ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
விடுவித்த காணியை மீண்டும் பிடிக்க முயற்சி – CSDயினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தில் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிர…
-
- 1 reply
- 279 views
-
-
இலங்கையின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் பொய்யுரைத்துள்ளார் என தமிழ் தலைவர்கள் குற்றச்சாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜன…
-
- 0 replies
- 177 views
-
-
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை நீக்கும் பணிகள் இன்று (22) கொழும்பில் இருந்து ஆரம்பமாகிகப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய அனர்த்த முகாமைத்துவ, பொதுசனத் தொடர்பு மற்றும் கிறிஸ்தவ விகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முசாமில் ஆகியோரின் தலைமையில் இந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. http://tamil.srilankamirror.com/news/item/1310-2015-01-22-02-25-21
-
- 2 replies
- 814 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 JUL, 2023 | 02:50 PM முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் சமூக கௌரவத்துக்கு உரியவர்கள். தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக விதையானோர் வரலாற்றுக்குரியவர்கள் மட்டுமல்ல அவர்களே எதிர்கால வரலாற்றினை உயிராகவும், உயிர்பாகவும் வைத்திருப்பவர்கள் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. …
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டுமாயின் என் மீதும், என் தந்தை மீதும் அதைச் செய்யுங்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனது தாயார் எந்தவொரு ஊழல் மோடிகளிலும் ஈடுபட்டதில்லை. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி கூறுவதனைப் போன்று எனது தாயாரான சிராந்தி ராஜபக்ச எந்தவிதமான தங்க மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை. திறைசேரியில் காணப்படும் தங்கத்தை கொள்ளையிட்டதாக என் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்க மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்று முழுதாக எனது குடும்பத்தின் சார்பில் நிராகரிக்கின்றேன். எனது தாயாருக்கும் குடும்பத்திற்கும் மிகவும் இழிவான முறையில் சேறு பூசும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன…
-
- 0 replies
- 843 views
-
-
பேருந்து விபத்து பொதுமக்கள் 17 பேர் பலி. - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 10:30 காலியில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது கெண்டைனர் ஒன்றுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியமையால் ஏற்ப்பட்டதாகும். இது தொடர்பான மேலதிக விபரம் தெரியவரவில்லை. சங்கதி
-
- 6 replies
- 1.8k views
-
-
பசில் ராஜபக்ஷவே எனது தெரிவு: ஆனால் மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கோட்டா அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவேண்டுமென தாம் விரும்புவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதிமுடிவை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தாம் நினைக்கவில்லை எனவும் கோட்டா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று பேசியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். http://athavannews.com/பஸில்-ராஜபக்ஸவே-எனது-தெர/
-
- 1 reply
- 255 views
-
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பான வலயமாக முன்னெடுக்க நடவடிக்கை : அமைச்சர் அலி சப்ரி நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்திற்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத…
-
- 1 reply
- 507 views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 28 யூன் 2011, 00:59 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜுலை 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்க…
-
- 8 replies
- 994 views
-
-
பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடி…
-
- 0 replies
- 269 views
-
-
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் போராட்டம் written by adminJuly 31, 2023 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது https://globaltamilnews.net/2023/193522/
-
- 0 replies
- 168 views
-
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் சேர்ந்தால் நாட்டின் இறைமை பாதிக்கப்படும் அதுதான் இலங்கை போன்ற நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய மறுக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார் நீதி அமைச்சர் ஹக்கீம். . ஆசிய ஆபிரிக்க சட்டமன்றத்தின் 50ஆவது அமர்வில் மேற்கூறப்பட்டது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஹகீம் கூறியுள்ளார். இதேவேளை, ஆசிய ஆபிரிக்க சட்ட மன்றத்தில் உள்ள நாடுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான விளக்கத்தினை வழங்கும் முகமாக அடுத்த வாரம் மலேசியாவில் பயிற்சி பட்டறையொன்றை சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார். சர்வதேச பயங்கரவாதம், சர்வதேச வர்த்தக சட்டம், சட்டவிரோத ஆட்கடத்தல், பெண் மற்றும் சிறுவர் துஷ்பிர…
-
- 1 reply
- 498 views
-
-
சிறீலங்காவுக்கா நிதியினை நிறுத்துக: யப்பானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து சிறீலங்காவுக்கான யப்பானியத் தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மாருவெலப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு வந்த பின்னர் கிழக்கு மட்டக்களப்பில் 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்வதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு யப்பான் வழங்கும் அபிவிருத்தி நிதி யுத்த தளபாடத்திற்கே பயன்படுவதாகவும் எனவே சிறீலங்கா அரசுக்கு வழங்கும் நிதியினை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 0 replies
- 713 views
-
-
விடுதலைப் புலிகளின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் இலங்கை அரசை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ, புலிகளுடன் நடந்த இறுதி யுத்தத்தின் விளைவுகள் இலங்கை அரசை இப்போது மீள முடியாத மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. புலிகளின் கதை முடிந்தது’ என்று கொக்கரித்த மஹிந்த ராஜபக்ஷேவை ‘சேனல் -4’ வடிவத்தில் இப்போது புலிகளின் ஆவி வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. வன்னியில் 2009 ம் ஆண்டு மே மாதம் பெரிய முள்ளிவாய்க்காலுடன் விவகாரத்தை முற்றிலும் தீர்த்தாகி விட்டது என்று பெருமூச்சு விட்ட இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு இப்போதுதான் உண்மையான சோதனைக் களம் திறந்திருக்கின்றது. இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்ற ஐ.நாவின் அறிக்கை ஒருபுறம், இலங்கைக்கு பொருளாதாரத் தடை…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் இந்தியா, அணு உலையை அமைக்காது என்று இந்திய-இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது நேற்று இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அணுசக்தி தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, இலங்கையர்களுக்கு மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் அணு தொடர்பான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. இந்த பயிற்சிகள் இந்தியாவில் வைத்தே வழங்கப்படவுள்ளன. எனினும் இதன்போது இந்தியாவின் கூடங்குளம், கல்பாக்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையை போன்று இலங்கையிலும் அணுஉலைகள் அமைக்கப்படாது என்று இந்தியா, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாடுகளுக்கு இடையிலும் உடன்படிக்கை இல்லாதபோதும் இந்தியா…
-
- 3 replies
- 512 views
-
-
உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது.புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்கு…
-
- 2 replies
- 692 views
-
-
உயிரை மட்டும் காக்கும் நோக்கோடு சர்வதேசக் கடலில் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவுவோம்: [Monday, 2011-07-11 21:12:47] கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்ப…
-
- 0 replies
- 445 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. கடந்த சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அது குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாடாளுமன்றத்திற்கு அருகில் கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் போது ஜனாதிபதி உட்பட பிரதம அதிதிகள் மீது தாக்குதல் நடத்த திட…
-
- 0 replies
- 263 views
-
-
“ஏழு அல்ல பதினாறே”; கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றமானது எதிர்வரும் 7 ஆம் திகதி கூட்டப்படவிருந்த நிலையில் அதுபோலியான பிரசாரம் என அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதியே பராளுமன்ற கூட்டத்தொடரானது கூட்டப்படுமென அரசாங்க ஊடக பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/43817
-
- 2 replies
- 548 views
-
-
தமிழ் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை இவ்வாரம் சந்திக்கும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் - இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படும் 27 AUG, 2023 | 08:50 PM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் இவ்வாரம் நடைபெறவுள்ள சந்திப்பில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் த…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம். [Friday, 2011-07-15 11:23:02] எதிர்வரும் இருபத்துமூன்றாம் திகதி, வடக்கில் இடம்பெற இருக்கின்ற உள்ளராட்சித் தேர்தலை, சிறீலங்கா அரசு அதிமுக்கியமாகக் கருதி, அதை வெற்றிகொள்ளும் வெறியுடன் முழுவீச்சில் தனது செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. இத்தேர்தலில் கணிசமான வெற்றியைச் சம்பாதித்துக்கொள்வதின் ஊடாக பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என, ராஜபக்ச அரசு கருதிச் செயற்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகம் கவனிக்கப்படாத உள்ள+ராட்சித் தேர்தலை எதிர்கொள்ள, இம்முறை சிறீலங்கா அரசின் அமைச்சுப்பரிவாரங்கள் வடக்கு நோக்கி படையெடுத்துள்ளன. சிறீலங்கா சனாதிபதி ராஜபக்சவும் வடக்கு சென்று ஐந்து நாட்கள் தங்கிநின்று,…
-
- 0 replies
- 296 views
-
-
விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் தமிழரசுக் கட்சி அறிவிப்பு Nov 07, 20180 விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-சுயமாக-கட்ச/
-
- 1 reply
- 3.4k views
-
-
மன்னாரில் படைநகர்வு; முறியடித்தனர் புலிகள் கிளிநொச்சி,மே13 மன்னார் மாவட்டத்தில் விளாத்திக் குளம் பகுதி ஊடாக பரசங்குளம் பகுதியை நோக்கி நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு மணியளவில் முன்னேறிய படையினரின் நகர்வை முறியடித்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதலுடன் முன்னே றிய படையினருக்கும் தமது அணியின ருக்கும் இடையில் மோதல் இடம்பெற் றது என்றும் படையினரின் நகர்வு முறியடிக்கப்பட் டது என்றும் விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து அரச தரப்பில் இருந்து இச்செய்தி எழுதப்படும் வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. உதயன்
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது : 19 ஜூலை 2011 கிளிநொச்சியில் நாளைய தினம் வர்த்தக நிலையங்களை மூடினால்,மீண்டும் திறக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையின் ஓடுதளம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதனை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஷர்ச அபேவிக்ரம இன்று திறந்து வைத்தார். இன்று முற்பகல் 11.30 அளவில் வை-12 ரக விமானம் ஒன்று இந்த ஓடுத்தளத்தில் தரையிறக்கப்பட்டது. கிளிநொச்சியின் ஏ9 வீதியில் இருந்து 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விமான ஒடுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை கிளிநொச்சியில் நாளைய தினம் வ…
-
- 0 replies
- 336 views
-
-
நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் சிறிலங்கா – சீனா கூறுகிறது MAR 05, 2015 | 12:09by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சீன- சிறிலங்கா நட்பின் ஒட்டுமொத்த நலன்களுக்காக, சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள, சீன நிறுவனங்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சீனா தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாகவே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், ஹுவா சுன்யிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பீஜிங்கில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சீனாவுக்கு சிறிலங்கா எவ்வாறு விளக்கமளித்துள்ளது, இதற…
-
- 3 replies
- 739 views
-