ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
"முதலமைச்சர் பதவிக்காக மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதால் என்னையும், என் குடும்பத்தாரையும் சிலர் அச்சுறுத்துகின்றனர். ஆனால், இவற்றுக்கு நான் பயந்தவனல்ல. பல வருடங்களாக விடுதலைப் புலிகளுடன் போரிட்டவன் நான். இந்த யுத்த காலத்தில் புலிகள் கூட என் மனைவியையோ, பிள்ளைகளையோ அச்சுறுத்தவில்லை. ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றின் வேட்பாளராக நிற்க முயற்சிக்கும் போது எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்கும் ஆரம்ப முயற்சியாக இத்தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.'' இவ்வாறு வடமத்திய மாகாண சபைக்காக ஐ.தே.க. சார்பில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். வடமத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை…
-
- 0 replies
- 952 views
-
-
இராணுவ தலைமையகத்தில் தன்னை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விடுதலை செய்யுமாறு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்த சந்தேக நபரை விடுதலை செய்தது போன்று, இராணுவ தலைமையகத்தில் புலிகள் நடத்திய தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறையில் இருக்கும் மொரிஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டுமென கூறியுள்ளார். தன்னை …
-
- 0 replies
- 246 views
-
-
முல்லைத்தீவு நகரில் அமைந்திருக்கும் மக்கள்வங்கி மற்றும் இலங்கை வங்கிக் கிளைகளில் ஒவ்வொறுமாதமும் 20,21,22, ஆகிய திகதிகளில்இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள்(ATM) தாணியங்கி மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை சந்தித்துள்ளனர். அவசரமாக(ATM) பணத்தை பெற்றுக்கொள்வதற்கு இராணுவத்தினருடன் வரிசையில் நிற்கமுடியுமா? என்று யுவதி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஏனைய மாவட்டங்களைவிட முல்லைத்தீவு மாவட்டதில் அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறை நாட்களிள் ஒரு நாளை வீனாக்காமல் கடமை நேரத்தில் இராணுவ சீருடையுடன் வாகனங்கள் சகிதம் வந்து மேற்குறிப்பிட்டது போல் செயற்படுவதை அவ…
-
- 2 replies
- 403 views
-
-
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து 29 June 2025 வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் …
-
- 1 reply
- 91 views
-
-
கிழக்கில் சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்துக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் தமிழ் பிரதேசங்களே முஸ்லிம் வர்;த்தகர்களின் வர்;த்தகங்களுக்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லொறிகளில் பொருட்களை கொண்டுவரும் சிங்கள வர்;த்தகர்கள் அவற்றை குறைந்த விலையில் தமிழ்; பிரதேசங்களுக்குள் கொண்டுசென்று விற்பனை செய்துவிட்டு செல்வது வழமை.இதன் காரணமாக தமிழ் மக்களிடமும் இந்த பொருட்களுக்கு நல்லவரவேற்பு உள்ளது. இதனை உணர்ந்த முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவே தமிழ் பிரதேசங்கள…
-
- 0 replies
- 902 views
-
-
[size=4]எனக்கு சிறையில் காணப்பட்ட சுதந்திரம் கூட நாட்டுக்கு மக்களுக்கு கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதி நேர்மையற்ற நாட்டில் மக்கள் வெளியே வாழ்ந்தாலும், சிறையில் வாழ்வதனைப் போன்றே இருக்கும்.[/size] [size=4]இரண்டரை வருடம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் எனக்கு இருந்த சுதந்திரம் கூட உங்களுக்கு கிடையாது. சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில் சுதந்திரமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டேன்.[/size] [size=4]எனினும், உங்களினால் அவ்வாறு சுயாதீனமாக கருத்துக்களை வெளியிட முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கல்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [si…
-
- 0 replies
- 263 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் இருக்கின்றார்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், தொடர்புடையவர்களை கைது செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கை வாழ் 30க்கும் மேற்பட்ட அடிப்படைவாத முஸ்லிம்கள் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையிலும் சவால்களை…
-
- 1 reply
- 294 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்வு
-
- 0 replies
- 319 views
-
-
நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான தீர்ப்பை இன்று வெளியி…
-
- 5 replies
- 1.2k views
-
-
காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளன…
-
- 2 replies
- 398 views
-
-
65,000 வீட்டுத்திட்டம் இரண்டு மாதங்களில் ஆரம்பம்! போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். போரின் காரணமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிதத்துள்ள இலங்கை அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கமைய, வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் யாருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாகத் தீர்மானிக்கப்படவுள்ள…
-
- 0 replies
- 351 views
-
-
பிரதேச மக்கள், பிரதேச சபை எதிர்ப்பு தென்மராட்சி-சரசாலை குருவிக்காட்டு பகுதியில் 896 ஹெக்டேயர் காட்டு பகுதி மற்றும் விவசாய நிலங்களை வனவளத் திணைக்களத்தினர் அபகரிக்க முயற்சி எடுத்திருப்பதாக சாவகச்சேரி பிரதேச சபையினர் மற்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சரசாலைப் பகுதியில் உள்ள அரச காணிகள், தனியாரின் விவசாய நிலங்கள், மயானம், மேச்சல் தரவைகள், மீன்பிடி குளங்கள் மற்றும் மக்களுக்கான பொழுதுபோக்கு சவாரித் திடல் ஆகியவற்றை உள்ளடக்கி வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது. எல்லைப்படுத்தல் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபைக்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ தெரியாமல் இரகசியமான முறையில் ஓரிரு தினங்களுக்கு முன்னராக மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 247 views
-
-
09 AUG, 2025 | 01:07 PM (எம்.மனோசித்ரா) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன. இம்முறை சிங்கள மொழி மூலம் 2,31,637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76,313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டு மொத்தமாக 3,07,951 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார். பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது. இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் …
-
- 8 replies
- 2.3k views
-
-
[size=4]யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழமாகப் பார்க்கவேண்டும். அதாவது இவ்வாறானதொரு இனப்படுகொலை இடம்பெறவேயில்லை என சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். அத்துடன் இதில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறு COLOMBO TELEGRAPH என்னும் ஊடகத்தில் Dr. Pradeep Jeganathan எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 1983 யூலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறிலங்கா இராணுவப் படைகளால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை ஆகிய இரு மிகப் பெரிய நிகழ்வுகளால் சிறிலங்காவின் நவீன …
-
- 1 reply
- 587 views
-
-
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி வீணை சின்னத்திலேயே போட்டி - டக்ளஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்ட பனை தென்னை வள சகூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்திருந்தார். இதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பல்வேறு கட்சிகளும் அதே போல புதிய புதிய கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடுகின்ற …
-
- 2 replies
- 385 views
-
-
கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீ…
-
- 1 reply
- 159 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் பாடசாலை மாணவிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளினதும், பணியாளர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், பூங்கோதையின் 'குருதிச்சுவடி' நூல் வெளியீடும் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 504 views
-
-
உடனடியாக அமுலக்கு வரும் வகையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் காலியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவை பதவி மாற்றங்களில் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் பதவி இழக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131640/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 353 views
-
-
கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பையேற்று அதற்கு ஆதரவு வழங்காதது முஸ்லிம் காங்கிரஸ் செய்த பெரும் துரோகமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 2 replies
- 674 views
-
-
வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு! adminSeptember 24, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220737/
-
- 0 replies
- 91 views
-
-
யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார். இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட…
-
- 2 replies
- 893 views
-
-
ஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 752 views
-
-
எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எழுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் - சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது - ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு 'தம்மையே' தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து க…
-
- 1 reply
- 1.4k views
-
-
திவிநெகும சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்ற பஸ்களில் அழைத்து வந்து இப்போராட்டத்தை ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி யினரும் சமுர்த்தி யாழ்.உதவி ஆணையாளரும் இணைந்து நடாத்தியுள்ளனர். யாழ்.மணிக்கூடு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணியானது யாழ்.மாவட்டச் செயலகத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் தாம் என்னத்திற்கு பேரணியாகச் செல்லுகின்றோம் என்பதையே அறியாமல் கலந்து கொண்டனர். குறிப்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வாசகங்களை பொது மக்கள் பலர் ஏந…
-
- 2 replies
- 453 views
-