ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஏன் இந்த இரட்டை நிலை! ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ‘இந்தியா-ஈரான்: தொன்மையான நாகரீகங்களும் நவீன தேசங்களும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இறையாண்மையுடன் கூடிய சுதந்திர நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, “பாலஸ்தீன மக்களின் உரிமைகள் இன்று வரை நிலைநிறுத்தப்படவில்லை என்கின்ற நிலை இந்தியாவிற்கு முக்கியமான கவலையாக உள்ளது. அது நிலைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்கும் இடையே தொடர்ந்துவரும் மோதலால் நீடித்துவரும் மேற்காசியப் பிரச…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகின் எப்பகுதியிலும் தமிழனின் உதிரம் வடிவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்திய தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மையை காக்கவேண்டிய தருணத்தில் பொறுiயுடன் அமைதி காக்கின்றனர் என பா.ஜனதா பிரமுகா கப்டன் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்தக் கோரி மும்பை பா.ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்னர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசுகையில் : இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நமது சகோதர சகோதரிகளை இலங்கை அரசு கொன்று வருகின்…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
175 தமிழர்கள் படுகொலை- தமிழர்களை முட்டாளாக எண்ணுகிறதா சர்வதேச சமூகம்?: விடுதலைப் புலிகள் கேள்வி ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் மே 15 ஆம் நாள்வரை 175 தமிழர்கள் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகம் மௌனம் காப்பதன் மூலம் தமிழர்களை முட்டாளாகக் கருதுகிறார்களா என்று தமிழீழ விடுதலைப் புலிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெனீவா பெச்சுக்குப் பின்னர் ஏப்ரல் 8ஆம் நாள் வரையிலான படுகொலைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் முன்னர் விவர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 8ஆம் நாளுக்குப் பின் மே15ஆம் நாள் வரையிலான படுகொலைகள் இந்த அறிக்கையில் இடம்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கையில் உள்ள சிங்களவர்களுக்கு ஓர் அழைப்பிதழ்
-
- 0 replies
- 1.4k views
-
-
வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான். இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள். விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன். நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்… ‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’ நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.. ‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம…
-
- 18 replies
- 1.4k views
-
-
30/03/2009, 17:14 [ கொழும்பு நிருபர் மயூரன் ] ஐ.நாவின் அழுத்தத்தினால் போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளது சிறிலங்கா அரசு! வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை அறிவிக்கவுள்ளதாகவெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐ.நாவின் வெண்டுகோளுக்கு பதிலாக அரசாங்கம் இதனை அறிவித்திருந்தாலும் அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எதிர்காலத்தில் இடம்பெறும் விடையங்களை வைத்தே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஐ.ந…
-
- 14 replies
- 1.4k views
-
-
மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 11 ஓகஸ்ட் 2008, 08:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். மண்டூர் 15 ஆம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதினம்
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஐ.தே.க. கடுமையான கண்டனம் [வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007, 08:58 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் வெளியேற்றுமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட உத்தரவை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும் தேவையான சட்டதிட்டங்கள் …
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.dailymirror.lk/index.php/news/2229-ltte-proxies-searching-for-prabha.html The government is concerned that some umbrella organizations of the LTTE are still trying to trace their leader LTTE Chief Velupillai Prabhakaran and the matter has been discussed with India, the government said. Foreign Minister Rohitha Bogollagama conveyed these concerns at a meeting held with Indian Foreign Secretary Nirupama Rao today. Minister Bogollagama also informed Rao that Sri Lanka would continue to be vigilant and engage in countering measures against terrorism to protect the territorial integrity and sovereignty of the country. “We discussed terrorism and…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹுஸைனை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார். நேற்று வியாழக்கிழமை (18.09.14) காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/artic…
-
- 16 replies
- 1.4k views
-
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரதான எதிர்க்கட்சியையே ஏமாற்றுவோரிடம் பிரபாகரன் நம்பிக்கை வைத்து பேசுவாரா? [09 - July - 2006] -கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க. ஐ.தே.கட்சி தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டு அக்கட்சிக்கெதிரான துரோகத்தை தொடரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலை கண்காணிக்கும் பிரபாகரன் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வருவாரா எனக் கேள்வியெழுப்பும் ஐ.தே.கட்சியின் பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இது தொடர்பாக இந்தியாவும் தனது ஆட்சேபனையை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கருத்து தெரிவிக்கையில்; அரசாங்கம் - விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால் ஐ.தே.…
-
- 2 replies
- 1.4k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பூரண ஆதரவு – ரஸ்யா பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டும் போராட்டத்திற்கு ரஸ்ய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்கும் என உறுதியளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் ரஸ்யாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் அன்டோலி செர்டிக்யொவ் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ரஸ்யாவிற்கு விஜயம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை படையினருக்கு இராணுவ தொழில்நுட்பம் உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்க ரஸ்ய அரசாங்கம் உற…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி ஒன்றில் இன்று நண்பகல் பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் …
-
- 5 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு , மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் ! 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். http://www.nitharsanam.com/?art=14970
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவா? சீனாவா? - தேர்லுக்குப் பின் இலங்கை எந்தப் பக்கம்? 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்காற்றியதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற பிறகு இலங்கையில் சீன முதலீடுகள் ஏதும் பாத…
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை -2020 தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2020 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். உலகில் மிகவும் தொன்மையான எமது இனத்தின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் சொந்த மண்ணையும் மீட்டெடுத்து, எமது மக்கள் தன்மானத்தோடு கௌரவமாக வாழவேண்டுமென்ற தார்மீகக் குறிக்கோளுக்காக மடிந்த மானமறவர்களை, எமது அகமனதில் தரிசித்து வணக்கம் செலுத்தும் தேசிய நாள். தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டத்தை, இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுந…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் மக்களை வெல்வது கடினமானதொன்று – மஹிந்த இராஜபக்ஷ Wednesday, April 20, 2011, 19:36 சிறீலங்கா ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போராடியதனை விட புலம்பெயர் தமிழர்களுடனான போராட்டம் கடினமாக உள்ளது என்றும் அவர்களுடன் போராடி வெல்வது என்பது கஷ்டமான காரியமாகவே அமையுமெனத் தான் நம்புவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் பின்னர் முக்கிய சில சிரேஷ்ட அமைச்சர்களைத் தனியாகச் சந்தித்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தற்போது எதிர்நோக்கியுள்ள பாரியதான இந்தச் சவால் குறித்துக் கவலையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து சிங…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்களவர்களைக் கொன்றவர்களை அமைச்சர்கள் கட்டியணைத்து வரவேற்பதாக பாலித ரங்க பண்டார விசனம் ஜானக பெரேராவுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து எதுவும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் உறுதிப்படுத்திய நிலையில், இன்று ஜானக பெரேராவின் படுகொலை தொடர்பில் ஐ.தே.க.புலிகளை குற்றம் சாட்டவில்லையென அரசு கூறுவதையிட்டு கவலையடைவதாக ஐ.தே.க. எம்.பி.பாலித ரங்கபண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாணத்தில் அரசின் உத்தரவுக்கமைய புலிகளிடம் சரணடைந்த 601 பொலிஸாரைக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்குவதற்கு சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு அவசியமாகும் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய வலையமைப்பை ஒடுக்க சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு அவசியமாகும். அவர்களுக்குக் கிடைக்கும் ஆயுத மற்றும் நிதி உதவிகள் பிரிவினைவாத வன்முறைகளை அதிகரிக்கச் செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார். இவற்றை அவர்கள் பல்வேறு துறைமுகங்களைக் கடந்து இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். இதன்பொருட்டு ஏற்றும் துறைமுகம், இறக்கும் துறைமுகம், போக்குவரத்துத் துறைமுகம் என்பவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில் கொள்கலன்களில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் என்றும் அவர் சொன்னார். இந்த தொடர் உதவிகள…
-
- 0 replies
- 1.4k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 0 replies
- 1.4k views
-