ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி பிரித்தானியாவிடம் வீரகேசரி நாளேடு போர்த்துக்கல் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை ஜூலை முதலாம் திகதி முதல் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஏற்றுக்கொண்டுள்ளது.இலங்கைக்
-
- 2 replies
- 1.5k views
-
-
பாகிஸ்தானிடமிருந்து 100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத கொள்வனவுக்கு நடவடிக்கை 1/11/2008 12:00:56 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானிடமிருந்து100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று ஜேன்ஸ் பாதுகாப்பு சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 18 மாதங்களில் மட்டும் 200 மில்லியன் டொலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 450 கோடியாகும். தனது இராணுவ பலத்தை அதிகரிக்க பாகிஸ்தானிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விடுதலைப்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது! நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும். தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் திமுக அல்ல. அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள். இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பில் மூத்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 24 யூலை 2006, 11:12 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கும்பலான ஈ.பி.டி.பி.யின் மூத்த உறுப்பினர் மகா கணபதிபிள்ளை (வயது 55) இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈ.பி.டி.பி. கும்பலின் தலைவராகவும் மகிந்தவின் அமைச்சராகவும் உள்ள டக்ளசின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக செயற்பட்டு வந்த மகா கணபதி பிள்ளை மீது வெள்ளவத்த ஐ.பி.சி. வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த மகா கணபதிபிள்ளை கலுபொவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி? தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்ற…
-
- 3 replies
- 1.5k views
-
-
நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார். அனைவருக்கும் வாழ்வுரிமை, இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதிகார பகிர்வளிக்க வேண்டும் ஆகியவையே `பிளாட்ஃபாரம் ஃபார் ஃப்ரீடத்தின்' நோக்கம். ராஜபக்ஷே உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்கள் அனைவருமே இவரது நண்பர்கள். 1980களில் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் தொடங்கியபோது, சிங்கள அரசு அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முயன்றது. நாள்தோறும் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தபோது அவர்களுக்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளி 16-11-2007 11:34 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னி முறிகண்டிப்பகுதியில் பகுதியில் வான்வழித்தாக்குதல் இன்று காலை 6.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் வன்னி முறிகண்டிப்பகுதியில் மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பில் ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.5k views
-
-
அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி. அம்பாறை தமன பக்மிட்டியாகம பிரதேசத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற் படைவீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 8.30க்கு இடம்பெற்றுள்ளது வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் இரண்டு ஊர்காவல் படையினரும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் காயமடைந்தனர் இத்தாக்குதலில் படையினரது கவசவாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த படையினர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi.net/
-
- 3 replies
- 1.5k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு திருகோணமலை, மட்டு., அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன் கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகரட்னம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டு. மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யபட்ட அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ். பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்டபட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்யபட்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச பாசிசம். உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இணைந்து அதிபயங்கரக் கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தை உருவாக்கிய இந்த நாள் மனித குலம் தோல்வியடைந்த நாள். இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போ…
-
- 4 replies
- 1.5k views
-
-
யுத்த நிறுத்த உடன்பாட்டை உடனடியாக இரத்துச் செய்துவிட்டு யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; நோர்வேத் தரப்பை உடனடியாக சமாதான முயற்சியில் இருந்தும், அடுத்த கட்டமாக சிறிலங்காவில் இருந்தும் வெளியேற்றவேண்டும் எனவும் கூச்சலிட்டு வந்த சிலரது பேச்சைக் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. குறிப்பாக முகமாலையில் சிறிலங்கா இராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்த பின்னர் இவர்களை வெளியில் காணவில்லை, பேச்சுக்களைக் கேட்க முடியவில்லை. அரசாங்கத்தரப்பில் இருந்து நாளாந்தம் ஊடகங்களைச் சந்தித்து வந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெலவை சில நாட்களாக ஊடகங்களின் முன்னால் காணவில்லை. மாவிலாற்று விவகாரத்துடன் காலை மாலை எனப் பேசிவந்த அவர் சம்புூருடன் முழுநாளும் பேச்சையே தொழிலாக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் உண்மையான வரலாறு புரியாது பிதற்றிக்கொண்டிருக்கிறது ஜாதிக ஹெலஉறுமய' இலங்கையின் உண்மையான வரலாறு தெரியாது பிதற்றுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். கண்டியிலிருந்து ஆட்சி புரிந்த தமிழகம் இருந்து வந்த தமிழர்கள் யார் என்பது சம்பிக்க ரணவக்க அறியாதது ஏன்? ஹெல உறுமய இந்நாடு பௌத்தர்களுக்குரிய நாடாக மட்டும் இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும் எனப்பகற்கனவு காண்கின்றது. வடக்கு கிழக்கு இந்நாட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியென்பது வரலாற்று சான்று கொண்டது போல மேலகம் வாழ் தமிழர்களுக்கும் இங்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை- உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை “நமது நோக்கு” என்ற ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது. சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத…
-
- 0 replies
- 1.5k views
-
-
// தமிழீழ விடுதலைப்புப் புலிப் பெண் போராளிகள்.// ஈழ விடுதலைப் போராட்ட காலம் தந்தை செல்வா காலத்துக்கு முன், பின் என்று பிரிக்கப்பட்டு நோக்கப்படுவது அவசியம். தந்தை செல்வா காலம் வரை அகிம்சைப் போராட்டங்களே (சத்தியாக்கிரகங்கள்.. பேரணிகள்.. பேச்சு வார்த்தைகள்.. ஒப்பந்தங்கள்) தமிழர்களின் அரசியல் உரிமைக்கான முக்கிய போராட்ட வடிவங்களாக இருந்தன. இருந்தாலும் அவற்றின் தோல்வியும்.. அவை சிங்கள அரசுகளின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தவறியமையே ஈழத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சியுரிமையுள்ள தமிழீழத்திற்கான தேவையையும் ஆயுதப் போராட்டத்திற்கான தேவையையும் உருவாக்கியது. ஆனால்.. இன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளின் 33 ஆண்டு கால ஆயுதம் போராட்டத்தால் தான் தமிழீழம் என்பது கனவானது.. இத்தனை …
-
- 8 replies
- 1.5k views
-
-
இந்திய இராஜதந்திரத்தின் படுதோல்வியும் சீனாவின் அமோக வெற்றியும்! சீனாவின் இராஜதந்திரம் மெல்ல மெல்ல மேற்காக நகர்ந்து தென்னாசியாவில் இந்தியாவின் குரல்வளையை ஏறத்தாழ பிடித்துவிட்டது. மேற்கண்ட கருத்தை அமெரிக்கா முன் வைத்துள்ளது. முதலாவது இந்திய பார்ப்பனிய இராஜதந்திரம் அடிப்படை துவேஷம் கொண்டது என்பதால் அது தனக்கு அயலில் உள்ள அத்தனை தென்னாசிய நாடுகளையும் ஆண்டான் அடிமை நிலையில் பார்த்து வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு தென்னாசியாவில் உள்ள அத்தனை நாடுகளின் இரகசியமான முதல் எதிரியாக இந்தியா மாறியது. எல்லா நாடுகளும் இந்தியா நமது தொப்புள் கொடி உறவு, இந்தியாவை பகைத்து எதுவுமே செய்ய முடியாது என்று பேசியபடியே இரகசியமாக சீனாவுடன் கை கோர்த்துவிட்டன. இந்தியாவுக்கு ஆதரவாக இ…
-
- 7 replies
- 1.5k views
-
-
இன்று பிற்பகல் எனக்கும், இலங்கையின் பிரபல சிங்கள நாளேடு ஒன்றின் ஒரு சிங்கள பெண் செய்தியாளருக்கும் இடையில் சிங்கள மொழியில் நடந்த தொலைபேசி-பேட்டி உரையாடல்: [size=3][size=4]மனோ கணேசன் அவர்களே, நீங்கள் டெசோ மாநாட்டிற்கு போக போகிறீர்களாமே?[/size] [size=4]அது தொடர்பில்,இன்னமும் முடிவு செய்யவில்லை.[/size] [size=4]நீங்களா, யார் முடிவு செய்வது?[/size] [size=4]கட்சி தலைமை குழு[/size] [size=4]எப்படியும் போவீர்கள்தானே?[/size] [size=4]அதுதான் சொன்னேனே! முடிவு செய்ய வில்லை. நீங்கள் நான் அங்கு போவதை விரும்புகிறீர்களோ[/size] [size=4]சரி, போனால் என்ன பேசுவீர்கள்?[/size] [size=4]என்ன பேச வேண்டும் என எதிர்பார்கிறீர்கள்[/size] [size=4]இல்லை தமிழீழம் பற்றி பேசுவீர்களா…
-
- 3 replies
- 1.5k views
-
-
பாகிஸ்தானின் உளவுப்பிரிவு இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் - இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 2ஃ25ஃ2009 10:47:15 Pஆ - பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும்இ இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார். இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார். இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அன…
-
- 12 replies
- 1.5k views
-
-
புத்தல கதிர்காமம் வீதியில் கலகே என்னும் இடத்தில், புத்தலவிலிருந்து கதிர்காமம் நோக்கிச் பயணித்த பேருந்து இன்று காலை 10:30 மணியளவில் 144 வது மைல் கல் அருகில் துப்பாக்கிச் சுட்டிற்கு இலக்காகியுள்ளது. இத் துப்பாக்கிச் சுட்டில் இரு பெண்கள் உட்பட 3பேர்கள் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதாகவும், 26 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக கதிர்காம, அம்பந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இவ் வீதி தற்போது பாதுகாப்பக் காரணங்களுக்காக போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
-
- 3 replies
- 1.5k views
-
-
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நினைவு கூறும் விதமாக உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே தடைகள் ஏற்பட்டது. இப்போது கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் நவம்பர் 8ந் தேதி மாலை 5 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என்றும், பழ.நெடுமாறன் திறக்கிறார் என்றும் அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டது. இந்த முற்றம் திறப்பதில் சில சிக்கல்கள் உருவான நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற கிளை முற்றம் திறக்க அனுமதி அளித்தது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் வேறு தடைகள் வந்து திறப்பு விழாவை தடை செய்து விடலாம் என்று எண்ணிய விழாக் குழுவினர், …
-
- 9 replies
- 1.5k views
-
-
சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு... தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன். தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான். இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும…
-
- 16 replies
- 1.5k views
-
-
வியாழன், 03 பெப்ரவரி 2011 10:05 .இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக பிரித்தானியாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுகின்றமைக்காக பான் கீ மூன் லண்டன் வந்திருந்தார். இந்நிலையில் இவர் கையாலாகாதவர் என்றும் மீண்டும் ஒரு முறை ஐ.நா செயலாளர் நாயகமாக பதவி வகிக்கின்றமைக்கு அருகதை இல்லாதவர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரசாரம் செய்தனர். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக திரண்டு நின்று பான் கீ மூனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் இடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவுடன் எமது உறவுகளை சீர் செய்ய உதவுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மாட்டின் லூதர் கிங் -111 இடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவின் நட்பை பெறுவதற்கு நாம் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதனை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மகிந்த மாட்டினிடம் தெரிவித்துள்ளார்.நாம் அமெரிக்காவின் வெளிவிவகார…
-
- 2 replies
- 1.5k views
-
-
வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே .பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைய ஐயாவின் பூதவுடலுக்கு நேற்று 1000க் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர் கூடவே நேற்றிரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்ச்நதிரன் ,சொலமன் சிறில் ,பத்மினி சிதம்பரநாதன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சிவசக்தி ஆனந்தன் , வினோ நோகதாரலிங்கம், கே .துரைரட்ணசிங்கம் ,டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் கூட்டாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இறுதி அஞ்சலி ச…
-
- 8 replies
- 1.5k views
-