ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
சனல் – 4 தமிழகத்தில் உறைநிலை மௌனம் சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது. உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது. சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ச.பா.நிர்மானுசன் உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வய…
-
- 0 replies
- 1.5k views
-
-
சனி 29-12-2007 02:05 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] இந்தியாவின் இரட்டை அணுகுமுறை சிறீலங்கா படைத்துறையினர் ஆயுத தளபாடங்களையும், தற்காப்பு உபகரணங்களையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பழைய அமெரிக்க தயாரிப்பு ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களை பெறுவதற்கு சிறீலங்கா அரசு முயன்றபோது, அமெரிக்க அரச திணைக்களத்தால் ஏற்றுமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க தாமதம் ஏற்பட்டது. அதனால் ராடார் கருவிக்கான உதிரிப்பாகங்களைப் பெற கால தாமதம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட முடியாத, மீட்பு நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கக் கூடிய கடற் கலங்…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஸ்ரீலங்கா பேருந்தில் நடந்த அதிசயம் பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவத…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியில் இஸ்ரேலிய நிறுவன மொன்றுடன் கைகோத்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநா டுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற் றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புக் கள் பதிவுசெய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமை ச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நோக்கமாகும். ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில் நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்டகால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார். ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா படையினரின் தமிழ் இன அழிப்பு படுகொலையை களியாட்டங்கள் மூலம் கொண்டாடிவரும் சிங்களக் காடையர்கள், தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ்ப் பெண்களின் தங்க நகைகளை அபகரித்த இரண்டு சம்பவங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. வெள்ளவத்தையில் உள்ள அறத்துசா வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மதுபோதையில் சென்ற சிங்களக் காடையர்கள், வீதியால் சென்ற தமிழ்ப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை வலுக்கட்டாயமாக அறுத்தனர். அந்தப் பெண் உரத்து கத்தியபோது அந்த சத்தம் வெளியே கேட்காத வகையில் சிங்களத்தில் தமது படை வெற்றி முழக்கங்களை எழுப்பிக்கொண்டே தமது அடாவடித்தனத்தை அவர்கள் அங்கே நிறைவேற்றியுள்ளனர். இரண்டாவது சம்பவம் வெள்ளவத்தை சாலிமென்ட் வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மு…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் …
-
- 7 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம் [வியாழக்கிழமை, 11 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படை…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது . தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், புதிய தமிழ்ப்புலிகள் என்ற இயக்கத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தே…
-
- 4 replies
- 1.5k views
-
-
வடக்கில் தாக்குதலை ஆரம்பிப்பதா? கிழக்கை தொடர்ந்து தக்கவைப்பதா? -விதுரன்- தெற்கில் அரசியல் நிலைமை மோசமடைகிறது. கிழக்கை கைப்பற்றி பாரிய வெற்றிக் கொண்டாட்டத்தை அரசு நடத்திய போதிலும் தெற்கில் அரசுக்கெதிராக பெரும் உணர்வலைகள் எழுந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணி காட்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கை படையினர் கைப்பற்றியதற்கு அரசியல் ரீதியாக வழங்கப்படும் முக்கியத்துவமானது, குடும்பிமலையின் (தொப்பிகல) வீழ்ச்சியானது இராணுவ ரீதியில் புலிகளுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தவில்லையென்பதை தெளிவுபடுத்துகிறது. அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் கிழக்கை இழந்தது புலிகளுக்கு பின்னடைவுதானென்றாலும் குடும…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது. இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ‘இலங்கை இனப்பிரச்சனை…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதுக்குடியிருப்பில் வான்குண்டுத் தாக்குதல்: வயோதிப பெண் பலி- இருவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 29 மே 2007, 16:36 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் வயோதிப பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.55 மணியளவிலும், பின்னர் பிற்பகல் 2.20 மணியளவிலும் புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்பில் நுழைந்த மிக்-27 ரக வானூர்திகள் வேணாவில் பகுதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வயோதிபப் பெண்ணான புதுக்குடியிருப்பு வேணாவிலைச் சேர்ந்த மெய்யாப்பிள்ளை அழக…
-
- 3 replies
- 1.5k views
-
-
'ராஜீவ் காந்தியின் கொலை என்பது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்குhப் பரிகாரமாக 35 இலட்சம் இலங்கைத் தமிழர்களைப் பலிகொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்பதை காங்கிரஸ் கட்சி மீள் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் இருவரையும் அரசு விடுவிக்க வேண்டு என்றும் வலியுறுத்தியுள்ளார் நடிகர் சரத்குமார். மேலும் : கருணாநிதி - பிரணாய் முகர்ஜீ சந்திப்பின் போது தெரிவிக்கபட்ட கருத்தின்படி, நோர்வேத் தூதுக் குழு மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு இலங்கை அரசு உடனடியாக இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நோர்வேத் தூதுக் குழுவில் தமிழகத் தலைவர்களும் இடம் பெற வேண்டும் என்றார் சரத்குமார். …
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் முருகண்டி ஆலயத்தினை வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுப்பு யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அமைந்திருக்கும் முருகண்டி ஆலயத்தினை மீள புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் இந்துக்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு இந்த ஆலயத்தில் வழிபடுவதற்கான உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாக குடாநாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏ9 வீதியூடான போக்குவரத்து தற்போது திறந்து விடப்பட்டுள்ள போதிலும் வாகனத் தொடரணியாகவே படையினர் வாகனங்களை வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியிலுள்ள முருகண்டி ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். …
-
- 7 replies
- 1.5k views
-
-
அச்சம் தரும் இங்கிலாந்தின் புலி உறுப்பினர் தஞ்சக்கோரிக்கை இங்கிலாந்தின் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தஞ்சம் நிலை கோரலாம் என்ற அறிவிப்பு. மேலோட்டமாகப்பார்க்கும்போது தமிழர்களுக்கு அதரவு நிலைப்பாடு இருந்தாலும், இது ஆராய்ந்து தான் தமிழர்கள் முடிவு செய்யவேண்டும். 1. சமாதானம் அமூலில் இருக்கும்போது ஒரு தலைப்பட்சமாகப் புலிகளுக்குத் தடை அறிவித்தவர்கள் 2. தமிழர்கள் வகை தொகையாகக் கொல்லப்பட்டபோது ஆயுதங்கள் அள்ளி வழங்கியவர்கள் 3. தமிழர்கள் வீதி வீதியாகக்போராட்டம் செய்தபோது கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் 4. தமிழர்களின் உரிமை என்கின்ற விடயத்தையே இன்றும் கணக்கொடுக்காமல் கண்மூடி இருப்பவர்கள். 5. புலிகள் பயங்கரவாதிகள் என்று சித்தரித்தவர்கள் 6. ஈழத்தமிழர் வரலாறே முழு…
-
- 4 replies
- 1.5k views
-
-
தீர்க்கதரிசனமான ஒரு தலைமை. ஒழுங்கமைப்பட்ட ஒரு நாட்டிற்கான கட்டுக்கோப்பு. அந்த நாட்டின் நிர்வாகப் பரம்பல் அதனூடான திடமான திட்ட நடைமுறைகள். அதற்கான படையணிகளின் பங்கேற்பு. அவற்றின் சீரிய செயற்பாடு. எல்லைகள் எத்தகைய எதிர்ப்பையும் தாண்டிக் காக்கப்பட்ட அந்தத் தேசம். வடக்கே 70 மைல் நீளத்திற்கு கட்டிக்காக்கப்பட்ட எல்லைக்கோடு. மணலாற்றில் மற்றுமொரு மாபெரும் களம். விடுவிக்கப்பட்ட கிழக்கில் நிலச் சொந்தக்காரருக்கே சிம்மாசனம். இப்படித்தான் இருந்தது அந்தத் தேசம். 2001 ஆம் ஆண்டில் உலகால் நம்பமுடியாத சாதனைகளைச் சாத்தியமாக்கிய அந்த மண்ணில் வேர் ஊன்றியது உலகின் பார்வை. ஆனையிறவை எப்படி வென்றார்கள் என்பதை ஆராய்வதற்காகவே வகுப்பெடுத்தது அமெரிக்கப் படைகளின் தென்னாசிய பசுபிக் பிராந்திய க…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளின்டனின் தொண்டு நிறுவன ஆலோசனை குழுவில் சந்திரிகா நிஷாந்தி கிளின்டன் குளோபல் இனிரேற்றர் (வறுமை நிவாரண குழு) ஆலோசகர் குழுவில் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளதாக இலங்கையிலுள்ள அவரது காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டன் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த நிவாரண குழுவில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.கிளின்ட
-
- 4 replies
- 1.5k views
-
-
ஹவுஸ் ஒஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ்’ என்றழைக்கப்படும் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபையின் 38 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ. புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கையில், சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வை எட்டுவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை அமெரிக்க அரசு நியமிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அவர்களது கடிதத்தில்: சிறீலங்காவில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்கு தீர்க்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ள கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலும் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். சர்வதேச பிரச்சனைகளில் தலைமைத்துவப் பண்பை நிலைநிறுத்திவரும் அமெரிக்காவுக்கு, சிறீலங்காவில் துன்புறும் மக்களின் இன…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 1 reply
- 1.5k views
-
-
கம்பஹா, கணேமுல்லயில் தலையற்ற நிலையில் இரண்டு ஆண்களினதும் இரண்டு பெண்களினதும் முண்டங்கள் மீட்பு. கம்பஹா ,கணேமுல்ல பிரதேசத்தின் பொல்லத பகுதியில் அமைந்துள்ள குழியொன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் நான்கு சடலங்கள் நேற்றுக் காலை 10.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்களினதும் இரண்டு பெண்களினது சடலங்களுமே இவ்வாறு முண்டங்களாக மீட்கப்பட்டுள்ளதாக கணேமுல்ல பொலிசார் தெரிவித்தனர். இந்த நால்வரும் சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமெனவும் சடலங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே கொலைசெய்யப்ட்டுள்ளதாகவும் இதனையடுத்து சடலங்கள் குழியினுள் போட்டு புதைக்கப் பட்டிருக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
புதன் 30-05-2007 20:03 மணி தமிழீழம் [மயூரன்] மடு முன்னரங் நிலைகளில் மோதல் - 5 படையினர் பலி இன்று புதன்கிழமை காலை 6 மணியளவில் சிறீலங்கா படையினர் வவுனியா மன்னார் முன்னரங் நிலைகளில் இருந்து மடுநோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.இதன்போது சிறிலங்கா படையினர் தரப்பில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& தம்பனை ஊடான இராணுவ முன்னகர்வு முறியடிப்பு Written by Ellalan - May 30, 2007 at 06:52 PM மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகளின் ம…
-
- 1 reply
- 1.5k views
-
-
மனோ கணேசனின் அறிக்கை ஒரு பொறுப்பற்ற செயல் - ஐனாதிபதி செயலகம் கண்டனம் செவ்வாய், 10 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடக்கு கிழக்கு மக்கள் கொழும்புக்கு வருவதை தவிர்க்கும் மனோ கணேசன் கோரியிருப்பது பொறுப்பற்ற செயல் என ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் அநாவசியமான பீதி ஏற்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் இந்தக் கூற்றின் மூலம் சர்வதேச சமூகத்தில் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மணித்தியாலத்திற்கு ஒருமுறை அரச ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாக அரவது அறிக்கையில் குற…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிள்ளையார் தலைமையில் யாழ்.செயலகத்தில் விசாரணை வன்னியில் உயிரிழந்தவர்களின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விநாயகர் தலைமையிலான குழுவினர், ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக யாழ்ப்பாண செயலகத்தில் பேரணி நடத்திய அரச பணியாளர்களை இரகசியமான முறையில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். ஜெனிவாத்தீர்மானத்திற்கு எதிராக யாழ்.செயலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் பயத்தின் நிமிர்த்தமே நாங்கள் அவ்வாறு கலந்து கொண்டோம். உண்மையில் எங்களுக்கு அதில் விருப்பமே இல்லை. எங்கள் கைகளில் பதாகைகளைத் தந்து தூக்கிப்பிடியுங்கள் என்றார்கள். பதாகைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் தந்த பதாகைகள் மூலம் எங்கள் முகத்தை ம…
-
- 3 replies
- 1.5k views
-
-
கடந்த இருதினங்களில் மணலாறில் 15 படையினர் பலி – விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டளை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி மணலாற்றுப்பகுதியில் கடந்த இருநாட்களில் இருஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மதியம் 1.15 மணியளவில் சிலோன் தியேட்டர் பகுதியில் இருமணிநேரம் முறியடிப்பு தாக்குதல் நிகழ்ந்ததாகவும் இதில் 5 படையினர் கொல்லப்பட்டதாகவும் ஒருபடையினரது உடலம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும தெரியவருகிறது. இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு ரி-56 ரக துப்பாக்கி, 18 மகசீன், 4000 ரவைகள், ந…
-
- 3 replies
- 1.5k views
-