Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும். …

  2. [saturday, 2011-08-27 00:09:46] 1957ம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை அப்போதைய முதல்வர் காமராஜர் காப்பாற்றியது போல ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் …

  3. வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011 ஐக்கியனாடுகள் அறிக்கையினை வைத்து சிறிலங்கா தலைவர்களை கைது செய்ய முடியும் என இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி விஜெதாஸ பிபிசி இற்கு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது அதனை தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினை வைத்து வெளினாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளினாடுகளுக்கு செல்லும் வேளை கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழு அறிக்கை கொண்ட…

  4. கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி இன்றும் தொடரும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜே.கே.எச. சிறிலங்கா ரெலிகொம், டயலொக் போன்ற கம்பனிகளின் பங்கு விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பொதுவாகவே பங்குச் சந்தையில் பங்குகள் வீழ்ச்சி அடைந்து செல்வதாகவும் சொல்லப்படுகிறது. மலிங்கவும் 18.71 புள்ளிகளால் வீழ்;ச்சி அடைநதுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகள் பலம் ஓங்கிவருவதும் இலங்கைப் படையினர் எதிர்கொள்ளும் பாரிய இழப்புகளினதும் தாக்கமே பங்குச் சந்தையின் இந்த திடீர் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என பங்குச் சந்தை அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். http://www.tamilskynews…

  5. திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம் மன்னார் நிருபர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெ…

  6. மாவீரர்கள் காலத்தால் அழிக்க முடியாதவர்கள்

    • 0 replies
    • 1.4k views
  7. வடமராட்சி, தென்மராட்சி படையினரால் சுற்றிவளைப்பு: முழுநாளும் தொடர்ந்த தேடுதல் வேட்டை Monday, 19 May 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளை இன்று திங்கட்கிழமை சுற்றி வளைத்த பெருந் தொகையான படையினர் முழு நாளும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் இப்பகுதிகளின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களும் பெருமளவுக்கு வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று அதிகாலை ஆரம்பமான படையினரின் இந்த நடவடிக்கை மாலை 5.00 மணிவரையில் தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் ஈடுபடுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வீடுகளைச் சோதனையிட்ட படையினர் அங்கிர…

  8. பேரினவாத ஒடுக்கு முறையாளர்களின் போர் மாத்திரையால் மயங்கி நிற்கும் சிங்கள மக்கள் விரைவில் உண்மைகளை உணரும் நிலை வரும் [06 - September - 2008] காலகண்டன் "பயங்கரவாதத்தை முறியடிப்பேன். பிரபாகரனை எனது காலடிக்கு கொண்டு வருவேன். வடக்கு மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்பேன். கிழக்குப் போன்று வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவேன்' மேற்கூறிய வசனங்கள் அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சூளுரைகளாக முன்வைக்கப்பட்ட கருத்துகளாகும். இவை வெறும் உரைகளாக அன்றி வடக்கு நோக்கி முடுக்கி விடப்பட்ட போரின் நடுவே கூறப்பட்டு வந்த பேரினவாத உணர்ச்சி மிக்க வரிகளுமாகும். இவற்றின் மொத்த வெளிப்பாட்டை இன்றைய வன்னிப் போர்க்களம் வெளிப் படுத்…

  9. பொய்ப் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சூசை [30 - September - 2007] -தாயகன்- தமிழ் மக்கள் மீது பல வழிகளிலும் போர் தொடுத்துவரும் இலங்கை அரச பேரினவாதம் அண்மைக் காலமாக உளவியல் யுத்தத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தில் இராணுவ ரீதியாக பெறப்படும் வெற்றிகளைவிட உளவியல் யுத்தம் மூலம் அதிக நன்மைகளைப் பெறமுடியுமென்ற நிதர்சனத்திற்கேற்பவே தற்போதைய அரசும் பேரினவாத ஊடகங்களும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக விடுதலைப்புலிகளுக்குள் அதிகாரப் போட்டியும் உள் மோதல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை பொட்டம்மானினால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் விஷமப் பிரசாரங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டன. …

  10. அந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன் நாட்டிற்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 40 சதவீதம் தமிழர்களால் அனுப்பப்படுகின்றது என்று வடக்குமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.. மேலும் கருத்து தெரிவித்த அவர், கூட்டுறவு என்ற இயக்கம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் நாகரிகத்தைகொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. அது மனிதாபிமான ரீதியான நுண்கடன்களை வழங்கி மக்களிற்கு உதவி செய்திருந்தது. ஆனால் இப்போதும் நுண்கடன் நிறுவனங்கள் இருக்கிறது அவற்றிடம் மனிதாபிமானத்தை காணவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் கூட்டுறவின் மூ…

    • 4 replies
    • 1.4k views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்! [Monday, 2011-04-04 14:26:31] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கருங்குதிரையொன்று முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குதிரை தன்னந் தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி வருவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப் படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது. இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலை…

    • 1 reply
    • 1.4k views
  12. 'லங்க ரட்ட' இலங்கையின் அரசர் ஆகிறாரா ராஜபக்ஷே? ப.திருமாவேலன் இறைவனின் வரைபடத்திலேயே விடுபட்டுப் போனவன் ஈழத் தமிழன் என்பதை இந்த உலகம் உணர்ந்து இரண்டு ஆண்டுகள் முடியப் போகிறது! ஈழம் குறித்து யார் எழுத உட்கார்ந்தாலும், வார்த்தைகளில் வறட்சியும் கடைசித் துளிக் கண்ணீரும் கரைந்துபோன சூழலே எச்சமாக இருக்கிறது. ''2009 ஜனவரி மாத மத்தியில் நான் மோட் டார் சைக்கிள் ஒன்றில் விசுவமடுவுக்குக் கிழக்கால், எனது நண்பர் ஒருவரைத் தேடிச் சென்றுகொண்டு இருந்தேன். ஒரு வீட்டின் முன்புறம் நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அருகில் சமைத்துக்கொண்டு இருந்தார். பக்கத்தில் இரண்டு இளம்பெண்கள். எனது நண்பரின் முகவரியைச் சொல்லி விசாரித்தபோது, சுமார் 50 பேர் கூடியிருந்த இட…

  13. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓர் அன்பு மடல்[ செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-15 18:42:49| யாழ்ப்பாணம்] தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கும் தங்களுக்கு ஈழத்தமிழர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி யேற்பதையிட்டு ஈழத்தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அதேநேரம் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்தப் பதவியிலிருந்து வெளியேறும் மகிழ்ச்சியும் சேர்ந்து இரட்டிப்பாகின்றது. கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது அவருக்கு அன்பு மடல் எழுதி கை வாங்கிவிட்டது. வன்னியில் தமிழினம் மாண்டு போனது. என்ன செய்வது நீங்கள் அப்போது குரல் கொடுத்தீர்கள். ஆனாலும் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லாமையால் உங்களால் எதுவும் …

    • 1 reply
    • 1.4k views
  14. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரைத் தான் வெறுக்கவில்லை பிரியங்கா காந்தி: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரைத் தான் வெறுக்கவில்லை என முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் புதவல்வி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரபாகரனே தன் தந்தையும் கொன்றதாகவும் அப்படி இருந்தும் தான் விடுதலைப்புலிகளையும் வெறுக்கவில்லை, பிரபாகரனையும் வெறுக்கவில்லை பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர் விஷயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும் பிரியங்கா கூறியுள்ளார் http://www.globaltamilnews.net/tamil_news....=8632&cat=2

  15. பூசா தடுப்பு முகாமில் "சிங்களப் புலிகளுடன்" சட்டத்தரணிகள் சந்திப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 19:33 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் காலியில் பூசா தடுப்பு முகாமில் உள்ள 13 அரசியல் கைதிகளை 5 சட்டத்தரணிகள் குழு சந்தித்துப் பேசியது. புதிய ஜனநாயக் கட்சி உறுப்பினர் - 5 சிங்களப் புலிகள் என இராணுவத்தினரால் குற்றம் சுமத்தப்பட்ட சிங்களவர்கள்- 7 மற்றும் கிழக்கு மகாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஆகியோரை சட்டத்தரணிகள் குழு சந்தித்தது. சட்டத்தரணிகள் இ.தம்பையா, எஸ்.தேவராஜா, மகிந்த ஜயவர்த்தன, திலக் விஜயசிங்க, சிறிநாத் பெரேரா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். புதினம்

  16. புதுவகையான எறிகணைத் தாக்குதல்,வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு Posted by Renu on Tuesday, May 5, 2009, 17:36 | 129 Views | . இன்று (05.05.2009) அதிகாலையில் நாசகார பல்குழல் எறிகணைகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இந்த எறிகணைகள் வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு எரிந்ததாகவும், முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு மீது இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் பல பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்ததாகவும் அறியப்படுகிறது. இத் தாக்குதல் நள்ளிரவில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பலரது உடல்கள் கருகிய நிலையில் காணப்படுவதாகவும், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எறிகணைகள் வீழ்ந்…

  17. போரில் தமது சொந்தங்களை இழந்த வன்னி மக்கள் வவுனியாவில் ஓர் கவன் ஈர்ப்பு நிகழ்வினை நடாத்தினர். இதில் நூற்றுக்கணக்கான தமிழ் சொந்தங்கள் தமது காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு மன்றாடினர். தடுப்பு முகாமிலும், முள்ளீவாய்க்காலிலும் ஆயிரக்கணக்கான இளையோர்கள் கைது செய்யபட்டனர். ஆனால் அவர்களின் நிலை என்னவென்று இன்னமும் தெரியவில்லை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த விவகாரங்களில் போதிய கவனம் எடுக்காமல் இருக்கின்றமை மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை அற்ற நிலையே காணப்படுகின்றது. தமது பிள்ளைகளை தேடும் நேரத்தில் தம் பிள்ளைகள் எவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு சிங்களப்படைகளினால் கொல்லபட்டார்கள் என்ற புகைப்படங்களேவெளியே வருகின்றன. ஆகையால் பெற்றோர்கள் பதைபதைத்…

  18. நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின JAN 31, 2015by கார்வண்ணன்in செய்திகள் கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன. இவையிரண்டும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், கடந்த 2013ம் ஆண்டு நொவம்பர் மாதம் லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து, தலா 9 இலட்சம் ரூபா மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டவையாகும். இவற்றுக்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை காலமும், 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ள போதிலும், இவை எதற்காகப் பயனபடுத்தப்பட்டன என்பது குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. புதிய…

    • 0 replies
    • 1.4k views
  19. சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும் கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும். இவ்வேளை, சா…

  20. ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திகிறார் நெடுமாறன் புதன், 30 மார்ச் 2011 19:38 வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்... பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்.. அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்.. (சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்…

  21. விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு: கனடிய பாராளுமன்ற உறுப்பினர் Written by Pandara Vanniyan - Apr 24, 2007 at 12:26 AM விடுதலைப்புலிகளை கனடா தடை செய்தது தவறு என்றும் கனடா நடுநிலைமையையும் சமத்துவத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஸ்காபுரோ கிழக்கு, கில்வூட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்கே தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ மிரர் ஏப்ரல் 19ஆம் நாள் வெளிவந்த இதழுக்கு கருத்து வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தடைசெய்து ஒருபக்கம் சார்ந்து, ஒரு பகுதியை பயங்கரவாதிகள் என அறிவித்ததன் மூலம் எதனையும் நாம் சாதித்துவிடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்காபுரோ கிழக்கு - பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் டான் மக்ர…

  22. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள். ஜெனீவா நகரில், பெப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந்தது. இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார். இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச்…

  23. நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள அதேவேளை, இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 கண்காட்சியில் இன்று காலை உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 'பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வென்ற சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எமது அ…

  24. இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது, இதனை எவ்வாறு பயன்படுத்தியது என்பவற்றைப் பார்ப்பதற்கு முன்னதாக தென்னாசிப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பதையும், இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை எவ்வாறு வகுததுக்கொண்டது என்பதையும் பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தை இந்தியா ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பின்னணியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியா புவியியல் ரீதியாக மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றது. தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தப் புவியியல் அமைப்பு தனித்துவமான ஒன்றாக உள்ளது. தெற்காசிய…

  25. மகிந்தவும் சகோதரர்களும் வியாழன் 22-02-2007 04:01 மணி தமிழீழம் [சிறீதரன்] ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சசே செயல்பட்டு வருவதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவரான ரோஹித போகொல்லாகமவிற்கு வெளிவிவாகர அமைச்சு பதவியை வழங்கி விட்டு வெளிவிவகார அமைச்சருக்குரிய பணிகளை பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்பு தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் மேற்கொண்ட விஜயங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர அந்தஸ்திற்கு எடுத்துக் காட்டு என இராஜநத்திர தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன ஒரு நாட்டின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.