ வெளி நாட்டு நண்பர்கள், பாடசாலை, சேர்ச் நண்பர்கள், வேலை நண்பர்கள் இருபார்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள்... இன்றில்லாவிட்டால் நாளை ... நாளை இல்லாவிட்டால் அதன்பின்...இப்படியெ..உடன் செயலில் இறங்குங…

  14. வடக்கு கிழக்கிற்கு தனியான நிர்வாக முறைமை பொருத்தமற்றது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தையோ அல்லது அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தையோ கூட்டமைப்பு விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக வடக்கு கிழக்கில் தனியான நிர்வாக அலகு ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியான நிர்வாக அலகு…

    • 2 replies
    • 482 views
  15. யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பல்கலைக்கழக வாயிலைச் சுற்றி படையினரும், பொலிசாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் 08 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை முற்றி, கைகலப்பில் முடிந்திருந்தது. அன்றைய தினம் இரவு வரை தொடர்ந்த முரண்பாடுகள், மூன்றாம் வருட மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் முரண் நிலையைத் தோற…

  16. தமிழ் தேசியமே எமது மூச்சு! யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் இரண்டு நிமிட …

  17. ஸ்ரீகாந்தா ஓர் புலி உளவாளி முடியை வளர்த்துக்கொண்டு சிரட்டையுடன் புறக்கோட்டைக்கு சென்றால் நன்றாக பிச்சை எடுக்கலாம் பாராளுமன்றில் அமைச்சர்கள் காடைத்தனம் உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கம்: அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திலுள்ள புதமாத்தளன் பகுதியை நோக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் இல்லாவிடின் அவரை வெளியே துரத்துவோம் என்றும் ஆளுந்தரப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றில் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக சபையில் பெரிதும் அமளி துமளி ஏற்பட்டது. ஆளும் கட்சி …

  18. Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/215/Cheran-Speech

  19. இலங்கைத் தீவில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற, சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்;ட மீறல்கள் தொடர்பாக, சர்வதேச சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என, டென்மார்க் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளும், அரச ஆதரவு கட்சியொன்றும், எதிர்க்கட்சியும் கூட்டிணைந்து வலியுறுத்தியுள்ளன. அடுத்து, இலங்கைத் தீவின் மனித உரிமை நிலவரங்களை ஐ.நா மனித உரிமையாளர் தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு ஏற்றவகையில், டென்மார்க் அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அத்துடன், போரின் முடிவில் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவத…

  20. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும். உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி யாழிணையம்

  21. சிதம்பரம் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுகின்றார் - ராஜா குற்றச்சாட்டு சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் செய்துவிட்டதாக சிதம்பரம் அறிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்டுள்ள தகவல் என புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசு முமுமையாக போரை நிறுத்திவிடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள். தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதாக சிறிலங்கா அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றுதான் கூறியிருக்கிறது. சிதம்பரம் சிறிலங்கா அரசுக்கு வக்காளத்து வாங்கும் விதத்தில் பேச கூடாது. சிறிலங்கா அரசின் அறிவிப்பை போர் நிறுத்தம் என மிகைப்படுத்தி சொல்லக் …

  22. யாழில் 3000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க உதவி வழங்குகிறது இந்தியா யாழ். மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் இலங்கையும் கையெழு த்திட்டுள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட னர். இந்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமை யவே, இந்த உதவியை…

    • 1 reply
    • 358 views
  23. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மாபெரும் ஆர்ப்பாட்டம் : பொலிஸாரின் தடை உத்தரவை நிராகரித்தது சாவக்சேரி நீதிமன்றம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொ…

  24. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் யுத்த நிறுத்தமெதிலும் ஈடுபடப்போவதில்லையென்று இன்று மீண்டுமொருமுறை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்கும் பொறுப்பு வெளிநாட்டினரை விட தமக்கும் தனது அரசுக்கும் அதிகமாகவே இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளவும் இல்லை என்றும் தற்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்லவும் முடியாது என்றும் எம்பிலிப்பிட்டியவில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பாமல், நடுநிலையாக நின்று களநிலைமைகளை ஆராய்வது அனைவரது கடமையுமாகும் என்றும் இலங்கையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.