ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிழாங்குளம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 738 views
-
-
Views - 26 'வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும்;; காணிகள் அபகரிக்கப்படுகின்றன' என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மன்னார் மாவட்டத்தில் விளையும் விளாம்பழங்கள் தனித்துவமான சுவையுடையவை. இதனால், மன்னாரில் வெற்றுக்காணிகளில் பெரிய அளவி…
-
- 1 reply
- 383 views
-
-
கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர் மாயம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் இருந்த வெளிநாட்டர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யவும் அவரை தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த வெளிநாட்டவரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு பொது மக்களின் உதவியினை நாடியுள்ளார். குறித்த நபரை அடையாள…
-
- 1 reply
- 314 views
-
-
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% …
-
- 0 replies
- 113 views
-
-
வேலை தெரியாத கபடத்தனமான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தனது இயலாமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்க பொது எதிரியாக ஜே.வீ.பீயினரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள் சமரவீர குற்றம்சுமத்தியுள்ளார். ஹிட்லர் அன்றும், றொபர்ட் முகாபே தற்போதும் இவ்வாறு போலி எதிரிகளைச் சுட்டிக்காட்டி தமது தவறினால் ஏற்பட்ட பொருளாதார சமூக சீரழிவுகளுக்கான காரணங்களை அந்தப் போலி எதிரிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறியுள்ளார். கள்ள மற்றும் வன்முறை மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
02 Oct, 2025 | 04:44 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்ப…
-
-
- 5 replies
- 287 views
-
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்க…
-
-
- 7 replies
- 554 views
-
-
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் இடம்பெற்ற இவ் போராட்டமானது யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது. இவ் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், அரசே ஜனநாயகத்தை உறுதி செய்! வெளியேறு வெளியேறு! இராணுவமே வெளியேறு! தாக்காதே தாக்காதே உள்ளூராட்சி தலைவர்களை தாக்காதே! எமது கடல் எமக்கு வேண்டும்! எமது நிலம் எமக்கு வேண்டும்! அரசே ஜனநாயகத்தை சீண்டாதே! எமது நிலம் எனக்கு வேண்டும்! எமது தாயகமே எமக்கு வேண்டும்! மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே! எமது உரிமை எமக்கு வேண்டும்! போன்ற கோசங்கள் மற்றும் பதாதைகளை…
-
- 0 replies
- 469 views
-
-
கொரோனா வைரஸ்: 20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இலங்கையின் பிரதான நகரமாக திகழ்கின்ற கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்ப…
-
- 0 replies
- 536 views
-
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி! பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கசிந்த செல்வம் அடைக்கலநாதனின் உரையாடலை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு, கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தாமாகவே முன் வந்து தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் , செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பெண் ஒருவர் தொடர்பில் மற்…
-
-
- 16 replies
- 1.6k views
- 2 followers
-
-
நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்றும், அனைவரும் இலங்கையர்களே என்றும் யுத்தம் நிறைவடைந்த பின்னரே ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் இலங்கைக்கு சுதந்திம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இந்த அறிவிப்பை அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் வெளியிட்டிருந்தால், இலங்கையில் பாரிய அளவுக்கு இனப்பிரச்சினை தோன்றி இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 414 views
-
-
காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால தெரிவித்துள்ளார். யட்டயந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/7185
-
- 0 replies
- 206 views
-
-
17 Nov, 2025 | 12:51 PM (ஸ்டெப்னி கொட்பிறி) நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை கடற்கரை ப…
-
- 1 reply
- 183 views
- 1 follower
-
-
யாழில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 10:16 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இடம்பெறுகின்ற தாக்குதல்களை அடுத்தே படையினர் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் கைவிடப்பட்ட வீடுகள், வீதியோரங்களில் உள்ள பற்றைகள் அனைத்தும் படையினரால் சோதனையிடப்படுகின்றன. அத்துடன் கிறிஸ்தவ, இந்து ஆலயங்களிலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதினம்
-
- 0 replies
- 711 views
-
-
[size=2][size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 14பேரையும் நாளை திங்கட்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் 14பேரும் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை தங்காலை மேலதிக நீதவான் ரஞ்சன் விஜேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பிதுள்ளார். தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீன்பிடி படகை கடத்தியதாகவும் நடுகடலில் வைத்து சிலரை கொலை செய்துவிட்டு அவர்களின் படகை கடத்திச் சென்றதாகவும் மேற்படி நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்ப…
-
- 0 replies
- 552 views
-
-
தமிழ் தேசத்தின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- சபையில் கஜேந்திரகுமார் mp வாழ்த்து! ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது சபை விவாதத்தை ஆரம்பித்தார். https://athavannews.com/2025/1453961
-
- 5 replies
- 336 views
- 1 follower
-
-
முகப்புப் புத்தகம் மற்றும் கூகுள் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சிறீலங்காவுக்குப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சாலக ரத்நாயக்கவின் அழைப்பையேற்றே மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களான மார்க் சூக்கம்பேர்க் மற்றும் சுந்தர்ப்பிச்சை ஆகியோரே சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். http://thuliyam.com/?p=30175
-
- 0 replies
- 297 views
-
-
எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி! கொழும்பு – வெலிசறை கடற்படை தளத்தின் கடற்படை அதிகாரி ஒருவர் எலிகாய்ச்சல் காரணமாக இன்று (26) அதிகாலை மரணமடைந்துள்ளார் என்று கடற்படை அறிவித்துள்ளது. வெலிசறை கடற்படை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கலென்பிந்துவேவா பகுதியை சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் சுனில் பண்டார (35-) வயது என்பவரே மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்த போது தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் வெலிசறை கடற்படை தளத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா நடைமுறையை பின்பற்றி அவரது இறுதி சடங்கை செய்ய சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/எலிகாய்ச்சலினால்-வெலி/
-
- 8 replies
- 1.2k views
-
-
08 Dec, 2025 | 05:11 PM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது. இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை…
-
- 0 replies
- 125 views
-
-
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள மகா ஓயா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
In இலங்கை May 2, 2020 12:10 pm GMT 0 Comments 1076 by : Litharsan அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர். நாளாந்த கூலித் …
-
- 17 replies
- 2.4k views
-
-
19 Dec, 2025 | 01:04 PM "தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்…
-
- 0 replies
- 144 views
-
-
பிரதியமைச்சருக்கும் எம்.பி.க்கும் இடையில் கும்மாங்குத்து துசணங்கள் பறந்தன தளபாடங்கள் நடுங்கின தடுத்தது சிவப்பு அழகன் கனகராஜ் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவகாரம், அவையில் நேற்றுச் சூடுபிடித்து அணைந்திருந்த நிலையில், பிரதியமைச்சருக்கும் அவ்வணியின் உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் நாடாளுமன்றுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கைகலப்பு விவகாரம் நாடாளுமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கைகலப்பில் ஈடுபட்டுக்கொண்ட இவ்விரு உறுப்பினர்களும் தூசணத்தை அள்ளிக் கொட்டி, அந்த இடத்தையே அதிரச்செய்து, அசிங்கப்படுத்தி விட்டனர…
-
- 0 replies
- 247 views
-
-
ஜனாதிபதியுடன் பேசினார் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் சார்ல்ஸ் ஓப்ரைன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது தொலைபேசியூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளளன, இதன்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது, அமெரிக்க மக்கள் சார்பாக இலங்கைக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும…
-
- 1 reply
- 407 views
-
-
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி 29 December 2025 மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர…
-
- 0 replies
- 191 views
-