ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள். இணைப்பு - 2 இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்ய…
-
- 4 replies
- 1.6k views
-
-
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம் Dec 19, 2025 - 05:58 PM அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடி…
-
- 1 reply
- 243 views
- 1 follower
-
-
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியில் இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழ் மக்களின் கொலைக்களங்களாகவே இருந்தன என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆட்களைப் பதிவுசெய்தல் திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதுவும் அறியாத மக்கள் இராணுவத்தினரின் பொறிக் கிடங்குக்குள் சிக்கவைக்கப்பட்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டார்கள் எனத் தெரிவித்த அவர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்த அரசாங்கம் அம்மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்…
-
- 0 replies
- 372 views
-
-
’பந்துல ஒரு கோமாளி’ புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தாலேயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்றக் கலந்துரையாடலைப் புறக்கணித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மறுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்வதை புலம் பெயர் தமிழ் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லையே. ஆனால் எதிர்க்கட்சிகளை நிறுத்திவிட்டனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மன…
-
- 0 replies
- 877 views
-
-
போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Dec 29, 2025 - 01:02 PM இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே …
-
- 1 reply
- 257 views
- 1 follower
-
-
தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 10:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கை வாழ் தமிழ் மக்களை காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்ட கருத்துடன் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவே இல்லை. சிறிலங்கா அரசு வெளியிட்டு வரும் பொறுப்பற்ற கருத்துக்கள் தமிழக மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்திய அரசு அளித்து வரும் இதற்கான விளக்கங்களும் மனநிறைவையும், நம்…
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீளப்பெற விரும்பாத சீனா இலங்கைக்கு வழங்கிய ஆயுதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள சீனாவின் ஆயுத விநியோகஸ்தர் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பின்னர் மிதமிஞ்சிய ஆயுதங்களை மீண்டும் ஆயுத விற்பனையாளர்களின் ஊடாக மீள்விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. குறித்த ஆயுதங்கள் காலாவதி திகதியை அண்மித்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் அந்த ஆயுதங்கள் உரிய முறையில் பாதுகாத்து வைக்கப்படவில்லை என்று காரணம் கூறி சீன நிறுவனம் அவற்றை ப…
-
- 1 reply
- 271 views
-
-
தொற்று நோயின் பின்னணியில், சிறுபான்மையின முஸ்லிம் சமூகம் குறித்து, வெறுக்கத்தக்கப் பேச்சுகள் நாடளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு வருவதாகவும் பகிரங்கமாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நேற்று (13) தெரிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தாலேயே, வேண்டுமென்றே இந்தத் தொற்று நோய் பரப்பப்படுவதாகவும் இதனால், முஸ்லிம்களின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் பல கருத்துகள் தெரிவிக்கப்படுவதாக, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் பகிரங்கக் கருத்துகள் குறித்து, இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று, ஏப்ரல் 12ஆம் திகதியன்று, முஸ்லிம் சமூகத…
-
- 5 replies
- 786 views
-
-
பிக்கறிங்-ஸ்காபரோ கிழக்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய ஆளும் கன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொர்நேலீ ச்சிசு கனடிய நாடாளுமன்றத்தில் சிறீலங்காவில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் தனது குற்றத்தைப் பொறுப்பேற்க மறுப்பது மற்றும் ஐ.நா. இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை போன்றவை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நல்லிணக்கம் மீள்அபிவிருத்தி பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் போன்ற விடயங்கள் போருக்குப் பின்னதாக சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப்படாமல் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியான அறிக்கையை மேற்கோள் காட்டி கருத்துக்கூறிய கொர்நேலீ ச்சிசு சிறீலங்காவில் இடம்பெற்ற …
-
- 1 reply
- 270 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிலாளி, நாகர்கோயில் மற்றும் முகமாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ முன்நகர்வுகளைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதென இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.30 வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரசிறியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரும், தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுமே அதிகளவான மதுபானங்களை அருந்துகின்றார்கள். அதைவிடுத்து மதுபாவனையில் யாழ்.மாவட்டம் முதலாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிந்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் வி.சிவயோகன் சுட்டிக்காட்டியுள்ளார். கண்பொல்லை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர்கல்வி கற்கும் 28 மாணவர்களுக்கு பண உதவி வழங்கலும் மற்றும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் கரவெட்டி சிறிசாரதா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினர். அவர் அங்கு…
-
- 2 replies
- 448 views
-
-
30 Jan, 2026 | 05:03 PM (செ.சுபதர்ஷனி) வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாகப் பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரித்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சமீபநாட்களாகப் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய…
-
- 0 replies
- 72 views
-
-
குமுதம் இவ்வார இதழிற்கு, நடேசன் அண்ணா வழங்கிய பேட்டி ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம். இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்? "எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம…
-
- 12 replies
- 2.2k views
-
-
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்குவேன் என்று யாழ்.மேயர் யோகேஸ்வரி பற்குணராசா எச்சரித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிக்கையில், எழிலூர் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி, இந்த விடயம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை, இதனால் நாங்கள் ஒப்பமிட முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பதிலாளித்த மேயர் "நீங்கள் கையொப்பம் இடத்தேவையில்லை வாற கோபத்திற்கு தண்ணீர்போத்தலால் வாங்கப்போறிங்கள்" என்று சபை முன்னி…
-
- 0 replies
- 291 views
-
-
பூந்தோட்டம் நலன்புரி முகாமிலுள்ள குடும்பங்களுக்கு புளியங்குளத்தில் வீடுகள் அமைக்க காணி கையளிப்பு inShare வவுனியா – புளியங்குளத்தில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் காணி, பூந்தோட்ட முகாமில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களின் நிலை தொடர்பில் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினூடாக நியூஸ்பெஸ்ட் அண்மையில் வெளிக்கொணர்ந்திருந்தது. நியூஸ்பெஸ்ட் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்காக கடந்த…
-
- 0 replies
- 306 views
-
-
டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/
-
- 6 replies
- 545 views
-
-
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம் தடம்புரண்டுள்ளது வீரகேசரி இணையம் 11/13/2008 10:12:02 AM - மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த சாகரிக்க எனப்படும் புகையிரதம் களுத்தறை கட்டுகுறுந்த பகுதியிலின்று காலை தடம்புரண்டுள்ளது. இதனால் பிரதான கரையோர புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 653 views
-
-
பல்கலைக்கழகத்திற்குள்ளும் விடுதிக்குள்ளும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தேவை கருதியே இராணுவம் உள்நுழைந்ததாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிறபகல் பலாலியில் அமைந்துள்ள யாழ். கட்டளைத் தளபதியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்றது அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.onlineuthayan.com/News_More.php?id=886301670704188391
-
- 0 replies
- 315 views
-
-
வட மாகாணத்தில் சுமார் 35,000 பேர் வரை வேலை வாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். தற்போது வட மாகாணத்தில் 3200 நிறுவனங்கள் வரை இருப்பதாக குறிப்பிட்ட அவர் அதில் பத்தாயிரம் வரையோனோர் பணி புரிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாகாணம் என்ற வகையில் வடக்கை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161284&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 184 views
-
-
மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை Feb 22, 2026 - 10:51 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதா…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
இலங்கை இனப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 433 views
-
-
பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்ப்பலகை உடைத்து நாசம் ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதான பெயர்பகை விசமிகளால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த இப்பெயர்பலகை கடந்த வாரமே புதிதாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/9007
-
- 0 replies
- 379 views
-
-
நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்னே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன். நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.நான் சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவர். தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்போமாயின்,சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்ளவிப்பட்டிருக்கேன் ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது. …
-
- 1 reply
- 558 views
-
-
எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…
-
- 8 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக திருகோணமலை-மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-