Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது. பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார். வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை. இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகு…

  2. விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் – பஷில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள். இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர். இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்குப் பிரதான காரணம…

  3. ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசிற்கு வலியுறுத்த, முக்கிய மூன்று உறுப்பினர்களை கனேடிய காப்பர் அரசு கொழும்பிற்கு அனுப்புகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் பணிப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், இவர் முன்னாள் கனடாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூதுவர் ஆவர். இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டகஸ்ரா, செனட்டர் வேன் வைட் ஆகியோரும் வருகை தரவுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இக் கனேடியக் குழுவினர் பலதரப்பட்டோரையும் சந்திக்கவுள்ளனர். இவர்களது பயண ஒழுங்கு விபரத்தை கனேடிய வெளிவி…

  4. [size=4]மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுடனான விளக்கங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரி இருந்தது. எனினும் இதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த பதில்களையும் வழங்கவில்லை என சாவேஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரிசலுகையை மீண்டும் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள…

    • 5 replies
    • 1k views
  5. இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் …

  6. சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் குறித்து உடனுக்குடன் தமக்குத் தெரியப்படுத்துமாறு படைத் தளபதிகளுக்கு கோத்தபாய றாஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக பொன்சேக்காவிற்கு மிகவும் ஆதரவானதெனக் கூறப்படும் சிங்க படையணி குறித்த தகவல்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதே போல மக்கள் மத்தியில் நிலவும் அபிப்பிராயங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குமாறு தேசிய புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. http://www.eelamweb.com/

    • 5 replies
    • 1.8k views
  7. இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை தொடங்கியது! முதல் அடி கொடுத்தது கனடா! இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதிக்கே இந்த நிதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் நடந்த பொதுநலவாய அமைப்பு மாநாட்டை கனேடிய பிரதமர் ஸ் ரீபன் ஹாப்பர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து. “இ…

  8. சர்ச்சைக்குரிய சிங்கக்கொடிக்கு மன்னிப்புக் கோரினார் டலஸ் அழகப்பெரும APR 24, 2015 | 16:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை ஏந்தியதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும மன்னிப்புக் கோரியுள்ளார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற டலஸ் அழகப்பெரும உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்த கொடிகள், சிறிலங்காவின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மையினங்களைக் குறிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட- தனியே சிங்கள இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர…

    • 5 replies
    • 668 views
  9. 29 SEP, 2024 | 09:16 AM இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ. ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள்குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195021

  10. ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியும் ஒன்றுசேர முயற்சி! ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்திப்பில் அக்…

    • 5 replies
    • 851 views
  11. அரசாங்கம் இன்னும் ஆர்வமாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டும் – இரா.சம்பந்தன் inShar இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஆர்வமாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் உடனான சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்தித்தார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக…

  12. 07 Jan, 2026 | 05:02 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையேல் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில் பேசும் அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது என யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூ…

  13. வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்! வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே நேற்று (திங்கட்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று இரவு உட்புகுந்த மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன் அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். …

    • 5 replies
    • 1.2k views
  14. சிறிலங்கா அரசினை அச்சங்கொள்ள வைத்துள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் ! எதிர்பிரச்சாரங்களில் சிங்களக் கைக்கூலிகள் ! http://win.yarl.com/?p=16744 தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துச் செய்த சிங்கள அரசானது முள்ளிவாய்க்கால் பெருவெளியில் தமிழினத்தை மட்டுமல்ல தமிழீழ இலட்சியத்தினையும் புதைகுழியில் போட்டுப் புதைத்துவிட்டதாக கனவு கண்டுகொண்டிருக்கும் இவ்வேளை உலகத் தமிழர்களின் பங்களிப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு எதிரான தீவீர செயற்பாடுகளில்ஈடுபடத் தொடங்கியுள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையொன்றின் சனிக்கிழமைப் பதிப்பில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்கு எதிரான கருத்துக்களை விதைத்து வருவதோடு புலத்து புலிகள் சிங்கள தேசத்துக்கு எதிராக த…

  15. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (14.10.2021) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை அவரது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்…

  16. யுத்த காலத்தில் குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்த யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காகவே சரத் பொன்சேக்கா அவசரமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் தாம் சாட்சியமளிக்கத் தயார் என்று பொன்சேகா கூறிய சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டிருப்பது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனக்குத் தெரிந்தவை, தான் கேள்விப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளதாக பொன்சேக்கா குறிப்பிட்டிருந்தார் http://www.eelamweb.com/

  17. குச்சவெளியில் வதியும் 400 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது.திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் தற்காலிகமாகக் கொட்டில்கள் அமைத்து வசித்து வரும் சுமார் 400க்கு மேற்பட்ட குடும்பங்களையே அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குடும்பங்களுக்கு காணிகளோ அல்லது தற்காலிக வீட்டு வசதிகளோ இன்னமும் வழங்கப்படாத நிலையில் பசில் இராகபக்‌ஷ அந்த குடும்பங்களை வெளியேறுமாறு பணித்துள்ளார். http://www.sankamam.com/beta/index.php?eNoljDEOwjAMXDD_0qGbJTu246SIIY7Tf6B2YVwwhvJ_tYLlprs7FmJaptf2-D73-2D2wl7BiQiyYYMgzZB6DHNW5y7z8XcFa6OqBjbowqoKV0kgFmIjI9US8_Z5_77qNYsXGFxcOuReEkRyhHA2aasTGk63E506XCIM

    • 5 replies
    • 970 views
  18. மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…

    • 5 replies
    • 1.6k views
  19. மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!! தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். …

    • 5 replies
    • 1k views
  20. தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல தலைவர்களினதும் தமிழ் உணர்வாளர்களினதும் அழைப்பு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அவை தொடர்ச்சியாக இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். …

  21. பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். http://isoorya.blogspot.com/

  22. வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சியா இது? யாழ்ப்பாணத்தை வழியாகப் பயன்படுத்தி இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ள இந்தியர்கள் யாழ்ப்பாணத்தை ஓர் வழியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்;கப்பட்டுள்ளது. பொதுவாக பங்களாதேஸ் அல்லது டுபாய் வழியாகவே இதுவரை காலமும் இந்தியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டனர். எனினும், இந்தப் பாதைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதனால் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற…

    • 5 replies
    • 533 views
  23. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை இன்று நிரூபனமாகிவிட்டது எனவும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இராச்சியம் தோற்றுவிட்டது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத…

    • 5 replies
    • 678 views
  24. பிரான்சில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு - 30000ஐயும் தாண்டியுள்ளது! திகதி: 14.12.2009 // தமிழீழம் பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துகொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்த தகவலின் படி 30000 ற்கும் மேற்பட்ட வாக்குகள் "ஆம்" என்று வாக்களிக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர். மேலதிக த…

  25. தன்னை முறையற்ற முறையில் பந்தை வீசுவதாகக் குற்றம் சாட்டியிருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டை தான் மன்னித்து விட்டதாகவும் எனினும் இந்தியக் துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களின் நன்மதிப்பை அவர் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். ஜோன் ஹொவார்ட் 2012ம் ஆண்டில் உலக கிறிக்கெற் சபைத் தலைவர் பதவியை பெற இருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே முரளிதரன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முரளீதரன் பந்தை வீசியெறிவதாக அவுஸ்திரேலியாவில் வைத்து பல முறை அறிவிக்கப்பட்டிருந்ததும் அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டில் முரளீதரன் அவுஸ்திரேலியத் தொடரைத் தவிர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. SOURCE: http://eelamweb.com…

    • 5 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.