ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன் இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வே…
-
- 17 replies
- 1.5k views
-
-
சிகிரியா சுவரில் பெயர் எழுதிய மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற பெண்ணுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை தம்புள்ளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந் நிலையில் அந்த பெண்ணின் தயார் தனது மகளை விடுவித்து தருமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே அந்த சுவர்களில் பலருடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்த நிலையிலேயே தனது பெயரை அந்த சுவரில் அவர் எழுதியுள்ளார். தனது மகள் தெரியாமல்தான் பெயரை எழுதியதாகவும் தண்டனைக்குரியதென தெரிந்திருந்தால் எழுதியிருக்க மாட்டாள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். யாரும் உதவிக்கு இல்லாமல் தனிமையில் வாடுவதாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் தான் இருப்பதாகவும் தனது மகள் வீடு திரும்பாவிட்டால் சாவதை தவிர வேறு எதுவும் தனக்க செய்ய முடியவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
உலக புகைப்பட போட்டியில் மட்டக்களப்பு மாணவனது புகைப்படம் தெரிவு: [Friday, 2013-02-08 09:20:54] உலக வங்கியினால் நடத்தப்பட்ட உலக புகைப்பட போட்டியில் தென்னாசிய பிரிவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனுப்பி வைத்த புகைப்படம் தென்னாசிய பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இரு படங்களில் ஒன்றாகும். உலக அளவில் 6பிரிவுகளா இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் தென்னாசிய பிரிவிலேயே இம்மாணவன் அனுப்பி வைத்த புகைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக வீதி ஓரத்தில் தேங்காய் விற்கும் சிறுவன் ஒருவனை படம் பிடித்து அனுப்பிவைக்கப்பட்டபோது அப்படம் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. http://seithy.com/bre…
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 75 வோட்ஸ் மின் அழுத்தத்திற்கு கூடுதலான மின் குமிழ்களை தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரியவருகின்றது. 75 வோட்ஸுக்கு அதிகமான மின் அழுத்தத்தை கொண்ட மின் குழிழ்களை தடை செய்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான உத்தேசத் திட்டம் சட்ட வரைவுகளுக்காக மின் சக்தி, எரி சக்தி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்து இதில் பங்கேற்ற விஜயகாந்துடன் அவரத…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: தயா மாஸ்டர் வெலிக்கந்தை ஓமடியாமடு கொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நீர்ப்பாசனத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாவி சிங்களத் தொழிலாளர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தடையைத் தொடர்ந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தியுள்ளனர். துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் அக்கிராமத்தில் இயங்கி வந்தனர். இப்படுகொலைக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் புலிகள் முறைப்பாடு அனுராதபுரம் வான் படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் குரூரமான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனீவா மாநாட்டு முடிவுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.விபரங்களுக்கு
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள் February 2, 2022 மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள். பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்து…
-
- 25 replies
- 1.5k views
-
-
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் news யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; ""மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. குறித்த மூன்று …
-
- 18 replies
- 1.5k views
-
-
தமிழருக்கு ஒரு தீர்வு கிட்டுவதானால் நீங்கள் ஆகக் குறைந்தது எதை எதிர் பார்க்கிறீர்கள், என்னைப் பொறுத்தவரை நான் எதிர்பார்ப்பவை. 1.இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம். 2.காணி அதிகாரம். 3.பொலீஸ் மற்றும் சட்ட நிர்வாக அதிகாரம். 4.வரி ஏய்ப்பு செய்வதற்க்ஜான அதிகாரம். 5.வெளி நாட்டு முதலீடுகளை ஈர்பதற்கான உரிமை. இதை விட வேறு என்ன தேவை என உங்கள் எண்ணங்களை பகிரவும்
-
- 23 replies
- 1.5k views
-
-
கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியற்றவர்களாக எம்மக்களை ஆளாக்கிய அடுக்குமுறைகளுக்கு துணைபோகும் சர்வதேச சமூகம் அதற்கான காரணங்களை அறியும் ஆற்றல் அற்றவர்களாக எம்மக்களை ஆளாக்குவதற்கும் துணைபோவது ஏன் என்பதை நாம் விழங்காதுவிடின் அவர்களது நிகழ்ச்சி நிரலின்கீழ் நாமும் ஒரு நிகழ்வாக இடம்பெறுவோம். "...அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் ஒருபுறம் இந்தியா ஒருபுறும், சீனா ஒருபுறம், பாகிஸ்தான் ஒருபுறம், இவர்கழுக்கிடையிலான ஒட்டுறவுகள் முரண்பாடுகள் என்னும் கலப்புக்கள் ஒருபுறம் என சமகாலம் விரிகின்றது. இவற்றின் சூட்சுமங்களை, இவர்களால் அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் நடவடிக்கைகள், கருத்துக்கள் என்பவற்றின் பின்னால் வெளிப்படுத்தப்படாதவற்றை, சொல்ல நினைத்ததை சொல்லாமல் விட்டதை நாம் புரிந்து…
-
- 2 replies
- 1.5k views
-
-
கெப்பிற்றிக்கொல்லாவில் நடந்தது என்ன? அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள் http://www.tamilnaatham.com/articles/2006_...lan20060624.htm
-
- 0 replies
- 1.5k views
-
-
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு ‘இந்தியத் துரோகம்’ - பாரிஸ் ஈழநாடு சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இன்றைய பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
மொரட்டுவயில் குண்டு வெடிப்பு 2/4/2008 2:08:04 PM வீரகேசரி இணையம் - மொரட்டுவ தந்தனியவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கபடுகிறது.
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்றைய நிகழ்வுகள் 13 MAR 2012 நாளை சனல் நாலின் இரண்டாவது கொலைக்கள ஆவணம் வர உள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு உன்னிப்பாக பார்க்கப்படுகின்றது. 500000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தரும்படியும் வட அமெரிக்காவில் 500,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாக பார்ப்பதையும் கூறியுள்ளனர். Federation of Tamil Sangams of North America (FeTNA) writes to Indian Prime Minister Manmohan Singh We the Tamil Americans and Tamil Canadians and millions of Tamils around the world have their eyes and ears glued to knowing the UN resolution against human right…
-
- 4 replies
- 1.5k views
-
-
வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] யாழ் தென்மராட்சி வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி, காலை 7:00 மணி வரை இடம்பெற்ற போர் ஒத்திகையில், எழுநூற்று ஐம்பதுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்பொழுது, போர் ஒத்திகையில் ஈடுபட்ட துருப்புக்களுக்கு பாதுகாப்பாக, வரணிப் பகுதியின் வீதிகளில், பவள் கவச வாகனங்கள் சகிதம் தரைப்படை கவச அணியினர் ரோந்துகளை மேற்கொண்டதாக, குடிசார் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே, யாழ் நகரின் …
-
- 5 replies
- 1.5k views
-
-
35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
தமிழினியும் வாழ்வும் சாவும் ஒரு பெருந்துயரின் முடிவா? இல்லை தொடரா? "இறந்த போது ஓடி வந்தவர்கள் இருக்கின்ற போது திரும்பியும் பார்க்கவில்லை" - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:- இது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு. சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை.2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி ப…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…
-
- 2 replies
- 1.5k views
-
-
விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது! [Tuesday 2020-01-21 08:00] மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. இதில் …
-
- 9 replies
- 1.5k views
-
-
இரு முக்கிய புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் - கோத்தபாய அரசாங்கம் விரைவில் விடுதலைசெய்யவுள்ள விடுதலைப்புலி உறுப்;பினர்களில் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து முக்கிய தாக்குதல்களையும் திட்டமிட்டு நடத்திய இரு முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவரின் பெயர் மொறிஸ்,விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டத்தின் சூத்திரதாரி இவரே,முன்ளாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் ஜின் என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்த…
-
- 10 replies
- 1.5k views
-
-
நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் (இராஜதுரை ஹஷான்) உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் தொடர்பில் சர்வதேச தபால் ஒன்றியத்தில் சில விதிகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கத்துவ நாடுகளில் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை சிறீலங்காக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயற்படப் போவ…
-
- 10 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. http://newsfirst.lk/tamil/2015/09/எதிர்க்கட்சி-பிரதம-கொரட/
-
- 2 replies
- 1.5k views
-
-
ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய மகிந்த முயற்சி. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 7 முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்ய மகிந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் சி.ஆர்.டீ சில்வா மற்றும் சிறிலங்கா காவல்துறைத் தலைவர் விக்ரர் பெரேரா ஆகியோரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய எந்த ஒரு நடவடிக்கையும் ஜனநாயகத்தன்மையற்று- சட்டவிரோதமானது. மனித உரிமை மீறலானது என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பணிகளை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொ…
-
- 2 replies
- 1.5k views
-